தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழின் முண்ணனித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம் ஆண்டுதோறும் வலைப்பதிவில் வெளிவரும் சிறந்த இடுகைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும், 2010ம் ஆண்டில் வெளிவந்த படைப்புகளுக்கான விருதுகளை வழங்கும், “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010” நிகழ்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி பொங்கல் தினம் வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு 17 பிரிவுகளில் சிறந்த இடுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வு 20 பிரிவுகளில் நடைபெறும். பெண் பதிவர்கள் மட்டுமே பங்கு பெறும் பெண் பதிவர்களுக்கான ஒரு புதியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பதிவுகளில் பெண் பதிவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டே இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படங்களைச் சார்ந்த இடுகைகளுக்கு ”திரைமணம் விருதுகள்” என்ற பெயரில் திரைமணம் தளம் மூலம் விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு, நடுவர் குழு பரிசீலனை என மூன்று கட்டங்களாக போட்டிகள் நடைபெறும். தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளடக்கிய நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழு அமைக்கப்பட்டவுடன் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
விருதுகள் தேர்வு முறை
ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.
இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)
3. நூல் விமர்சனம், அறிமுகம்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
17. பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
18. தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்
இந்த 18 பிரிவுகள் தவிர சிறந்த சினிமா இடுகைகளுக்கான திரைமணம் விருதுகள் கீழ்க்காணும் பிரிவுகளில் வழங்கப்படும்.
19. திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
20. உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்
தேர்வு நடைமுறை:
1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்
3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2010 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2010 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.
6. தமிழ்மணம் விருதுத் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறும்.
7. தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
8. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு வாசகர்களுக்கானது. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.
9. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் தேர்வு பெறும் முதல் 5 இடுகைகள் மூன்றாம் கட்ட நடுவர் குழுவின் பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
10. தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள். தமிழ்மணம் விருதுக் குழு இந்த மூன்று சுற்று வாக்குகளையும் கணக்கில் கொண்டு விருதுகளை அறிவிக்கும்.
11. நடுவர் குழுவில் இடம் பெறும் வலைப்பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளும் பிரிவில் விருதுகளை தேர்வு செய்ய இயலாது.
12. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.
13. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 1 – டிசம்பர் 10
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 11 – டிசம்பர் 20
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 21 – டிசம்பர் 30
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 1 – சனவரி 10
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
14. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்
-தமிழ்மணம்/திரைமணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
Comments
106 Responses to “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010”
Leave a Reply

கலந்து கொள்ளப் போகும் பதிவர்கள் அனைவருக்கும்,. போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்
I think it is good if you prevent judges from participating . . .
தமிழ் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்தின் பணி போற்றுதலுக்குரிது.
பதிவர்கள் அனைவருக்கும்,தமிழ்மணம் குழுவினருக்கும் வாழ்த்துகள்..
1. //டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்//
நவம்பர் 11 முதல் நவம்பர் 30 வரை எழுதப்படும் இடுகைகள் பாவம் செய்தவையா
2. ஏற்கனவே ஒரு பிரிவில் பரிசு பெற்றவர்கள் (குறைந்த பட்சம் முதல் பரிசு பெற்றவர்களாவது) இம்முறை மீண்டும் அதே பிரிவில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். பிற பிரிவுகளில் வேண்டுமானால் கலந்து கொள்ளலாம்
3. அவர்கள், தாங்கள் பரிசு பெற்ற பிரிவின் நடுவராக இருக்கலாம்
4. அல்லது ஒரேயடியாக நடுவர்கள் + தமிழ்மண நிர்வாகிகள் போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம் . இது தேவை யற்ற சர்ச்சைகளை தடுக்கும்
//அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் //
இந்த வாசகம் தமிழ்மணத்தின் தரத்தில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள்-2010 சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்…
தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகள்.
தமிழ்மணம் குழுவுனருக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் பதிவர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும், தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்.
தமிழ்மணத்தின் முயற்சியும் பதிவர்களின் முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள். வாக்குகள் அளிப்பது என்றாலேயே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஜனநாயகம் அந்த அளவு பயப்படுத்தி வைத்திருக்கிறது. தமிழ்மணத்தில் அப்படியெல்லாம் ஏற்படாது என்று நம்புவோமாக.
போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கு நல்வாழ்த்துகள்
நல்வாழ்த்துகள்.
போட்டி என்றாலே கொண்டாட்டம்தான்,வெற்றியோ தோல்வியோ பங்கு பெறுதல் ரொம்ப முக்கியம்.அனைவரும் கலந்து கொள்வோம்.வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே..
இந்த முறை நிச்சயம் கலந்து கொள்வேன். கோவியாரே தங்கள் முடிவினை மாற்றி நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ்மணத்திற்கும், போட்டியில் பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது.
கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதினேழாவது பிரிவுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
உங்களின் கடந்தாண்டு வெற்றிப் பெற்ற இடுகைகளின் தொகுப்புச் சுட்டிகள் சரியாக திறப்பதில்லை. அவை காரணத்தோடு முடக்கப் பட்டவையா? அல்லது தெரியாமல் முடக்கப்பட்டவையா?
மற்றும்// தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே //
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் எழுதப் பட்ட இடுகையாக இருந்தாலும் அவைகளை எப்போதும் மாற்றியமைக்கும் படி தொழிற்நுட்பங்கள் உதவுகின்றன. போட்டியை மனதில் கொண்டு யாராவது திருத்தி அமைப்பதால் ஏதேனும் பதிப்பாகுமா? காரணம் எனது சில பதிவுகளுக்கு updated செய்திகள் கூகிளிடமிருந்து கிடைத்துள்ளது அவற்றை இணைக்கலாம் என எதார்த்தமாக நினைத்திருக்கிறேன்.
பதார்த்தமாக பதிலளிக்கவும்.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறப் போகும் 40 பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி தமிழ்மணம்!
அனைத்து வலைப்பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்….. வலைப்பதிவர்கள் எழுதும் விசயங்களும், செய்திகளும் ஒரே குட்டைக்குள் இல்லாமல் .. பெருங்கடலாக விரிதல் வேண்டும்… அதே போல் வலைபதிவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். ஓடும் நீர் உறைவதில்லை…. தொடர்ந்து எழுதுபவர்கள் சலித்துப் போவதில்லை… மதம், சதி போன்றவற்றில் காழ்புணர்ச்சிகளை வலைப்பதிவர்கள் தவிர்த்து உன்னதமான உணர்வுடன் எழுத என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தமிழ்மணத்துக்கு நன்றிகள்
தமிழ் நம் மொழி… தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தமிழை இணையத்தில் கொண்டு சேர்ப்பதில் மிகப் பெரும் பணியை செய்துள்ளனர். ஆகையால் தமிழ் வலைப்பதிவர்களிடம் இருந்து நல்ல எழுத்துக்கள் உண்மையான உணர்வுடன் வர வாழ்த்துக்கள்.
பங்கேற்பாளர்களை வாழ்த்துகிறோம்.
கலந்துக்க போகும் அனைத்து பதிவர்களுக்கும் போட்டி நடத்தும் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!! தமிழ்மண விருது ஒரு பெருமைக்குரிய விஷயம்!
பதிவர்களை ஊக்குவிப்பதில் தமிழ்மணம் நிர்வாகத்தின் பணி சிறப்பானது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ்மணத்திற்கும், பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! !!!
பங்கு கொள்ளும் அனைவருக்கும்,வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஓகே… இந்த முறையும் முட்டி மோதுவோம்..!
புருனோ ஸார்.. போன வருஷம் நவம்பர் முதல் தேதிக்கு முன்புவரையிலான காலக்கட்டத்திற்கு போட்டிகள் நடந்தது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த ஆண்டு நவம்பர் 1 முதல் துவங்குகிறது..! ஆம் ஐ கரெக்ட் தமிழ்மணம் ஸார்..?
ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்வது நியாயமில்லை.. எழுத்து என்பது தொடர்ந்து வருவதுதானே..! ஆளைப் பார்த்து இங்கே கொடுக்கப் போவதில்லையே.. பிறகென்ன..? எழுத்தின் தரம்தான் முக்கியமெனில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் மோதலாம்.. அப்போதுதான் எழுதுவதற்கும் ஒரு உத்வேகம் இருக்கும்..!
நல்ல விஷயம்.. வாழ்த்துகள்..
