தமிழ்மணம் விருதுகள் 2009 - முடிவுகள்

January 16, 2010 – 7:03 pm by தமிழ்மணம்

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு தற்பொழுது நிறைவுபெறுகிறது. இந்த விருதுகள் நிகழ்வில் கலந்து கொண்ட பதிவர்களுக்கும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு இருந்த கூடுதலான ஆர்வமும், பங்கேற்பும் எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்து இருந்தது. அடுத்த ஆண்டில் இந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கள்ள ஓட்டுகள் போடப்படும் என பல பதிவர்களும், வாசகர்களும் கூறியிருந்தனர். எனவே ஓட்டு எண்ணப்பட்ட பொழுது கள்ள ஓட்டுக்களை நீக்கும் தொழில்நுட்பத்தை தமிழ்மணம் புகுத்தி இருந்தது. தானியங்கியாகவும், நிர்வாகத்தால் அலசப்பட்டும் (Automatic+Manual) கள்ள ஓட்டுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவித்து இருந்தது போல முதல் இரண்டு இடங்களைப் பெறும் இடுகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சில பிரிவுகளில் சில இடுகைகள் ஒரே அளவிலன ஓட்டுக்களைப் பெற்று இருக்கின்றன. ஒரு பிரிவில் முதல் இடத்திற்கு இரண்டு இடுகைகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அந்தப் பிரிவில் இரண்டாம் பரிசு நீக்கப்பட்டு, இரண்டு முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் தேர்வு பெறும் பட்சத்தில் அந்த இரண்டு இடுகைகளுமே இரண்டாம் பரிசை பெறும்

விருது முடிவுகளும், வலைப்பதிவில் அணிந்து கொள்ள விருது பதக்கங்களும் கீழே உள்ள சுட்டியில் உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்தது போல பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பன் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்

http://awards2009.tamilmanam.net/winners2009.php

Awards 2009

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

  1. 39 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2009 - முடிவுகள்”

  2. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம் நிர்வாக குழுவில் இருப்பதினால் பரிசுகளை அடுத்து வந்தவர்களுக்கு கொடுத்திருப்பது பாராட்டக்கூடிய செயல்.

    தொடர்ந்து பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்துக்கு ஒரு சல்யூட்!!

    :))

    மீண்டுமொருமுறை வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்!

    By யெஸ்.பாலபாரதி on Jan 16, 2010

  3. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்…

    தமிழ்மணத்தின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்…

    By பிரியமுடன்.......வசந்த் on Jan 16, 2010

  4. வெற்றி பெற்ற அனைவருக்கும், தமிழ்மணதிற்கும் வாழ்த்துக்கள்..:))

    By பலா பட்டறை on Jan 16, 2010

  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By T.V.Radhakrishnan on Jan 17, 2010

  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)களும், தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு இனிய பாராட்டுகளும்.

    என்றும் அன்புடன்,
    துளசி

    By துளசி கோபால் on Jan 17, 2010

  7. ஓட்டு போட்டு என்னை வெற்றிபெற செய்த அனைத்து நண்பர்களுக்கு நன்றிகளும், வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும்..

    By குசும்பன் on Jan 17, 2010

  8. சிறந்த முறையில் போட்டியினை நடத்தி முடித்த தமிழ்மண நிர்வாக குழுவுக்கு நன்றிகள்.

    ஒரே ஒரு ரிக்வெஸ்ட், தமிழ்மணமுகப்பில் ஹெட்டரில் போடும் இமேஜ் மிகவும் அசிங்கமாக இருக்கிறது(கிருஸ்துமஸ், பொங்கல், புத்தாண்டு வாழ்த்து), அதுபோல் இந்த முறை டிசைன் செஞ்ச விருது பேட்சும் அத்தனை நன்றாக இல்லல

    By குசும்பன் on Jan 17, 2010

  9. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    By சுடுதண்ணி on Jan 17, 2010

  10. congrats winners! :)

    By surveysan on Jan 17, 2010

  11. தமிழ்மணம் விருதுகள் பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கு வாழ்த்துகளும்,வந்தனைகளும்.
    நன்றி!

    By KN.ShanthiLakshman on Jan 17, 2010

  12. தமிழ்மணத்தின் இந்த முயற்சி மேலும், மேலும் சிறந்த படைப்புகளை வருடந்தோறும் வழங்க வேண்டும் எனகிற உத்வேகத்தை பதிவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    வாழ்க வளமுடன்

    By உண்மைத்தமிழன் on Jan 17, 2010

  13. “தமிழ்மணம் 2009 விருது” போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    தமிழ்மணம் தன் நற்பணியை தொடர என் வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    By சிங்கக்குட்டி on Jan 17, 2010

  14. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    By gulf-tamilan on Jan 17, 2010

  15. போட்டியில் வென்றவர்களுக்கு மட்டுமல்ல, உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழத்துக்கள்! குறிப்பிட்ட காலத்தில் போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை உற்சாகப்படுத்தும் தமிழ் மணத்திற்கு நன்றிகள்!

