விருதுகள் 2009 – முதல் கட்ட வாக்கெடுப்பு – உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ?

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் முதல் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.

தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக வாக்கினை அளிப்பதற்கான சிறப்புத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.

tm awards 2009

நடைமுறைகள்:

1. உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

2. இச்சிறப்புத் தொடுப்பின் மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

3. ஒவ்வொரு பிரிவின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பின் மூலம் அந்தந்தப் பிரிவிற்குப்
பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம். புதிதாக மேலெழும்பும்
சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் அதே முகப்புச் சன்னலுக்கு வந்து வேறு
பிரிவுக்கு வாக்களிக்கலாம்

4. அனைத்துப்பிரிவுகளுக்கும்/ விருப்பப்பட்ட பிரிவுகளுக்கும் வாக்களித்தபின்னர் அதே
முகப்பு சன்னலில் ‘வாக்கை உறுதி செய்கிறேன்’ என்ற பொத்தானை அழுத்துவதன்
மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்துக்கு வந்துசேரும்.

5. அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் மின்னஞ்சலில் வந்த சிறப்புத் தொடுப்பை
சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த
வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு

Comments

16 Responses to “விருதுகள் 2009 – முதல் கட்ட வாக்கெடுப்பு – உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ?”

 1. குசும்பன் on December 16th, 2009 2:47 am

  சொன்னதுபோல் எந்த தாமதமும் இல்லாமல் எல்லாம் சரினா தேதியில் நடக்கிறது. வாழ்த்துக்கள்!

 2. குசும்பன் on December 16th, 2009 2:50 am

  //அப்போது முதலில் அளித்த
  வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்//

  இன்று ஒரு சில பிரிவுகளுக்கு ஓட்டு போட்டேன், நாளை திரும்ப வேறு சில பிரிவுகளுக்கு ஓட்டு போட்டால், இன்று போட்ட ஓட்டு என்ன ஆகும்?

 3. தமிழ்மணம் on December 16th, 2009 11:13 am

  இன்று ஒரு சில பிரிவுகளுக்கு ஓட்டு போட்டேன், நாளை திரும்ப வேறு சில பிரிவுகளுக்கு ஓட்டு போட்டால், இன்று போட்ட ஓட்டு என்ன ஆகும்?

  *********

  அந்த ஓட்டுக்கள் அப்படியே தான் இருக்கும். ஒரு பிரிவிற்கு உங்கள் வாக்கினை அப்படியே வைத்து விட்டு, மற்றொரு பிரிவிற்கு மட்டும் வாக்கினை அளிப்பதோ/மாற்றுவதோ சாத்தியமான ஒன்று தான்

  நன்றி…

 4. beermohamed on December 16th, 2009 3:10 pm

  ஜயா
  அதிரடியாக செய்திகளை வெளியிடும் ஒரே பிளாக் எது வென்றால் அது http://beermohamedtamilgroup.blogspot.com தான் இதை சில சதிகாரர்கள், புல்லுருவிகள் எனது வளைத்தளத்தை வைரஸ் என்னும் அனுகுண்டு போட்டு முடக்கி வைத்துள்ளனர், 8 மாதத்தில் 15 வாசகர் கொண்ட ஒரே பிளாக் இது தான் நான் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் அடைகின்றேன்,

 5. தமிழநம்பி on December 17th, 2009 12:22 pm

  பெரிய வேலை.
  சரியாகவும் முறையாகவும் நடப்பது மகிழ்வளிக்கிறது.

 6. வெங்கிராஜா on December 18th, 2009 12:53 pm

  சொன்னவுடன் குறையை நிவர்த்தி செய்தமைக்கு நன்றிகள் பல!

 7. உங்களுடைய பங்களிப்பு என்பது இன்று வரையிலும் பாமரன் மூலம் தமிழ் உயிரோடு இருப்பதைப் போல படித்தவர்களிடம் தமிழை வாசித்து தான் ஆக வேண்டும் என்று நிலைநிறுத்தும் முயற்சி.

  தெளிவாக சிறப்பாக மொத்தத்தில் எளிமையாக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும்.

