விருதுகள் 2009 – உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

December 5, 2009 · Posted in தமிழ்மணம் 

தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான விருதுகள் நிகழ்வின் முதல் கட்டம் தொடங்கி விட்டது என்பதை பதிவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு இடுகைகளை பரிந்துரை செய்வதற்கான சுட்டி தற்பொழுது அனுப்பபட்டுள்ளது. முதன் முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக, மீண்டும் ஒரு முறை மற்றொறு சுட்டியை அனுப்பியிருக்கிறோம். இறுதியாக அனுப்பப்பட்ட அந்தச் சுட்டியை பயன்படுத்துமாறு பதிவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும். இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

tm awards 2009

இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும். இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.

இப்பொழுதிலிருந்து 2009-12-12 11:59 PM (அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் – EST) வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2009) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

இச் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை இந்த வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

இவ் விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்
-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

Comments

66 Responses to “விருதுகள் 2009 – உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?”

 1. தண்டோரா on December 5th, 2009 4:30 am

  நன்றி….செய்துவிடுகிறோம்

 2. http://deviyar-illam.blogspot.com பட்டியலில் உள்ளதா?

 3. தமிழ்மணம் on December 5th, 2009 5:01 am

  http://deviyar-illam.blogspot.com பட்டியலில் உள்ளதா?

  *******

  பரிந்துரைக்கத் தகுதியான உங்கள் வலைப்பதிவுகளின் பட்டியல் இதோ:

  1. தேவியர் இல்லம், திருப்பூர் by ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  உங்கள் gmail முகவரிக்கு பரிந்துரைக்கான தொடு்ப்பினை அனுப்பி இருக்கிறோம். பார்க்கவும்.

  நன்றி…

 4. உண்மைத்தமிழன் on December 5th, 2009 6:20 am

  அன்பிற்கினிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு..!

  எனது வலைத்தளம் அமெரிக்க நேசப் படைகளின் கூட்டுச் சதி காரணமாகவும், ஐரோப்பிய தேசங்களின் துரோகத்தாலும் வலையுலகின் பார்வைக்கு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ்மண நிர்வாகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

  அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. என்கிற ஒட்டுண்ணிக் கும்பலையும் தன்னந்தனியாக நான் ஒருவனே எதிர்த்து நிற்பதால் எனது வலைத்தளத்தின் முடிவு என்னவென்று தெரிய சில நாட்களாகும் என்று தெரிகிறது.

  தமிழ்மணம் நடாத்துகின்ற இந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டால் நிச்சயம் ஜெயித்துவிடுவேன் என்றெண்ணி அங்குள்ள வலைப்பதிவர்கள் யாரோ சிலர்தான் அமெரிக்க அரசைத் தூண்டிவிட்டு எனது வலைத்தளத்திற்குள் வைரஸை பரப்பி இந்த கொடுஞ்செயலைச் செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

  ஆகவே தமிழ்மணம் நிர்வாகத்தினரை நான் கேட்டுக் கொள்வது என்னவெனில், போட்டிக்கான இடுகைகளை பரிந்துரைக்கும் தேதிகளை என் பொருட்டு காலவரையின்றி நீட்டிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

  தமிழ்மணம் எனது வேண்டுகோளை புறக்கணித்து ஏற்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து நான் கலந்து கொண்டால் ஜெயிக்கக் கூடிய இரண்டு முதல் பரிசுகளை சிறப்புப் பரிசுகள் என்று சொல்லி எனக்கு அனுப்பி விடுங்கள்..!

  தமிழ்மணமே.. நீங்கள் நடத்துகின்ற இந்தப் போட்டியை வரவேற்று தனியா ஒரு பதிவு போட்டு வாழ்த்தியவன் இந்த உண்மைத்தமிழ் என்பதையும் போகிறபோக்கில் மறந்துவிடாதே..!

  இல்லைன்னா.. தமிழ்மணத்தின் எதிர்க்கும் புல்லுருவிகளின் கூட்டத்தில் ஒருவனாக நானும் மாறிவிடுவேன் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!

  அப்பனே முருகா.. என்னே உனது விளையாட்டு.. ஆயிரம் ரூபாயைக்கூட பரிசா வாங்கக் கூடாதுன்னு நினைக்குற பாரு.. நீதாண்டா கடவுள்.. நீதாண்டா தெய்வம்.. நீதாண்டா சாமி..

  முருகனுக்கு அரோகரா..!

