தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா

tm awards 2009

தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்க தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.

தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகளை தமிழ்மணம் சென்ற ஆண்டு முதன் முறையாக வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-சனவரி மாதத்தில் இந்த விருது நிகழ்வுகள் நடைபெறும். 2009ம் ஆண்டுக்கான விருதுகளுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவற்றை வரும் டிசம்பர், சனவரி மாதங்களில் நடத்த திட்டம் வகுத்துள்ளோம்.

விருதுகள் தேர்வு முறை

ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.

இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:

1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்

தேர்வு நடைமுறை:

1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு
செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.

2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர்
அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும்
குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2009 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.

6. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில்
இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு
பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.

7. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும்
இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்)
வாக்களிக்கலாம்.

8. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை
அந்தந்தப் பிரிவில் 2009-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.

9. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10
இடுகைகளும் (மொத்தம் 160 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக
உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ்
அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும்
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 120 இடுகைகளும், இவ்வாண்டு தேர்வு செய்யப்படும் 160 இடுகைகளும் இணைந்த புகழ் அரங்கு வரும் ஆண்டு சனவரியில் (2010) உருவாக்கப்படும்.

10. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான
வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.

11. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்

– இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 12
– முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 30
– இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – சனவரி 2 – சனவரி 12
– விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – சனவரி 16

12. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.

பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

Comments

93 Responses to “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு”

 1. உண்மைத்தமிழன் on November 11th, 2009 2:47 am

  [[[3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர்
  அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.]]]

  இந்த விதிமுறையை ரொம்பவே கண்டிக்கிறேன்..

  மிகவும் வருத்தமாக உள்ளது..!

  இன்னும் எவ்வளவோ எழுதியிருக்கேன். அதையெல்லாம் மக்கள்கி்ட்ட எப்படி காட்டுறது..?

 2. மதிபாலா on November 11th, 2009 5:39 am

  அருமை…

  பரிசுத்தொகை நூல்களாக வழங்கப்படுவது இன்னும் சிறப்பு.

  வாழ்த்துக்களுடனும் , நன்றிகளுடனும்

  மதிபாலா

 3. கும்மாச்சி on November 11th, 2009 8:16 am

  விருதுகள் வரவேற்கப்படுகின்றன. பலே அருமையானப் போட்டி. பரிசுப் பொருட்கள் புத்தங்கங்களா. அஹா, மறக்காமல் கலந்துகொள்ள வேண்டும்.

 4. அகல்விளக்கு on November 11th, 2009 8:40 am

  – இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 12
  – முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 30
  – இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – சனவரி 2 – சனவரி 12
  – விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – சனவரி 16

  தேதியாக குறிப்பிட்டது நன்று..

 5. வந்தியத்தேவன் on November 11th, 2009 10:01 am

  உண்மைத்தமிழன் அண்ணாச்சியை வழிமொழிகின்றேன், ஒருவருக்கு ஆகக்குறைந்தது மூன்று பதிவுகளாதல் பரிந்துரைக்க அனுமதியுங்கள்.

 6. அறிவிலி on November 11th, 2009 10:18 am

  அருமை. வெற்றிகரமாக நடந்தேறிட வாழ்த்துகள்

 7. aruna on November 11th, 2009 10:20 am

  கலந்து கொள்ளும் பிரிவுகள் இரண்டு என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!

 8. தமிழ்மணம் on November 11th, 2009 11:39 am

  ஒரே பதிவர்
  அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்

  ****

  இந்த விதிமுறையில் பதிவர்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளதை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். பரிசு வெல்லும் வாய்ப்பு பலப் பதிவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே இந்த விதிமுறையின் நோக்கம். இதில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை விருதுக் குழு பரிசீலனை செய்யும்

 9. sriss on November 12th, 2009 2:36 am

  அருமையான திட்டம்.

  ****
  ஒரே பதிவர்
  அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்

  ****

  இது மிகவும் வரவேற்கப்படவேண்டியதே, புதிய பதிவர்கள் வெல்வதற்கு இது வழிவகுக்கும். முடிந்தால் ஒருவர் ஒரு பிரிவுக்கு மட்டும் வழங்கலாம் என மாற்றவும்

 10. வினவு on November 12th, 2009 3:03 am

  ஒரு பதிவர் அதிகபட்சமாக இரண்டு பிரிவுகளில் மட்டும் போட்டியிடலாம் என்பது நல்ல முடிவு. இதனால் குறைந்தது 16லிருந்து அதிகபட்சம் 32 பதிவர்கள் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. இதையே தொடரலாம் என்பது எங்கள் கோரிக்கை. மற்றபடி இந்த அறிவிப்பை முந்தைய அறிவிப்பு என எடுத்துக்கொண்டு பல பதிவர்கள் பார்க்காமல் இருக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம் உண்டு. அதனால் அறிவிப்பின் கலர் டிசைனை மாற்றி வெளியிட்டால் இது விரிவான அறிவிப்பு என பதிவர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

 11. பதி on November 12th, 2009 8:49 am

  அருமை…

  வெற்றிகரமாக நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்….

