செய்திப் பதிவுகள்

March 4, 2009 · Posted in அறிவிப்புகள் 

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

இவைத்தவிர தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப்பட்டு நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாத பதிவுகளையும், பழுதான பதிவு ஓடைகளையும் தமிழ்மணம் திரட்டியின் பராமரிப்பிற்காக நீக்க முடிவு செய்துள்ளோம் என்பதையும் பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்

இது குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

14 Responses to “செய்திப் பதிவுகள்”

 1. கரு on March 4th, 2009 10:35 am

  விடுபட்ட செய்தி பதிவுகள்
  http://abidheva.blogspot.com/ – தேவன்மாயம்
  http://puduvaisiva.blogspot.com/ – புதுவை சிவா
  http://thamilar.blogspot.com/ – மைக்

  மேலும் செய்திதளங்களில் லோகோ/கிராவதார் தெறியவில்லை அதை வைத்துதான் எளிதில் அடையாளம் காண முடியும்

  நன்றி

 2. தெய்வமகன் on March 5th, 2009 10:40 am

  தமிழ்மண நிர்வாகத்துக்கு உங்களின் இந்த முடிவு மிகவும் சரியானதே.என்னைப்போன்றவர்களையும் சுயமாக எழுதத்தூண்டும் என்பதில் ஐயம் ஒன்று இருப்பதில்லை.

  இது போன்றதொரு சூழ்நிலைகளை எதிர்பார்க்கவில்லை.எனவே சுய கருத்துகளை எழுத
  முயற்சி செய்கின்றோம்.

  எங்களுக்கான வாய்ப்புகளை திரும்ப தரும்படிக்கு கேட்டுக்கொள்ளுகிறேன்

 3. thevanmayam on March 6th, 2009 4:36 am

  அன்பின்
  தமிழ்மணம் ஆசிரியருக்கு, தேவன் மாயம் என்ற் மருத்துவர்.தே.மா.தேவகுமர்ர் எழுதுவது! வணக்கம்!
  நான் 2008 நவம்பரிலிருந்து தமிழ்மணத்தில் பதிவு செய்து வருகிறேன்.கவிதைகள்
  கொஞ்சம் தேநீர் என்ற தலைப்பில் மட்டும் இதுவரை 12 பதிவு செய்து உள்ளேன்!! இதைத்தவிர “அன்புடன் ஒரு சிகிச்சை” என்ற பெயரில் மருத்துவக்கட்டுரைகள் எழுதியுள்ளேன்!!
  தற்போது செய்திகளின் மேல் நாட்டம் கொண்டு செய்திகளும் பதிவு செய்தேன்.
  தாங்கள் என்னுடைய மொத்த ப்ளாகையும் செய்தி ப்ளாக் ஆகக் கருதி செய்திகள் பகுதியில் வெளியிட்டு இருப்பது மிக வேதனை அளிக்கிறது.
  என்னுடைய இன்றைய கவிதையும் செய்தி பகுதியிலேயே வந்து உள்ளது.
  தமிழ் மணத்தில் பதிவு செய்து அனைவரும் படிக்கும் போது ஏற்படும் இன்பம் மாறி தற்போது வருத்தமே ஏற்படுகிறது!!!
  தாங்கள் இது குறித்து என் முறையீட்டைக்கருத்தில் கொண்டு என் பதிவுகளை முன் பக்கம் தமிழ்மணத்தில் சேர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!!
  தமிழ்மணத்தையே நான் பாராட்டி கவிதை எழுதியுள்ளேன்!!
  கீழே 31.12.2008 ல் நான் எழுதிய கவிதையை உங்கள் பார்வைக்கு ::

  தமிழ் மணமே!!

  தமிழ் நண்பர்களைத்தேடி
  அலையும் போது
  உன்னைக்கண்டோம்!!

  இத்தனை பதிவர்கள் தமிழிலா
  என்று வியப்புக் கொண்டோம்!!

  எவரும் பதியும் உரிமை
  கண்டு உவகை கொண்டோம்!!

