தமிழ்மணம் கட்டண சேவை

October 27, 2010 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம், தமிழின் முதன்மையான வலைத்திரட்டியாகவும், தமிழின் முன்னணி இணையத்தளங்களில் ஒன்றாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழின் வளர்ச்சிக்கும், வலைப்பதிவுகளின் பெருக்கத்திற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு, தமிழ்மணம் சேவையை வலைப்பதிவர்களுக்கு இலவச சேவையாக வழங்குவதையே தமிழ் மீடியா இண்டர்நேஷனல் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்மணம் செயல்படுவதற்கான மாதாந்திர வழங்கி செலவுகளும், பராமரிப்பு செலவுகளும் அதிகரித்து வருகின்றன. அச்சு ஊடகங்களின் இணையத்தளங்களோடு ஒப்பிடத்தக்க வாசகர் பரப்பினை கொண்டுள்ள தமிழ்மணத்தின் மாதந்திர செலவுகளை ஈடுகட்ட தமிழ்மணம் சில முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்மணம், திரைமணம் இணையத்தளங்களில் விளம்பரங்களை பெற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறோம்.

விளம்பரங்களைத் தவிர கட்டண சேவை என்ற புதிய சேவையை தமிழ்மணம் அறிமுகப்படுத்துகிறது. தனிப்பட்ட வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளைத் திரட்டும் சேவையில் எந்த மாற்றமும் இராது. ஆனால் செய்தித்தளங்கள், இணையத்தளங்கள், தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனங்கள் சாராத தனியார் அமைப்புகளின் தளங்கள், பிரச்சாரத் தளங்கள் ஆகியவற்றை திரட்ட தமிழ்மணம் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளது. தமிழ்மணத்தில் தற்பொழுது திரட்டப்பட்டு வரும் இந்த தளங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலும் கட்டண விபரமும் அடுத்த சில நாட்களில் அனுப்பப்படும்.

இது தவிர தம் தளத்தை பிரபலமாக்க விரும்பும் எவரும் இந்தக் கட்டணச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டண விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன – http://www.tamilmanam.net/purchase_ads.php

தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுவதற்கே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்

Comments

23 Responses to “தமிழ்மணம் கட்டண சேவை”

 1. nandha kumaran on October 28th, 2010 12:10 am

  நிச்சயமாக எனது ஆதரவு தமிழ்மணத்திற்க்கு உண்டு

 2. ஜாக்கிசேகர் on October 28th, 2010 12:11 am

  எனது இடுக்கையை சில நாட்களாக இணைக்க முடியவில்லை… நான் இப்போதுதான் டாட் காமுக்கு மாறினேன்… அதனால் எதாவது பிரச்சனையா? அல்லது எனது தளத்துக்கும் ஏதாவது கட்டணம் விதிக்கப்படுமா?? அல்லது திரட்டியில் ஏதாவது பிரச்சனையா? என்பதை சொல்லவும்…

  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்..

 3. தமிழ்மணம் on October 28th, 2010 12:23 am

  ஜாக்கிசேகர்,

  இந்த மாற்றங்கள் எதுவும் தற்பொழுது செய்யப்படவில்லை. அடுத்து வரும் நாட்களில் செய்யப்படும். ஒரு தளம் கட்டணச் சேவைக்கு மாற்றப்படும் பொழுது முறைப்படியான மின்னஞ்சல் அனுப்பப்படும்.

  சினிமா இடுகைகள் திரைமணத்தில் மட்டுமே வெளியாகும்…

  நன்றி…

 4. -/பெயரிலி. on October 28th, 2010 12:37 am

  ஜாக்கிசேகர்
  உங்கள் பதிவினை புளொக்ஸ்பொட்டிலிருந்து டொட்.கொம்முக்கு மாற்றும்போது புளொட்ஸ்பொட் பதிவினை விலக்கிவிட்டு, டொட்.கொம் பதிவினைச் சேருங்கள். இல்லாவிடின், யாரேனும் உங்கள் பெயரிலே புதுப்பதிவினைச் சேர்க்கின்றார்களோ என்ற ஐயத்திலே சேர்க்கமுடியாது; அது பற்றி விளக்கி அஞ்சல் அனுப்பமட்டுமே முடியும்.

 5. அமுதவன் on October 28th, 2010 12:58 am

  காலத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்தபடி தொடர்ந்து செல்வதுதானே நலன் பயக்கும்! தமிழ் மணம் சேவை தமிழின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பு. எல்லாரும் இணைவோம்.

 6. செந்தழல் ரவி on October 28th, 2010 1:54 am

  எனது ஆதரவு !! Best Wishes !!!

 7. TheKa on October 28th, 2010 9:47 am

  நல்ல ஏற்பாடகாத்தான் தெரிகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

 8. கிரி on October 28th, 2010 10:02 am

  நல்ல முடிவு! வாழ்த்துக்கள்.