  மூன்றாம் பரிசு எல்லாம் இல்லையா???? :-))

 12. விருது பெறுகிறோம் அல்லது பெறவில்லை என்பது முக்கியமில்லை.தமிழை வளர்க்க தொடர்ந்து தமிழ்மணத்தில் எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்.இந்த தேர்வுகள் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தாலும், மற்றவை சிறந்தவை அல்ல என்பது பொருள் அல்ல.ஆனாலும் சிறந்ததாய் எழுத முயற்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நிச்சயம்.

 13. tamilbala on November 13th, 2009 8:52 am

  தங்களின் ஊக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள் , நல்ல பதிவுகளுக்கு புத்தகங்கள் பரிசு என்பது நல்ல நடைமுறையே , மணக்கும் தமிழ்மணம் ,மணக்கவைக்கும் தமிழ்மணம், தமிழை மட்டுமல்ல, தமிழகத்தையே மணக்கவைக்கும் தமிழ்மணமே ,உனது மணம் எங்கும் வாசம் பெறட்டும் ,எத்திக்கும் தமிழ்மணம் பரப்பி புதிய சுவாசம் தரட்டும், வாழ்த்துக்கள் எங்களின் மணத்தோடு தமிழ்மணம் கமழட்டும்!

 14. Athimoolakrishnan on November 13th, 2009 1:17 pm

  தொடரும் பாராட்டுதலுக்குரிய சேவைக்கு நன்றி தமிழ்மணம். நிகழ்வு சிறப்புற வாழ்த்துகள்.!

 15. தன்னலமற்ற சேவைக்கும் தளராத தமிழ் மணம் வாழ்த்துக்கள்

 16. யெஸ்.பாலபாரதி on November 13th, 2009 11:25 pm

  //ஒரே பதிவர்
  அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்

  ****

  இந்த விதிமுறையில் பதிவர்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளதை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். பரிசு வெல்லும் வாய்ப்பு பலப் பதிவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே இந்த விதிமுறையின் நோக்கம். இதில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை விருதுக் குழு பரிசீலனை செய்யும்

  By தமிழ்மணம் on Nov 11, 2009//

  அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டுமானால்.. இதே முறை தொடரவேண்டும்.

  வாழ்த்துக்களும்.. நன்றிகளும்.. 🙂

  தோழன்
  பாலா

 17. lathananth on November 14th, 2009 1:59 am

  எனது கருத்து.

  பதிவுலகம் பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது.

  இதில் படைப்புக்கு முக்கியத்துவம் மறைந்து படைப்பவருக்கே ஓட்டுக்கள் விழுகின்றன.

  பலரும் படைப்புகளைப் படிக்காமல் தங்கள் படைப்புக்கும் தங்களுக்குப் பிடித்தவருக்கும் ஓட்டுப் போட்டுவிட்டு at random ஆக மற்றவர்களுக்கு ஓட்டுப் போடுவது நடைமுறையில் உள்ளது.

  தரத்தை எடைபோடத் தகுதியான பதிவர் பலருக்கு அனைத்துப் பதிவுகளையும் படிக்க நேரமும் இல்லை. ஆர்வமும் இல்லை.

  எனவே பரிசுக்கு உகந்தவையானவற்றை, பதிவுலகோடு அதிகம் தொடர்பற்ற, தரமான, பொதுவான, தேர்வாளர்கள் சிலரைக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

  அவர்களுக்கும் இன்னார் எழுதியது எனத் தெரியாமல் ஒவ்வொரு படைப்புக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து பொதுத் தேர்வுகளைப் போல – தேர்ந்தெடுத்தால் மட்டுமே உண்மையிலேயே சிறந்த படைப்புக்கள் தேர்வாகும்.

  இல்லையெனில் போட்டியின் நோக்கம் நிறைவேறாது.

 18. யானை on November 14th, 2009 3:07 am

  பதிவர் லதானந்த் அவர்களை வழிமொழிகிறேன்

  இந்த போட்டி ஒரு டுபாக்கூர் போட்டி

 19. புருனோ on November 14th, 2009 7:16 am

  //3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். //

  எனது பதிவில் ஒருவர் விருந்தினர் இடுகை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

  அல்லது

  நான் மற்றொருவர் பதிவில் விருந்தினர் இடுகை எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்

  விதிமுறையின் படி முதல் சூழலில் அந்த இடுகையை நான் பரிந்துரைக்க முடியுமா அல்லது எழுதியவரா

  விதிமுறையின் படி இரண்டாவது சூழலில் என்னால் அந்த இடுகையை பரிந்துரைக்க முடியுமா

  //உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
  பட்டுள்ளது.//

  இந்த தளத்தின் தொழிற்நுட்பப்படி முதல் சூழலில் அந்த இடுகையை நான் பரிந்துரைக்க முடியுமா அல்லது எழுதியவரா

  இந்த தளத்தின் தொழிற்நுட்பப்படி இரண்டாவது சூழலில் என்னால் அந்த இடுகையை பரிந்துரைக்க முடியுமா