 5. நன்றி. நல்ல முயற்சி. எளிமையானதும் கூட. வாழ்த்துக்கள்.

 6. என்.உலகநாதன் on December 5th, 2009 8:13 am

  நடுவில் ஏதோ டெக்னிக்கல் காரணத்தால் என் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியவில்லை. பின்பு பாலூ சாரிடம் தொடர்பு கொண்டேன். பின் என் வலைப்பூ தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டது. அதனால் நான் இனேஉ வரை எழுதிய 121 பதிவுகளுக்குப் பதில் வெறும் 81 பதிவுகள் மட்டுமே உங்கள் மெயில் மூலமாக வந்த லிங்க்கில் உள்ளது. மீதம் உள்ள 40 பதிவுகள் தெரிய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

 7. R Sathyamurthy on December 5th, 2009 11:12 am

  http://www.sathyamurthy.com பட்டியலில் உள்ளதா? எனக்கு அனுப்பப்பட்ட லின்குகளில் மணல்கயிறு டாட் காம் பதிவுகள் தான் தெரிகின்றன.

 8. malikka on December 5th, 2009 11:24 am

  அன்புள்ள தமிழ்மணத்திற்கு:
  என் தளங்கள் இரண்டு ஒன்று கவிதைக்களுக்காக[நீரோடை.காம்]மற்றொன்று[கலைச்சாரல்]
  கைவண்ணங்களுக்காக

  எனது கேள்விஎன்னவென்றால் நான் இரு படைப்புகளைமட்டும்தான் பரிந்துரைக்கவேண்டுமா?
  இல்லை இருதளத்திற்க்காக நான்கு இணைப்புகளை பரிந்துறைக்கலாமா?

  கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
  தாங்களின்பதிலை எதிர்பார்த்தபடி…
  அன்புடன் மலிக்கா

 9. தமிழ்மணம் on December 5th, 2009 11:54 am

  பதிவர் உண்மைத்தமிழன்,

  உங்களுடைய பதிவை ப்ளாகர் முடக்கியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. அதே நேரத்தில் அந்தக் காரணத்தால் நீங்கள் தமிழ்மணம் விருதுகள் நிகழ்வில் போட்டியிடாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில மாற்று ஏற்பாடுகள் உள்ளன.

  கீழே நாங்கள் கொடுக்கும் தகவல் உங்களைப் போலவே உள்ள பிற பதிவர்களுக்கும் பொருந்தம்

  தமிழ்மணத்தில் உள்ள மென்நூல் வசதியை பயன்படுத்தி நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியும். நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கும் பதிவுகளை கீழ்க்கண்டவாறு மென்நூலில் பெறலாம்.

  http://tamilmanam.net/services/pdf/single_pdf.php?url=http://truetamilans.blogspot.com/2009/01/blog-post.html&a.pdf

  உங்கள் இடுகைகளைப் பரிந்துரை செய்யலாம். நீங்கள் போட்டியிடும் இடுகைகளை உங்கள் வாசகர்கள் வாசிக்க இந்த மென்நூல் இணைப்பினை தமிழ்மணத்தால் கொடுக்க முடியும்.

  இது உங்கள் வலைப்பதிவிற்கு நேரடியாக சென்று வாசிக்கும் அனுபவத்தை கொடுக்காது என்றாலும் இத்தகைய மாற்று ஏற்பாடு தமிழ்மணத்தில் உள்ளது என்பதை பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்.

  நன்றி…

 10. தமிழ்மணம் on December 5th, 2009 11:57 am

  மீதம் உள்ள 40 பதிவுகள் தெரிய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

  ****

  பதிவர் உலகநாதன்,

  அத்தகைய வாய்ப்பு தற்பொழுது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்

  நன்றி…

 11. ஈரோடு கதிர் on December 5th, 2009 1:08 pm

  எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை

  ஆவண செய்ய வேண்டுகிறேன்

 12. தோழன் மபா on December 5th, 2009 1:37 pm

  இதுவரை எனது ஒரு பதிவைக் கூட, தமிழ்மனத்தில் நான் பார்த்ததில்லை. நான் அனுப்புவதில் எதாவது தவறு இருக்கிறதா என்றும் புரியவில்லை?

  தோழன் மபா
  தமிழன்வீதி

 13. Surveysan on December 5th, 2009 1:46 pm

  குட். நான் அனுப்பியாச்சு.

  நகைச்சுவை பிரிவிலும், வணிகம் பிரிவிலும் ஒவ்வொண்ணு.

