தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

தமிழ்மணம் விருதுகள் 2009ல், பதிவர்கள் மட்டும் பங்கு பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பி்ன் முடிவுகளை இப்பொழுது அறிவிக்கின்றோம். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெற்ற முதல் 10 இடுகைகள் அடுத்த கட்ட பொது வாக்கெடுப்பிற்கு தகுதி பெறுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளை சில பிரிவுகளில் பெற்றிருப்பதால் சில பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கேற்க முடியும். ஏற்கனவே முதல் சுற்றில் வாக்களித்த பதிவர்கள், பொது வாக்கெடுப்பிலும் வாக்களிக்கலாம். பொது வாக்கெடுப்பு நாளை மறு நாள், சனவரி 2 2010ல் தொடங்குகிறது. அதற்கான விபரங்கள் நாளை வெளியாகும்.

முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம். இந்தச் சுட்டியில் இடுகைகள் Random முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடுகைகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த வரிசை அமைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

http://awards2009.tamilmanam.net/voting_results.php

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்கள் அதிக ஆர்வமுடன் இந்த விருது நிகழ்வில் பங்கேற்றார்கள். தங்களுடைய இடுகைகளை பரிந்துரை செய்த அனைத்து பதிவர்களுக்கும், வாக்களித்த பதிவர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில் 2010ம் ஆண்டு தமிழர்களுக்கு அமைதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

– தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
– தமிழ்மணம் நிர்வாகம்

Comments

28 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்”

 1. ஸ்டார்ஜன் on December 31st, 2009 2:57 pm

  தங்களின் சேவை விலை மதிக்க முடியாதது .

  மிக்க நன்றி

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

 2. SP.VR.Subbiah on December 31st, 2009 6:31 pm

  உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள்! நன்றி!

 3. T.V.Radhakrishnan on December 31st, 2009 10:45 pm

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

 4. senthazal ravi on January 1st, 2010 12:07 am

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…….

 5. SanjaiGandhi on January 1st, 2010 1:28 am

  அடடே.. 2 பிரிவிலும் சிறந்த பத்தில் என்னுடையை இடுகைகளுமா? வாக்களித்த என் அன்பு உறவுகளுக்கு மிக்க நன்றி. செண்டிமெண்ட் இல்லாத எனக்கும் இது புத்தாண்டு பரிசு என்பது போல் யோசிக்க வைச்சிட்டிங்க பாஸ்.. தமிழ்மணத்துக்கும் நன்றி.

 6. உண்மைத்தமிழன் on January 1st, 2010 2:05 am

  வாழ்க தமிழ்மணம்..!

  தமிழ்மணத்தின் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

  முதற்கட்டத் தேர்விலேயே பதிவர்கள் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டார்களே.. பின்பு எதற்கு இரண்டாம் கட்டத் தேர்விலும் அவர்களது வாக்கு..? பார்வையாளர்களின் வாக்குகளே போதுமே..?

 7. vattukozhi on January 1st, 2010 2:53 am

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.தமிழ்மணத்தில் பங்கு பெறுவது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது.

 8. DEVIYAR ILLAM TIRUPPUR on January 1st, 2010 3:22 am

  தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில்

  GOOD AND APPRECIATE //

 9. ராமலக்ஷ்மி on January 1st, 2010 3:53 am

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ்மணம்!

 10. SHARFUDEEN on January 1st, 2010 4:16 am

  NEW YEAR WISHES., PLEASE READ MY BLOG AND NOTICE IN YOUR BLOGS, IF YOU LIKE THAT MY IDEA!

 11. யெஸ்.பாலபாரதி on January 1st, 2010 6:13 am

  கலந்துகொண்ட பதிவர்களுக்கு நன்றிகள்..
  வெற்றிபெறப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  தோழன்
  பாலா

 12. அரிமா இளங்கண்ணன் on January 1st, 2010 7:20 am

  தமிழ்மணம் விருதுகள் தேர்வில் முதன்முறையாக வாக்களித்துள்ளேன். பெருமைக்குரிய உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்!
  -அரிமா இளங்கண்ணன்

 13. appanpalanisamy on January 1st, 2010 12:02 pm

  தமிழ் மணககும் தமிழ்மணம் பணி வளம் பெற வாழ்த்துக்கள்.

 14. வந்தியத்தேவன் on January 1st, 2010 12:37 pm

  ஏனோ தானோ எனப் போன புத்தாண்டில் மகிழ்ச்சி செய்தியாக என்னுடைய இரண்டு பதிவுகளும் தெரிவு செய்யப்பட்டமை உவகை அளிக்கின்றது. ஓட்டுப்போட்ட நண்பர்க்ளுக்கு நன்றிகள்.