 20. தமிழநம்பி on November 14th, 2009 8:12 am

  ****தரத்தை எடைபோடத் தகுதியான பதிவர் பலருக்கு அனைத்துப் பதிவுகளையும் படிக்க நேரமும் இல்லை. ஆர்வமும் இல்லை.

  எனவே பரிசுக்கு உகந்தவையானவற்றை, பதிவுலகோடு அதிகம் தொடர்பற்ற, தரமான, பொதுவான, தேர்வாளர்கள் சிலரைக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

  அவர்களுக்கும் இன்னார் எழுதியது எனத் தெரியாமல் ஒவ்வொரு படைப்புக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து பொதுத் தேர்வுகளைப் போல – தேர்ந்தெடுத்தால் மட்டுமே உண்மையிலேயே சிறந்த படைப்புக்கள் தேர்வாகும்.****

  இதை நடைமுறைப் படுத்த முடியுமானால் நல்லபயன் விளையும்.

 21. cheena on November 14th, 2009 10:48 am

  போட்டி விதிமுறைகள் சரியே- ஆனால் ஒரு படைப்பு என்பது தான் சற்றே உதைக்கிறது – பரவாய் இல்லை – அதிக இடுகைகள் அளித்தாலும் தேர்ந்தெடுப்பது கடினமாய்த்தான் இருக்கும்.

  லதானந்தின் கருத்தும் பரீசீலிக்கக் கூடியதாகத் தான் இருக்கிறது – செய்ய்லாமே

  நல்வாழ்த்துகள்

 22. செந்தழல் ரவி on November 14th, 2009 11:23 am

  நல்ல அறிவிப்பு. பரிசுத்தொகையை உயர்த்தியமைக்கும் நன்றி…புத்தகமாக வாங்கிக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு பணமாக கொடுத்துவிடுங்களேன்.

 23. T.V.Radhakrishnan on November 14th, 2009 8:51 pm

  //கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
  இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்//

  1-11-09 என்பது 1-12-09 என்று இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்

 24. வசந்த் on November 14th, 2009 9:14 pm

  காட்சிபடைப்புகளில் இருக்கும் ஒளிப்படம் என்பது எதைக்குறிக்கிறது ?

  சக பதிவர் நண்பர்களோ அல்லது தமிழ்மணமோ தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…

 25. Pulavanpulikesi on November 15th, 2009 1:57 am

  நல்ல அறிவிப்பு.

 26. அன்புடன் மலிக்கா on November 15th, 2009 8:15 am

  ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தும் தமிழ்மணத்திற்க்கு முதலில் நன்றி,,

  வெற்றிபெறுகிறோம் என்பதைவிட அதில் பங்குகொள்ளும் வாய்ப்புகிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி,

  முயற்ச்சிசெய்வோம் விருதினை வெல்வோம்.

 27. தண்டோரா on November 15th, 2009 11:59 am

  நன்றி..எழுதுபவர்களை ஊக்குவிப்பதற்கு

 28. தமிழ்மணம் on November 15th, 2009 8:57 pm

  பதிவர் புருனோ,

  உங்கள் பதிவில் ஒருவர் எழுதியிருந்தாலும், அது உங்களின் பதிவு என்பதால் நீங்கள் தான் பரிந்துரை செய்ய முடியும். என்றாலும் உங்களுடைய சுய எழுத்தை மட்டுமே நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதால் இந்த இடுகையை நீங்கள் பரிந்துரை செய்யக் கூடாது (தொழில்நுட்ப ரீதியில் முடியும் என்றாலும் கூட). இது தான் தேர்வு விதிமுறை

  நன்றி…

 29. தமிழ்மணம் on November 15th, 2009 9:04 pm

  காட்சிபடைப்புகளில் இருக்கும் ஒளிப்படம் என்பது எதைக்குறிக்கிறது ?

  ****

  இது புகைப்படத்தை (Photography) குறிக்கிறது

 30. தமிழ்மணம் on November 15th, 2009 9:11 pm

  பதிவர் லதானந்த்,

  கடந்த ஆண்டு நடைபெற்ற விருதுகள் தேர்வில் பரவலாக பல நல்ல இடுகைகள் விருதுகளைப் பெற்றன. எனவே தமிழ்மணம் இந்த ஆண்டும் அதே நடைமுறைகளையே பின்பற்ற விரும்புகிறது.

  ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் நடைமுறை அலசப்பட்டு தேவைப்படும் மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வரும்.

  உங்கள் ஆலோசனையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்

  நன்றி…

 31. தமிழ்மணம் on November 15th, 2009 9:24 pm

  புத்தகமாக வாங்கிக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு பணமாக கொடுத்துவிடுங்களேன்.