  வேறு யாரும் இந்த தொகுதிகளில் போட்டிக்கு நிற்க துணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 🙂

 14. நாஞ்சில் பிரதாப் on December 5th, 2009 2:40 pm

  மன்னா, வேந்தே, அரசே… எனது பதிவுகளை இணைத்துவிட்டேன்… எங்கே என் பரிசு?

 15. madhan on December 6th, 2009 2:57 am

  iam interest in this site

 16. சுடுதண்ணி on December 6th, 2009 4:54 am

  இடுகைத்தொடர்களை எப்படி பரிந்துரை செய்வது என்று விளக்கவும்.

  முதல் பகுதியை மட்டும் பரிந்துரை செய்தால் போதுமா?

 17. யெஸ்.பாலபாரதி on December 6th, 2009 5:47 am

  என்னால் வோட்டுப் போட முடியவில்லை… பிழை என்று செய்தி வருகிறது.

  :(((

 18. யெஸ்.பாலபாரதி on December 6th, 2009 5:51 am

  //உங்கள் இடுகைகளைப் பரிந்துரை செய்யலாம். நீங்கள் போட்டியிடும் இடுகைகளை உங்கள் வாசகர்கள் வாசிக்க இந்த மென்நூல் இணைப்பினை தமிழ்மணத்தால் கொடுக்க முடியும்.

  இது உங்கள் வலைப்பதிவிற்கு நேரடியாக சென்று வாசிக்கும் அனுபவத்தை கொடுக்காது என்றாலும் இத்தகைய மாற்று ஏற்பாடு தமிழ்மணத்தில் உள்ளது என்பதை பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்.

  //

  ஆகா… டெக்னாலஜியில் புகுந்து விளையாடுகிறதே.. தமிழ்மணம்..! பதிவர்களை அரவணைத்துப்போகும் தமிழ்மணத்திற்கு வந்தனங்களும் வாழ்த்துக்களும்..! 🙂

 19. புதுகைத் தென்றல் on December 6th, 2009 6:18 am

  வணக்கம்,

  எனது வலைப்பூ எனது ஜீமெயில் முகவரியில் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. எனது தோழியின் முகவரியில் இணைக்கப்பட்டது.

  என் முகவரிக்கு பதிவுகளை இணைக்க தொடுப்பினை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

  pdkt2007@gmail.com

 20. T.V.Radhakrishnan on December 6th, 2009 11:22 am

  நன்றி….செய்துவிடுகிறோம்

 21. தமிழ்மணம் on December 6th, 2009 11:31 am

  பதிவர் மலிக்கா,

  ஒரு பதிவர் இரு பிரிவுகளில் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

  தமிழ்மணம் தொழில்நுட்பத்தின் படி இரு வேறு பதிவுகளை பதிவர்கள் இரு வேறு மின்னஞ்சல்களுடன் தமிழ்மணத்தில் பதிவு செய்திருந்தால் இரண்டு விருது தொடுப்புகள் அனுப்பப்படும். ஏனெனில் தமிழ்மணம் தொழில்நுட்பம் அதனை இரு வேறு பதிவர்கள் என்றளவிலேயே அணுகுகிறது.

  பதிவர்கள் இரு தொடுப்புகளையும் சேர்த்து இரண்டு பிரிவுகளில் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.

  நன்றி…

 22. தமிழ்மணம் on December 6th, 2009 11:34 am

  என்னால் வோட்டுப் போட முடியவில்லை… பிழை என்று செய்தி வருகிறது.

  ****

  பதிவர் பாலபாரதி,

  முதல் மின்னஞ்சலில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் இந்தப் பிழை வருகிறது.

  “Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET” என்ற தலைப்புடன் மற்றொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். அதில் உள்ள சுட்டியைக் கொண்டு நீங்கள் வாக்களிக்க முடியும். பிரச்சனை இருந்தால் அறியத்தாருங்கள்.

  நன்றி…

 23. தமிழ்மணம் on December 6th, 2009 11:36 am

  புதுகைத் தென்றல்,

  உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரி மற்றும் புதிய மின்னஞ்சல் முகவரி்யை இங்கே மறுமொழி மூலமாக அளிக்கவும். ஆவன செய்கிறோம்.

  நன்றி…

 24. தமிழ்மணம் on December 6th, 2009 11:38 am

  இதுவரை எனது ஒரு பதிவைக் கூட, தமிழ்மனத்தில் நான் பார்த்ததில்லை. நான் அனுப்புவதில் எதாவது தவறு இருக்கிறதா என்றும் புரியவில்லை?

