தமிழ்மணம் ஈழம்

இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
eelam

தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவும் செய்யும்
eelam

Comments

48 Responses to “தமிழ்மணம் ஈழம்”

 1. கோவி.கண்ணன் on May 18th, 2009 5:54 am

  அஞ்சலி செலுத்தத்தான் நம்மால் முடியும், அதை வைத்து பேறு பெரும் ‘இரங்கல்’ கவிதை பாட நாம அரசியல் தலைவர் இல்லையே.
  🙁

  வெட்கமும், வேதனையுடன் மற்றும் துக்கத்துடன்
  கோவி.கண்ணன்

 2. லக்கிலுக் on May 18th, 2009 5:55 am

  🙁

 3. Radhakrishnan on May 18th, 2009 5:59 am

  Thanks For initiative

  I will also join with you

 4. தொல்காப்பியன் on May 18th, 2009 6:04 am

  :-((

 5. Prakash Santhanam on May 18th, 2009 6:07 am

  8 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தமிழினத்தை இப்படி கை விட்டுவிட்டோமே!
  வரலாறு நம்மை காறி உமிழும், சரித்திரம் நம்மை மன்னிக்காது.

  – கையாலாகாதவர்களில் ஒருவன்

 6. Venkatesh on May 18th, 2009 6:13 am

  I cant take this..news being a tamilian. I am very depressed on behalf of fellow brothers who suffer..

  While our politicians are busy discussing portfolio in Delhi.
  MK & Others !! Please see what you have done to our blood brothers !!!

 7. சந்தனமுல்லை on May 18th, 2009 6:16 am

  அஞ்சலி!

 8. உண்மைத்தமிழன் on May 18th, 2009 6:19 am

  பெரிதும் வருந்துகிறேன்..

  எதுவும் சொல்ல முடியவில்லை..

  தமிழீழ எண்ணத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்..!

 9. Yazh on May 18th, 2009 6:25 am

  ……….

 10. Senthil Kumar on May 18th, 2009 6:29 am

  This is a black day for not only tamils,
  but for the human kind and so called international community who just stood and
  watched the genocide carried out by Srilanka.

 11. தமிழ் பிரியன் on May 18th, 2009 6:33 am

  🙁

 12. மதிபாலா on May 18th, 2009 6:34 am

  🙁

  இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.

 13. தீப்பெட்டி on May 18th, 2009 6:34 am

  அஞ்சலி செலுத்துகிறோம்….

  🙁

 14. kudanthai anbumani on May 18th, 2009 6:49 am

  நம்ப முடியவில்லை… நம்பாமலும் இருக்க முடியவில்லை… இனப்போராளிகளின் போராட்டங்கள் முடிந்துவி்ட்டதா…

 15. payapulla on May 18th, 2009 7:06 am

  இதுவரை எந்த ஒரு விடுதலை போரும் தோல்வியில் முடிந்ததாக சரித்திரம் இல்லை. இந்த முடிவு எதனின் தொடக்கம் என் பொறுத்திருந்து பார்ப்போம் . அதுவரை உயிர் நீத்த அப்பாவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி .

 16. புதுகை.அப்துல்லா on May 18th, 2009 7:20 am

  ஒருவரைக் கொன்றதாய் நினைத்து இலட்சம் பேரை விதைத்து விட்டது சிங்கள அரசு.

  :((

 17. ***வாஞ்ஜுர்*** on May 18th, 2009 7:27 am

  விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான பல்லாயிரக்ககண‌க்கான் தமிழர்களுக்கு எனது அஞ்சலி.

  உயிர் பிழைத்தும் சகலத்தையும் இழந்து ஆதரவின்றி தவிப்பவர்களை மறந்து விடாமல் அவர்கள் வாழ‌ வழிகாண அனைத்துலக சமூகம் தன் கடமையை செய்யுமா?

  ஆழ்ந்த மனபாரத்துடன் வாஞ்ஜூர்.

 18. கண்ணீர் அஞ்சலி் (கையாலாகத்தனத்தின் கடைசி வார்த்தை, நா கூசுகிறதென்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை)

 19. KVR on May 18th, 2009 7:47 am

  வெளிவரும் செய்திகளை நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இதுவும் வதந்தியாக இருந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன், கண்ணீருடன்.

 20. jegadeesan on May 18th, 2009 8:02 am

  🙁

 21. rov on May 18th, 2009 8:36 am

  ஈழப்பக்கம் என்று ஈழப்பதிவர்களையும் பதிவுகளையும் ஓரங்கட்டும் இம்முயற்சியைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.

