தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் – டாப் 20 வலைப்பதிவுகள்

தமிழ்மணத்தின் புதிய சேவையாக தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.

வாசகர்களின் அங்கீகாரம் தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் ஊட்டம் தரும் ஊக்கச் சக்தியாக விளங்குகிறது. வாசகர்களிடம் இருந்து பெறும் வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகள் போன்றவை தான் தொடர்ந்து எழுத்தின் மீதான ஆர்வத்தை வலைப்பதிவர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் வலைப்பதிவர்கள் வாசகர்களிடம் இருந்து பெறும் அங்கீகாரம் குறித்த சரியான அளவுகோல் இல்லை என்றே சொல்லலாம். வாசகர்களின் அங்கீகாரத்தை ஒரு வலைப்பதிவு பெறும் பார்வைகள் (ஹிட்ஸ்), மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவற்றைக் கொண்டு கணிக்கலாம். இதனை அடிப்படையாக கொண்டு தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற சேவையை வடிவமைத்து உள்ளது.

தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ள இந்தச் சேவை குறித்த உங்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்

இந்தச் சேவையை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்
http://www.tamilmanam.net/top/blogs/1

வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் மற்றும் பார்வைகள் (ஹிட்ஸ்) போன்றவை கொண்டு இந்த முன்னணி நிலவரம் கணக்கிடப்படுகிறது

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
TMI Inc

Comments

17 Responses to “தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் – டாப் 20 வலைப்பதிவுகள்”

 1. இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.வாக்குக்கள்,பின்னூட்டம் அடைப்படையில் மட்டுமில்லாது படைப்பின் தரத்தை வைத்தும் தேர்வு செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்

 2. கேபிள் சங்கர் on November 12th, 2010 10:53 pm

  நிச்சயமாக நீங்கள் உங்களது ஓட்டுக்களை கணக்கில் எடுத்து தெரிவு செய்தால் அது ஒரு சரியான தெரிவாக இருக்காது என்பது உங்களூக்கும் தெரியும். ஓட்டுககள் எப்படி போடப்ப்டுகிறது. என்பதும் உங்களுக்கு தெரியும். தொடர்வரும் ஹிட்ஸுகளை வைத்து வேண்டுமானால் செலக்ட் செய்வது நல்ல தெரிவாக இருக்க வாய்ப்புள்ளது..

 3. தமிழ்மணம் on November 12th, 2010 11:59 pm

  பதிவர் கேபிள் சங்கர்,

  ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு சதவீதம் (Percentage) உண்டு. தமிழ்மணம் நிரலி (Program) அதனைக் கொண்டே ஒரு வலைப்பதிவின் வாசகர் பரப்பினை தீர்மானிக்கிறது.

  ஆங்கிலத்தில் சொன்னால்….

  Our Algorithm takes several factors and percentage of those factors into account before deciding on the popularity of a blog

  We are confident that our Rating is in line with the popularity of the blog

  Thanks for posing the question….

  நன்றி…

 4. உண்மைத்தமிழன் on November 13th, 2010 12:59 am

  நல்லது.. கலக்குங்க..! இன்னும் கொஞ்சம் பைத்தியம் பிடிச்சு அலையப் போறாங்க எல்லாரும்..!

 5. ராமலக்ஷ்மி on November 13th, 2010 1:25 am

  வாரம் ஒரு பதிவிடும் வழக்கம் கொண்ட நான், ஏதேச்சையாக இந்த வாரம் பத்திரிகை படைப்புகளை வரிசையாகப் பதிவிட்டதில் பத்தாவதில் நிற்கிறேன் போலிருக்கிறது:)! இருப்பினும் புதிய சேவையின் முதல் வாரத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருகிறது.

  புதிய சேவைக்கு வாழ்த்துக்கள்!

  சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

 6. Karthik on November 13th, 2010 3:25 am

  நல்ல முயற்சி … நன்றி

 7. sasikumar on November 13th, 2010 5:12 am

  தமிழ் மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. எங்களை போன்ற பதிவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயமாகும். ஓட்டுக்களை வைத்து கணக்கில் கொள்ள வேண்டாம்.