    By வினவு on Jan 17, 2010

  16. வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் கலந்து கொண்டு போட்டியை சுவாரஸ்யமாக மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    :))

    சிறந்தமுறையில் போட்டியை நடத்திய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்

    By கண்ணா on Jan 17, 2010

  17. விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    சிறப்பான முறையில் போட்டியை நடத்திய தமிழ்மணத்துக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

    By வந்தியத்தேவன் on Jan 17, 2010

  18. விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்….ஆனால் லிங்க் சரியாக இருக்கிறதா? 404 not found என்றுதான் வருகிறது.. யாரு ஜெயிச்ச்சதுன்னு பார்க்க முடியாம இப்படி ஒரு சஸ்பென்சா? கொஞ்சம் செக் பண்ணுங்கப்பா..

    By கார்த்திகைப் பாண்டியன் on Jan 17, 2010

  19. வெற்றி பெற்றவர் பட்டியலைப் பார்க்க முடியவில்லையே??

    Error performing query: Table ‘thamizmanam_awards.final_winners2009′ doesn’t exist

    By Dubukku on Jan 17, 2010

  20. வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்!!

    By Dubukku on Jan 17, 2010

  21. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் இந்தப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழ்மணம் குழுவினருக்கு பாரட்டுக்கள்.

    By பதி on Jan 17, 2010

  22. மிக்க நன்றி தோழர்களே மற்றும் நண்பர்களே, ஆளும் வர்க்கம் தன் மூச்சினை கூட பிரச்சாரமாக பயன் படுத்தும் வேளையில் மக்களின் கருத்தை பேசுவது கூட குற்றமாகவும் அரசியல் பிரச்சாரமாகவும் பேசப்படுகிறது. அவ்வகையில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான காட்சியாக, கவிதையாக, எழுத்தாக ,வடித்த & பார்த்த, படித்த அனைவருக்கும் நன்றிகள்.

    பெருமையோடு சொல்லுவோம் ஆம்
    பிரச்சாரம் தான் செய்கிறோம்
    ஆளும் வர்க்கத்தின் லத்திக்கம்பு
    எங்கள் மண்டையை பிளக்கும்
    நாங்கள் அமைதியாயிருப்பது தான்
    தேசியத்தின் பாசம் எனில்
    அந்த வேசம் நமக்குத்தேவையில்லை

    தோழமையுடன்
    கலகம்

    By கலகம் on Jan 18, 2010

  23. சிறந்தமுறையில் போட்டியை நடத்திய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்

    By கலகம் on Jan 18, 2010

  24. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியை சிறப்பாக நடத்தி, பதிவர்களை ஊக்கப்படுத்திய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள்.

    By குருத்து on Jan 18, 2010

  25. வெற்றிபெற்ற பதிவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    வெற்றிக்குழுமத்தில் என்னையும் ஒருவனாக்கிய அனைத்து நட்புகளுக்கும் இரட்டை வாழ்த்துக்கள்.

    By பீர் | Peer on Jan 18, 2010

  26. தகுதியான படைப்புகள் தேர்வாகி இருக்கின்றது. இது உங்களின் சமீப மாறுதல்களின் சாதனை, வென்றவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் உன்னத உழைப்புக்கு மனங்கனிந்த பாராட்டு.

    By தேவியர் இல்லம். திருப்பூர். on Jan 18, 2010

  27. விருது கொடுத்தீங்க சரி..

    ஏதோ புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும் என்றார்கள்
    உண்மையில் அப்படியொரு வாய்ப்பு இருக்கிறதா?
    அதில் எனக்கு இதுவரை மின்னஞ்சல் மூலம் விருது வழங்கியதற்கான எந்த அறிவிப்பும் அலுவலக ரீதியாக வரவில்லையே ஏன்?

    எனக்கு வாக்களித்த எல்லோருக்கும் நன்றி

    By reportervetri on Jan 18, 2010

  28. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By ஷாகுல் on Jan 18, 2010

  29. வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    By appanpalanisamy on Jan 18, 2010

  30. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    By தமிழ் பிரியன் on Jan 18, 2010

  31. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By kumar on Jan 18, 2010

  32. வெற்றி பெற்ற அனைத்து வலைப் பதிவு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    சிறப்பான முறையில் போட்டியை நடத்திய தமிழ்மணம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

    By அபுல் பசர் on Jan 19, 2010

  33. வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் நல் வாழ்த்துகள்..

    By தமிழ்வெங்கட் on Jan 19, 2010

  34. சிறப்பான முறையில் போட்டியை நடத்தியிருக்கும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்!

    இரண்டு விருதுகள் கிடைத்ததிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது! எனது நன்றிப் பதிவு இங்கே:http://tamilamudam.blogspot.com/2010/01/2009.html

    வெற்றி பெற்ற மற்றவருக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    By Ramalakshmi on Jan 20, 2010

  35. தமிழ்மணம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    தமிழ்ப் பதிவுலகை ஊக்குவிக்கும் தமிழ்மணம் மற்றும் வாசகர்களுக்கு நன்றி!

    By சுனா பானா on Jan 20, 2010

  36. சிறப்பாக நடத்தியமைக்கு தமிழ்மணத்திற்கு பாராட்டுகள்.

    என்னை வெற்றி பெற வைத்த பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்

    By நான் ஆதவன் on Jan 23, 2010

  37. தமிழ்மணத்திற்கும் வெற்றி வாயப்பினைப் பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    By தமிழநம்பி on Jan 26, 2010

  38. தமிழ்மணத்திற்கும், தமிழ் மனங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    By thubai raja on Jan 27, 2010

  39. all the best for thamizhmanam award winners

    By cmurugadoss on Feb 6, 2010

  40. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By Thaya Bala on Feb 10, 2010

Post a Comment