தமிழ்மணம் ஐந்தாண்டுகள்

August 23, 2009 – 3:22 pm by தமிழ்மணம்

‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

தமிழ்மணத்தை உருவாக்கி முதல் இரண்டாண்டுகள் நடத்திய திரு. காசியும், தொடர்ந்து தொழில் நுட்பத்தில் மேம்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

  1. 71 Responses to “தமிழ்மணம் ஐந்தாண்டுகள்”

  2. வாழ்த்துக்கள்!

    நா. கணேசன்

    By Dr. N. Ganesan on Aug 23, 2009

  3. தமிழ்மணம் ஆறாம் அகவைக்குள் நுழைந்தது போல பல நூறு அகவைகள் நிலைத்து நிற்க வாழ்த்துகின்றேன்.

    By ஈழவன் on Aug 23, 2009

  4. தமிழர்களின் சிந்தனைத் தளத்தில் பூக்கும் ஆயிரம் பூக்களுக்கும் தளம் அமைத்து தரும் தமிழ்மணத்திற்கும், அதன் நிறுவனர் தோழர் காசிக்கும், தற்போதைய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

    இந்த பணி தொடர வாழ்த்துகள்!

    By சுந்தரராஜன் on Aug 23, 2009

  5. :-)

    மகிழ்வான செய்தி.. நிர்வாகக்குழுவினருக்கு பதிவர்களின் சார்பாய் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    By சென்ஷி on Aug 23, 2009

  6. தமிழ் மணம் மேலும் பல ஆண்டுகள் மணம் வீச வாழ்த்துக்கள்

    By வசந்த் on Aug 23, 2009

  7. வாழ்த்துக்கள்

    By இளா on Aug 23, 2009

  8. தமிழ்மணம் ஐந்து ஆண்டுகள் நிறைவிற்கு வாழ்த்துகள்! தமிழ்மணத்தில் பூங்கா மின்னிதழ் சிறப்பான பங்கை வகித்தது. 5 ஆண்டுகளை கடந்துள்ள தமிழ்மணம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    By திரு on Aug 23, 2009

  9. வாழ்த்துக்கள்

    By starjan on Aug 23, 2009

  10. தமிழமணத்துக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    தமிழ்க் கணிமை இணைய உலகில் அதன் வரலாற்றில் தவிர்க்க முடியாத வகிபாகத்தினைத் தமிழ்மணம் கொண்டிருக்கிறது.

    By மு. மயூரன் on Aug 23, 2009

  11. வாழ்த்துக்கள்,ஆனால் கொஞ்ச நாட்களாக ஒரே பக்கம் சில நாட்கள் அப்படியே இருக்கே!!

    By வடுவூர் குமார் on Aug 23, 2009

  12. தமிழமணத்துக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    By சிங்.செயகுமார் on Aug 23, 2009

  13. அரும்பணி தொடர்க.

    உரியவர்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துகள்.

    By அ. நம்பி on Aug 23, 2009

  14. இன்னும் பல நிலைகளை கடந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    By என்.உல்கநாதன் on Aug 23, 2009

  15. வாழ்த்துகள்,

    திரட்டிகள் இல்லாவிட்டால் பதிவுலகம் இவ்வளவு விரைவாக வளர்ந்திருக்காது,அந்த வகையில் தமிழ் திரட்டி சேவையை துவங்கி வைத்து, தொடர்ந்து சிறப்பாக செயல்படும் தமிழ்மண நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மணம் வழியாக அறிந்தப் பதிவுகளில் மூலமாக பலர் எனக்கு நண்பர்களாக ஆகி இருக்கிறார்கள்.

    By கோவி.கண்ணன் on Aug 23, 2009

  16. வாழ்த்துகள் தமிழ்மணத்திற்கு. சில சமயம் தொழில் நுட்பப் பிரச்னைகள் காரணமாய் பதிவுகளை இணைக்க முடிவதில்லை என்றாலும், தொடர்ந்த சேவைக்குப் பாராட்டுகள்.