 9. kudukuduppai on October 28th, 2010 10:49 am

  வரவேற்கத்தக்க முடிவு, எனக்குள் வெகுநாள் இருந்த கேள்வி, திரைமணம் ஆரம்பித்தபோது புரிந்தது, கட்டண சேவையின் மூலம் செய்தி/வியாபார தளங்கள் இணைவது தமிழ்மணத்திற்கு மட்டுமன்றி தமிழ் வாசகர்களுக்கும் பயன் தரும். இலவச வலைப்பதிவுகளும் மேலும் பலரை சென்றடையும். நல்லதொரு மார்க்கெட்டிங் அணியை உருவாக்கி விளம்பரங்கள், கட்டண சேவையை அதிகரிக்க வாழ்த்துக்கள்.

 10. T.V.Radhakrishnan on October 28th, 2010 11:10 am

  Best Wishes !!!

 11. பிரவின்குமார் on October 28th, 2010 11:30 am

  எப்பொழுதும் எனது ஆதரவும் தமிழ்மணத்திற்கு உண்டு..!!

 12. ஆதவன் on October 28th, 2010 11:59 am

  தங்களின் விளம்பர இடஙளை வாங்க முடியவில்லை … கீழ்கண்ட தகவல் வரகிறது. தயவுடன் உதவவும்.

  Oops!
  Unfortunately, this merchant no longer accepts payments through Google. We apologize for the inconvenience.

 13. ஜோதிஜி on October 28th, 2010 12:48 pm

  வளர்க நலமுடன்.

 14. மு. மயூரன் on October 28th, 2010 1:30 pm

  தமிழ்மணம் தன் தொடர்ச்சிக்கு நிதி திரட்ட வேண்டிய நிலையில் இருப்பது புரிந்துகொள்ளப்படத்தக்கதாகும்.

  அதற்கு தமிழ் மணம் எடுக்கும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  எத்தகைய செய்தியோடைகள் கட்டணம் செலுத்த வேண்டிய வாஇக்குள் அடக்கப்படும் என்பதற்கு ஒரு தெளிவான வரையறைய தமிழ்மணம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

  இங்கே சொல்லப்பட்டுள்ள வரையறை அவ்வளவு தெளிவாக இல்லை.

 15. ஜாக்கிசேகர் on October 29th, 2010 2:16 pm

  அன்பின் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு..
  சினிமா அல்லாத எனது பொது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை.. நான் சமீபத்தில் டாட்காம்க்கு எனது தளத்தை மாற்றினேன்.. அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை போனிலே மின்னஞ்சலிலோ சொல்லவும்..
  நன்றியுடன்
  ஜாக்கி

 16. தமிழ்மணம் on October 29th, 2010 10:34 pm

  ஜாக்கி சேகர்,

  உங்களுடைய இடுகைகள் அனைத்தும் தமிழ்மணத்தால் திரட்டப்படுகிறது. தமிழ்மணத்தால் திரட்டப்படும் இடுகைகள் அனைத்தையும் இந்தச் சுட்டியில் பார்க்க முடியும்
  http://tamilmanam.net/tamil/blogger/ஜாக்கி சேகர்

  இந்தச் சுட்டியில் உங்கள் அனைத்து இடுகைகளும் திரட்டப்படுவதை நீங்கள் பார்க்கலாம். இவற்றில் கீழ்கண்ட சினிமா இடுகைகள் மட்டும் தமிழ்மணம் முகப்பில் வரவில்லை. இவை திரைமணத்தில் வெளியாகியது

  (AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.
  (BRINDAAVANAM-2010)TELUGU ஜுனியர் என்டிஆர்,காஜல்
  (MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலை
  (THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல்
  (KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சன

  பிற இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தோன்றியுள்ளதை உறுதி செய்கிறோம். இது தவிர உங்களுடைய ஒரு இடுகை ”தமிழ்மணம் மகுடம்” பகுதியிலும் இடம் பெற்று உள்ளது.

  இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு உங்களுடைய இடுகைகள் தமிழ்மணத்தில் தோன்றவில்லை என கூறுகிறீர்கள் எனப் புரியவில்லை ?

  தமிழ்மணம் தற்பொழுது இடுகைகளை தானியங்கியாக திரட்டுகிறது. நீங்கள் உங்கள் இடுகையை எழுதியவுடன் தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்காவிட்டால் உங்கள் இடுகைகள் தானியங்கியாக திரட்டப்பட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  தமிழ்மணம் எல்லோரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லுதல் எப்பொழுதும் முடியக்கூடியது அல்ல. பதிவர்கள் தமிழ்மணம் அளித்துள்ள பல்வேறு வசதிகளை கொண்டு இத்தகைய தகவல்களை சேகரி்த்து கொள்வதே சிறப்பானது.

