முத்துகுமாருக்கு அஞ்சலியும், வேண்டுகோளும்
ஈழப்பிரச்சனையை முன்னிட்டு தீக்குளித்த தமிழகத்தைச் சேர்ந்த இளம்
பத்திரிக்கையாளர் சகோதரர் முத்துக்குமாருக்கு தமிழ்மணம் தன்னுடைய
அஞ்சலியை செலுத்துகிறது. இவ்வளவு கொடிய முறையில் தம் மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்மணம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கும்
தருணத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு போராட்டத்தை
முத்துக்குமார் மேற்கொண்டதை நாம் விரும்பவில்லை. இத்தகைய போராட்டங்கள்
தவிர்க்கப்படவேண்டும்.
அதே நேரத்தில் முத்துக்குமார் மரணம் அடைந்து விட்ட நிலையில் அவரது இறுதி
வேண்டுகோளை நிறைவேற்றுவது நமது கடமை ஆகும். அது தான் அந்த உயர்ந்த
இளைஞருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலி.
அவரின் விருப்பப்படியே அவரின் இறுதி அறிக்கையை நகலெடுத்து பலருக்கும்
கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும். இந்த
முயற்சியில் பதிவர்கள் பங்கெடுத்துக் கொள்ளுமாறு தமிழ்மணம் பதிவர்களிடம்
விண்ணப்பித்துக் கொள்கிறது.
நன்றி
தமிழ்மணம்
Comments
28 Responses to “முத்துகுமாருக்கு அஞ்சலியும், வேண்டுகோளும்”
Leave a Reply

தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தேன்! தீக்குளித்து இறந்தவர் பெயர் முத்துக்குமார். முத்துக்குமரன் அல்ல! நம்மிடையே ஒரு பதிவர் அதே பெயரில் இருக்கிறார். ஒரு கணம் அதிர்ந்துதான் போய்விட்டேன். தமிழார்வத்தில் இப்படி நிகழ வேண்டாமே!
தமிழ் உணர்ச்சி இன்னும் செத்து போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக சொன்னாலும். அவரை நம்பிய குடும்பம் என்ன பாதிப்புக்கு உள்ளாகும். பெரியார் பிறந்த நாட்டில் இன்னும் தீக்குளிப்பு சரியல்ல .எது எப்படி இருப்பினம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் .
இதற்கு ஒரு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு கணக்கு எண் அறிவிக்கப் பட வேண்டும். பதிவர்களிடம் திரட்டப் படும் நிதியை முத்துக்குமாரின் அறிக்கையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்படி “பெரியார் தி.க, தி.க., வி.சி.” போன்ற அமைப்புகளிடம் பகிர்ந்தளிக்களாம்.
// இதற்கு ஒரு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு கணக்கு எண் அறிவிக்கப் பட வேண்டும். பதிவர்களிடம் திரட்டப் படும் நிதியை முத்துக்குமாரின் அறிக்கையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்படி “பெரியார் தி.க, தி.க., வி.சி.” போன்ற அமைப்புகளிடம் பகிர்ந்தளிக்கலாம்.//
– இதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஈழத்தில் தமிழர்களும் இங்கு முத்துகுமாரும் இறந்து இருக்கலாம், ஆனால் ஒருபோதும் இவர்கள் தோற்பதில்லை.
தமிழகத்தில் உள்ள கோவை இன்று கேரளாவாக மாறி போனது.
சேலம் கர்நாடகாமாக மாறி வருகிறது.
சென்னை ஆந்திராவாக மாறி வருகிறது.
நாளடைவில் தமிழனுக்கு என்று ஒரு ஊர் கூட கிடைக்காது.
நாயாககூட இருந்து விட நாடு மட்டும் இல்லாமல் இருந்து விடாதே!!!
இன்று நாம் செய்யும் தவறுகளால் நமது வருங்கால சந்ததியினர் அடிமைகளாக பிறக்க போகிறார்கள்.
அய்யோ!உங்க தலைப்பும் தப்பு! முதல் பின்னூட்டமும் தப்பு!
http://abiappa.blogspot.com/2009/01/blog-post_29.html
இதை படிங்க! தலைப்பை மாத்துங்க ப்ளீஸ்!