தமிழ்மணத்திற்கும், பங்குபெறும் பதிவர்களுக்கும் vijiscreation.blogspot.com வாழ்த்துக்கள்
//அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்//
கணினி சம்பந்தமான தொழில்நுட்பக்கட்டுரைகளுக்கு தனியாக ஒரு விருது கொடுக்க வேண்டும்.
தமிழ்மனத்தின் இந்த பணி மிகவும் போற்றுதலுக்குரியது
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
கலந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
பரிசுப்பணம் ஆயிரம் ரூபாயா ???
சொக்கா , சொக்கா ……………..இந்த ஆயிரம் ரூபாயும் எனக்கே கிடைக்கிறமாதிரி பண்ணப்படாதா ??
தமிழ்மணத்தில் பங்கு பெறும் பதிவர்களுக்கு Tamilmaxs.com இணையதளத்தின் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
தமிழ் மணத்திற்கு வாழ்த்துக்கள்.
கலக்கிப்புடுவோம்.
பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் மணத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள்.
தங்கள் ஊக்கமிக்க சேவை தொடரட்டும்.
தொடரும் தமிழ்மணத்தின் பணி போற்றுதலுக்குரியது. நன்றி. விழா கோலாகலமாக நடக்க வாழ்த்துகள்.
நண்பர் புரூனோ சொல்வது போல நவம்பர் மாதம் எழுதப்பட்ட இடுகைகளையும் இணைப்பதுதான் நியாயமாக இருக்கமுடியும். கடந்த ஆண்டுகளிலும் இந்தப்பிரச்சினை இருந்துவந்திருக்கின்றன. அதிலென்ன பிரச்சினை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும் “நவம்பர்-10″ வரை எழுதப்பட்ட இடுகைகள் எப்படி “நவம்பர் 1″ க்கு முன்னதாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டிருக்கமுடியும்?
//பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும்// Vs //டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே//
போட்டியில் கலந்துகொள்ளும் பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கலந்து கொள்ளப் போகும் பதிவர்கள் அனைவருக்கும்,. போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்.
“ஊக்குவிற்க ஆள் இருந்தால்
இன்று ஊக்கு விற்பவன் கூட
நாளை தேக்கு விற்பான் ” .
அந்த வகையில் தமிழ்மணம் குழுவினர் வருடம்தோறும் நடந்தும் இந்தப் போட்டி அனைத்துப் பதிவர்களின் திறமைகளையும் பட்டைத் தீட்டும் வகையில் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் . போட்டியில் அனைவரும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் .
போட்டி இனிதாய் அமைய வாழ்த்துக்கள்
மொழிபெயர்ப்பை (தமிழ் – பிறமொழி, பிறமொழி – தமிழ்) ஊக்குவிக்கும் வண்ணம் போட்டியில் வாய்ப்பளித்திருக்கலாம்.
(குறிப்பிட்ட காலப்பகுதியில் நான் எந்த மொழிபெயர்ப்பும் செய்யவில்லை! )
உங்கள் சேவைக்கு நன்றி
பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்.
பரிந்துரை செய்வதற்கான தளம் பற்றி எனக்கு இன்னும் மெயில் வரவில்லை. தள முகவரியை சொல்ல முடியுமா?
பதிவர்கள் அனைவருக்கும்,தமிழ்மணம் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். நான் எனது படைப்பை சமர்ப்பிக்கும் சமயம் அதன் பிரிவை தேர்வு செய்யாமல் சமர்பித்துவிட்டேன். பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது?பிரிவுகளை தேர்வு செய்யாததால் எனது கடடுரை நிராகரிக்கப்படுமா? பதிலை எதிர்பார்த்து….
வாழ்க வளமுடன்.
வேலன்.
பதிவர்கள் அனைவருக்கும்,தமிழ்மணம் குழுவினருக்கும் வாழ்த்துகள்..
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள்-2010 சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கலந்து கொள்ளப் போகும் பதிவர்கள் அனைவருக்கும்,. போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்.
நீங்கள் மறுபடியும் உங்களுக்கு அனுப்பப்பட்ட சுட்டியைக்(Link) கொண்டு உங்கள் தேர்வுகளை மாற்றலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்
போட்டி ,மற்றும் விருதுகள் பற்றிய அறிவிப்புக்கு நன்றி.