 8. இது நல்ல முயற்சி….அடிக்கடி பதிவு போடுறவங்களுக்கும்,கவர்ச்சியான தலைப்பு வைப்பவர்களுக்கும்,நீண்ட நாள் எழுதி கொண்டு இருப்பவர்களுக்கும் இது சாதகமான நிலையை ஏற்படுத்துமோ என நினைக்கிறேன்..ஏற்கனவே பிரபல பதிவர்களாக இருப்பவர்கள் அடிக்கடி இதில் வர வாய்ப்புண்டு

 9. Dheva. S on November 13th, 2010 8:59 am

  Please dont consider as per votes.

  Its really remarkable turning situation and definatly by votes again its trap to loose good bloggers.

  Thanks !

 10. அபிஅப்பா on November 13th, 2010 2:35 pm

  தமிழ்மண ஓட்டுகள் வைத்து கணக்கிட்டால் இப்போது பரிந்துரையில் வருபவர்கள் மற்றும் மகுடத்தில் வருபவர்களுக்காக மட்டுமே அவர்களை தமிழ்மணம் மீண்டும் மீண்டும் ஊக்கமளிக்க செய்யும் வாய்ப்பாக மட்டுமே இருக்கும். ஹிட்ஸ் மட்டும் வைத்தல் நலம் என்றே நினைக்கிறேன். என் கருத்தும் கேபிள் சங்கர் கருத்தும் சரியாக இருக்கும் என எல்லோரும் நினைத்தால் தமிழ்மணத்துக்கு தெரிவியுங்கள் உங்கள் பின்னூட்டம் மூலமாக!

 11. mathisutha on November 13th, 2010 4:36 pm

  ஐயா, நல்லதொரு திட்டம் வரவேற்கிறேன். ஆனால் அளவு கோலில் தான் எனக்கு சரியான திருப்தியில்லை. பல திறமையான பதிவர்கள் இப்போதும் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள். பிரபல பதிவர்கள் கூட அவர்களை முன்னிறுத்திக்காட்டுவது அரிதான செயற்பாடே… பல பிரபலங்களுக்கு கருத்திடும் வாக்கிடும் பழக்கமே இல்லை… அப்படியிருக்கையில் எம்மைப் போல் புதுப் பதிவர்கள் எப்படி முன்னிலைப்படுத்தப்படுவர்.
  (அடியேனின் சிறு ஆலோசனை அளவு கோலில் தெரிவு செய்யப்படுபவரிக் கருத்திடல் வாக்கிடல் போன்ற அளவு கோல்களையும் சேர்த்தால் என்ன… )

 12. karthik on November 13th, 2010 11:20 pm

  உண்மைதான். ஓட்டுகளை தவிர்த்து விட்டு ஹிட்ஸ் மட்டும் கணக்கில் சேருங்கள். சில பதிவுகளில் முன்னூறு பின்னூடங்கள் இருக்கும் ஆனால் அவை எல்லாம் தரமான பதிவா என்றா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

 13. அமைதிச்சாரல் on November 14th, 2010 12:14 pm

  நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்…

 14. அன்பரசன் on November 14th, 2010 12:57 pm

  வரவேற்கத்தக்க முயற்சி

 15. nandha kumaran on November 14th, 2010 1:44 pm

  உண்மைதான். ஹிட்ஸ்களை வைத்து இடத்தை நிர்ணயிப்பதுதான் தற்பொழுதய சரியான தேர்வு ஆகும்.

 16. எஸ்கா on November 14th, 2010 2:30 pm

  ஒரு சிறு சந்தேகம். இந்த கணக்கீடுகள் எல்லாம் தமிழ்மணத்தில் சப்மிட் செய்யப்படும் பதிவுகளுக்கு மட்டும் பொருந்துமா?

  ஏனென்றால் நிறைய ஹிட்ஸ் வாங்கும் எத்தனையோ பதிவர்கள் தமிழ்மணத்தில் பதிவதே இல்லை. அது பற்றித் தெரியாமலே உள்ளார்கள். என் கதையைப் பொறுத்த வரையில் ஏதோ டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாதமாக தமிழ்மணத்தில் பதிவேற்றவே முடியாமல் இருந்தது (சமீபத்தில் தான் வலைப்பதிவு நிர்வாகத்திடம் இருந்து என் பதிவு – Registered என்று மெயில் வந்தது)

 17. Surveysan on November 16th, 2010 2:36 am

  நல்லது. வந்திருக்கு டாப்20 பார்த்தால், உங்க கணக்கு சரியாவே வேலைய் செய்யுதுன்னு தோணுது.
  keep it up.

Leave a Reply