  ****

  admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

 25. தமிழ்மணம் on December 6th, 2009 11:39 am

  முதல் பகுதியை மட்டும் பரிந்துரை செய்தால் போதுமா?

  ****

  ஆம். ஏதேனும் ஒரு பகுதியை பரிந்துரை செய்தால் போதுமானது.

 26. revathinarasimhan on December 6th, 2009 11:46 am

  நான் என் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டேன்.
  மிகவும் நன்றி.

 27. தமிழ்மணம் on December 6th, 2009 11:52 am

  எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை

  ****

  தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களில் 2009ம் ஆண்டு குறைந்தபட்சம் 5 இடுகைகளை எழுதியுள்ள பதிவர்களுக்கு மின்னஞ்சல் தொடுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

  தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியான முகவரியாக இருக்க வேண்டும்

  நன்றி…

 28. //தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களில் 2009ம் ஆண்டு குறைந்தபட்சம் 5 இடுகைகளை எழுதியுள்ள பதிவர்களுக்கு மின்னஞ்சல் தொடுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

  தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியான முகவரியாக இருக்க வேண்டும்//

  எனக்கு உங்களிடம் இருந்து ஒரு மடலும் வரவே இல்லையே?நான் இருபது படைப்புகள் கிட்ட எழுதிவிட்டேனே.என் மின்னஞ்சல் முகவரியும் சரியானதுதான்.ஏன்?அப்பறமும் எனக்கு உங்களிடம் இருந்து மடல் வரவில்லை?

 29. தமிழ்மணம் on December 6th, 2009 2:59 pm

  அப்பறமும் எனக்கு உங்களிடம் இருந்து மடல் வரவில்லை?

  ****

  உங்களின் மின்னஞ்சல் தவறாக தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ளது. gmail என்பதற்கு பதிலாக ymail என்று உள்ளது. அதனை சரி செய்து உங்களுக்கு மறுபடியும் தொடுப்பு அனுப்பியுள்ளோம்

  நன்றி…

 30. நன்றி…எனக்கும் அழைப்பு வந்துவிட்டது.

 31. ramgopal on December 7th, 2009 2:56 am

  அன்புடையோர்க்கு,

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பதிவுகளின் வகைப்பாட்டில் இன்னும் சில கூடுதல் வகைகள் இருக்கலாம்.

  1. கல்வி / கற்பித்தல் முயற்சிகள்
  2. தலைவர்களை/ பெரியோர்களை அறிமுகப்படுத்துதல்
  3. சங்க இலக்கிய மறுவாசிப்பு என்பன,

  நன்றி.
  ராம்கோபால்.

 32. velmahesh on December 7th, 2009 4:59 am

  இந்த ஆண்டின் சிறந்த பிளாகர் விரு(ந்)து
  எங்களுக்கு மட்டுமே…

 33. ssrividhyaiyer on December 7th, 2009 6:15 am

  எனக்கு உங்களிடம் இருந்து மடல் வரவில்லை?

 34. ஈரோடு கதிர் on December 7th, 2009 8:18 am

  என்னுடைய மின்னஞ்சல் முகவரி kathir7@gmail.com.

  மின் மடல் எதுவும் வரவில்லை

 35. kumar on December 7th, 2009 2:06 pm

  மின் மடல் எதுவும் வரவில்லை

  என்னுடைய மின்னஞ்சல் முகவரி kumar006@gmail.com
  kumar.rms@hotmail.com

 36. சந்ரு on December 7th, 2009 3:32 pm

  எனக்கு இன்னும் சுட்டி வந்து சேரவில்லை.

 37. sure(sh) palaniyilirunthu) on December 7th, 2009 10:24 pm

  i have not received any links to send my posts. please send as early to my yahoo address

 38. அனிப்பிட்டோமுல்ல.., ஆனா அது சரியா சேந்திச்சான்னு செக் பண்ணிக்கறது எப்படி தலிவரே!

 39. jeevaflora on December 8th, 2009 6:09 am

  Not get any link or mail.please do needful.
  thankyou

 40. sure(sh) palaniyilirunthu) on December 8th, 2009 6:55 am
 41. உண்மைத்தமிழன் on December 8th, 2009 1:15 pm

  எனது பழைய தளம் மூன்று மாதங்களுக்குப் பின்னர்தான் கிடைக்கும் என்று கூகிளாண்டவர் இடைக்காலத் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

  ஆகவே புதிதாக ஒரு வலைத்தளத்தை என் பெயரில் உருவாக்கியுள்ளேன். அந்த வலைத்தளத்தை தமிழ்மணத்துடன் இணைத்துள்ளேன். வெகு சீக்கிரம் இணைப்பை அங்கீகரித்து வெளியிட்டீர்களேயானால்..

