தமிழ்மணம் வாசகர் பரிந்துரை – வாக்களிக்கும் முறையில் மாற்றம்

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வாக்களிக்கும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். Openid முறையில் வாக்களிப்பதில் இருந்த பல சிரமங்களை பதிவர்களும், வாசகர்களும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இனி வாக்களிப்பதற்கு தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும். தற்போதைய புதிய முறை மிகவும் எளிமையாக இருப்பதால் அதிகளவில் வாசகர்கள்/பதிவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என நம்புகிறோம்

உங்களுக்கு ஒரு புதிய பயனர் பெயரை உருவாக்கி கொள்ள இந்தச் சுட்டியை சொடுக்குங்கள் – http://www.tamilmanam.net/login/register.php


புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

17 Responses to “தமிழ்மணம் வாசகர் பரிந்துரை – வாக்களிக்கும் முறையில் மாற்றம்”

 1. தமிழ்மண வாசகன் on January 1st, 2010 4:57 pm

  மிக்க சந்தோசம் பிறகு ஒரே ஒருத்தர் பல மெயில் ஐடி மூலமா பல யூசர் நேம் உருவாக்கி ஓட்டு போடுறதை தடுக்க வழிவகைகள் உள்ளனவா?

  ஒவ்வொருத்தரும் இப்போ வேலை செய்ற இடத்தில் ஒரு ஓட்டு வீட்டுக்கு வந்து ஒரு ஒட்டு இப்டிபோட முடிவதை தடுக்க முடியுமா?

  அதுமாதிரி பல ஓட்டுக்கள் போட முடியும் என்றால் இந்த முறை யூஸ்லெஸ்……..

 2. தமிழ் பிரியன் on January 2nd, 2010 12:12 am

  தமிழ்மண வாசகனின் கருத்தே என் கருத்தும். விருதுகளுக்கு ஓட்டுப் போட பழைய முறையே சிற்ந்தது. வேண்டுமானால் தனி இடுகைகளுக்கு பரிந்துரைக்கும் முறைக்கு வேண்டுமெனில் இம்முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  அன்புடன்
  தமிழ் பிரியன்

 3. துளசி கோபால் on January 2nd, 2010 8:23 am

  பயனர் சொல்லை உருவாக்கவோ அல்லது கடவுச்சொல்லை மீட்கவோ முடியவில்லை(-:

 4. கோவி.கண்ணன் on January 2nd, 2010 9:38 am

  ஒருவரே பல பயனர் கணக்குகளை உருவாக்கிக் கொள்ளும் இந்த முறையால் ஒருவர் தனக்குத் தானே வேறு வேறு கணிணிகளில் உருவாக்கிய பயனர் கணக்கு வழியாக வாக்களித்துக் கொள்ள முடியும். எதற்கும் வேறு நல்ல மாற்று வழிமுறைகள் இருந்தால் அல்லது நடுவர் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுத்தால் முடிவுகள் நல்ல முறையில் அமையும் என்று நினைக்கிறேன்.

 5. நல்லது சாமிகளா! உங்களுக்கு புண்ணியமா போகும். இந்த ஓப்பன் ஐடியால பட்டபாடு பெரும்பாடு. ஆனாலும் மேற்கண்ட கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே! அப்ப இனிமே பிரவுசிங் சென்டரிலும் குத்தலாமா?

 6. தேவன்மாயம் on January 2nd, 2010 12:05 pm

  வாழ்த்துக்கள்!!

  மேற்சொன்ன பிரச்சினைகளை நானும் சிந்தித்தேன்!! இவற்றைத்தடுக்க வேறு வழியில்லையா?

 7. D.R.Ashok on January 2nd, 2010 12:18 pm

  இதுவரை 100க்கு 80 சதவிதம் என் ஓட்டை பதிவு செய்யமுடியாமலேயே தான் இருந்தது. எனது வெப்சைட் அட்ரஸே உள்நுழைவதற்கான அடையாளமாக இருந்தது. இனி அது சரியாகும் என எண்ணுகிறேன்.

  எனக்கு ஓட்டளித்த வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றி.

