தமிழ்மணம் பரிந்துரை : வாக்களிப்பு முறையில் மாற்றம்

தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் – username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்கிறோம். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்

Vote

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

Comments

31 Responses to “தமிழ்மணம் பரிந்துரை : வாக்களிப்பு முறையில் மாற்றம்”

 1. Dr. N. Ganesan on May 31st, 2009 6:54 pm

  தமிழிலும், திரட்டி உலகிலும் புதிய தொழில்நுட்பைக் கொணர்ந்தமைக்குப் பாராட்டுதல்கள்!

  இந்த அமிசத்தைப் பலவகைகளில் தமிழ்மணம் பயன்படுத்தி வாசகர்களுக்கு நல்ல துய்ப்பனுபவத்தை நல்கட்டும்.

 2. பழமைபேசி on May 31st, 2009 8:11 pm

  நிச்சயமா கடுமையா உழைச்சிருப்பீங்க! ஆனா, கிடைச்ச பலன் அட்டகாசமா இருக்கு. வாழ்த்துகள்!

 3. aruna on May 31st, 2009 9:58 pm

  Well Done!

 4. புருனோ on May 31st, 2009 10:59 pm

  username@yahoo.com மூலம் எளிதாக வாக்களிக்க முடிகிறது

  பிற முறைகள் மூக்கை சுற்றி நாக்கை தொடுவது போலுள்ளது

 5. ஜெகதீசன் on May 31st, 2009 11:28 pm

  இனி -ve வாக்கு கிடையாதா? -ve அழுத்தினாலும் +ve வாக்கு விழுகிறது.

 6. தமிழ்மணம் on June 1st, 2009 12:00 am

  இனி -ve வாக்கு கிடையாதா? -ve அழுத்தினாலும் +ve வாக்கு விழுகிறது.

  ****

  சுட்டிகாட்டிமைக்கு நன்றி. சரி செய்யப்பட்டுள்ளது.

 7. good

 8. உண்மைத்தமிழன் on June 1st, 2009 12:45 am

  இனி பலருக்கும் ஓட்டுக்கள் குறையும் என்பதில் எனக்கு ஐயமில்லை..

 9. suresh on June 1st, 2009 1:42 am

  நல்ல தோரு மாற்றம் 😉 இது வரை நூறுக்கு மேல் வாங்கிய வோட்டுகள் என் பதிவும் சேர்த்து தான் ஒரு புத்துணர்ச்சி பெறும் தோழர்களே

  புதுமை எப்போதும் வரவேற்க்கப்படும், வெரி குட்

 10. நொந்தகுமார் on June 1st, 2009 2:10 am

  //இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது//

  தமிழ்மணம் புதிதாக வாக்களிக்கும் முறை கொண்டுவந்துள்ளதே என வாக்களிக்க போனால், பேட் சிக்னச்சர் என்கிறது. என் கையெழுத்து மோசம் தான். அதுக்காக இப்படியா என்னை இம்சைப்படுத்துவது!

  நமக்கெல்லாம் தொழில்நுட்ப அறிவு குறைவு. இதோடு எல்லாம் மல்லுக்கட்ட முடியாது என விட்டுவிட்டேன்.

  இப்படி தொழில்நுட்பத்தில் உள்ளிழுத்து விட்டால், நேர்மையாக வாக்களிப்பதற்கு நேரமெல்லாம் செலவழிக்க பலருக்கு நேரம் இருக்காது. மீண்டும், இதில் கள்ள ஓட்டு போடுவர்களூக்கு தான் வாய்ப்பை ஏற்படுத்தும்.

  இருப்பினும் கள்ள ஓட்டை தடுப்பதற்காக தான் இந்த புதிய மாற்றம் என்ற அளவில் இதை ஏற்கிறேன்.

 11. லக்கிலுக் on June 1st, 2009 3:12 am

  ஜிமெயில் ஐடி மூலம் வாக்களிக்க முடியவில்லை 🙁

 12. மதிபாலா on June 1st, 2009 4:49 am

  நல்ல மாற்றம் தான். தேவையானதும் கூட.

  இனி நியாயமான பதிவுகள் வாசகர் பரிந்துரையில் முதலிடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

  காலத்திற்கேற்ப புதுமைகளைப் புகுத்தி வெற்றிநடைபோடும் தமிழ்மணமே வளர்க மென்மேலும்…!