  ****

  பதிவர் செந்தழல் ரவி,

  தமிழ்மணம் பரிசுத்தொகையை புத்தகமாக கொடுப்பதையே விரும்புகிறது. காரணம் ஒரே மாதிரியான நடைமுறையை (Process) செயல்படுத்தினால் தான் விருதுகள் நிகழ்வினை நிர்வாகத்தால் சுமூகமாக நடத்தி முடிக்க முடியும். வெவ்வேறான பரிசுகளை ஒவ்வொருவருக்கும் வழங்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இது தவிர கருத்துச் சார்ந்த போட்டிகளில் புத்தகங்களே சிறந்த பரிசாக இருக்கும் என தமிழ்மணம் நம்புகிறது.

  உங்கள் கருத்துக்கு நன்றி…

 32. Vidhoosh on November 16th, 2009 5:24 am

  எனக்கு சில கேள்விகள் உள்ளன.
  1. நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தது பிப்ரவரி 2009 முதல் தான். ஆரம்பத்திலிருந்து தமிழ்மணத்தில் இணைய முயற்சித்தும் இணைய முடியவில்லை.

  2. இப்போதும் கூட பல முறை முயற்சித்தும் உங்கள் வோட்டுப் பட்டையை நிறுவ முடியவில்லை.

  3. அப்படியே உங்கள் முகப்புப் பக்கத்தில் உள்ள புது இடுகைகளை இணைக்கும் text box-சில் பதிவின் லிங்க்கை கொடுத்து சுட்டினாலும் “புது இடுகைகள் ஏதும் இல்லை” என்றே காண்பிக்கிறது.

  சரி, போகட்டும்.

  இப்போது நான் எனது பரிந்துரைகளை எப்படி அளிப்பது? அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
  பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று சொல்கிறீர்கள். ஒருவேளை உங்கள் லிஸ்ட்டில் என் மின்னஞ்சல் இணையவில்லை என்றால் என்ன செய்வது?

  –வித்யா

 33. Vidhoosh on November 16th, 2009 5:26 am

  உங்கள் விரிவான பதிலை எதிர்பார்கிறேன்.
  நன்றி.
  –வித்யா

 34. திரு on November 16th, 2009 7:08 am

  தமிழ்மண விருது 2009 தேர்வுமுறைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  பதிவர்களை ஆழமான படைப்புகளை உருவாக்க உங்கள் முயற்சிகள் ஊக்குவிக்கும்.

  விருதிற்கு பதிவு செய்யும் வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  தோழமையில்,
  திரு

 35. நான் ஆதவன் on November 17th, 2009 2:22 am

  பல பதிவர்கள் பங்கேற்றிருக்கும் குழும வலைத்தளங்களில் நான் இட்ட பதிவை போட்டிக்கு அனுப்பலாமா? (வா.வ. சங்கம் மாதிரி)

 36. புலவன்புலிகேசி on November 18th, 2009 1:04 am

  //கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
  இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்//

  நவம்பர் 30 வரை கொடுத்துள்ளீர்கள். ஆனால் நவம்பர் 1 க்கு முன்னர் எப்படி இணைத்திருக்க முடியும்? இதில் எனக்கு குழப்பம் உள்ளது.

 37. Subankan on November 18th, 2009 5:19 am

  ஒருவருக்கு ஒரு இடுகை என்பதை வரவேற்கிறேன். இதனால் பலரும் விருதுகள் பெறும் வாய்ப்பு ஏற்படும். பதிவுக்கு அல்லாது பதிவருக்கு ஓட்டுக்கள் விழும் வாய்ப்புக்கள் இருப்பதையும கவனத்தில் கொண்டால் நல்லது.

 38. kiliyanur ismath on November 22nd, 2009 2:02 am

  வாரம் ஒரு பதிவரை நட்சத்திரப் பதிவராக தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்துவதும் ஆண்டுக்கு ஒருமுறை விருது கொடுத்து உற்சாகப்ப படுத்துவதும்
  பதிவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும் ஆவலையும் கொடுக்கிறது….
  தமிழ்மணத்தின் சேவைக்கு மிக்க நன்றி

 39. பதிவர்களையும் பதிவுகளையும் ஊக்கப்படுத்தும் தமிழ்மணம் வாழ்க. அறிவுத்தோண்டல் தொடரட்டும். தங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும். நன்றி

 40. ஈரோடு கதிர் on November 28th, 2009 11:46 am

  //தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்//

  நான் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர் என்பதை எப்படி உறுதிசெய்துகொள்வது.

 41. Dr. N. Ganesan on November 29th, 2009 7:42 pm

  ஈரோடு கதிர்,

  உங்கள் வலைப்பதிவு – தமிழ்மணத்தில் உள்ளது.
  http://www.tamilmanam.net/bloglist.php?id=4189

  அன்புடன்,
  நா. கணேசன்

 42. Mohan Kumar on November 30th, 2009 1:48 am

  //கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
  இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்//

  இது சற்று குழப்பம் தருகிறது. நவம்பர் 1 என ஒரு தேதியும், நவம்பர் 30 என வேறு தேதியும் சொல்கிறீர்கள். நான் நவம்பர் மாதம் நடுவில் தான் தமிழ் மணத்தில் இணைந்தேன். இந்த 1 மாதத்தில் சில படைப்புகள் வெளி ஆகி உள்ளன. நான் நவம்பர் மாதத்தில் எழுதிய சில படைப்புகளை போட்டிக்கு சமர்பிக்க முடியுமா? விளக்கவும்

 43. புருனோ on November 30th, 2009 2:43 pm

  //2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
  இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்
  //

  நவம்பர் 30 11:59 PM சரி

  அது GMTஆ, ISTஆ, American Timeஆ 🙂 🙂 🙂

 44. தமிழ்மணம் on December 1st, 2009 1:55 am

  இது சற்று குழப்பம் தருகிறது. நவம்பர் 1 என ஒரு தேதியும், நவம்பர் 30 என வேறு தேதியும் சொல்கிறீர்கள்.