    By Geetha Sambasivam on Aug 23, 2009

  17. தமிழ்மணம் காசிக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். தமிழ்மணம் பல நூறாண்டுகள் மணம் பரப்பி தமிழ்மக்கள் நலம் ஓங்க உறுதுணையாக கருத்தை தகவல் தொடர்பை இணையம் வழி சேர்த்து பயன் விளைவிக்கட்டும்.
    தமிழ்மணம் பரப்பும் அனைவருக்கும் நலம் பலவும் நிறைக.
    அன்புடன்
    ராதாகிருஷ்ணன்
    ஹூச்டன்
    ஆகச்டு 23, 2009

    By Radhakrishnan on Aug 23, 2009

  18. வாழ்த்துக்கள்

    By சி.கருணாகரசு on Aug 23, 2009

  19. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By முத்துலெட்சுமி on Aug 23, 2009

  20. வாழ்த்துக்கள்

    By விருபா on Aug 23, 2009

  21. வாழ்த்துக்கள்

    By சித்தன் on Aug 23, 2009

  22. தமிழை உலகமெங்கும் மணக்கச்செய்விக்கும் திரு. காசி ஆறுமுகத்திற்கும், தற்போதைய தமிழ்மண நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள்!

    By வருண் on Aug 23, 2009

  23. வாழ்த்துக்கள்

    By jegadeesan on Aug 23, 2009

  24. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள !! தமிழ்மண குழுவினருக்கும், தொடர்ந்து பதியும் பதிவர்களுக்கும், ஊக்குவிக்கும் பின்னூட்ட புரவலர்களுக்கும்.

    By sathanga on Aug 23, 2009

  25. தமிழ்மணம், நிர்வாகிகள், மற்றும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
    வளர்க உங்கள் சேவை!

    By சங்கா on Aug 23, 2009

  26. ஐந்தாண்டு நிறைந்து ஆறாம் ஆண்டு தொடங்கும் தமிழ்மணத்திற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    By இராம.கி. on Aug 23, 2009

  27. எனது இனிய நல்வாழ்த்துக்கள் !

    By எம்.ரிஷான் ஷெரீப் on Aug 24, 2009

  28. ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஏதோ எனக்கே பிறந்தநாள் கொண்டாடறா மாதிரி :-)

    அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    By பைத்தியக்காரன் on Aug 24, 2009

  29. நன்றியும் வாழ்த்துகளும்

    By mathangi on Aug 24, 2009

  30. தமிழ் மணம் தொடர்ந்த் வெற்றி நடைபயில வாழ்த்துகள்!

    By முகவை மைந்தன் on Aug 24, 2009

  31. ஐந்து ஆண்டு நிறைவுக்கும், ஆறாவது பிறந்தநாளுக்கும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள்!

    By யுவகிருஷ்ணா on Aug 24, 2009

  32. வாழ்த்துக்கள்!

    By தமிழ் பிரியன் on Aug 24, 2009

  33. வாழ்த்துக்கள் தமிழ்மணம். காசிக்கும் டி.எம்.ஐ.க்கும் வாழ்த்துக்கள்…

    ஆறு வயசாச்சே ? பள்ளுக்கூடத்துல சேர்த்துடவேண்டியதுதான். இனியாவது சத்துணவில் முட்டை கிடைக்க வாழ்த்துக்கள் :)))

    By செந்தழல் ரவி on Aug 24, 2009

  34. தமிழ்மண நிறுவனர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களுடன் நன்றியும்!

    By ☼ வெயிலான் on Aug 24, 2009

  35. தமிழ் வலைப் பக்கங்களின் இன்றைய வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள் … தொடரட்டும் உங்கள் சேவை…..

    அன்புடன்,
    பதி

    By பதி on Aug 24, 2009

  36. நான் பிறந்த நாளில் தான் தமிழ்மணமும் பிறந்ததா????

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்மணம்…..அதன் சிறப்பாக தமிழ்மணத்தை நிருவியவரே நட்சத்திரமாக்கியது வெகு அழகு….!!!

    By மதிபாலா on Aug 24, 2009

  37. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பதிவுகளைத் திரட்டல் என்பது முன்னோடியான சிந்தனை!
    பதிவுகளை மட்டுமல்லாது, பதிவர்களையும் திரட்டியது தமிழ்மணம்!

    மேலும் தமிழ் மணக்க, இனிய வாழ்த்துக்கள் தமிழ்மணமே! இன்னுமொரு நூற்றாண்டு இரு!

    By Kannabiran Ravi Shankar (KRS) on Aug 24, 2009

  38. உளமார்ந்த வாழ்த்துகள். தமிழ்மணத்தின் பின் நின்று உழைத்த - உழைக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. தமிழ்மணம் பரவட்டும்.