வெற்றி பெறப் போகும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
வல்லிசிம்ஹன்.
great..!
சீரிய முயற்சி, தமிழ்மணம் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் முயற்சி இது.
வாழ்க, வாழ்க.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
பரிந்துரைக்காக பதிவர்களுக்கு அனுப்பட்டுள்ள இடுகைகளின் பட்டியல் டிசம்பர் 2009-ல் தொடங்கி நவம்பர் 2010 வரைக்குமாக உள்ளன. பட்டியலில் உள்ளதால் இவ்வருட நவம்பர் இடுகைகளில் இருந்தும் பரிந்துரைக்கலாமா? தெளிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
பதிவர்கள் அனைவருக்கும்,தமிழ்மணம் குழுவினருக்கும் வாழ்த்துகள்..
கலந்து கொள்ளப் போகும் பதிவர்கள் அனைவருக்கும்,. போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்.
தமிழ்மணம் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் நல்லதொரு
முயற்சி இந்தபோட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ் மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010 சிறப்புடன் நடைபெறவும். அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் பங்கு பெற்று பரிசுகளும் பாராட்டுகளும் பெறவும் எனதினிய வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
பதிவர்களுக்கு அனுப்பி உள்ள சுட்டியில் உள்ள இடுகைகள் அனைத்துமே விருதுகளுக்கு தகுதியானவையே. டிசம்பர் 2009 தொடங்கி நவம்பர் 10 2010 வரையில் எழுதப்பட்ட இடுகைகள் அந்தச் சுட்டியில் இருக்கிறது. நன்றி….
//பதிவர்களுக்கு அனுப்பி உள்ள சுட்டியில் உள்ள இடுகைகள் அனைத்துமே விருதுகளுக்கு தகுதியானவை//
டிசம்பர் 2, 2010ல் இணைத்த இடுகைகளெல்லாம் நீங்கள் அனுப்பியச் சுட்டிப் பட்டியலிடுகிறது. அவையும் தகுதியானவை தானா?.
டிசம்பர் 2, 2010ல் இணைத்த இடுகைகளெல்லாம் நீங்கள் அனுப்பியச் சுட்டிப் பட்டியலிடுகிறது. அவையும் தகுதியானவை தானா?.
*****
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி…
ஒரு தொழில்நுட்ப பிரச்சனை நேர்ந்து விட்டது. ஆனாலும் ஏற்கனவே சுட்டிகள் அனுப்பபட்டு விட்டதாலும், பலர் தங்கள் பரிந்துரையை ஏற்கனவே செய்து விட்டாதாலும் இனி இதில் மாற்றம் செய்வது பலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே சுட்டியில் உள்ள அனைத்து இடுகைகளையும் தகுதியானவையே என விருதுக் குழு முடிவு செய்துள்ளது…
மிக்க நன்றி…
தமிழ்மணத்தின் இந்த செயலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
நானும் ஒரு பதிவாளராக கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்
தமிழ்மணம் குழுவினருக்கும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
தமிழ்மணத்தின் முயற்சி மிகுந்த போற்றுதலுக்கு உரியது,
தோழமையுடன்
மோகன்
பெரும்பணியை வழக்கம்போல் மேற்கொண்டு செய்வதற்குப் பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இரண்டு கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.
1. பரிந்துரைப்பது – தொடர் என்பதைக் குறிக்க ஏதாவது ஏற்பாடு செய்திருந்ததால் இன்னும் தெளிவாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.
2.’ பாட்டில் விடுகதை’த் தொடரை ‘விளையாட்டு’ப் பகுதியில் சேர்த்திருக்கிறேன். அதுவும் விளையாட்டுதானே?
Congradulation for all:)
என்னுடைய 27 பதிவுகள் இரண்டிரண்டு முறையாக மூன்று பிரிவுகளில் வந்துள்ளது. 20 பிரிவுகளுக்கு போட்டி என்றுள்ளது. மூன்று பிரிவுகளில் நான் தேர்வு செய்யும் பதிவுகள் 20 பிரிவுகளில் எந்த பிரிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும். குழப்பமாக உள்ளது. தெளிவு செய்வீர்களா.?
பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
//சுட்டியில் உள்ள அனைத்து இடுகைகளையும் தகுதியானவையே //
விளக்கத்துக்கு நன்றி.
