தமிழ்மணம் விருதுகள் 2009

தமிழ்மணம் ஆண்டு விருதுகளை இந்த ஆண்டும் வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2008 இல் தமிழ்மணம் விருதுகளைத் தேர்ந்தெடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வு முறை பதிவர்களிடம் இருந்து பரவலான வரவேற்பினைப் பெற்றதால் அதே தேர்வு முறையை இந்த ஆண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

tm awards 2009

தமிழ்மணம் விருதுகள் குறித்த மேலும் விரிவான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும். டிசம்பர்-சனவரி மாதங்களில் விருதுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவை நடைபெறும். பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விருது பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளை முதன் முறையாக நடத்தியதாலும், அப்பொழுது ஈழத்தில் நிலவிய அசாதாரணமான சூழலாலும் தமிழ்மணம் விருது நிகழ்வு காலதாமதமானது. இவ்வாண்டு எத்தாமமுதம் இல்லாமல் குறித்த நாட்களுக்குள் விருது நிகழ்வு நடக்குமென உறுதி அளிக்கிறோம்.

கடந்த ஆண்டினைப் போலவே பதிவர்களின் ஒத்துழைப்பினை இந்த ஆண்டும் வேண்டுகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

48 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2009”

 1. வசந்த் on October 28th, 2009 9:42 pm

  வாழ்த்துக்கள்…

 2. அ. நம்பி on October 28th, 2009 9:46 pm

  நல்ல செய்தி; சிறப்பாக நடைபெறவும் உங்கள் நன்னோக்கம் நிறைவேறவும் வாழ்த்துகள்.

 3. ராமலக்ஷ்மி on October 28th, 2009 10:06 pm

  உற்சாகத்துடன் கலந்து கொள்கிறோம்.

  நன்றி தமிழ்மணம்!

 4. SP.VR.SUBBIAH on October 28th, 2009 10:16 pm

  நல்லது. அறிவிற்பிற்கு நன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 5. ஆயில்யன் on October 28th, 2009 10:48 pm

  வாழ்த்துக்கள் !

  லோகோ சூப்பரூ :))

 6. உண்மைத்தமிழன் on October 28th, 2009 11:30 pm

  ஆஹா.. நன்றி.. நன்றி.. நன்றி..!

  இந்த வருஷமும் மூணு விருதை அள்ளிர வேண்டியதுதான்..!

 7. ஜெரி ஈசானந்தா. on October 29th, 2009 1:19 am

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

 8. Surveysan on October 29th, 2009 2:02 am

  ///இவ்வாண்டு எத்தாமமுதம் இல்லாமல்///

  inshah allah 🙂

  good thing.

 9. க. பாலாஜி on October 29th, 2009 2:22 am

  எப்போதும் போல எங்களின் ஆதரவு தமிழ்மணத்திற்கு உண்டு. விருதளிக்கும் பணி செவ்வனே சிறக்க நானும் வாழ்த்துகிறேன்.

 10. நிலாரசிகன் on October 29th, 2009 2:47 am

  சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

 11. தண்டோரா on October 29th, 2009 3:30 am

  உற்சாகத்துடன் கலந்து கொள்கிறோம்.

  நன்றி தமிழ்மணம்!

 12. செந்தழல் ரவி on October 29th, 2009 4:09 am

  ஹை. மறுபடி விருது அறிவிப்பா ? நன்றி நன்றி..!!!

 13. மோகனன் on October 29th, 2009 4:25 am

  பட்டைய கிளப்ப நாங்க தயார்… பட்டயம் தர நீங்க தயார்…

  வாழ்த்துகள்…

  என்றென்றும் அன்பு’டன்’

  மோகனன்

 14. மோகனன் on October 29th, 2009 4:33 am

  பட்டைய கிளப்ப நாங்க தயார்… பட்டயம் தர நீங்க தயார்…

  வாழ்த்துகள்…

  என்றென்றும் அன்பு’டன்’

  மோகனன்

 15. மோகனன் on October 29th, 2009 4:36 am

  இந்நிகழ்வு குறித்து மகிழ்வே
  இகழ்வு நேரின் நமக்கு தாழ்வே
  புகழ்வு போதையேறின் அது வீழ்வே
  என்றும் மங்கா எம் தமிழ் வாழ்கவே..!

  என்றென்றும் அன்பு’டன்’

  மோகனன்

 16. புதுகைத் தென்றல் on October 29th, 2009 5:02 am

  நன்றி ஆவலுடன் காத்திருக்கிறோம்

 17. beermohamed on October 29th, 2009 5:38 am

  நீங்கள் கொடுக்கபோவது உங்களுக்கு தேவயான பதிவர்க்கு மட்டும் தான் எதுக்கு தேவையில்லாத வாக்கு எடுப்பு எல்லாம்,

 18. சிறப்பான வாழ்த்துக்கள். முன்னோட்டத்தின் மூலம் முயற்சிகளுக்கும் உழைப்புகளுக்கும் கிடைக்கப் போகும் அங்கீகாரம் இது.

 19. T.V.Radhakrishnan on October 29th, 2009 6:21 am

  நன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 20. aruna on October 29th, 2009 7:20 am

  அடடா…இதுக்குத்தானே காத்துக்கிட்டு இருக்கோம்!!!!

 21. thamilmullai on October 29th, 2009 8:12 am

  வாழ்த்துக்கள்….

 22. sakthivel on October 29th, 2009 8:52 am

  வலையுலக மக்களுக்கு இது ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி,விருதுகளை சொன்னது போலவே விரைந்து தர வேண்டுகிறேன்.