    By சஞ்சீவ்காந்த் on Aug 24, 2009

  39. ஐந்து வெற்றிகரமான ஆண்டை முடித்து சுதந்திரமான சிந்தனைகளை பரவவிடும் ஆறாவது ஆண்டை காணும் தமிழிமணத்திற்கு இதயம் கனிந்த நாள் வாழ்த்துகள் !

    By payapulla on Aug 24, 2009

  40. எங்களைப் போன்ற பதிவர்களுக்கு உறுதுணையாக, இணைப்பு பாலமாக திகழும் தமிழ்மணம் மேன்மேலும் வளரவும், வெற்றிப் பயணம் தொடரவும் வாழ்த்துகள்.

    By anbumani on Aug 24, 2009

  41. பல்வகைத் தரப்பினரையும் இணைத்து தமிழ் பதிவுலகை பல ஆயிரம் பேரிடம் கொண்டு சேர்த்த வகையில் தமிழ்மணத்தின் பங்கு பாராட்டத்தக்கது. இந்த ஒராண்டில் எமது தளம் பிரபலமானதற்கும் பல விவாதங்கள் நடைபெறுவதற்கும் தமிழ் மணம் உதவியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். தமிழ் மணம் குழுவினருக்கு வாழத்துக்கள்.

    நட்புடன்
    வினவு

    By வினவு on Aug 24, 2009

  42. வாழ்த்துக்கள்!! :)

    By Karthik on Aug 24, 2009

  43. எனக்கு முகவரி தந்த “தமிழ் மனமே” வாழ்க நீ பல்லாண்டு.

    By ஜெரி ஈசானந்தா. on Aug 24, 2009

  44. ஐந்தாண்டுகளா.. அதற்குள்ளா.. வாழ்த்துக்கள்!

    By யெஸ்.பாலபாரதி on Aug 24, 2009

  45. தொடக்கத்தில் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த.. தமிழ்மண மாதா,பிதாக்களுக்கும் வாழ்த்துக்கள் பல!

    By யெஸ்.பாலபாரதி on Aug 24, 2009

  46. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    By உடன்பிறப்பு on Aug 24, 2009

  47. யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் இல்லையாம் என உரைத்த பாரதியின் கூற்றுப்படி, ஒப்பில்லாத‌ நம் தாய் மொழியாம் தமிழுக்கு தமிழ்மணம் ஆற்றும் சிறந்த சேவை இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர உளமாற வாழ்த்துகிறேன்.

    By "எதிரொலி" நிஜாம் on Aug 24, 2009

  48. vaazhthukkal

    By balasubramanian on Aug 24, 2009

  49. cxxc

    By ananth on Aug 24, 2009

  50. எண்ணங்களின் வண்ணங்களை வேறுபாடுகளை வெளிப்பாடுகளை வானவில்லின் வர்ணங்களாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தங்களின் பணி வானளவாய் வாழ வாழ்த்துக்கள்.

    By jeevaflora on Aug 24, 2009

  51. பதிவர்களுக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த தமிழ்மணத்திற்கே எல்லாப் புகழும்.

    ஐந்து அகவை முடிந்து ஆறிற்குத் தாவும் தமிழ்மணத்தை வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்..!

    By உண்மைத்தமிழன் on Aug 24, 2009

  52. தமிழ்மணம் ஐந்து ஆண்டுகள் நிறைவிற்கு நிறுவனருக்கும் வழிநடத்துவோருக்கும் வாழ்த்துகள்! இணையப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

    By நாஞ்சில் ரா.சி. on Aug 24, 2009

  53. best wishes, keep rocking

    By ramji_yahoo on Aug 24, 2009

  54. நன்றியும் வாழ்த்துக்களும்.

    வலைப் பதிவுகள், பதிவர்கள், திரட்டிகள் மட்டுமல்ல, தமிழ் இணையப் பத்திரிக்கைகளின் அணுகுமுறைகளையும் பெரிதும் மாற்றிய, வழிகாட்டிய பெருமை தமிழ்மணத்துக்கும், குழுவினருக்கும் சாரும்!
    அன்புடன்,
    நம்பி.பா.

    By நம்பி.பா on Aug 24, 2009

  55. வாழ்த்துக்கள்!

    By சத்யராஜ்குமார் on Aug 24, 2009

  56. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    By gulf-tamilan on Aug 24, 2009

  57. தமிழ் எழுத்துக்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்துப் பதிவர்களுக்குப் புத்துயிர் கொடுத்து
    என்னாளும் சிறப்புடன் ஒளிர்விட தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள்.