என்னுடைய பிளாக் ரீடர் பிரச்சனையில் உள்லது..எனது பதிவுகளை திரட்டும் தமிழ்மணம் நான் பதிவு எழுதியதும் முகப்பில் காட்டுவதில்லை..வாசகர் பரிந்துரை,மறுமொழி யிலும் திரட்டுவதில்லை..ஆனால் ஓட்டு போட முடிகிறது…
தமிழ்மணம் என்னையும் விருது போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறது..ஆனால் சுட்டி குறிப்பிடும் பதிவுகள் பழைய பதிவுகளாக உள்ளன..மேலும் நவம்பர் 10 வரை நான் எழுதிய பதிவுகள் எதுவும் அதில் இல்லை.மேலும் சுட்டி குறிப்பிடும் என்னுடைய பதிவு லிங்கை அழுத்தினால் பிழை செய்தி காட்டுகிறது…ஏற்கனவே தமிழ்மணம் அறிவுரைப்படி ஃபீட் பிரச்சனை தீர ஃபீட் பர்னர் லிங்கை நீக்கி விட்டேன்…..
என்னுடைய பிளக்கின் பழைய பெயரை சுட்டி காட்டுகிறது..இந்த ஃபீட் பிரச்சனையை சரி செய்ய வழி முறை என்ன?
போட்டியில் நான் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்
தங்களது மின்னஞ்சல் கிடைத்தது, நன்றி!
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!
Thank u very much its gr8 effect………..
புதிய பதிவர்களுக்கு வாசகர் வட்டம் குறைவாக இருக்கும் என்பதால் வாசகர் பரிந்துரையில் பின் தங்கிவிடலாம். நடுவர் குழுவின் பரிந்துரை மூலமே தேர்வு சரியாக இருக்கும். என் முந்தைய குழப்பமும் தெளிவு செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
ஐயா,
எனது மின்னஞ்சலுக்கு எந்த மடலும் வரவில்லையே… கவனத்தில் எடுக்கவும்…
நான் பயன்படுத்தாத வலைப்பூக்கள் எல்லாம் நீங்கள் அனுப்பிய லிஸ்டில் இருக்கின்றன. ஆனால் கடந்த ஒராண்டாக நான் பயன்படுத்தும் மனசு (http://vayalaan.blogspot.com) வலைப்ப்பூ உங்கள் லிஸ்டில் இல்லை… நான் என்ன செய்வது?இந்த வருட போட்டியில் கலந்து கொள்ள முடியுமா முடியாதா? விவரம் தேவை… விவரங்களை எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் குழுவிற்கு வாழ்த்துக்கள்.
இந்தப் பந்தயத்தில், பந்தயக் குதிரைகளுக்கு மத்தியில் இந்தக் கன்றுக் குட்டியும் ஓடுகிறது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றிகள்
மன்னார் அமுதன்
போட்டி இனிதாய் அமைய வாழ்த்துக்கள்………
எனது மின்னஞ்சலுக்கு எந்த மடலும் வரவில்லையே… கவனத்தில் எடுக்கவும்
அன்புடன்.
எனது கட்டுரைகளை தேர்வு செய்து அனுப்பிஉள்ளேன்.நான் தேர்வு செய்யப்பட்டேனா என சந்தேகமாக உள்ளது. தங்கள் பதிலிலும் அதைப்பற்றிய விளக்கம் இல்லை. இனி பதிலிடும் சமயம் யார் கேட்ட கேள்விக்கான பதில் இது என தெளிவாக பதிலிடவும். எனது கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளதா – இல்லையா என தெரிவிக்கவும். தங்கள் பதிலை எதிர்பார்த்து…..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பதிவர் வேலன்,
நீங்கள் மறுபடியும் உங்களுக்கு அனுப்பப்பட்ட சுட்டியைக்(Link) கொண்டு உங்கள் தேர்வுகளை மாற்றலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் சுட்டிக்கு சென்றால் நீங்கள் செய்த தெரிவுகள் தெரியும்.
நன்றி…
எனது பதிவுகளில் நான் சிறந்தது என்று என்னும் ஒரு கவிதையை இணைக்க முடியவில்லை , அது இந்த வருடம் தான் எழுதப்பட்டது , அது தேர்வுகளில் இல்லை, மார்ச் மாதம் எழுதப்பட்டது , ப்ளோகில் உள்ளது என்ன செய்வது ?