  அந்த புதிய வலைத்தளத்தில் போட்டிக்காக நான் இணைத்துள்ள எனது பதிவுகளை மறுபடியும் பிரசுரிக்கிறேன்..! உங்களுக்கும் வேலை மிச்சம்.. எனக்கும் ஒரு வேலை மிச்சம்..

  நல்லதொரு முடிவை சீக்கிரமாக எடுங்கள் தமிழ்மணத்தாரே..!

 42. முகிலன் on December 8th, 2009 9:03 pm

  எனது தெரிவுகளை அனுப்பியுள்ளேன்.
  நன்றியுடன்
  முகிலன்
  தோரணம்

 43. தமிழ்மணம் on December 8th, 2009 10:15 pm

  மின்னஞ்சல் வரவில்லை எனக் கூறிய பதிவர்களுக்கு மறுபடியும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். உங்களுடைய Spam Folderஐ பார்க்கவும்…

 44. புதுகைத் தென்றல் on December 9th, 2009 12:11 am

  engineer2207@gmail.com

  இது பழைய முகவரி

  புதிது pdkt2007@gmail.com

  நன்றி

 45. எனக்கு இன்னும் வரவில்லை..,

  Spam Folderல்லும் இல்லை

 46. எனக்கு இன்னும் தொடுப்பு வரவில்லை

 47. tamilnathy on December 10th, 2009 1:40 am

  எனக்கும் இன்னமும் மின்னஞ்சல் வரவில்லை. தயவுசெய்து அனுப்பிவைக்கவும்.

 48. MANO on December 10th, 2009 1:41 am

  எனக்கும் இன்னும் தொடுப்பு வரவில்லை, எந்த Folderக்கும்.

 49. maharajan on December 10th, 2009 4:51 am

  எனக்கு இன்னும் தொடுப்பு வரவில்லை

 50. எனக்கு இன்னும் எந்த folderக்கும் தொடுப்பு வரவில்லை

 51. புருனோ on December 10th, 2009 2:37 pm

  //please sent links to drpsureshkumarpalani@yahoo.com for http://kanavukale.blogspot.com
  http://ruraldoctors.blogspot.com
  //

  உங்கள் இடுகையை இணைத்தது நான் என்பதால், எனக்கு வந்திருந்தது. உங்களுக்கு மேலனுப்பியுள்ளேன்

 52. Venkatesan on December 10th, 2009 9:19 pm

  என்னுடைய வலைப்பூ உங்கள் பட்டியலில் உள்ளதா?
  http://ulagamahauthamar.blogspot.com/

 53. //உங்கள் இடுகையை இணைத்தது நான் என்பதால், எனக்கு வந்திருந்தது. உங்களுக்கு மேலனுப்பியுள்ளேன்

  By புருனோ on Dec 10, 2009 //

  நன்றி தல..,

 54. தமிழ்மணம் on December 10th, 2009 10:07 pm

  தமிழ்மணத்தில் இருந்து மின்னஞ்சல் வரவில்லை எனக்கூறும் பதிவர்கள் கவனிக்க வேண்டியது…

  – நீங்கள் தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள மின்ன்ஞசலுக்கு மட்டுமே தொடுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே அந்த மின்னஞ்சலைப் பார்க்கவும்

  தற்பொழுது மின்னஞசல் முகவரியை மாற்றி சில பதிவர்களுக்கு தொடுப்பு அனுப்பியுள்ளோம்

  அது போல மிக சமீபத்தில் தங்கள் பதிவை இணைத்தவர்கள் குறைந்தது 5 இடுகைகளையாவது எழுதியிருக்க வேண்டும். அப்பொழுது தான் தொடுப்பு அனுப்பப்படும்

  நன்றி…

 55. புருனோ on December 10th, 2009 10:36 pm

  எனது இந்த இடுகையை பார்க்கவும்

  விதிமுறை : ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
  இதில் முக்கியமான விஷயம், நீங்கள் தமிழ்மணத்தில் இணையும் போது அளித்த மின்னஞ்சல் முகவரிக்கே அவர்கள் அனுப்புவார்கள். எனவே உங்களது மின்னஞ்சல் முகவரி மாறியிருந்தால், தமிழ்மணம் நிர்வாகத்திடம் தெரிவியுங்கள்