என்னருமைத்தமிழ் மகனே, உன் தாய் ,தந்தையை வணங்குகிறேன். உன் ஈகம் மகத்தானது. ஆனால் பின்பற்றக்கூடாதது.உன் ஈகத்தை உணரும் நிலை
இன்ரு இங்கில்லை. போராடிச்சாகலாம் -வேரோடா
வீழவேண்டும். இவன் சிந்தை செயலாக இணைவோம்.
தமிழா மறவாதே தமிழின அழிப்பை மறவாதே.
இரசீத்நாத்திகன்.
முத்துக்குமாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அவரின் ஆன்மா தமிழினத்தைக் கிளர்க்கட்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு,
உடனடியாக ஒரு கையெழுத்து படிவம் ஒன்று தயார் செய்து அதில்
இலங்கையில் தமிழனை அழிக்க துணைபோகும் காங்கிரஸ் கட்சிக்கு என் வாழ்நாளில் வாக்களிக்க மாட்டேன் … என பதிவிட்டு
அதில் எல்லோரையும் வாக்களிக்க செய்வதே முத்துகுமாருக்கு நாம் செய்யும் அஞ்சலி ..
இதற்க்கு அரசு செவி சாயத்ததுபோல் தெரியவில்லை ….
இவரின் மரணத்தை பத்தோடு பதினொன்னாக கணக்கில் சேர்த்துதான் மிச்சம் ….
இவரின் எறிந்த சூடு தணிந்தாலும் … இவரின் ரத்தத்தின் சூடு தணியவில்லை .. அதை அவர் மடலாக விட்டுச்சென்றுள்ளார் … அதற்கான தீர்வு கிடைத்தே ஆகவேண்டும்…
இம்மடலை அவர் எழுதும்போது அவரின் ரத்தச்சூடு அளவையில் அடங்கா சூரியனை விட பன்மடங்கு இருந்திருக்கும் ….
” முத்தை இழந்தோம் ….. முடிவு தெரிய…
விடை கிடைக்குமா … விழிகள் இயங்க ….”
MY DEAR BROTHER MARTYR MUTHUKUMAR,
SALUTE YOU FOR SACRIFICED YOUR LIFE FOR EELAM TAMIL PEOPLES SUFFERING IN EELAM BY THE SINHALA REGIME WITH THE INDIAN GOVT HELP TO BRING TO THE CLEAR PICTRURE TO THE WORLD.
உங்கள் பேர் உள்ளத்தின் தமிழ் ஈழ தாயக தாகம் உண்மையில் மலரும்..அமையும்.. ஒப்பிலா அர்ப்பணிப்பு.. இனி எவருமே இப்படி செய்துவிடாதீர்கள்.. நம் உறுதியான வாழ்வே மெய்யான போர்.. வீரவணக்கம் நண்பா..
முத்து.. ஈழத்தில் தமிழர் படும் பாடுகள்
நம் கண்களில் கண்ணீர்ரை வரவழைக்கும் என்றால்
உன் மரணம் இரத்த கண்ணீரை வரவழைக்கும்
உன் மரணகோலத்தை பார்த்ததும்
துக்கத்தினால் தொண்டை அடைக்கிறது
எழுத்து எழுத கை நடுங்குகிறது.
முத்து.. ஈழத்தில் அமைதிதிரும்பினவுடன்
உனக்கு வைக்கவேண்டும் ஒரு சிலை
அதில் இவ்வாறு எழுத வேண்டும்
முத்து நீ இந்த ஈழத்தின் சொத்து
இப்படிக்கு
ஆழ்ந்த அனுதாபத்துடன்
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டி அனுதினமும் இறைவனிடம் இறைஞ்சும்
கிறிஸ்துநேசன்
தமிழீழ கவிஞர் புதுவை ரத்தினதுரையின் அஞ்சலிகவிதை…
முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.
தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.
மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.
தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீத்தமிழ்.
நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம் .
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்
தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை
தற்போது பணம் சம்பந்தமாக கதைத்தல் இந்த வீரமறவனின் தியாகத்தை கொச்சைபடுத்தல் ஆகிவிடும். ஆகவே தயவுசெய்து இது பற்றி இப்போது கதைக்கவேண்டாம்.