 13. தமிழ்த்தேனீ on June 1st, 2009 5:54 am

  உங்கள் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 14. பதி on June 1st, 2009 8:18 am

  வரவேற்கத் தகுந்த மாற்றம்….

 15. Bala on June 1st, 2009 9:11 am

  firefox ப்ரௌசரில் அடையாளம் கொடுத்தாலும் தவறு என்றே வருவதால் வாக்களிக்க இயலவில்லை.

 16. தகடூர் கோபி on June 1st, 2009 9:27 am

  இந்த மாற்றத்துக்கு உழைத்த நிரல் குழுவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

  புதிய பரிந்துரை வாக்களிப்பு முறையில் கள்ள ஓட்டுக்களின் எண்ணிக்கை குறையும் என்றாலும் முற்றிலும் ஒழிப்பது கடினமே… 🙂

  திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

 17. தமிழ்மணம் on June 1st, 2009 10:34 am

  GMail பயனர்களுக்கான OpenID

  http://valaipadhivan.blogspot.com/2009/06/gmail-openid.html

  நன்றி : Voice on Wings

 18. இளா on June 1st, 2009 11:44 am

  எதுக்குங்க தலைய சுத்தி மூக்கத் தொடுவானே? நீங்களே ஒரு authentication type செஞ்சிருக்கலாமே?

 19. தமிழ்மணம் on June 1st, 2009 11:55 am

  எதுக்குங்க தலைய சுத்தி மூக்கத் தொடுவானே? நீங்களே ஒரு authentication type செஞ்சிருக்கலாமே?

  ******

  ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு கடவுச்சொல், பயனர் பெயர் போன்ற சிக்கல்களை குறைக்க வந்தது தான் OpenId. தற்போதைய அளவில் இது சில குழப்பங்களை கொடுத்தாலும் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பமே அதிகம் பயன்படுத்தப்படும் என நம்புகிறோம். அதனால் அந்த திசையில் செல்வதே சிறந்தது

 20. சஞ்சய் on June 1st, 2009 1:46 pm

  //OpenID authentication failed: Bad signature//

  ஜிமெயில் மூலம் வாக்களித்தான் இந்த எர்ரர் ரிப்போர்ட் வருகிறது.

 21. மதிபாலா on June 1st, 2009 11:00 pm

  நேத்திக்கு பாராட்டுனோம். ஆனா வாக்களிப்பதற்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.

  யாஹூ கொடுத்தாலும் வேலை ஆகலை. நம்ம டொமைன் கொடுத்தாலும் வேலை ஆகலை.

  ரெண்டு மூணு தரம் முயற்சி பண்ணினேன். முடியலை.

  அதுனால இதுல வாக்களிக்கிற ஆர்வம் வாசகர்களுக்கும் , பதிவர்களுக்கும் குறைந்து போகப் போகுது பாத்துக்குங்க பாஸு.

  ஏதோ ப்ரச்சினை இருக்கு….

  எப்ப பாத்தாலும் bad authentication ne varuthu.

 22. மதிபாலா on June 1st, 2009 11:03 pm

  ஜிமெயில் மூலம் வாக்களித்தான் இந்த எர்ரர் ரிப்போர்ட் வருகிறது.//

  எனக்கு யாஹுவிலே கூட இந்தப் பிரச்சினை வருது.

  இதுவரை மூணு ப்ரவுசர் டிரை பண்ணிட்டேன். ( ஐ.ஈ , நெருப்பு நரி மற்றும் க்ரோம்…)

  இதுக்கு பேசாம தமிழ்மணத்துலயே எல்லோருக்கும் ஒரு புக் மார்க்கிங் ஐடி கொடுத்துடலாம். தமிழிஷ்ல வர்ற மாதிரி. login பண்ணாம யாரும் ஓட்டு போட முடியாது. அதனால கள்ளவோட்டுக்களை ஓரளவு தடுக்கலாம்.

  தேர்தல் , ஈழம் மாதிரி தனித்தனி பக்கங்கள் வாசகர் பரிந்துரைக்கும் கொடுத்துடலாம்.

  ஒரே கல்லில பல மாங்காய்….இல்லியா??

