தமிழ்மணம் மகுடம், வாசகர் பரிந்துரை மாற்றங்கள்

தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர முகப்பில் இடம் பெறும் இடுகைகளும் அவை பெறும் வாக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவை பெறும் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டே இயங்கும். இந்தப் புதிய நிரலி(Program) தற்பொழுது சோதனையில் உள்ளது.

இந்த Algorithm தமிழ்மணத்தில் வாசகர்கள் வழங்கும் வாக்குகளை அலசி தேவைக்கேற்ப மாற்றப்படும்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுகிறது.
http://tamilmanam.net/readers/choice

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

7 Responses to “தமிழ்மணம் மகுடம், வாசகர் பரிந்துரை மாற்றங்கள்”

 1. சென்ஷி on June 5th, 2009 11:16 pm

  வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் 🙂

 2. கபிலன் on June 6th, 2009 2:43 am

  மிக முக்கியமான அவசியமான மாற்றம்.
  மாற்றங்கள் சுமூகமாக செயல்பட வாழ்த்துக்கள்!

 3. நொந்தகுமார் on June 6th, 2009 2:49 am

  ரூம் போட்டு சிந்திக்கிறீங்களோ!

 4. புருனோ on June 7th, 2009 11:02 pm

  வாழ்த்துக்கள்

  அதாவது

  ஒரு பதிவின் அனைத்து இடுகைக்கும் அதே 8 முதல் 10 ஓப்பன் ஐடி வாக்குகள் வருவதை விட

  ஒரு இடுகைக்கும் புதிதாக வாக்குகள் வந்தால்

  கூடுதல் மதிப்பெண்

  அப்படித்தானே

  அப்படியென்றால் இது மிகச்சிறந்த முறை என்பதில் சந்தேகமில்லை

 5. புருனோ on June 7th, 2009 11:03 pm

  மேலும் ஒரு வேண்டுகோள்

  negative vote என்பது அந்த இடுக்கைக்காக அளிக்கப்படுவதை விட அந்த பதிவருக்காகவே பெரும்பாலும் அளிக்கப்படுவதான் நினைக்கிறேன்

  மகுடத்தில் அதையும் கணக்கில் கொள்ளலாம்

 6. புருனோ on June 7th, 2009 11:07 pm

  ஆக மகுடத்தை பார்ப்பது மூலம் வாசகர் பரிந்துரையில் பெறப்படும் வாக்குகள் உள்குத்தா அல்லது வெளிகுத்தா என்று எளிதாக தெரிந்து விடும் 🙂 🙂 🙂

 7. மாற்றம் ஒன்றே மாறாதது

Leave a Reply