 23. வால்பையன் on October 29th, 2009 9:15 am

  கலந்து கொள்ள உள்ள தகுதிகள், என்ன என்ன தலைப்பில் கட்டுரைகள் போன்ற விபரங்கள் கொடுத்தால் என் போன்ற சிறுவர்களுக்கு உதவியாக இருக்கும்!

 24. வால்பையன் on October 29th, 2009 9:15 am

  ஏன் கமெண்ட்ஸ் போலா அப் ஆக மாட்டிங்குது!

 25. ஸ்டார்ஜன் on October 29th, 2009 9:50 am

  நன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 26. எம்.எம்.அப்துல்லா on October 29th, 2009 10:22 am

  //நீங்கள் கொடுக்கபோவது உங்களுக்கு தேவயான பதிவர்க்கு மட்டும் தான் எதுக்கு தேவையில்லாத வாக்கு எடுப்பு எல்லாம்,

  //

  அக்கா, நமக்கு பின்னாடி வந்தவங்க, நம்மளைவிட குறைஞ்ச ஹிட்ஸ் வாங்கினவங்க இவங்களை எல்லாம் நட்சத்திரம் ஆக்கிட்டாங்க..நாம இன்னும் ஆகலேயேங்குற வருத்தமா??

  டோண்ட் ஓர்ரி கண்டிப்பா நம்மையும் ஒருநாள் கூப்பிடுவாங்க.அதற்காக அவர்கள் தேர்வுமுறையில் சந்தேகமே வேண்டாம்.

 27. அபுல் பசர் on October 29th, 2009 11:50 am

  தங்களின் இந்த முயற்சி வலைப்பூ நண்பர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.

  அபுல் பசர்

 28. சி. கருணாகரசு on October 29th, 2009 12:25 pm

  வாழ்த்துகள்

 29. வினவு on October 30th, 2009 4:24 am

  தமிழ் பதிவர்களையும், வாசகர்களையும் பொறுப்புணர்வோடு உற்சாகப்படுத்தும் தமிழ்மணம் குழுவினருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!

 30. வந்தியத்தேவன் on October 30th, 2009 9:42 pm

  ஆஹா சென்றமுறை முதல் 10ற்க்குள் எனது 2 ஆக்கங்கள் வந்தன. இம்முறை எப்படியும் முதல் மூன்றிற்க்குள் வர முயற்சிக்கின்றேன்.

  உங்கள் ஊக்கத்திற்க்கு பாராட்டுகள்

 31. vallisimhan on October 31st, 2009 5:50 am

  வாழ்த்துகள் அனைவருக்கும்.. தமிழ்மணத்துக்கும்.

 32. அகல்விளக்கு on October 31st, 2009 12:24 pm

  நன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 33. அன்புடன் பாலா on November 1st, 2009 5:39 am

  பதிவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் இது போன்ற விதயங்களை முன்னெடுத்துச் செய்வதற்கு உங்களுக்கு நன்றி.

  அன்புடன்
  பாலா

 34. தமிழன்-கறுப்பி... on November 1st, 2009 10:50 am

  எனக்கொரு விருது கட்டாயம் தரணும்..

  🙂

 35. இப்படிக்கு நிஜாம் on November 1st, 2009 11:13 am

  //தமிழ்மணம் விருதுகள் குறித்த மேலும் விரிவான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும்.//

  ஆஹா! இப்பவே சஸ்பென்ஸ் ஆரம்பமாயிடிச்சி. சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

 36. எம்.ரிஷான் ஷெரீப் on November 2nd, 2009 8:34 am

  எனது இனிய நல்வாழ்த்துக்கள் !

 37. தமிழநம்பி on November 3rd, 2009 12:34 pm

  வரவேற்கிறோம்.

 38. thubai raja on November 4th, 2009 2:31 am

  வாழ்த்துக்கள்.

 39. வாழ்த்துகள்…

  என்றென்றும் அன்பு’டன்’

 40. Superlinks on November 5th, 2009 3:18 am

  தமிழ்மணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

 41. Bhrathimohan on November 5th, 2009 8:18 am

  நிச்சயம் ஒத்துழைப்பு உண்டு
  வெற்றி பெற, விழா சிறக்க வாழ்த்துக்கள்

 42. சர்வதேசவாதிகள் on November 5th, 2009 1:25 pm

  தமிழ்மணத்திற்கு எமது வாழ்த்துக்கள்.

 43. s.ramasamy on November 5th, 2009 11:41 pm

  தொடர்ச்சியான நல் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

 44. சீராசை பாலா on November 5th, 2009 11:44 pm

  தொடர்ச்சியான நல்முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

 45. மீனாமுத்து on November 9th, 2009 2:15 am

  விழா வெற்றிபெரும்.சிறப்பாக நடந்தேற இனிய நல் வாழ்த்துகள்!

 46. வடகரை வேலன் on November 9th, 2009 8:05 am

  //நீங்கள் கொடுக்கபோவது உங்களுக்கு தேவயான பதிவர்க்கு மட்டும் தான் எதுக்கு தேவையில்லாத வாக்கு எடுப்பு எல்லாம்//

  தவறுங்க. சென்ற வருடப் பட்டியலைப் பாருங்க. உங்களுக்கே புரியும். களங்கப் படுத்த வேண்டாமே, ப்ளீஸ்.

 47. எட்வின் on December 7th, 2009 6:37 am

  வாழ்த்துக்கள்

 48. கௌரி விமலெந்திரன் on December 19th, 2009 4:49 am

  தமிழ் மண்ம் விருதுகள்
  சிற்ப்பாக் நட்கக வாழ்த்துக்கள்.
  உங்கள் பணி தொடரட்டும்

Leave a Reply