  ********

  இந்த விதிமுறையில் மாற்றம் செய்திருக்கிறோம்.

  30-11-2009வரை தமிழ்மணத்தில் இணைந்த பதிவர்கள் இதில் பங்கு பெறலாம்.

  30-11-2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் போட்டிக்கு தகுதியானவை

  *********
  அது GMTஆ, ISTஆ, American Timeஆ
  *********

  அமெரிக்க EST நேரம்

 45. […] தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – வ

 46. என்.உலகநாதன் on December 4th, 2009 8:25 am

  //உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
  பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
  பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.//

  எனக்கு எந்த மின்னஞ்சலும் இது வரை வரவில்லை.

  16 பகுதிகளில் அனுபவம் சார்ந்த பதிவுகள் எந்த கேட்டகரியில் வருகிறது?

 47. தமிழ்மணம் on December 4th, 2009 5:39 pm

  16 பகுதிகளில் அனுபவம் சார்ந்த பதிவுகள் எந்த கேட்டகரியில் வருகிறது?

  *******

  5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

 48. Shirdi.Saidasan on December 5th, 2009 1:44 am

  எப்படி போட்டிக்கு பதிவை இணைப்பது. 5-ம் தேதி ஆகிவிட்டதே. Submission லின்க் எதுவும் கொடுக்கவில்லையே.

 49. kalyankumar on December 5th, 2009 3:19 am

  தங்கள் மெயில் கிடைத்தது. ஆனால் இடுகைகளை இணைக்க எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கியபோது இப்படி வருகிறது

  பிழை: நீங்கள் கொடுத்த தனி அடையாள எண் பிழையானது

  தயவுசெய்து இதை சரிசெய்து மெயில் அனுப்ப வேண்டுகிறேன். நன்றி
  கல்யாண்குமார்

 50. சதுக்கபூதம் on December 5th, 2009 3:46 am

  சென்ற வருடம் டிசம்பர் மாதம் எழுதிய பதிவுகள் போன வருடமும் சேர்க்க முடியவில்லை. இந்த வருடமும் சேர்க்க முடியாது.

 51. தமிழநம்பி on December 5th, 2009 3:47 am

  ஐயா,
  வணக்கம்.
  நீங்கள் தந்த எனக்கான சிறப்புத்தொடுப்பின் வழி முயன்றபோது, நீங்கள் கொடுத்த தனி அடையாள எண் பிழையானது என்ற அறிவிப்பே கிடைக்கிது.
  அன்பு கூர்ந்து உதவவும்.
  அன்பன்,
  தமிழநம்பி.

 52. Aah Idhalgal on December 5th, 2009 3:58 am

  My email says

  All you have to do is to click the following link that contains
  a unique identifier. //

  But it doesnt work. It says wrong keys. pls help.

 53. […] விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம் தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – வ

 54. Aah Idhalgal on December 5th, 2009 4:10 am

  Oh yeah, got your second mail, it works. thanx

 55. தமிழ்மணம் on December 5th, 2009 4:26 am

  நீங்கள் தந்த எனக்கான சிறப்புத்தொடுப்பின் வழி முயன்றபோது, நீங்கள் கொடுத்த தனி அடையாள எண் பிழையானது என்ற அறிவிப்பே கிடைக்கிது.

  ****

  பதிவர் தமிழநம்பி,

  உங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டிருக்கும். உங்களுக்கு அனுப்பப் பட்ட சமீபத்தைய மின்னஞ்சலை பார்க்கவும். அப்படியும் சரியில்லை எனில் மறுபடியும் இங்கே மறுமொழியிடவும்

  நன்றி…

 56. தமிழ்மணம் on December 5th, 2009 4:26 am

  பதிவர் கல்யாண்குமார்,

  உங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டிருக்கும். உங்களுக்கு அனுப்பப் பட்ட சமீபத்தைய மின்னஞ்சலை பார்க்கவும். அப்படியும் சரியில்லை எனில் மறுபடியும் இங்கே மறுமொழியிடவும்

  நன்றி…

 57. தமிழ்மணம் on December 5th, 2009 4:28 am

  சென்ற வருடம் டிசம்பர் மாதம் எழுதிய பதிவுகள் போன வருடமும் சேர்க்க முடியவில்லை. இந்த வருடமும் சேர்க்க முடியாது.