தமிழ்மணத்தின் சேவைகளுக்கு
என் மனமார்ந்த நன்றி!
பெண்களைச் சிறப்பிக்கும் தமிழ்மணத்திற்கு
என் மகிழ்வு நிறைந்த
நன்றி!
கலந்து கொள்ளும் அனைத்து பதிவர்களுக்கும்
என் வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
தமிழ்மணத்திற்கு நன்றியறிவிக்க ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும். பதிவர்களை ஊக்கப் படுத்துவதன் மூலம், எழுத்துக்களால் எழுச்சிப் பெரும் ஒரு வலிமை மிகு சமுதாயத்தை ஏற்படுத்த இயலுமென்பதில் நம்பிக்கை கொண்டு, எழுதுபவர்கள் அனைவருக்குமென் மனம் நிறைந்த வாழ்த்தினையும், தமிழ்மணத்திற்கு அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றிகளையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்..
வித்யாசாகர்
குவைத்
தமிழ்மணத்தின் சேவை தொடரட்டும். தமிழ்மணம் குழுவினருக்கு என் அன்பு வாழ்த்துகள்!
வரவேற்க வேண்டிய ஒன்று … இது தொடர வேண்டுகிறேன்
தமிழ்மணத்திற்கும், வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்தின் பயனுள்ள நல்ல வேலை. வலைப்பதிவுகளுக்கு ஒரு பெறுமானத்தை ஏற்படுத்தும் தமிழ்மணத்திற்கு நல்வாழ்த்துக்கள்
தமிழ்மணத்திற்கு நன்றி!
பதிவர்களுக்கு வாழ்த்து!
தமிழ் மணத்திற்கு பாராட்டுகள் !!
கலந்து கொள்ளப் போகும் பதிவர்கள் அனைவருக்கும்,. போட்டியை நடத்தும் தமிழ்மணம் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்
உங்கள் தொடர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்…
பதிவர்களின் பகிர்வுகள் பலபேரைச் சென்றடைய செய்வதே தமிழ்மணத்தின் முதல் சிறப்பு.. அதற்கு முதல் நன்றி.. போட்டிகளும் வைத்து ஊக்குவிப்பதற்கு சிறப்பு நன்றி..
பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. எனக்கும் சேர்த்து..:))
நான் டிசம்பர் மாதத்தில் போட்ட புதிய இடுகை ஒன்றை இணைக்க நினைக்கிறேன்.ஆனால் அது லிஸ்ட்டில் இல்லை.அதை எவ்வாறு இணைக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? நன்றி.
பரிசு தொகை மிக மிக குறைவு…இன்னும் அதிகபடுத்தலாம்.
congratulatinos to tamilmanamand bloggers
தனிமடல் – பரிந்துரைப்பதற்கான மெயில் வரவில்லை என்பது தொடர்பாக admin mail id க்கு தெரியப்படுத்தியிருந்தேன். நான் முதன் முதலில் கொடுத்த மெயில் ஐடியில் பிழை இருந்ததாக செல்வராசு அவர்கள் தெரிவித்தார். சரியான மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி போட்டி நடத்தும் குழுவிற்கு தெரியப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். ஆனால், இன்னும் பரிந்துரைப்பதற்கான மெயில் வரவில்லை. இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. ஆகையால், உடனே அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்.
தனிமடல் – பரிந்துரைப்பதற்கான மெயில் வரவில்லை என்பது தொடர்பாக admin mail id க்கு தெரியப்படுத்தியிருந்தேன். நான் முதன் முதலில் கொடுத்த மெயில் ஐடியில் பிழை இருந்ததாக செல்வராசு அவர்கள் தெரிவித்தார். சரியான மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி போட்டி நடத்தும் குழுவிற்கு தெரியப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். ஆனால், இன்னும் பரிந்துரைப்பதற்கான மெயில் வரவில்லை. இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. ஆகையால், உடனே அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்.
Leave a Reply
தமிழ்மணம் நிர்வாகத்திற்கும்,போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் பரப்பும் “தமிழ்மண”த்திற்கும், போட்டியில் பங்கு பெரும் வலைப்பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்…
வரவேற்க வேண்டிய ஒன்று … இது தொடர வேண்டுகிறேன்