 22. பதி on May 18th, 2009 8:44 am

  வரும் செய்திகள் வதந்தியாக இருக்க வேண்டும் என மனம் விரும்ம்பினாலும், எந்த ஒரு நெருங்கிய சொந்தங்களின் இழப்பிலோ உற்ற நட்புக்களின் துயர மறைவிலோ பொங்காத கண்ணீரும் தோன்றாத வெறுமையும் மனதை நிறைக்கின்றது…

  விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு அஞ்சலி. தமிழ்மக்களின் நலனுக்காகவும் அவர்தம் விடுதலைக்காகவும் கொண்ட கொள்கையில் இருந்து கடைசிவரை மாறது போரிட்டு மடிந்த அனைவருக்கும் வீரவணக்கங்கள்….

 23. பாரதி.சு on May 18th, 2009 8:46 am

  ”Whenever death may surprise us, let it be welcome if our battle cry has reached even one receptive ear and another hand reaches out to take up our arms.”
  –CHE

  உயிர் நீத்த அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

 24. Kanna on May 18th, 2009 8:48 am

  கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் வாழும் தலைவர் பிராபாகரன் அவர்களை பற்றிய உறுதிபடுத்த படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்…

  ஈழதமிழனை..ஈன்மாக நினைத்து கொன்று குவித்து வரும் ராஜபக்ஷே உலக அரங்கால் கண்டிக்க/தண்டிக்க பட வேண்டிய நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என கேட்டு கொள்கிறேன்…

 25. bhaghyalakshmi on May 18th, 2009 8:57 am

  prabakaran is alive.in case if he is dead where is his dead body?

 26. anil on May 18th, 2009 9:26 am

  ஒருவரைக் கொன்றதாய் நினைத்து kodikanackana பேரை விதைத்து விட்டது சிங்கள அரசு.

 27. இரா.சுகுமாரன் on May 18th, 2009 10:03 am

  செய்திகள் கலங்க வைத்துள்ளன.

  கண்ணீர் கவிதை எழுதி ஏமாற்றி வாழ்பவர்களுக்குத் தான் காலமாகிப் போனது.

  கலங்கவைத்த கவலைகளுடன், கண்ணீருடனும்………………….

  இரா.சுகுமாரன்

 28. தமிழ்மணம் on May 18th, 2009 10:15 am

  ஈழப்பக்கம் என்று ஈழப்பதிவர்களையும் பதிவுகளையும் ஓரங்கட்டும் இம்முயற்சியைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.

  *********

  இது ஒரு கூடுதல் வசதி, மற்றும் மறைந்த மக்களுக்கும், போராளிகளுக்குமான சமர்ப்பணம்
  நன்றி…

 29. தமிழன்-கறுப்பி... on May 18th, 2009 11:47 am

  🙁

 30. அபு ஜுலைஹா-அதிரை Post on May 18th, 2009 11:51 am

  இறைவா!

  எம் தமிழ் இன மக்களைக்காப்பாற்று!!

  உனது புறத்திலிருந்து உதவியாளனை தருவாயாக!!!

  ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரைத்தவிர எல்லா வற்றையும் இழந்துவிட்டார்கள்!

  உலக வரலாறே நீ மீண்டும் தவறான பக்கங்களை எழுதிவிட்டாய்!

  துயரத்துடன்….அபு ஜுலைஹா-

 31. ராம கிருஷ்ணன் on May 18th, 2009 12:33 pm

  எத்தனை எத்தனை மனித உயிர்கள்?
  இந்த நூற்றாண்டிலும் எத்தனை ஹிட்லர்கள்?
  எத்தனை இடியமீன்கள்? பத்ர காளிகள்?

  பிரபாகரன்.
  மாவீரன் பிரபாகரன்.
  இந்த பிரபஞ்சத்தின் மாவீரன் பிரபாகரன்.
  யாருக்கும் நிகரில்லாத மாவீரன் பிரபாகரன்.

  நீ இல்லாத உலகம்.
  நினைக்கவே இயலவில்லை.

  எத்தனை எத்தனை எட்டப்பன்கள். சந்தர்ப்பவாதிகள். சமரசவாதிகள். கோழைகள். கவிதை வீரர்கள்…

  இத்தனை கொலைகளுக்கு நடுவே நாங்கள் வாழவேண்டுமாம்…சகோதரர்களாக…பிரதேச வல்லரசு சொல்கிறது….
  எப்படி வாழ்வோம்…..?
  யார் எம்மை காப்பார்கள்?
  இனி தமிழனுக்கு யார் காவலன்?

  அழுகிறோம்.வெட்கி தலை குனிகிறோம்.
  எங்கள் கையாலாகா நிலை நினைத்து வருந்துகிறோம்..

  இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை…
  ஆகவே…
  மறுபடியும்
  நீ பிறப்பாய்…
  எமை காக்க….
  ஈழம் வெல்லும்…

 32. இளா on May 18th, 2009 1:37 pm

  வெற்றி!
  எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள்,
  கொண்டாடுகிறார்கள்,
  இனி என்ன செய்யும் தமிழனம்?

  உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள்,
  நாடு விட்டு நாடு சென்றும்,
  அனாதைகளாக்கப்பட்டும்,
  உணர்விழந்தவர்களாகவும், ஏன்
  மொழியையும் இழந்தவர்களாகவும்.

  இனி உயிர் இழப்பு இல்லை,
  கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை,
  சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை..
  ஆனாலும் நம்பிக்கை உண்டு..
  வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.

  உனக்காக போராட தலைவன் இல்லை,
  அப்படியே இருந்தாலும் – இனி
  இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,
  நயவஞ்சக கூட்டம் அப்படி.
  போராட்டத்தை மனதில் வை..

  இது உழைப்பதற்கான நேரம்..
  அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது,
  உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற..
  புது வேகம் கொள், நீயே இனி தலைவன்..
  மற்றவர்களை உன் சொல் கேட்க வை..
  உன்னை வெல்ல யாருமில்லை..
  ஒற்றுமை பழகு. இல்லாவிடின் –
  துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.

  அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு
  அடிமையாய் மட்டும் இராதே..

 33. Aneez Jawahar on May 18th, 2009 3:06 pm

  Singala chauvinists may be winning temporarily.
  Their vicotry will not last long.
  Almighty is so powerful.

 34. ராஜ நடராஜன் on May 18th, 2009 3:09 pm

  பதிவர்கள் சரியான பாதையில்தான் செல்கிறார்கள் நேர்,எதிர் விவாதங்களுடன்.ஆனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பதிவுகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளதென்பது கடந்த தேர்தல்,ஈழ உணர்வுகளின் பிரதிபலிப்புகளில் தெரிகிறது.

  ஒட்டுமொத்த இனத்தின் மனித அவலங்களுக்கு எந்த நாடும் மனப்பூர்வமான ஆதரவை தரவில்லை.இதுவரை நாடுகளின் எல்லைகளைக் கடந்தே மனம் மனித அவலங்களுக்கு குரல் கொடுத்தது.இப்பொழுது மனம் மரத்துப் போன நிலை.காலம் ரண காயங்களை ஆற்றுமா?

  போரில் அவதியுற்ற குழந்தைகள்,பெண்கள்,உடல் ஊனமிழந்தோர்,அப்பாவி மக்கள்,இறுதி மூச்சு வரை கொள்கைக்காக உயிர் தந்த போராளிகள்,மரணத்தை தூசி என நினைத்துப் போரிட்ட எம் குலப் பெண்கள் அனைவருக்கும் எனது கண்ணீரை இங்கே மனித நேயத்துடன் காணிக்கையாக்குகிறேன்.

 35. T.V.Radhakrishnan on May 18th, 2009 3:40 pm

  :-((((

 36. suvanappiriyan on May 18th, 2009 6:35 pm

  உயிர் நீத்த அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

 37. வருண் on May 18th, 2009 7:22 pm

  ***இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்***

  வருந்துகிறேன், கண்ணீர்விடுகிறேன் என்று சொல்லக் கஷ்டமா இருக்கு. என் கண்ணீரும், வருத்தமும் எப்படி உதவும்? எப்படி ஆறுதல் அளிக்க முடியும்? 🙁

  It is not over yet. இவர்கள் சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்களும் நிச்சய்ம் வீணாகாது! தமிழ் ஈழம் நிச்சயம் ஒரு நாள் மலரத்தான் போகிறது.

 38. முகு on May 19th, 2009 12:32 am

  போராளிகளுக்கு மறைவில்லை.சுதந்தர விதையாகி
  உள்ளனர்.இனி அந்த விதை வளரும்….விடியலை நோக்கி.

  மக்கள் எழுச்சி தான் மாற்றத்தை அளிக்க முடியும்.
  இப்பொது ஏற்பட்டது ஒரு மனித பேரவலம்…அதை அனைத்து
  நாடுகளும் வேடிக்கை பார்ர்தது கேவலம்…..?