  கருத்து சுதந்திரம்
  கொடி கட்டிப்
  பறக்கக் கண்டோம்!!

  கவிதைகள்
  இங்கு களிநடம் புரியும்
  கோலம் கண்டோம்!!

  உலகமே திரண்டு
  உள்ளங்கையில்
  உருளக்கண்டோம்!!!

  தரணித்தமிழர்
  ஒன்றாய்க்கூடி
  உவக்கக் கண்டோம்!!!

  தமிழர் அனைவரும்
  தமிழில் எழுதும்
  கனவைக்கண்டோம்!!

  எழுத்தில் வாராக் கருத்தை
  எல்லாம்
  உன் அகத்தில் கண்டோம்!!!

  புத்தாண்டு சிறக்க
  வாழ்த்துக்கள்
  பலர்
  வழங்கககண்டோம்!!

  உன்னை மறவாமல்
  உன்னையும்
  வாழ்த்த
  உள்ளம் கொண்டோம்!!!!

  இந்த புத்தாண்டில்
  தமிழ் மண நிர்வாகிகளுக்கும்
  தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
  தமிழ் மணத்தை
  மேலும் சிறப்பாக
  வழிநடத்திச்செல்ல
  வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  தேவா…..
  இடுகையிட்டது thevanmayam நேரம் 8:49 PM
  லேபிள்கள்: தமிழ், தமிழ் மணம்
  21 கருத்துரைகள்:

  செய்திப் பதிவுகள் போடக்கூடாது என்று எனக்கு இதுவரை தெரியாது!!! ஆகையினால் தாங்கள் என் பதிவை பொது பிரிவுக்கு பழையபடி மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்..

  தேவன் மாயம்
  தே.மா.தேவகுமார்…
  abidheva.blogspot.com

 4. வருண் on March 7th, 2009 11:52 am

  ***வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

  இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.***

  Very good decision by thamizhmaNam!

  The top priority and encouragement should be given to the “originality” of tamils’ thoughts and creations! Not for copy-paste articles!

 5. தமிழ்மணம் on March 8th, 2009 2:37 pm

  பிற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டப்படும் செய்திகளை அடிப்படையாக கொண்ட பதிவுகள் அதிகளவில் தமிழ்மணம் முகப்பினை ஆக்கிரமித்து கொள்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இது சுயமான எழுத்தினை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  நன்றி…

 6. Nankooram on March 9th, 2009 11:00 am

  நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.

  இதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.

  எப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது.

  நீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன்.

  நோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.

  தமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்…

  இப்படிக்கு
  நங்கூரம்

 7. luckylook on March 10th, 2009 3:22 am

  //இது சுயமான எழுத்தினை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

  நல்ல நகைச்சுவை. சமீபகாலமாக சுயமாக எழுதும் பதிவர்களை இருட்டடிப்பு செய்வதில் தான் (உதா : சூடான இடுகைகளில் நிர்வாகிகளுக்கு உவப்பானவர்களுக்கு மட்டுமே இடம்) தமிழ்மணம் மும்முரமாக இருக்கிறது என்பது தமிழிணையம் அறிந்த உண்மை. தமிழ்மணத்தின் சமீபகால பாசிஸப் போக்கால் என்னைப் போன்றவர்கள் பதிவெழுதுவதையே குறைத்துக் கொண்டோம் அல்லது நிறுத்திக் கொண்டோம் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

  திடீரென்று ஏதோ ஒரு ஞானோதயம் நிர்வாகிகளுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. 🙂

 8. கிருஷ்ணாயில் on March 16th, 2009 1:34 pm

  many times small people estimate themselves larger than their tiny self-gloating bombastic life. Pathetic!

 9. நல்லதந்தி on March 16th, 2009 9:52 pm

  திரு தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு என்னுடைய பதிவு இன்று தீடீரென செய்திப் பிரிவிற்கு மாற்றப் பட்டுள்ளது. என்னுடைய இன்றைய இடுகையில் எந்த அம்சத்தை பார்த்து இது வெறும் செய்திதான் என்று முடிவு செய்தீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?.

