முதற்கட்ட மற்றும் கடைசிக்கட்ட முடிவுகள் – தமிழ்மணம் விருதுகள் 2008
தமிழ்மணம் விருதுகள் 2008 நிகழ்வுகள் இரண்டு கட்டங்களில் நிகழ்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தாமதங்களுடன் தொடங்கப்பட்டாலும், பதிவர்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் முதலாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்குப்பின்னர் விரைந்து மாறிய தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வினை தொடர்ந்து கொண்டு செல்லும் சூழ்நிலையில் எவரும் இல்லை. இன்னமும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கும் நடப்புச் சூழலில், இவ்விருதுகள் நிகழ்வினை முற்றிலும் ஒத்தி வைப்பதே சரியான முடிவாயிருக்க முடியும். எனினும், முதற்கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சிறப்புற முடிவுற்ற காரணத்தினால், முதற்கட்ட வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இடுகைகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றது. வெற்றி பெற்ற இடுகைத் தொடுப்புகளை விருதுகள் பதிவில் காணலாம்
மேலும் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப் பெற்ற இடுகைகள் தமிழ்மண முகப்பில் தனியானதொரு பக்கத்தில் முன்னிறுத்தப்படும். தற்சமயம் இச் சுட்டியில் இவ்விடுகைகளைப் பார்வையிடலாம். பல பிரிவுகளில், சமமான வாக்குகளின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட இடுகைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆவலுடன் பங்குபற்றிய ஏனைய பதிவர்களுக்கு எமது நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
இத்தருணத்தில் விருதுகள் நிகழ்வின் தொழில்நுட்ப சேவைகளை வடிவமைது வழங்கிய தமிழ்மணம் நிறுவனர் காசி ஆறுமுகம் அவர்களுக்கும், உறுதுணையாயிருந்த ஏனைய தொழில்நுட்பக் குழு நண்பர்களுக்கும், நிகழ்விற்கு உந்துதலாயிருந்து ஒத்துழைத்த அனைத்து தமிழ்மணம் குழு நண்பர்களுக்கும் எமது நன்றி.
தமிழ்மணம் விருதுகள் 2008
ஒருங்கமைப்புக் குழுவிற்காக
பாலு
குறிப்பு:
1. வெற்றி பெற்ற பதிவர்கள் தங்களது முகவரியை admin@thamizmanam.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் இவ்விணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது பதிவில் இட விரும்புபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
Comments
29 Responses to “முதற்கட்ட மற்றும் கடைசிக்கட்ட முடிவுகள் – தமிழ்மணம் விருதுகள் 2008”
Leave a Reply

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கலாச்சாரப் பிரிவில் மூன்றாவதாகவும் [அடடா, மயிரிழையில் தவற விட்டிருக்கிறேனா:), பரவாயில்லை]; புகைப்படப் பிரிவில் நாலாவதாகவும்; படைப்பிலக்கப் பிரிவில் பதினைந்தாவதாகவும் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் !
அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரைகள் பிரிவில் எனது பதிவிற்கு வாக்களித்து இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தந்ததற்கும், கவிதைப்பிரிவில் எனது கவிதைக்கு வாக்களித்து 5ம் இடத்தைப் பெற்றுத் தந்ததற்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களும் நன்றிப்பா….
வெற்றிக் கனி பறித்த அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்…!
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
செய்திகள் / நிகழ்வுகளின் பிரிவில் “இந்திய தேசிய வியாதிகளுக்கு என் கேள்விகள் ” என்ற எனது பதிவு மூன்றாவது இடத்தைப் பிடிக்க வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள்.
வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்துகள்
அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள் பகுதியில் 6ஆவது இடத்தையும்,
நகைச்சுவை கார்ட்டூன் பகுதியில் 9ஆவது இடத்தையும் எனது பதிவுகள் பெற வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் !!! வாழ்த்துக்கள் !!! வாழ்த்துக்கள் !!!
வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
மாசற்ற கொடி
வெற்றி பெற்ற அனைவருக்கும், விருது வழங்கி சிறப்பித்த தமிழ்மணத்துக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி..
பதிவர்களுக்கிடையில் போட்டி வைத்து, அதனைத் திறம்பட நடத்தி முடித்திருக்கும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்..
ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி, வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
ஒரு சந்தேகம் என்னவென்றால் 3 பரிவுகளில் மட்டுமே இடுகைகள் சமர்பிக்கப்படவேண்டும் என்று விதியிருக்கும் போது. எப்படி மருத்துவர் புருனோ மட்டும் பல பிரிவுகளுக்கு சமர்பித்தார். இந்த கேள்வியை நான் முன்னமே கேட்டும் ஏன் இதுவரை பதிலில்லை
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
விருது கொடுத்து சிறப்பித்த தமிழ் மணத்திற்கும் வாசகப் பெருமக்களுக்கும் நன்றிகள்…
அட – என்னோடது ஒண்ணு ஆறாவது இடத்துலே இருக்கு போல – அதிசயந்தான்
எங்களையும் கண்டு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்..
பெண்கள் பிரச்சனைகள் பிரிவில் எனது ஆருயிர் மனைவி அனுராதா அவர்களின் மறைவுக்குப் பின் நான் எழுதிய”அனுராதாவின் கடைசி நிமிடங்கள்”என்ற பதிவிற்கு இரண்டாம் இடம் பெற வாக்களித்த அனைவருக்க்கும் என் நென்ஞ்சார்ந்த நன்றிகள்.
திண்டுக்க்கல் சர்தார்
வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
ஜெயித்தவர்களுக்கு……”ஜெய் ஹோ!!!”
விருது பெற்றோருக்கு வாழ்த்துகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும், விருது வழங்கி சிறப்பித்த தமிழ்மணத்துக்கும் வாழ்த்துக்கள்.