  தமிழனுக்கு அழிவில்லை…..அழிவில்லை…

  முகு

 39. முகவை மைந்தன் on May 19th, 2009 1:04 am

  உரிமைகள் பெறப்படும் வரை உணர்வுகள் மங்குவதில்லை. ஒரு பொறுக்கி நாட்டால் கலைக்கப்பட்ட கனவுகள் மீண்டும் கருக்கொள்ளும். இது அவர்கள் ஊட்டிய உணர்வல்ல, ஆதரவின்றி வற்றி விட. இழப்புகளைத் தானே உரமாகக் கொண்டு உரிமைகள் பெறப்பட்டு வந்திருக்கின்றன. ஊனப்பட்டும் குன்றாத நம்பிக்கையுடன் உங்களுக்கு ஒளிமயமான வருங்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

 40. ragunathan on May 19th, 2009 1:41 am

  nenju porukuthillaiye….. -:(

 41. மணியன் on May 19th, 2009 2:01 am

  இலங்கை நாசிச அரசின் இறுதிப்போரில் பலவகைகளில் கனரக ஆயுதங்களுக்குப் பலியான போராளிகளுக்கும் அப்பாவி குடிமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதில் நானும் கண்ணீர் மல்க கலந்து கொள்கிறேன்.

  போர் முடியலாம்,போராட்டம் முடியாது. ஆயிரமானவர் சிந்திய இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் உரமேறிய வித்துக்களாய் தழைத்து உரிமைக்குரல் எழுப்பும் போது பலியானவர் கனவு மெய்ப்படும்.

 42. king... on May 19th, 2009 2:14 am

  🙁

 43. king... on May 19th, 2009 2:15 am

  புதிய தலை முறை மாற்றங்கள்,பதியப்படவும் முன்னெடுக்கவும் வேண்டியவை!

 44. அ. நம்பி on May 19th, 2009 5:12 am

  அது தமிழினம்.

  அவர்கள் தமிழர்கள்.

 45. ஜெ.பி.இரவிச்சந்திரன் on May 20th, 2009 1:45 am

  விடுதலைக்காக உயிர் துறந்த ஈழமக்களுக்கு என் வீர வணக்கம்.

  ரஷ்யர், பாகிஸ்தானியர், வியட்நாமியர்,சீனர், நம் இந்திய அரசு, தமிழ் பேசும் பெரும்பாலான பார்ப்பனர், பெரும்பாலான மலையாளிகள்… இவர்களுக்கெல்லாம் தமிழர்களாகிய நாம் என்ன தீங்கு செய்தோம்? ஏன் நமக்கு (ஈழ விடுதலைக்கு) எதிராக இவர்கள் குரல் கொடுத்தார்கள் / வேலை செய்தார்கள்? அடுத்த கட்ட விடுதலை போராட்டத்திற்கு இந்த சிந்தனை பெரிதும் உதவும் என் எண்ணுகிறேன்.

 46. தமிழநம்பி on May 20th, 2009 7:10 am

  இனவெறிக் கொடுமையால் உயிர்நீத்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

  இனியேனும் உண்மையாக ஈழத்தமிழர்க்கு உதவ முயற்சி செய்வோம்.

  உங்கள் முயற்சியை வரவேற்கிறேன்.

  தன்றி.

 47. vidyabhankar on May 21st, 2009 1:13 am

  இறந்தாலும், இருந்தாலும்
  இறுதி தமிழன்
  இருக்கும் வரைக்கும்
  இருக்கும் உம் பெயரும்
  ஆயுத எழுத்தாய்
  – வித்யாஷங்கர்

 48. வருணன் on June 12th, 2009 5:26 am

  வணக்கம் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு,

  ஈழம் திரட்டிக்கும் அல்லது ஈழத்தின் அரசியல் போராட்டத்துக்கும் “லோசன், மயுரேசன்” போன்றவர்களின் பதிவுகளுக்கும் என்ன சம்மந்தம்? பொருத்தமில்லாத அவர்களின் பொழுதுபோக்குப் பதிவுகள் ஈழம் திரட்டிக்குள் திரட்டப்படுவதை தவிர்க்கமுடியாதா? ஈழத்தின் அரசியல் போராட்டம், மக்கள் அவலம் தொடர்பான பதிவுகளுக்கு ஈழம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே திரட்டுமாறு செய்யலாமே. இப்பொழுது இலங்கை என்கிற குறிச்சொல்லும் சேர்த்தே திரட்டப்படுகிறது என்று நினைக்கிறேன். எனவே இது தொடர்பாக கவனமெடுத்து ஈழம் திரட்டியை மெருகூட்டுவீர்கள் என நம்புகிறேன். “லோசன், மயூரேசன்” ஆகியோரை இங்கு ஒரு எடுத்துக்காட்டாகவே மட்டுமே குறிப்பிட்டேன்.

  நன்றி

Leave a Reply