  ******

  இந்தப் பிரச்சனையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி…

  இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம். என்றாலும் தற்பொழுது விருதுகள் நிகழ்வு தொடங்கி விட்டதால் இதனை சரி செய்வது கடினம். இதனை நிச்சயம் அடுத்த ஆண்டு கடைப்பிடிப்போம்.

  மன்னிக்கவும்…

  நன்றி…

 58. தமிழ்மணம் on December 5th, 2009 4:30 am

  எப்படி போட்டிக்கு பதிவை இணைப்பது. 5-ம் தேதி ஆகிவிட்டதே. Submission லின்க் எதுவும் கொடுக்கவில்லையே.

  *****

  இந்தச் சுட்டியை பார்க்கவும்
  http://blog.thamizmanam.com/archives/190

 59. தமிழ்மணத்தின் மிகச்சிறந்த இடுகைக்கான விருது அறிவிப்பு கண்டேன்.
  உங்களுக்கான சிறப்புத் தொடுப்பு

  http://awards2009.tamilmanam.net/nominate.php?key=37f6c1a5164d367481c8c11a08e64d76

  என்று தாங்கள் தெரிவித்திருக்கும் இணைப்பைச் சொடுக்கினால் தனி அடையாள எண் பிழையானது என்ற செய்தி வருகிறது. தாங்கள் அன்புகூர்ந்து சரியான எண்ணைத் தெரிவிக்கவும்.

  முனைவர் நா.இளங்கோ
  இணைப் பெராசிரியர்
  புதுச்சேரி-8

 60. தமிழ்மணம் on December 5th, 2009 4:47 am

  முனைவர் நா.இளங்கோ,

  உங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டிருக்கும். உங்களுக்கு அனுப்பப் பட்ட சமீபத்தைய மின்னஞ்சலை பார்க்கவும். அப்படியும் சரியில்லை எனில் மறுபடியும் இங்கே மறுமொழியிடவும்

  நன்றி…

 61. நாஞ்சில் பிரதாப் on December 5th, 2009 5:05 am

  தங்கள் மின்னஞசலுக்கு நன்றி. எனது இடுகைகளை பரிந்துரைத்துவிட்டேன்.

  வெளிநாட்டில் இருப்போர் வெற்றிப்பெற்றால் புத்தகங்களை எப்படி வாங்குவது? சென்னைக்குத்தான் செல்லவேண்டுமா?

 62. நிகழ்காலத்தில்.. on December 5th, 2009 7:39 am

  அனைவரும் பங்கெடுக்கும் வகையில் போட்டி விதிமுறைகள் இருப்பதில் மகிழ்ச்சி

  வாழ்த்துகள்

  விரைவில் கலந்து கொள்கிறேன்..

 63. SanjaiGandhi on December 5th, 2009 9:44 am

  மொக்கை என்ற பிரிவை தவிர்த்திருப்பது என்னைப் போன்ற பதிவர்களின் வெற்றியை தடுக்கும் சதியாகவே பார்க்கிறேன். தமிழ்மணத்தைக் கண்டிக்கிறேன். 90% என்ற அளவில் பெரும்பான்மையாய் இருக்கும் எங்களைத் தவிர்த்திருப்பதற்கு தமிழ்மணம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையே வயிறு முட்ட டீ குடிப்போம்.

 64. kumar on December 5th, 2009 9:50 am

  இடுகைகளை விருதுக்கு எப்படி பரிந்துரைப்பது என்பது குறித்த தகவலை மின்னஞ்சல் செய்யவும். ப்ளீஸ்.

 65. prabakar on December 5th, 2009 10:08 am

  nan classroom2007.blogspot.com thiru . subbaih avaikalai vazhi mozhikiren

 66. தமிழ்மணம் on December 5th, 2009 11:59 am

  மொக்கை என்ற பிரிவை தவிர்த்திருப்பது என்னைப் போன்ற பதிவர்களின் வெற்றியை தடுக்கும் சதியாகவே பார்க்கிறேன்.

  ****

  12. நகைச்சுவை, கார்ட்டூன்

  நகைச்சுவைப் பிரிவில் பரிந்துரைக்கலாம்

 67. தமிழ்மணம் on December 5th, 2009 12:00 pm

  இடுகைகளை விருதுக்கு எப்படி பரிந்துரைப்பது என்பது குறித்த தகவலை மின்னஞ்சல் செய்யவும். ப்ளீஸ்.

  ****

  ஏற்கனவே மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு விட்டன.

  நன்றி…

 68. பனையூரான் on December 5th, 2009 1:15 pm

  நல்ல விசயம்

 69. ramona on December 5th, 2009 11:39 pm

  பதிவுகளைப்பிரசுரிப்பது மட்டுமன்றி, அதற்க்குப் பரிசும் கொடுக்கவேண்டுமென்று தமிழ்ப்பற்றோடு பாடுபடும் உங்களை எந்த வார்த்தை கொண்டு வாழ்த்துவது.
  தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி
  நன்றி
  ரமோனா

 70. அஞ்சான் on December 6th, 2009 12:19 am

  பதிவர்களின் ஆக்கங்களை மேம்படுத்த இவ்விருதுகள் உதவும். நல்ல முயற்சி.