 8. அப்பாதுரை on January 2nd, 2010 12:31 pm

  பல பெயர்கள் பெறுவது அதிக வேலை. தொந்திரவு. பல பெயர்கள் பெற்று வாக்களிப்பை திசைமாறச் செய்பவர்கள் உண்டு என்றாலும் பெரும்பான்மையினர் ஒரு வாக்கு அளிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன். வழிமுறைகளைப் பெரும்பான்மையினருக்கு உகந்த வகையில் அமைக்க வேண்டும். தமிழ்மணம் பயனர் காவல் துறையாக மாறி விடக்கூடாது. (பல பெயர்கள் பெறுவதைத் தடுக்க தொழில் நுட்பம் உண்டா என்பது எனக்குத் தெரியாது – ஹி)

 9. தமிழ்மணம் on January 2nd, 2010 12:54 pm

  பயனர் சொல்லை உருவாக்கவோ அல்லது கடவுச்சொல்லை மீட்கவோ முடியவில்லை(-:

  ***********

  பதிவர் துளசி கோபால்,

  சரியான மின்னஞ்சல் முகவரி, சரியான பயனர் பெயர் (more than 5 characters) போன்றவற்றை கொடுத்து பாருங்கள். இந்தச் சேவை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சரியாக இயங்குவதாகவே தெரிகிறது.

  நீங்கள் உங்கள் தகவல்களை உள்ளிடும் முறையில் பிரச்சனைகள் இருக்கலாம் என தோன்றுகிறது

  நன்றி…

 10. துளசி கோபால் on January 2nd, 2010 1:39 pm

  வெற்றி வெற்றி.

  உள்ளே நுழைஞ்சுட்டேன். ஓட்டும் போட்டாச்சு.

  மிகவும் நன்றி.

  நான் செய்த பிழை: துளசிக்கும் கோபாலுக்கும் நடுவில் ‘இடைவெளி’விட்டதுதான்!! 🙂

 11. gulf-tamilan on January 2nd, 2010 2:35 pm

  நன்றி.நான் பயனர் பெயரை உருவாக்கிவிட்டேன்.மேலே சிலர் கூறியபடி இன்னெரு பயனர் பெயரும் உருவாக்க முடியுமா??விளக்கவும்.

 12. ஓய்வகம் on January 2nd, 2010 3:52 pm

  ஓப்பன் ஐடியிலேயே குழு சேர்ந்து கள்ள ஓட்டை குத்தியவர்களுக்கு இனி கொண்டாட்டமே, தயவு செய்து வாசகர் பரிந்துரையை ஓட்டுக்களை நீக்கிவிடுங்கள் இது பதிவர்களிடையே குழுமனப்பான்மையை வளர்க்கிறது. இதற்கு சூடான இடுகை எவ்வளவோ பரவாயில்லை

 13. nondhakumar on January 5th, 2010 4:01 am

  ஓபன் ஐடி பிரச்சனை இருந்தது. புதிதாக உள்ள முறை எளிதாக இருக்கிறது.

  ஆனால்.. மேலே சொன்ன பதிவர்கள் சொன்னமாதிரி, இனி கள்ள ஓட்டு போடுபவர்களுக்கும் கொண்டாட்டமாகிவிடும். பார்க்கலாம். அவரவர் நேர்மையாக இருந்தால் தான் உண்டு. மொக்கையில், கும்மியில் ஏது நேர்மை என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.

 14. தமிழ்மணம் on January 6th, 2010 2:25 am

  உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்னும் செயற்படுத்தற் குறி (Activation code) வரவில்லையா ? செயற்படுத்தற் குறியை மறுபடியும் பெற இங்கே சொடுக்குங்கள்

  http://www.tamilmanam.net/login/resend_activation.php

 15. surveysan on January 6th, 2010 2:30 pm

  //மிக்க சந்தோசம் பிறகு ஒரே ஒருத்தர் பல மெயில் ஐடி மூலமா பல யூசர் நேம் உருவாக்கி ஓட்டு போடுறதை தடுக்க வழிவகைகள் உள்ளனவா?///

  finger print/கண் retina/DNA வச்சு ஓட்டு வாங்கினாதான் உண்டு 🙂
  அதிலும் கூட, ஓட்டையை கண்டு பிடிச்சு, கள்ள வாக்கு போடரதுக்கு, பல பேர் தயாராவே இருப்பாங்க. லூஸ்ல விடுங்க.

 16. lathananth on January 8th, 2010 10:50 pm

  பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் முறையை அக்ற்றுவது நல்லது. பரஸ்பரம் பின்புறம் சொறிபவர்கள் பதிவரின் பெயர்களுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்களே தவிர பதிவுகளுக்கு அல்ல்.

 17. Kanmani on January 11th, 2010 10:50 pm

  You keep on changing the voting process yet there are lot of drawbacks in every method .unless the voters name is shown openly as in tamilish every method is a mere waste.any one can create as many yahoo or gmail ids as they can for voting.
  make voting possible only for registered tamilmanam users and not for all bloggers with a hidden blog profile.
  How far it’s possible i dont know but till date it ‘s been a good comedy to see repeated writers occupying the hot post spot.

Leave a Reply