    By vallisimhan on Aug 25, 2009

  58. பல படைப்பாளிகளை உருவாக்கி வரும் திரட்டிகளுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக தமிழ்மணத்திற்கு பாராட்டுகள்.

    By மணிவர்மா on Aug 25, 2009

  59. தமிழ்மணத்துக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    தமிழ் வலைப் பக்கங்களின் இன்றைய வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான ‘தமிழ்மணம்’ தமிழ் திரட்டி சேவையை முன்னோடியாக துவங்கி வைத்து,

    தன்னார்வத் தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து தொடர்ந்து சிறப்பாக செயல்படும்,

    தமிழ்மண நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடரட்டும் உங்கள் சேவை…

    வாஞ்சையுடன்
    வாஞ்ஜூர்.

    By VANJOOR on Aug 25, 2009

  60. வாழ்த்துகள்!!

    By வெங்கடேஷ் on Aug 25, 2009

  61. என் வாழ்வோடு பிணைந்துவிட்ட தமிழ்மணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    By எம்.எம்.அப்துல்லா on Aug 25, 2009

  62. வாழ்த்துக்கள்

    By Parthy on Aug 25, 2009

  63. தமிழ்மணத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

    By குழலி on Aug 25, 2009

  64. தமிழ் மணம் மேலும் பல ஆண்டுகள் மணம் வீச வாழ்த்துக்கள்

    By T.V.Radhakrishnan on Aug 25, 2009

  65. தமிழ்மணம் ஐந்தாண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துகள்

    தமிழ்மணம் இன்று இருக்கும் நிலையை எட்டுவதற்காக அயராது உழைத்த நுட்பக்குழு, நிர்வாகக் குழு, பதிவர்கள் மற்றும் வருகையாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    By தகடூர் கோபி on Aug 26, 2009

  66. தமிழ்மணம் உலகெங்கிலும் பரப்பி, இணைய தமிழ்ச் சேவையில் முக்கிய பங்காற்றும் தமிழ்மணத்திற்க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்க்ள்.

    By அருள் on Aug 26, 2009

  67. மிகவும் சந்தோசமா இருக்கு…

    என்றென்றும் எங்களுக்கு ஒரு பாலமா இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள். :)

    By Mãstän on Aug 26, 2009

  68. Congrats to your great job

    By Sarvadesa Vaanoli on Aug 26, 2009

  69. தமிழ்மணம் தமிழ் வலையுலகிற்கு செய்யும் தொண்டு மிகப்பெரியது!

    தமிழ்மண நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அபு ஜுலைஹா. அதிரை போஸ்ட்

    By அபு ஜுலைஹா. அதிரை post on Aug 27, 2009

  70. நீங்கள் குறிப்பிட்ட முதல் வருடத்தில் தான் பணிகளுக்கு இடையே இந்த தமிழ் மணம் எனக்கு அறிமுகமானது. ஆனால் ஐந்தாவது வருடத்தில் தான் எழுதும் தகுதியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். கடந்த மூன்று மாதத்தில் (தொழில்) நுட்ப அறிவு எதுவும் இல்லாத போதும் இன்று வரையிலும் எந்த தொந்தரவும் இல்லாமல் என்னை வாரி அணைத்த தமிழ் மணத்திற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள். உண்மை தமிழன் சொன்னது போல் முகவரி தந்ததோடு உலகத்திற்கு உள் முகத்தையும் உறங்கிக் கொண்டுருந்த எண்ணங்களையும் அறிமுகபடுத்திய தமிழ் என்றும் மனம் வீச வாழ்த்துகள். உருவாக்கியவர் காசி ராமேஸ்வரம் போகத் தேவையில்லை. அணைத்து பதிவர்களின் நெஞ்சார்த்த வாழ்த்துக்கள் போதுமானது.

    நாளை பதியப்போகும் என்னுடைய புதிய தேவியர் இல்லத்தின் சார்பாகவும்,

    நட்புடன்
    ஜோதிகணேசன் (ஜோதிஜி)
    தேவியர் இல்லம். திருப்பூர்

    http://deviyar-illam.blogspot.com/

    By தேவியர் இல்லம். திருப்பூர். on Sep 20, 2009

  71. தங்களின் இந்த தமிழ் பணி தொடர என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    By அபுல் பசர் on Sep 30, 2009

  1. 1 Trackback(s)

  2. Aug 25, 2009: இரா. செல்வராஜ் » Blog Archive » தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்

Post a Comment