 71. சுடுதண்ணி on December 6th, 2009 3:56 am

  வணக்கம்.

  இடுகைத் தொடர்களை எப்படி பரிந்துரைப்பது??

  முதல் பகுதியை மட்டும் பரிந்துரைத்தால் போதுமா?

  தயவு செய்து விளக்கவும்.

 72. யெஸ்.பாலபாரதி on December 6th, 2009 5:46 am

  என்னால் வோட்டுப் போட முடியவில்லை… பிழை என்று செய்தி வருகிறது.

  :(((

 73. புதுகைத் தென்றல் on December 6th, 2009 6:22 am

  பேரண்ட்ஸ் கிளப் முகவரிக்கு வந்திருக்கும் தொடுப்பினை தொடர்ந்தால் ”நீங்கள் கொடுத்த தனி அடையாள எண் தவறு” என வருகிறது.

  http://awards2009.tamilmanam.net/nominate.php?key=78e1cb3d4d6bd0b4992d3bd1d9dc2d80

  உதவுங்கள்

 74. யெஸ்.பாலபாரதி on December 6th, 2009 12:12 pm

  // 72.

  பேரண்ட்ஸ் கிளப் முகவரிக்கு வந்திருக்கும் தொடுப்பினை தொடர்ந்தால் ”நீங்கள் கொடுத்த தனி அடையாள எண் தவறு” என வருகிறது.

  http://awards2009.tamilmanam.net/nominate.php?key=78e1cb3d4d6bd0b4992d3bd1d9dc2d80

  உதவுங்கள்
  //

  காலையில் எனக்கும் சேம் ப்ளட்… 🙁

  ஆனால்… ஐபி முகவரியை வைத்து தீர்மானிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய இரண்டு ஐபி-யில் ஒன்று ஓகே ஆகவில்லை. இன்னொன்று ஓகே ஆகிவிட்டது. 🙂

 75. தமிழ்மணம் on December 6th, 2009 12:59 pm

  என்னால் வோட்டுப் போட முடியவில்லை… பிழை என்று செய்தி வருகிறது.

  ****

  பதிவர் பாலபாரதி,

  முதல் மின்னஞ்சலில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் இந்தப் பிழை வருகிறது.

  “Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET” என்ற தலைப்புடன் மற்றொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். அதில் உள்ள சுட்டியைக் கொண்டு நீங்கள் வாக்களிக்க முடியும். பிரச்சனை இருந்தால் அறியத்தாருங்கள்.

  நன்றி…

 76. தமிழ்மணம் on December 6th, 2009 1:04 pm

  ஆனால்… ஐபி முகவரியை வைத்து தீர்மானிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய இரண்டு ஐபி-யில் ஒன்று ஓகே ஆகவில்லை. இன்னொன்று ஓகே ஆகிவிட்டது.

  *****

  இது தவறான கருத்து. ஐபி சோதனை எதுவும் விருதுகள் பரிந்துரைக்கு செய்யப்படவில்லை.

  “Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET” என்ற தலைப்புடன் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் சரியான தொடுப்பு உள்ளது.

  இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை இருந்தது. அதனால் வாக்களிப்பதில் சிக்கல் இருந்தது. இந்தச் சிக்கலை புதிய மின்னஞ்சலில் அனுப்பப் பட்ட தொடுப்பில் சரி செய்திருக்கிறோம்

  நன்றி…

 77. தமிழ்மணம் on December 6th, 2009 1:06 pm

  இந்தப் பதிவில் எழுப்ப்பட்ட சில கேள்விகளுக்கு இந்த இடுகையில் பதில் கூறப்பட்டுள்ளது

  http://blog.thamizmanam.com/archives/190

 78. Lucky Limat on December 6th, 2009 1:53 pm

  எனது காமிக்ஸ் உலவல் வலைபூவுக்கான பரிந்துரை சுட்டியை அனுப்பவும் .
  அன்புடன் ,
  லக்கி லிமட்

 79. மன்னார் அமுதன் on December 7th, 2009 12:10 am

  //கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
  இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்//

  சிறு சந்தேகம். நவம்பர் மாதத்தில் எழுதிய பதிவுகளை எப்படி1-11-2009 க்கு முதல் தமிழ்மணத்தில் இணைக்க முடியும். நான் நினைக்கிறேன் அங்கு 1-12-2009 என்று வர வேண்டுமென்று. இதை சிறிது விளக்குங்கள்

  நன்றி

 80. சந்ரு on December 7th, 2009 3:34 pm

  எனக்கு இன்னும் சுட்டி வந்து சேரவில்லை.