 15. புருனோ on January 1st, 2010 12:50 pm

  //முதற்கட்டத் தேர்விலேயே பதிவர்கள் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டார்களே.. பின்பு எதற்கு இரண்டாம் கட்டத் தேர்விலும் அவர்களது வாக்கு..? பார்வையாளர்களின் வாக்குகளே போதுமே..?
  //

  முதல் கட்ட தேர்வில் நான் வாக்கு செலுத்திய இடுகை (அதாவது என் இடுகை !!!!) இரண்டாவது கட்டத்திற்குதேர்வாக வில்லை என்றால், அதற்கு பதில் நான் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் வேறு ஒரு இடுகைக்கு வாக்களிக்கலாமே

 16. லோஷன் on January 1st, 2010 1:55 pm

  ஆகா,, நம் பதிவுகள் இரண்டுமே முதற்கட்டம் தாண்டியாகிவிட்டதே..
  மகிழ்ச்சி..
  ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
  தரமான நல்ல பதிவுகள் வெல்லட்டும்..

 17. கோவி.கண்ணன் on January 1st, 2010 2:09 pm

  //தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில் 2010ம் ஆண்டு தமிழர்களுக்கு அமைதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்//

  முள்ளிக்காடு, வன்னி முகாம் தமிழர்கள் உடனடியாக அவரவர் இடங்களில் குடிபெயர்வு நடைபெறவேண்டும் என்பதே 2010 ஆம் ஆண்டின் நல்ல தொடக்கமாக இருக்கும்.

  தமிழ்மணம் குழுவினருக்கு இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  போட்டிக்கு நான் தெரிவு செய்த எனது இரு கட்டுரைகளும் தமிழ்மணம் 2009 போட்டியில் முதல் கட்டத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் வர வாக்கு அழித்த பதிவர் உறவுகளுக்கு நன்றி மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

 18. […] தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக… […]

 19. பீர் | Peer on January 1st, 2010 5:12 pm

  தமிழ்மணம் குழுவினரின் இணையற்ற சேவைக்கு பாராட்டுக்கள் மற்றும்,

  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 20. அணைவருக்கும் 2010 ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள். முதல்கட்டமாய் 3000 வருட தமிழ் மொழி சிறப்பு குறித்து (ஈரவெங்காயம்) முதல் கட்டத்திற்கு தேர்ந்தெடுத்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி.

  நட்புடன்
  ஜோதிஜி
  தேவியர் இல்லம் திருப்பூர்

 21. தேவன்மாயம் on January 2nd, 2010 2:04 am

  அன்பின் தமிழ் மண நிர்வாகிகளுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழ்மணத்தின் அளப்பரிய சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தப் புத்தாண்டில் ஆர்வத்துடன் பதிவர்களை ஊக்குவித்து சேவை செய்யும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

  இரண்டு பிரிவுகளில்தான் கலந்துகொள்ள முடியும் என்பதால் இரண்டு பிரிவுக்கே கட்டுரை அனுப்பினேன்.
  முதல் கட்ட வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்த அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

 22. Rajeswari on January 2nd, 2010 3:33 am

  தமிழ்மண குழுமத்திற்கு நன்றிகளும்,ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களும்…

  -ரசனைக்காரி

 23. Subankan on January 2nd, 2010 9:54 am

  2010 ம் ஆண்டின் புத்தாண்டுப் பரிசு போல எனது இரண்டு இடுகைகளுமே முதற் பத்துக்குள் வர வாக்களித்த அனைத்துப் பதிவர்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றிகள்

 24. தேவன்மாயம் on January 2nd, 2010 10:22 am

  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு புத்தாண்டுவாழ்த்துக்கள்! என் இடுகைகளுக்கு வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

  தேவன்மாயம்.

 25. குசும்பன் on January 2nd, 2010 11:42 am

  தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மிகுந்த வேலை எடுக்கும் செயல் இவை இருந்தும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் அனைத்தும் நடக்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் டெக் டீமுக்கு.

  முதல் சுற்றில் எனக்கு ஓட்டு போட்டு அடுத்த சுற்றுக்கு வரசெய்த அனனவருக்கும் நன்றி, இனி ஓட்டு போட போகும் வாசகர்களுக்கும் நன்றி.

  அன்புடன்
  குசும்பன்

 26. சிங்கக்குட்டி on January 2nd, 2010 11:20 pm

  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு புத்தாண்டுவாழ்த்துக்கள்! என் இடுகைகளுக்கு வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

  என்றும் அன்புடன்,
  சிங்கக்குட்டி.

 27. வேலன். on January 5th, 2010 4:29 am

  தமிழ்மணத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி..ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களு்க்கும் எனது இதயம் கனிந்த ந்ன்றி….
  அனைவருக்கும இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

 28. madurai saravanan on July 15th, 2010 2:45 pm

  தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்து கருத்து பரிமாற்றம் செய்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

Leave a Reply