  தமிழ்மணத்தில் அவர்கள் விரும்பும் கருத்தைத் தான் எழுத வேண்டும் இல்லாவிட்டால் அந்தப் பதிவர்கள் ஓரம் கட்டப் படுவார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?.

  இந்தவிஷயத்தில் தங்களுடைய நடவடிக்கைகள் ஒரு தலைப் பட்சமாகவே இருப்பதாக எண்ணுகின்றேன்.

  என்னுடைய நேற்றைய பதிவில் திரு சோ அவர்களை ஆதரித்து எழுதியதுதான் உங்களுடைய பிரச்சனை என்பதும் மேலும் அது சூடானதும்தான், உங்களுடைய இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று நன்றாகவே தெரிகிறது. இதுதான் ” தமிழில் எழுதலாம் வாருங்கள்,வலையில் பரப்பலாம் பாருங்கள் “ என்பதன் அடையாளமா?. கருத்து சுதந்திரத்தை அனுமதிக்காத நீங்கள் கருத்துப் பட்டையை வேறு மாதிரி மாற்றி எழுதி வையுங்கள்.

  ஒரு குறிப்பிட்ட ஆதரவாளர்கள் மட்டுமே இருக்கும் திரட்டியா?. அல்லது தமிழை வலையில் பரப்ப வேண்டும் அனைத்து, ஆபாசமில்லாத கருத்துக்களும் ஆதரவு தரவேண்டும் என்று நடுநிலையுடன் இருக்கும் திரட்டியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  நடுநிலையான திரட்டியாக இருக்கும் பட்சத்தில் மனசாட்சியுடன் என்ன ஆவன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். இல்லை நாங்கள் இப்படித்தான் என்று சொன்னால் தங்கள் நடுநிலைமை எண்ணி வியப்பதைதவிர வேறு வழில்லை.

  நன்றியுடன்!.
  நல்லதந்தி!

 10. ILA on March 17th, 2009 12:22 pm

  //இது சுயமான எழுத்தினை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//
  வரவேற்கதக்க ஒன்று

 11. வாலில்லாத பையன் on March 17th, 2009 1:11 pm

  //என்னுடைய இன்றைய இடுகையில் எந்த அம்சத்தை பார்த்து இது வெறும் செய்திதான் என்று முடிவு செய்தீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?.//

  http://thanthii.blogspot.com/2008/08/blog-post.html

 12. லவர்பாய் on March 17th, 2009 2:54 pm

  //தமிழ்மணத்தின் சமீபகால பாசிஸப் போக்கால் என்னைப் போன்றவர்கள் பதிவெழுதுவதையே குறைத்துக் கொண்டோம் அல்லது நிறுத்திக் கொண்டோம் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?//

  இப்ப நீங்க எழுதாததாலே என்ன கெட்டுப்போச்சி? லூசுல விடுங்க லக்கி.

 13. நல்லதந்தி on March 18th, 2009 4:22 am

  வாலில்லாத பையனின் கிண்டலை இரசித்தேன். ஆனால் அதில் சாரமில்லை. அந்த இடுகையே நகைச்சுவைக்காக இடப்பட்டது. ஒரு வாதத்திற்க்காக அதை ஒப்புக் கொண்டாலும், ஆகஸ்ட் மாத இடுகைக்கும் தமிழ்மணத்தின் இன்றைய நிலைப்பாடிற்கும் என்ன சம்பந்தம்!. 🙂

 14. ராஜ ராஜேஸ்வரி on April 29th, 2011 10:44 am

  எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் வோட்டுப்பட்டை நிறுவவும் முடியவில்லை என்ன செய்வது. பாஸ்வேர்ட் தவறு என்றே எப்போதும் வருகிறது. புது பாஸ்வேட் ஆக சில எண்கள் வருகிறது. அதைக் கொடுத்தாலும் இணைய மறுக்கிறது. உஅதவிக்கு நன்றி.

Leave a Reply