தமிழ்மணம் விருதுகள் 2009 – இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்
தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் – http://www.tamilmanam.net/login/register.php
2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்
3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்
4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்
விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு
ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.
தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு
Comments
14 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2009 – இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு”
Leave a Reply

மிக்க நன்றி
நன்றி
ஒருவரே எத்தனை பயனர் கணக்கு வேண்டுமானாலும் துவங்க முடியுமா
குறைந்த பட்சம், இந்த வாக்கு பதிவு முடியும் வரையிலாவது நீங்கள் கணக்கு துவங்குவதற்கு அனைவரையிம் அனுமதிப்பதை நிறுத்தி வைத்து விட்டு
உங்களிடமிருந்து மின்னஞ்சல் பெறுபவர்கள் மட்டும் (அதாவது முதல் கட்டத்தில் வாக்களித்தவர்கள் மட்டும், அல்லது வாக்களிக்க அழைக்கப்பட்டவர்கள் மட்டும்) பயனர் கணக்கு துவங்க அனுமதிக்க வேண்டும்
அல்லது
பயனர் கணக்கு துவங்குபவர், தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றால் மட்டும் (அதாவது அவர் அளிக்கும் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே உங்கள் தரவுதளத்தில் இருந்தால் மட்டும்) அவ்ரால் வாக்களிக்க இயலும் என்று விதிமுறைகளை மாற்ற வேண்டும்
இது கோரிக்கை / வேண்டுகோள் / விண்ணப்பம்
தமிழ் மண நிர்வாகிகளுக்கு வணக்கம்..
”பரிந்துரைகள் 2009 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது//
விதிமுறைகளை சரியாக படிக்காமல் எனது படைப்பை அனுப்பிவிட்டேன். முதல்கட்ட வாக்கெடுப்பில் தேர்வான எனது ‘மூணு பொட்டு செவளை” கதை, எனது ‘குள்ராட்டி’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்டது. உங்கள் விதிகளுக்குள் இது அமையாவிட்டால், அந்த கதையை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
ஆடுமாடு.
உங்களிடமிருந்து மின்னஞ்சல் பெறுபவர்கள் மட்டும் (அதாவது முதல் கட்டத்தில் வாக்களித்தவர்கள் மட்டும், அல்லது வாக்களிக்க அழைக்கப்பட்டவர்கள் மட்டும்) பயனர் கணக்கு துவங்க அனுமதிக்க வேண்டும்
****
இந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் வாக்கெடுப்பு ஆகும். எனவே முதல் சுற்றுக்கு கையாளப்பட்ட நடைமுறை இந்தச் சுற்றுக்கு பொருந்தாது…
பொது வாக்கெடுப்பு என்பதால் தமிழ்மணம் பயனர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
முதற்கட்ட வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். தேவைப்படின் இந்த விகிதத்தில் மாற்றங்களை தமிழ்மணம் செய்யும்
நன்றி…
பதிவர் ஆடுமாடு,
உங்களுடைய தகவலுக்கு நன்றி…
இது சார்ந்த தமிழ்மணத்தின் விதிமுறை
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2009 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.
பயனர் கணக்கு துவஙகி நீண்ட நேரமாகியும் ஆக்டிவேஷன் மெயில் வரவில்லை. ஸ்பாம் மெயிலும் பார்த்துவிட்டேன்.
ஒருவரே எவ்வளவு கணக்குகள் வேண்டுமானாலும் உருவாக்கி வாக்களிப்பதை தடுக்க எதும் வழி இருக்கா? ஐபி ஃபில்டர் மாதிரி எதேனும் முயற்சித்திருக்கிங்களா?அதுவும் கூட டைனமிக் ஐபி வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்தாது என நினைக்கிறேன்.
பயனர் கணக்கு துவஙகி நீண்ட நேரமாகியும் ஆக்டிவேஷன் மெயில் வரவில்லை. ஸ்பாம் மெயிலும் பார்த்துவிட்டேன்.
என்ன செய்வது.தமிழ்மணம் முதல் கட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்திருக்கிறேன்.இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடிய வில்லை, மற்றும்,என்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் முடியவில்லை.
எனக்கு தங்களின் ஆலோசனை தேவை படுகிறது.
my vote is belonging tosubbayah
பதிவு செய்ய இயலவில்லை.
கட்டங்களை நிரப்பிவிட்டு “register”-ஐ அழுத்தினால் எந்த விளைவும் இல்லை.
உதவுக.
பயனர் கணக்கு துவஙகி நீண்ட நேரமாகியும் ஆக்டிவேஷன் மெயில் வரவில்லை. ஸ்பாம் மெயிலும் பார்த்துவிட்டேன்.
*********
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்னும் செயற்படுத்தற் குறி (Activation code) வரவில்லையா ? செயற்படுத்தற் குறியை மறுபடியும் பெற இங்கே சொடுக்குங்கள்
http://www.tamilmanam.net/login/resend_activation.php
One of the items coming in second round voting is a pure advertisement. How could this be allowed? I did not check all of the blogs. There may be more like these. Thamizh manam needs to look at them before allowing them, I think. My humble opinion.
http://www.tamilmanam.net/login/final_voting_2009.php
http://tamilmutukal.blogspot.com/2009/11/blog-post_23.html
முதல் கட்ட போட்டியில் என் பதிவுகள் பெற்ற வாக்குகள் எத்தனை?
அறிய ஆவல். நாற்பது பாலோவர்ஸ் என்றால் நாற்பது வோட்டு… இருக்குமா?
அனைவர் பெற்ற வாக்கு விபரம் – அணைத்து கேடகரியிலும் போடவும்.
[...] இறுதிக் கட்ட பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பு இங்கே. [...]