  தமிழ்மணம் செய்யும் எல்லா மாற்றங்களும் (பதிவை நீக்குதல், இடுகையை நீக்குதல்/சேர்த்தல் போன்றவை) மின்னஞ்சல் மூலம் முறைப்படியான அறிவிப்பு அனுப்பியே செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

  நன்றி…

 17. தமிழ்மணம் on October 29th, 2010 10:53 pm

  தங்களின் விளம்பர இடஙளை வாங்க முடியவில்லை … கீழ்கண்ட தகவல் வரகிறது. தயவுடன் உதவவும்.

  **************

  இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. விளம்பர இடங்களை வாங்க, இந்தப் பக்கத்துக்கு செல்லுங்கள்…

  http://www.tamilmanam.net/purchase_ads.php

 18. வடக்குப்பட்டி ராமசாமி on October 30th, 2010 6:26 am

  அட்டகாசம். அபாரம். அமர்க்களம்.

 19. ஜாக்கிசேகர் on October 30th, 2010 6:38 am

  விரிவான விளக்கத்துக்தகு தமிழ்மண நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துகொள்கின்றேன்…

  நான் தமிழ்மணம் சப்மிட் என்ற பட்டனை அழுத்தியதும் பேரை கடவுச்சொல்லை கொடுத்தவுடன் உங்கள் இடுகை சேர்கப்பட்டது .. இடுக்கை தெரிய 5 நிமிடம் ஆகும் என்று சொல்லும் சமீபமாய் அப்படி தோன்றாமல் வெறும் தமிழ்மணம் என்ற பேர் மட்டும தெரிகின்றது… அதே போல இப்போது இணைத்தால் அது தெரிய பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்கின்றது…

  எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாதுதான்.. ஒரு இடுக்கை இணைத்தவுடன் தெரிந்தைமைக்கும் இப்போது தெரியாமல் லேட்டாக இணைவதின் காரணம் என்ன?? என்று ஆர்வத்தினால் ஏற்பட்ட கேள்விகள்….

  உங்கள் வேலைபளுக்கு மத்தியில் எனக்கு விரிவான பதில் கொடுத்தமைக்கு என் நன்றிகள்.

  நன்றியுடன்
  ஜாக்கிசேகர்…

 20. Bruno on October 30th, 2010 8:07 am

  Good initiative . But the announcement does is not clear about the criteria you follow to decide whether a site is personal blog or paysite. If an opinion spreads that ‘not all blogs are seen in tamilmanam’ your aggregator will be pushed back . . My 2 cents

 21. அமுதன் on October 30th, 2010 5:40 pm

  எந்த மாதிரி தளங்கள் இலவசமாகத் திரட்டப்படும் என்பதை தெளிவாக கூற முடியுமா, டொமைன் கள் இருந்தாலே அவையாவும் கட்டண சேவையாக்கப்படுமா? அல்லது வியாப்பர நோக்குடன் இயங்கும் தளங்கள் கட்டண சேவை ஆக்கப்படுமா, அல்லது செல்ஃப் கோஸ்டட் தளங்கள் கட்டண சேவை ஆக்கப்படுமா, உதாரணம் எனது ஒரு தளம் டொமைன் செல்ஃப் காஸ்டட் இருப்பினும் அத்தளம் என்னால் மட்டுமே பதியப் படுகின்றது. தெளிவாக கூறினால் நன்று

 22. Mohamedkamil on November 4th, 2010 3:00 am

  வலைப்பூக்கள் பிரபலம் ஆவதற்கு தமிழ்மணம் எவ்வளவு உறுதுணையாய் இருக்கிறது என்பதை நான் அறிவேன். இதற்கு ஆகும் Bandwidth செலவை நான் உணர்கிறேன். உங்களின் இந்த நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

 23. ப்ரியமுடன் வசந்த் on February 23rd, 2011 7:24 am

  அன்பின் தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஜாக்கி அண்ணனைப்போலவே நானும் ப்லாக்ஸ்பாட்டிலிருந்து டொமைனுக்கு மாறியிருக்கிறேன்

  //உங்கள் பதிவினை புளொக்ஸ்பொட்டிலிருந்து டொட்.கொம்முக்கு மாற்றும்போது புளொட்ஸ்பொட் பதிவினை விலக்கிவிட்டு, டொட்.கொம் பதிவினைச் சேருங்கள்//

  நீங்கள் ஜாக்கிக்கு கூறியிருப்பதில் தமிழ்மணத்திலிருந்து ப்லாக்ஸ்பாட்டை எப்படி நீக்குவது என்பதை தெளிவுபடுத்தினால் நலம்…

Leave a Reply