 56. ramgopal on December 11th, 2009 2:46 am

  எனக்கு இன்னமும் மின்னஞ்சல் வரவில்லை, சீக்கிரம் அனுப்பவும்

 57. SP.VR.Subbiah on December 11th, 2009 4:13 am

  அன்புடையீர்,

  என்னுடைய பதிவிற்கான Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET மின்னஞ்சல் வரவில்லை. அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

  இது குறித்து தமிழ்மணம் நிர்வாகத்திற்கு -admin thamizmanam 8 December 2009 06:41 அன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை

  அன்புடன்
  சுப்பையா

 58. ramgopal on December 11th, 2009 4:27 am

  நண்பர்களே, எனக்கு முதல் மின்னஞ்சல் வந்துவிட்டது. ஆனால் தொடுப்பு வரவில்லை.

 59. SP.VR.Subbiah on December 12th, 2009 9:03 am

  அன்புடையீர்,

  என்னுடைய பதிவிற்கான Nomination for TM Awards2009 – Invitation from

  tamilmaNam.NET மின்னஞ்சல் வரவில்லை.

  இது குறித்து தமிழ்மணம் நிர்வாகத்திற்கு -admin thamizmanam 8 December 2009 06:41

  அன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

  மேலும் உங்களுடைய இடுகையில் பின்னூட்டமாக அதை இரண்டுமுறைகள் தெரிவித்திருந்தேன்.

  இன்று மீண்டும் தொடுப்பை அனுப்பியிருந்தீர்கள். குறையைத் திருத்தி அனுப்பாமல் பழைய
  தொடுப்பையே மீண்டும் அனுப்பியிருக்கிறீர்கள்.

  அது மீண்டும், பிழையான எண்,திரும்பிச் செல் என்று மிரட்டுகிறதே ஒழிய, என்னை உள்
  நுழையவோ, எனது 2 இரண்டு இடுகைகளைப் பரிந்துரை செய்யவோ அனுமதிக்கவில்லை.

  இன்று இரவு காலக்கெடு முடிவடைவதால், நான் என்ன செய்யவேண்டும் என்று
  அன்பு கூர்ந்து தெரியப்படுத்துங்கள்

 60. தமிழ்மணம் on December 12th, 2009 10:52 am

  சுப்பையா, புதுகைத் தென்றல்

  உங்களுக்கு தொடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சுட்டியில் உங்களது இடுகைகள் தெரிகிறதே ?

  மறுபடியும் சுட்டியை சோதித்து பார்க்கவும். கடைசியாக அனுப்பபட்ட மின்னஞ்சலை பார்க்கவும்…

  நன்றி…

 61. SP.VR.Subbiah on December 12th, 2009 1:19 pm

  /////சுப்பையா,
  உங்களுக்கு தொடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சுட்டியில் உங்களது இடுகைகள் தெரிகிறதே ?
  மறுபடியும் சுட்டியை சோதித்து பார்க்கவும். கடைசியாக அனுப்பபட்ட மின்னஞ்சலை பார்க்கவும்…
  நன்றி…
  By தமிழ்மணம் on Dec 12, 2009////

  இப்போது தெரிகிறது. 2 இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டேன். உங்கள் உதவிக்கு நன்றி!

  அன்புடன்
  SP.VR.சுப்பையா

 62. pudugai thendral on December 13th, 2009 1:20 am

  yeah today its working and i have sent my links.

  thanks a lot

  :))

 63. தமிழநம்பி on December 13th, 2009 8:40 am

  ஐயா,
  வணக்கம்.
  மொழிபெயர்ப்புக்கு ஒருபிரிவு இல்லை என்றே கருதுகிறேன்.
  அடுத்த முறை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
  அன்புடன்,
  தமிழநம்பி.

 64. tvthangamani on December 13th, 2009 11:51 am

  தமிழ்மணமே!
  இரு தளங்கள்
  தளத்திற்கு ஒன்று எனப் பதிவுகள்
  தெரிவு செய்துள்ளேன்!நன்றி!

  அன்புடன்,
  தங்கமணி.

 65. eelatamilan on December 15th, 2009 7:57 am

  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 66. ArulG on December 16th, 2009 2:02 am

  I want to add my blog for the Thamizmanam Awards in 11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் category. Is there a possibility of adding my blog in the nomination list as i missed to add in the stipulated timeline you fixed for nominations.

Leave a Reply