தமிழ்மணம் விருதுகள் 2010 – ”நூல் உலகம்” வழங்கும் புத்தகங்கள்
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டின் விளம்பரதாரராக அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனத்துடன் மற்றொரு விளம்பரதாரராக “நூல் உலகம்” (http://www.noolulagam.com/) இணையத்தளமும் இணைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். “நூல் உலகம்” இணையத்தளத்தை நடத்தும் “ஜீவா புத்தகாலயம்“, தமிழகத்தில் நாமக்கல் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
தமிழ்மணம் ஏற்கனவே முதல் பரிசாக ரூ1000.00, இரண்டாம் பரிசாக ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்களை நியூபுக்லேன்ட்சு மூலமாக வழங்குகிறது. இதைத் தவிர கீழ்கண்ட புத்தகங்களை தமிழ்மணமும், நியூபுக்லேன்ட்சு நிறுவனமும் வழங்குகின்றன.
1. மெல்லச் சுழலுது காலம் – இரா. செல்வராசு (தமிழ்மணம் சார்பாக)
2. யுத்தங்களுக்கிடையில் – அசோகமித்ரன் (நியூபுக்லேன்ட்சு சார்பாக)
கூடுதலாக கீழ்கண்ட பரிசுகளை நூல் உலகம் இணையத்தளம் வழங்குகிறது.
முதல் பரிசு ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்கள்
இரண்டாம் பரிசு ரூ250.00 மதிப்புள்ள புத்தகங்கள்
நூல் உலகம் வழங்கும் பரிசுக் கூப்பனைக் கொண்டு நீங்கள் விரும்பும் புத்தகங்களை நூல் உலகம் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
நூல் உலகம் வழங்கும் பரிசுத்தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை தமிழ்மணம் விருதுகள் 2010 விருதுகள் மூலம் வழங்குகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேசனல்
Comments
6 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2010 – ”நூல் உலகம்” வழங்கும் புத்தகங்கள்”
Leave a Reply
தூள்.. தூள்.. தூள்.. அள்ளிருவோம்.. விடுங்க.. வாரிக் கொடுக்கும் தமிழ்மணத்திற்கும், பரிசுகளை வழங்குவோருக்கும் எனது நன்றி..!
பதிவர்களுக்கு ஊக்கம் தரும் சேவை. பாராட்டுக்களும் நன்றிகளும்.
பதிவர்களுக்கு விருது வழங்க போட்டிபோடும் காலம் வந்துகொண்டிருக்கிறது.தமிழ்மணத்திற்கும் நூல் உலகத்திற்கும் நன்றி,
போட்டிக்காலம் முடிவதற்குள் மேலும் நிறையப்பேர் பங்கேற்று பரிசு வழங்க முன்வருவார்கள் என்று நினைக்கிறேன். பரிசு பெறுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.
மகிழ்ச்சி…….. மெல்ல சுழலுது காலம் கைக்கு வந்தால்.
[…] விபரங்களுக்கு தமிழ்மணம் வலைப்பூவை […]