  வாழ்த்துகள்

 8. கௌரி விமலெந்திரன் on December 19th, 2009 6:25 am

  தமிழ் மணம் விருதுகள் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

 9. m.seeras on December 24th, 2009 9:24 am

  wish all

 10. rasamyjm on December 25th, 2009 4:23 am

  wish you all succuses

 11. தமிழ்வெங்கட் on December 28th, 2009 12:40 am

  இணையத்தில் தமிழை வளர்க்கும் உங்கள் பணி
  பாரட்டத்தக்கது

 12. T.Vimaladas on December 29th, 2009 8:25 am

  இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.Nan பதிவர் aga mudiuma?

 13. nondhakumar on December 29th, 2009 10:43 am

  நாமினேசனுக்கு மெயிலே வரல்லை என என் உரிமையை கேட்டேன். உடனடியாக மெயில் அனுப்பினீர்கள். நானும் ஜெண்டிலா ஏதும் நாமினேசன் தாக்கல் பண்ணலை.

  வாக்களிக்க மெயில் ஏதும் வரல்லையே?

  கொஞ்சம் அனுப்புங்க! இன்னும் ஒரு நாள் தானே இருக்கு!

 14. lakshmi on December 30th, 2009 4:31 am

  I give vote for subbiyah sir. classroom2007 blog

 15. யெஸ்.பாலபாரதி on December 30th, 2009 11:34 pm

  வோட்டு போட்டால் பிழை என்று வருகிறது.. என்ன செய்வது..? 🙁

 16. மா இளங்கண்ணன் on May 25th, 2010 7:45 am

  சீன எழுத்துக்கள் குறைக்கப்பட வில்லை என்று யார் சொன்னது? அது போகட்டும் சப்பான் மொழியில் உடனுடக்குடன் பிற மொழி நுல்கள் மொழி பெயர்க்கப்படுகின்றன என்கிறீர்? எவ்வளவு செலவு தெரியுமா? உங்களால் ஏற்க முடியுமா? ஐயா அவர்களே மாறுகின்றனர்,
  அது இருக்கட்டும். அவர்களுக்கு நாடு இருக்கிறது? உங்களுக்கு என்ன இருக்கிறது, தமிழ் நாடு என்று பெயரில் மாநிலம் இருக்கிறது, அங்கு பத்து அகவைப் பிள்ளையிடம் தொலைபேசி எண் கேளுங்கள். நைன் ஒன் டூ என்று சொல்லும், நமக்கு நாடு இல்லை, தமிழர் இருக்கும் நாடுகளிலும் சிறுபான்மை, ஏன் இவ்வளவு நாம் பொருளாதாரத்திலும் ஆகப் பின் தங்கிய மக்கள், இப்போது தட்டச்சு செய்கிறேனே இவற்றில் எத்தனை குறியீடுகள் தவறாக இருகின்றன, கணினி வந்து எவ்வளவு நாளாகிவிட்டது, இன்றும் தமிழில் கணிணி வரவில்லை, வெறும் எழுத்துருக்களை வைத்துக்கொண்டு கணினியில் தமிழ் வந்துவிட்டது என்று மார் தட்டுகிறோம், ஐயா இன்னும் நிறையச் சொல்லலாம், புதிதாக ஒன்று வந்தால் நாம் அதை ஐந்தாண்டு கழித்தே அரும்பாடு பட்டு செயல்படத் தொடங்குகிறோம், அதிலும் பற்பல சிக்கல்கள், இன்னும் நிறையச் சொல்லலாம், எழுத்துச் சீர்மை வேண்டும் என்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன, பேச்சு வேண்டாம்,
  செயல் தேவை, எழுத்துச் சீர்திருத்தம் தேவை, தமிழை 27 வடிவ்த்தில் நெடு
  ங்கணக்கில் உள்ளபடியே திருத்தச் செய்ய முடியும், அது மிக எளிது, இன்னொரு நன்மையும் உண்டு, நல்ல தமிழில் நுல்களைக் கொணர முடியும் தேவையில்லாக் குப்பைகளை அகற்ற சரியான வழி கிடைக்கும், அதிலும் தமிழர்கள் செய்ய முடியுமா? அதை நினைத்தாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது, காலத்தோடு போட்டிபோட நாம் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்க வேண்டும், முரண்டு பிடிக்காதீர். உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னியுங்கள்,

Leave a Reply