தேர்தல் திரட்டி

தேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும்
வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில்
வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனி திரட்டியை உருவாக்கி இருக்கிறது.

http://therthal.tamilmanam.net

தேர்தல் என்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இந்த பக்கத்தில்
திரட்டப்படும்.

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

24 Responses to “தேர்தல் திரட்டி”

 1. rudhran on March 29th, 2009 7:34 pm

  good idea. i hope it reaches even those who do not come to thamizmanam

 2. Dr. N. Ganesan on March 29th, 2009 7:44 pm

  Thanks, TM Administration and Tech Team!

  Need of the Hour!

  N. Ganesan

 3. கோவி.கண்ணன் on March 29th, 2009 8:39 pm

  நான் என் பதிவுகளில் தேர்தல் பற்றிய இடுகைகளுக்கு ‘தேர்தல் 2009’ என்ற குறிசொற்கள் இட்டு எழுதிவருகிறேன். மற்றவர்களும் தேர்தல், தேர்தல் 2009 ஆகிய குறிசொற்களுடன் எழுதினால் தேர்தல் திரட்டிக்கு திரட்ட எளிதாக இருக்கும்.

 4. Priya on March 29th, 2009 9:01 pm

  நன்றி தமிழ்மணம். இந்த தேர்தல் திரட்டி அனைவருக்கும் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.

 5. தமிழ்மணம் on March 29th, 2009 9:43 pm

  தேர்தல் 2009 என்ற குறிச்சொல்லும் திரட்டப்படுகிறது. அதாவது தேர்தல் என்ற சொல் இருந்தாலே போதுமானது

  நன்றி…

 6. புருனோ on March 29th, 2009 10:06 pm

  http://therthal.tamilmanam.net என்பதற்கு பதில் http://election.tamilmanam.net என்று இருந்தால் தேடுபொறிகளில் முதல் பக்கத்தில் வரும் வாய்ப்பு அதிகமா ?

 7. தமிழ் பிரியன் on March 29th, 2009 10:34 pm

  நன்றி!

 8. Sanjai on March 30th, 2009 12:07 am

  இதற்கு தேர்தல் என்ற ஒருக் குறிச்சொல் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது அதனுடன் தேவையான இன்னும் சில குறிச்சொற்கள் இருந்தாலும் பரவாயில்லையா?

 9. தமிழ்மணம் on March 30th, 2009 1:17 am

  புருனோ,

  Election என்றால் பல தளங்கள் இருக்கும். தேர்தல், therthal என்றால் குறைவான தளங்களே இருக்கும். தமிழில் படிக்க விரும்புவர்கள் therthal என்றே தேடுவார்கள். எனவே இது சரியான முகவரியாகவே இருக்கும் என நம்புகிறோம்

  ****

  சஞ்சய்,

  தேர்தல் என்பது ஒரு குறிச்சொல்லாக கட்டாயம் இருக்க வேண்டும். பிற குறிச்சொற்களும் இருக்கலாம்.

 10. லக்கிலுக் on March 30th, 2009 1:40 am

  பாமகவுக்கு ஆதரவாக எழுதாதவர்களின் தேர்தல் பதிவுகள் சூடான இடுகைகளில் திரட்டப்படாது என்பது மாதிரி ஏதாவது ஹிட்டன் அஜெண்டா இருந்தால் அதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள் 🙂

 11. கரு on March 30th, 2009 4:43 am

  தேர்தல் குறித்த இடுகைகள் தனியாக பிரித்தால் அது புதிய வாசகர்களை சென்றடையுமா என்பது தெறியவில்லை.
  தேர்தல் காலத்தில் அரசியல்/ கட்சிகள்/ ஊழல்/ கருத்துக்கணப்பு/ இலவசம் பற்றிய பதிவுகள் கூட தேர்தலை பற்றியதாக இருக்கும் அந்த குறிச்சொற்கள் என்ன ஆகும்.
  என்னுடைய கருத்து தேர்தல் பதிவுகள் முகப்பிலும் தெறிவது அவசியம். வேண்டுமானால் சூடான இடுகை போன்றவை தனி பக்கத்தில் திரட்டப்பட்டஃடும்

 12. கரு on March 30th, 2009 4:43 am

  ஓரு ஆலோதசனை
  மதம் குறித்த பதிவுகளுக்கு தனி பிரிவு ஏற்படுத்தலாமே.. மாற்று மதங்களின் மீது விமர்சனம் செய்வதற்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்குடனேயே சில பதிவர்கள் இயங்கி வருகிறார்கள். அவர்களை மட்டுப்படுத்த இது உதவும்

 13. Thiru on March 30th, 2009 11:15 am
 14. அருள் on March 30th, 2009 1:49 pm

  இப்படியே நீங்கள் எல்லாத்தையும் பிரித்து கொண்டிருந்தால் முகப்பில் தமிழின அழிவு செய்திகள், தேர்தல் பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்படும். இதில் யாருக்கு நன்மையோ. இப்ப வலைபதிவர்களால் கிழிபடுவது திமுகவும், காங்கிரஸ்-ம், ராசபக்சேயும் தான், இந்த செய்தி மக்களை சென்றடைவதை தடுக்க நினைப்பது என்பது யாருக்கு எங்கோ ஆதாயம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழ்மணத்தின் செய்கைகள் குடுமிகளுக்கு, சிங்கள காடைகளுக்கும் ஆதரவு அளிப்பது என்பத்ய் நல்லதல்ல.

