தமிழ்மணம் சினிமா
சினிமா தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறது. இந்தியாவிலே
தமிழகம் தான் தொடர்ச்சியாகத் தனது தலைவர்களைத் திரையரங்குகளிலே தேடிக்
கொண்டிருக்கிறது.
தமிழ் வலைப்பதிவுகளில் சினிமா குறித்து பல நல்ல விமர்சனங்களும், ஆய்வுகளும்
வெளி வந்து கொண்டிருக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட வெளிவராத பல நல்ல
விமர்சனங்களையும், திறனாய்வுகளையும் வலைப்பதிவுகளில் தான் காண முடிகிறது.
இத்தகைய நல்ல விமர்சனங்களைத் தனியாகத் தொகுப்பதன் மூலம் பலரை இந்த படைப்புகள் இலகுவாகச் சென்றடையும் எனத் தமிழ்மணம் நம்புகிறது.
எனவே இதற்கென ஒரு தனிப்பகுதியாக “தமிழ்மணம் சினிமா” என்ற பகுதியை
தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம் –
http://cinema.tamilmanam.net

பதிவர்கள் தங்கள் இடுகைகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் இதனை
தனியாக திரட்டுகிறது. இடுகைகளை எழுதி தமிழ்மணத்திற்குச் சமர்ப்பிக்கும் பொழுது
சரியான குறிச்சொல்லுடன் எழுதினால் அந்த இடுகைகள் தமிழ்மணம்
சினிமா பகுதியில் வெளியாகும்
இந்தப் புதிய பகுதி தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஓர் இனிய வலைப்பதிவு அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்
குறிச்சொற்கள்
சினிமா, Cinema போன்ற குறிச்சொற்கள் பொதுவான சினிமா பகுதிகளில் வெளியாகும்
திரைவிமர்சனம் போன்ற குறிச்சொற்கள் திரைவிமர்சனம் பகுதியில் வெளியாகும்
சினிமாவை அடிப்படையாக கொண்ட தளங்களில் இருந்து திரட்டப்படும் இடுகைகள் சிறப்பு இடுகைகள் பகுதியில் வெளியாகும்
இசை மற்றும் அது சார்ந்த குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இசை என்ற பகுதியில் வெளியாகும்
சின்னத்திரை, தொலைக்காட்சி போன்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் சின்னத்திரை பகுதியில் வெளியாகும்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ்மணம்
Comments
28 Responses to “தமிழ்மணம் சினிமா”
Leave a Reply

இது நல்லதா?? கெட்டதா??
தெரியலயேப்பா……….
ஆகா பார்த்தவரைக்கும் நல்லதா தான் தெரியுது.
ஆனா இப்படி பிரிச்சுட்டா இனி தமிழ்மணத்தின் முகப்புல பதிவே வராது போல…
தமிழ்மணம் சினிமா!!!!
மிகவும் பாராட்டப்படவேண்டிய நல்ல முன்னேற்றம்!
வாழ்க தமிழ்மணத்தின் கலைச்சேவை!
good idea. but try to categorize these into cinema.tamilmanam.net
Also, please do something for News blogs.
வாழ்க தமிழ்மணத்தின் கலைச்சேவை!
Very good initiative. தமிழ்மணம் ஹிட்டை விட அதுக்கு அதிக ஹிட் கிடைக்கும்
அருமையான யோசனை… தூற்றபவர்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இது போன்ற அற்புதமான முடிவுகளை எடுக்கும் தமிழ்மணம் நிர்வாகிக்கு நன்றி
cinemanam.net may be available
//சினிமா, Cinema போன்ற குறிச்சொற்கள் //
cinema என்பதற்கு பதில் திரைப்படம் என்ற குறிச்சொல்லை பயன் படுத்தினால் பதிவர்கள் தமிழில் குறிச்சொற்கள் அமைப்பதை ஊக்குவிக்கலாமே
அப்படியே sports.tamilmanam.net news.tamilmanam.net politics.tamilmanam.net election.tamilmanam.net போன்றவையும் ஆரம்பிக்கலாமே
புதிய பகுதி சிறப்படைய வாழ்த்துக்கள்!
தமிழ்மணம் ‘திரைத் தகவல்கள்’ அல்லது ‘திரைத் தகவல்கள்’ அல்லது தமிழ் சார்ந்த பெயர் வைக்கலாமே, ஏன் ‘சினிமா ?’ என்கிற ஆங்கிலச் சொல். பெரும்பாலும் உயர்வகுப்பினர் நடத்தும் செய்தி இதழ்களில் தான் ‘வலிந்து’ ஆங்கிலம் நுழைக்கப்படும். தமிழ்மணம் செய்ய வேண்டாமே.
பதிவர் சர்வேசன்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தமிழ்மணம் நிர்வாகம் அதனை பரிசீலனை செய்யும்
**********
பதிவர் புருனோ,
திரைப்படம் என்ற குறிச்சொல்லும் திரட்டப்படுகிறது.
தற்போதைய பதிவுகளைச் சார்ந்த திரட்டலுடன் Content சார்ந்த திரட்டலையும் செய்ய தமிழ்மணம் முனைந்து வருகிறது.