 81. s.kaarthikeyan on December 8th, 2009 3:30 am

  arumaiyana thittam.
  vaazhthukal.

  nandri.
  s.kaarthikeyan

 82. கார்த்திக்கேயன் on December 9th, 2009 8:21 am

  மிக மிக அருமையான திட்டம்,வாழ்த்துக்கள்

 83. SP.VR.Subbiah on December 10th, 2009 12:47 pm

  அன்புடையீர்,

  என்னுடைய பதிவிற்கான Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET மின்னஞ்சல் வரவில்லை. அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

  இது குறித்து தமிழ்மணம் நிர்வாகத்திற்கு -admin thamizmanam 8 December 2009 06:41 அன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை

  அன்புடன்
  சுப்பையா

 84. புதுகைத் தென்றல் on December 11th, 2009 12:05 am

  தாங்கள் அனுப்பிய சுட்டி கிடைத்தது. ஆனால் அது வேலை செய்யவில்லை.

  சரியான சுட்டி அனுப்பும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

 85. SP.VR.Subbiah on December 11th, 2009 4:46 am

  /////to classroom2007@gmail.com
  date 11 December 2009 07:20
  subject Nomination for TM Awards2009 – Invitation from tamilmaNam.NET
  mailed-by s15246724.onlinehome-server.com
  hide details 07:20 (6 hours ago)/////

  பிழை: இந்த தனி அடையாள எண்ணுக்குப் பொருந்தும் பதிவில்லை
  பின் செல்க

  நீங்கள் இன்று அனுப்பிய சுட்டியில் மேற்கண்டவாறான செய்தி வருகிறது.
  எனது பதிவுகள் இரண்டை விருதுக்குப் பரிந்துரைக்க இயலவில்லை

  இந்நிலையில் என்ன செய்ய வேண்டும்?
  தயவு செய்து தெரியப்படுத்தவும்!

 86. புதுகைத் தென்றல் on December 12th, 2009 2:44 am

  இன்று கடைசிதினம் என்று தாங்கள் அனுப்பிய சுட்டியும் எண் சரியில்லை, பின் செல்க என்றே சொல்கிறது

  :(((

 87. nondhakumar on December 12th, 2009 3:14 am

  கடந்த இரண்டு ஆண்டுகளாக பதிவுலகத்தில் இருந்து வருகிறேன். தொடர்ச்சியாகவும் எழுதியும் வருகிறேன்.

  ஆனால், கடந்த முறையும் சரி. இந்த முறையும் சரி எனக்கு பரிந்துரைக்க, வாக்களிக்க எனக்கு மடல் வரவில்லை.

  கடந்த முறை தெரிவித்திருந்தேன். முறையான பதிலில்லை.

  இந்த முறையும் தெரிவிக்கிறேன். செவிடன் காதில் ஊதிய சங்காக போகுமோ!

 88. Chandravathanaa on December 12th, 2009 4:10 am

  வணக்கம்,
  நான் எனது இந்தப் பதிவுகளைத்தான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

  அமானுஸ்யங்கள்

  அக்கரைப்பச்சைகள்

  விருதுகளுக்கான தேர்வு இடுகைப் பக்கத்தில் இந்தப் பதிவை எப்படிக் கொடுப்பது என எனக்குத் தெரியவில்லை. முடிந்தால் உதவுங்கள்.

  நட்புடன்
  சந்திரவதனா

 89. Chandravathanaa on December 12th, 2009 4:18 am

  இப்போது இதற்கான வழியை நான் கண்டு பிடித்து விட்டேன்.
  நன்றி

 90. தமிழ்மணம் on December 12th, 2009 11:02 am

  கடந்த முறை தெரிவித்திருந்தேன். முறையான பதிலில்லை.

  இந்த முறையும் தெரிவிக்கிறேன். செவிடன் காதில் ஊதிய சங்காக போகுமோ!

  ***********

  பதிவர் நொந்தகுமார்,

  ஏற்கனவே இது குறித்து கூறியிருந்தோம்.

  தமிழ்மணத்தில் இருந்து மின்னஞ்சல் வரவில்லை எனக்கூறும் பதிவர்கள் கவனிக்க வேண்டியது…

  – நீங்கள் தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள மின்ன்ஞசலுக்கு மட்டுமே தொடுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே அந்த மின்னஞ்சலைப் பார்க்கவும்

  உங்கள் மின்னஞ்சல் முகவரி தமிழ்மணத்தில் தவறாக உள்ளது. தற்பொழுது மின்னஞசல் முகவரியை மாற்றி உங்களுக்கு தொடுப்பு அனுப்பியுள்ளோம்

 91. […] விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம் தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – வ

 92. Loganathan on December 20th, 2009 1:23 am

  தமிழ்மண விருது 2009 தேர்வுமுறைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 93. malikka on December 20th, 2009 3:48 am

  அன்புள்ள தமிழ்மணத்திற்கு

  நான் செப்டம்பரில் [நீரோடையில்]எழுதிய இடுகையைதான் பரிந்துரை செய்துள்ளேன் ஆனால் அப்போது தமிழ்மணத்தில் இணைப்பது எனக்கு தெரியாததால் அதை இணைக்கவில்லை

  தற்போது அதை இணைத்தால் தான் வாக்குகள் விழுமா? ப்லீஸ் கொஞ்சம் விளக்கவும்..

Leave a Reply