 15. மணி on March 30th, 2009 2:17 pm

  அனைத்து பதிவுகளையும் முகப்பில் காட்டி விட்டு, பின் அதனை வகைப்படுத்துவது உங்களின் நேர்மையை காட்டுவதாக இருக்கும்.

  தமிழின அழிவுகள், தேர்தல் இவைதான் இன்று முக்கியம். பதிவர்களை வளர்ப்பதற்கு முதலில் பதிவர்கள் வேண்டும் அதை மறந்து விடாதிர்கள்.

  இன்று லோசன் போன்ற ஒரு பதிவர் இருக்கிறார் என்றால் அவர் காப்பற்றப்பட்டதாலே இன்று அவரால் எழுத முடிகிறது. அதே போல் தமிழின உணர்வாளர்களையும், தேர்தல் செய்திகளையிம் முகப்பில் கொண்டு வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இந்த துரோகிகளின் பேச்சினை கேட்டு நீங்களும் தமிழின கொலைகளுக்கு ஆதரவாகா போய் விடாதிர்கள்.

 16. மைடாஸ் on March 30th, 2009 2:42 pm

  தேர்தல் குறித்த பதிவுகள் அந்த பகுதியில் மட்டும் தெறியுமா அல்லது முகப்பிலும் தெறியுமா?

  இன்றைய தேதியில் எல்லா அரசியல் செய்திகளும் தேர்தலை பற்றியதாகத்தானே இருக்கும், எப்படி தேர்தல் என குறிச்சொல் இடாவிட்டால் என்ன ஆகும்.

  குழப்பமாக இருக்கிறது கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் சாமியோவ்!

 17. தமிழ்மணம் on March 30th, 2009 11:41 pm

  இப்படியே நீங்கள் எல்லாத்தையும் பிரித்து கொண்டிருந்தால் முகப்பில் தமிழின அழிவு செய்திகள், தேர்தல் பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்படும்

  *******

  தேர்தல் குறித்த பதிவுகள் அந்த பகுதியில் மட்டும் தெறியுமா அல்லது முகப்பிலும் தெறியுமா?

  ******

  தேர்தல் குறித்த பதிவுகள் முகப்பிலும் தெரியும்.

  நன்றி…

 18. தமிழ்மணம் on March 30th, 2009 11:42 pm

  தேர்தல் குறித்த அனைத்து பதிவுகளும் தமிழ்மணம் முகப்பிலும் வெளியாகும். தேர்தல் திரட்டி ஒரு கூடுதல் வசதி மட்டுமே…

  நன்றி…

 19. மைடாஸ் on March 31st, 2009 12:16 am

  விளக்கத்துக்கு கோடானு கோடி நன்றிகள்…

 20. suresh on March 31st, 2009 1:26 am

  நன்றி தமிழ்மணம். இந்த தேர்தல் திரட்டி அனைவருக்கும் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.

  நன்றி – சுரேஷ்
  ~சக்கரை~

 21. மணி on March 31st, 2009 1:13 pm

  /*தேர்தல் குறித்த அனைத்து பதிவுகளும் தமிழ்மணம் முகப்பிலும் வெளியாகும். தேர்தல் திரட்டி ஒரு கூடுதல் வசதி மட்டுமே…

  நன்றி…

  By தமிழ்மணம் on Mar 30, 2009

  */ மிக்க மகிழ்ச்சி, இதே போல் தமிழின உணர்வாளர்களையும் முகப்பில் காட்டி விட்டு பின்பு செய்தியில் வகைப்படுத்தினால் தமிழ் சமுதாயம் மிக்க மகிழ்ச்சியடையும்.

  வெட்டுதலும்/ஓட்டுதல் என்று நீங்கள் சொல்வது தவறு எத்தனையோ செய்திகள் இருந்தும் அதில் சிறந்தவற்றை நமக்கு இவர்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்கள். சின்னகுட்டியின் youtube சேவை போன்றுதான் இவர்களின் சேவையும்.

  இவர்கள் சிறந்த செய்தி கொடுத்ததால்தான் மக்கள் இவர்களை விரும்பி அதிக ஹிட் கொடுத்தார்கள்.

 22. திரு on March 31st, 2009 1:41 pm

  நல்லது! நன்றி.

  கேலிச்சித்திரம் ரசிக்கும்படி உள்ளது.

  திரு

 23. muthu on April 1st, 2009 3:20 pm

  தமிழால், தமிழர்களுக்கு, தமிழையும், தமிழரையும் தவிர வேறொன்றும் மனதில் கொள்ளாத தன்னலமற்ற தமிழர்களால் வெகு சிறப்பாக நடைபெறும் இந்தத் “தமிழ் மணம்” போல வேறொரு தங்கப் பொட்டலத்தை நான் பாரில் வேறெங்கும் கண்டதில்லை. உமது தமிழ் ஆர்வத்துக்கும், பற்றுக்கும், நேரத்துக்கும், விடா முயற்சிக்கும் எனது சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன் – வாழ்க உம் தமிழ்ப் பணி. – அன்பன் முத்துவேல் செல்லையா, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை, கொலம்பியா, மேரிலாந்து.

 24. தமிழ் முகிலன் on April 16th, 2009 2:16 am

  தேர்தல் தொடர்பாக தனித் திரட்டி வெளியிடுவது நல்லதே. எம் வலைப்பூவை தங்கள் தமிழ் மணத்தில் வெளியிட பதிவு பெற்ற போதும் அதற்கான கருவிப்பட்டை இணைக்க முடியவில்லையே. ஏதேனும் தடை உள்ளதோ?

Leave a Reply