பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி
பதிவர் சிந்தாநதி சூலை திங்கள் 2 ஆம் நாள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சிந்தாநிதி வலைப்பதிவராக மட்டுமில்லாமல் தமிழ் வலைப்பதி்வுலகைச் சார்ந்த பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடு்த்திக் கொண்டார். வலைச்சரம், தமிழ்க் கணிமை, தமிழ்ப் புத்தக்ச் சந்தை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு தமிழ் வலைப்பதிவு உலகிற்குப் பேரிழப்பு ஆகும். அவரின் நினைவுகளுக்குத் தமிழ்மணம் தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது. அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிந்தாநதிக்கு அஞ்சலிப் பதிவுகள்
http://msathia.blogspot.com/2009/07/blog-post.html
http://blog.ravidreams.net/சிந்தாநதி/
நிர்வாகம்
தமிழ்மணம்
Comments
7 Responses to “பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி”
Leave a Reply

அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
*****
பதிவர்கள் குறித்த இது போன்ற அறிவுப்புக்கும், பதிவர் சந்திப்புகள், கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளி இடும் பதிவர் தொடர்பான விவரங்களை தமிழ்மணத்தில் தனித்தலைப்பில் தொகுத்து தந்தால், அனைத்தையும் ஒரே இடத்தில் சென்று அறிந்து கொள்ளும் பயனாக இருக்கும். அப்படி தனிப்பக்கம் அமைத்துவிட்டு, எந்த குறிசொல் போடவேண்டும் என்ற பரிந்துரையும் செய்துவிட்டால், அந்தப்பக்கம் தானாகவே அத்தகைய தகவல்களைத் திரட்டும்.
என் ஆழ்ந்த அணுதாபங்கள்..!
மனம் வருந்துகின்றோம்.
அஞ்சலிகள்.
சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 க்கான சின்னம் மற்றும் கையேடுகளை வடிவமைத்தவர் சிந்தாநதி என்று நினைவு.
சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னார் அவர்களின் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்
அழ்ந்த இரங்கல்
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்