நீங்கள் கூறும் செய்திகள், அரசியல் போன்றவையும் தற்பொழுது பரிசீலனையில் உள்ளது
**********
கோவி.கண்ணன்,
உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே. அதனை நிர்வாகம் பரிசீலனை செய்யும்
*****
பின்னூட்டங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி…
அடுத்து ஒரு மஞ்சள் பத்திரிக்கை தமிழ்மணம் சார்பாக ஆரம்பியுங்கள்.. நன்றாக இருக்கும்… கொஞ்சம் கூட்டம் சேர்ந்த உடனே ஆரம்பிச்சிடுவிங்களே…
விளங்கமாட்டான் தமிழன்…
என்னது கேபிள் ஷங்கருக்காக தனி பகுதியா?
இப்போது வலையுலகத்தில் மிகச் சிறந்த புகைப்பட பதிவர்கள் ஏராளமானவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்காக புகைப்படம், ஓவியம் போன்ற பிரிவுகளையும் பரிசீலிக்கவும். அதில் ஸ்லைட்ஷோ மாதிரி வசதிகளையும் தந்தால் பார்வையிட வசதியாக இருக்கும்.
நல்ல முயற்ச்சி புதிய சேவைக்கு மிக்க நன்றியும் வாழ்த்தும்.
கோவிக்கண்ணன், புருனே அவர்களுடைய
கருத்துக்களை ஏற்றமைக்கும் நன்றி தெறிவித்துக் கொள்கின்றேன்
வாழ்க தமிழ்மணத்தின் கலைச்சேவை!!!
/அடுத்து ஒரு மஞ்சள் பத்திரிக்கை தமிழ்மணம் சார்பாக ஆரம்பியுங்கள்.. நன்றாக இருக்கும்… கொஞ்சம் கூட்டம் சேர்ந்த உடனே ஆரம்பிச்சிடுவிங்களே…/
அவுங்க ஜோசனையை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க. மஞ்சள் பத்திரிக்கைகாரனுகள ஓரங் கட்டிருக்காங்க. மத்தவுங்க தமிழ்மணத்துல மெயினா இருக்கட்டுமுன்னு.
சூப்பர் ஐடியா!
சினிமாவும்,அரசியலும் தமிழர் வாழ்வில் கலந்திருக்கிறது என்பது மிகச் சரியே.ஆனால் வாழ்க்கை எந்த விதத்தில் இதில் பரிணமிக்கிறது என்பது மட்டும் விவாதத்திற்குரியது.
இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!
இப்ப போறேன்..
நெக்ஸ்டு மீட் பண்றேன்!!!
எனது கருத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு நன்றி !
//தமிழ்மணம் ‘திரைத் தகவல்கள்’ அல்லது ‘திரைத் தகவல்கள்’ அல்லது தமிழ் சார்ந்த பெயர் வைக்கலாமே, ஏன் ‘சினிமா ?’ என்கிற ஆங்கிலச் சொல். பெரும்பாலும் உயர்வகுப்பினர் நடத்தும் செய்தி இதழ்களில் தான் ‘வலிந்து’ ஆங்கிலம் நுழைக்கப்படும். தமிழ்மணம் செய்ய வேண்டாமே.//
எனது பின்னூட்டத்தில் சிறு பிழை,
‘திரைத் தகவல்கள்’ அல்லது ‘திரை மணம்’ என்றிருக்க வேண்டும்
இருமுறை திரைத் தகவல்கள் என்று தவறாக வந்துவிட்டது
Unable to Open in IE8, screws up all the tabs and resulting to kill IE.
ILA,
There is nothing complex in the Cinema Page. It’s a plain HTML. Not even Ajax or Javascript. So, i don’t think this will crash IE. IE 8 had many problems.
However we have to say that Tamilmanam as a whole is yet to be tested in IE 8
The reason for my liking this development in thamizmaNam is that Cinema is important but it should not come in the way of other important issues such as social issues, and creativity.
Lots of time just cinema brings down serious issues by occupying the hot topics in the main page. Now, that it is separated, some serious quality articles and people’s creativities will be prioritized in the main page of thamizhmaNam. People who love entertainment and cinema can have always have fun in cinema section without “troubling” other important issues and creators!
//Lots of time just cinema brings down serious issues by occupying the hot topics in the main page.//
Varun, I agree that cinema blogs need to get out of soodaana iduhai or vasakar parinthurai.
More importance can be given to bloggers’ creativity stuff.
Yours,
Mani
எனது சினிமா பற்றிய பதிவு உங்கள் திரைமணத்தில் வெளியிடவில்லை தவறி இருந்தால் சேர்க்கவும் இனைப்பை கிழே அளிக்கிறேன்http://jackiesekar.blogspot.com/2009/03/17-swades.html
அன்புள்ள தமிழ்மண நி்ர்வாகத்துக்கு சத்தியம் தியேட்டர் பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன் அதில் லேபிளில் சினிமா என்று போடுவதற்க்கு பதில் அனுபவம் என்று தவறுதலாக போட்டு விட்டேன் ஆகவே தயவு செய்து எனது இடுக்கையை திரைமணத்தில் இனைக்க வேண்டுகிறேன்
அன்புடன்/
ஜாக்கிசேகர்
http://jackiesekar.blogspot.com/2009/05/blog-post_12.html