 23. தமிழ்மணம் on June 1st, 2009 11:56 pm

  மதிபாலா,

  ஓப்பன் ஐடியில் உள்ள சிரமங்களை பலர் தெரிவித்துள்ளார்கள். இது தற்பொழுது சோதனையில் தான் உள்ளது. இதனை நிச்சயம் கவனிக்கிறோம்.

  தமிழ்மணம் தளத்திற்கென தனியான பயனர் பெயர் கொடுப்பது குறித்தும் யோசித்து வருகிறோம்.

  நன்றி…

 24. மதிபாலா on June 2nd, 2009 1:03 am

  ஓப்பன் ஐடியில் உள்ள சிரமங்களை பலர் தெரிவித்துள்ளார்கள். இது தற்பொழுது சோதனையில் தான் உள்ளது. இதனை நிச்சயம் கவனிக்கிறோம்.

  தமிழ்மணம் தளத்திற்கென தனியான பயனர் பெயர் கொடுப்பது குறித்தும் யோசித்து வருகிறோம்.//

  எங்களது சிரமங்களைக் கணக்கில் வைத்து பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி.

  உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

 25. லக்கிலுக் on June 2nd, 2009 1:23 am

  என்னுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி!

  அதுதான் சூடான இடுகைகளை தூக்கிட்டீங்களே? வாழ்க.. வாழ்க!!

 26. வாசல் on June 2nd, 2009 4:57 am

  நல்ல தோரு மாற்றம் 😉 இது வரை நூறுக்கு மேல் வாங்கிய வோட்டுகள் என் பதிவும் சேர்த்து தான் ஒரு புத்துணர்ச்சி பெறும் தோழர்களே

  புதுமை எப்போதும் வரவேற்க்கப்படும், வெரி குட்//

  இங்கியுமா வெளம்பரம்? இதக் கேக்கவெல்லாம் நாதியே கெடையாதா?

  என்ன கொடும சார் இது?

 27. தமிழ்மணம் on June 2nd, 2009 12:44 pm

  தமிழ்மணம் தேவைக்கேற்ற தொழில்நுட்பத்துடன் தன்னை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருகிறது. முகப்பு பக்கத்தின் வடிவமைப்பு, பொருளடக்கம் போன்றவையும் அவ்வப்பொழுது மாற்றி வருகிறோம். இது எந்தப் பதிவரின் தனிப்பட்ட வேண்டுகோள்களையும் சார்ந்தது அல்ல.

  வலைப்பதிவின் போக்கினை அவதானித்து, பதிவர்களின் இனிமையான வலைப்பதிவு அனுபவத்திற்கு ஏற்ற மாற்றித்தினை தமிழ்மணம் தொடர்ந்து கொண்டு வரும்.

  நன்றி…

 28. ooviya on June 3rd, 2009 10:37 am

  good. thank you

 29. இளா on June 3rd, 2009 1:17 pm

  OpenID authentication failed: Bad signature

 30. புருனோ on June 7th, 2009 11:05 pm

  //ஜிமெயில் ஐடி மூலம் வாக்களிக்க முடியவில்லை //

  ஜிமெயில், ப்ளாக்கர் ஆகியவை மூலம் ஒப்பன் ஐடியின் பிற தளங்களில் கூட வாக்களிப்பது சிரமமாக உள்ளதாக அறிகிறேன்

  சிக்கல் குறைவாக இருப்பது யாகூ தான்

  எனவே அதை மட்டும் பரிந்துரைத்தால் போதுமே

  முதலில் .blogspot.comஐ அளித்து அது தோல்வியில் முடிய, அடுத்து .wordpress.comஐ அளித்து அதிலும் சிக்கல் என்றால் மூன்றாவதாக yahoo ஐடியை அளித்து வாக்களிக்க பலருக்கும் பொறுமை இருக்காதல்லவா

 31. kalyankumar on December 9th, 2009 9:42 am

  தமிழ்மணம் போட்டியில் எனது இடுகைகள் இணைக்கப்பட்டதா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது? போட்டியில் பங்குபெறும் இடுகைகளின் பட்டியல் எங்கே உள்ளது? இனிமேல்தான் வெளியிடப்படுமா?
  கல்யாண்குமார்

Leave a Reply