நன்றி
the letter of our veerath thamizhan already translated and published in tamilnet.com
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28208
அய்யா! தாங்கள் கூறியிருப்பது மிக்கச் சரி. பெரியார் உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட ஆதரித்தது கிடையாது. அவ்வளவு தூரம் போவனேன்.உயிர் தியாகம் செய்துகொண்ட முத்துக்குமாரே கூறியிருப்பது போல “உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்”. இந்தளவுக்கு தெளிவு உள்ளவர் தன்னையே மாய்த்துக்கொண்டதை நினைத்தால் உள்ளம் பதைக்கிறது.
em tamil eela urabukkaka ugeer thiyakam seitha em muththukumarukku QATAR tamilarin kannier anchsali teriviththu kolkirom tamil onriyam
தோழர் நெடுமாறன் அவர்கள் இனியும் தாமதியாது தில்லி
சென்று சோனியவை சந்தித்து அவர் தாமாகவோ,பிறர் தூண்டுதலின் பேரிலோ பிரபகரன் ஒழிப்பு என்ற எண்ணம்
கொண்டு இன அழிப்பு வேலையில் ஈடுப்ட்டிருந்தால் பாசிச
சிந்தனை கூடது என்றும், தமிழர்களின் உணர்வுவரலாற்றிலும்,உலக வரலாற்றிலும் சோனியா ஒரு
கருப்புப் ப்க்கமாக நிலைபெற வேண்டிவரும் என்றும் எடுத்துக்கூறவெண்டும். தமிழினத்தலைவராக இருக்கும்
அவரே பொறுத்தமானவர். பெரியார் சொன்னப்டி பொது
வாழ்வில் மானம் பாராமை வேண்டும் என எண்ணீச்செய்யவேண்டும்.ஒப்புகிறார்களோ இல்லையோ
அதுவும் நமக்குச்சாதகம் என்று நினைத்துச்செய்யவேண்டும்.
அரசியல் கலந்த இந்த வேண்டுகோளை இங்கு வைப்பதற்காக தமிழ்மணத்தார் மன்னிக்க வேண்டும்.
சகோதரர் முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகையை ஸ்டாலின் அறிவித்திருப்பதாக செய்தி படித்தேன். அவரின் நினைவை இதைவிட கேவலப்படுத்த முடியாது. முத்துக்குமார் திமுக, காங்கிரஸ், அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதை மறந்துவிட்டார் ஸ்டாலின். மனசாட்சி இருந்தால் அவருடைய விமர்சனத்திற்கு கருணாநிதியோ அல்லது ஸ்டாலினோ பதில் சொல்ல வேண்டும். இப்படி பணம் கொடுத்து பரிகாரம் தேடக்கூடாது. இப்படி திமுகவோ, காங்கிரசோ, அதிமுகவோ முத்துக்குமாரின் குடும்பத்தாரை வற்புறுத்தி பணம் அளித்தால் அப்பணத்தை அரை சதவீத வட்டியோடு மானமுள்ள தமிழர்கள் அவர்கள் முகத்தில் திருப்பி எறிய வேண்டும். சென்னையில் உள்ள வலைப்பதிவர்கள், பாலபாரதி, வரவனையன் போன்ற நண்பர்கள் இந்த எதிர்ப்பு நிதியைத் திரட்ட முன்வரவேண்டும். வங்கிக் கணக்கை வலைப்பதிவில் அறிவித்தால் உடனடியாக பங்களிப்போம்.
முத்து குமார – உன் உடல்
எரித்து தமிழ் உணர்வு அளித்தாய் – இன்று ஏற்போம்
சபதம் உன் இறுதி ஆசை மலர.
அன்புத்தோழர் முத்துக்குமாரின் தியாகத்திற்கு என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள்.தமிழர்களின் துயர் பொறுக்க முடியாமல் ஒரு பிள்ளை தன் உயிரையே மாய்த்து அரசாங்கத்தைச் சற்று அசைத்துப் பார்த்துள்ளது.இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்ற சந்தோஷமும், இவர் இறந்துவிட்டார் என்ற துக்கமும் ஒருங்கே சூழ்கின்றன.வாழ்க பல்லாண்டு அவரது புகழும், தியாகமும்…
இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்று இந்தியா
எதிர்ப்புப் போராட்டமாக உருவாகிக் கொண்டுள்ளது.
இனவுணர்வைப் புரிந்து கொள்ளாதவர்கள்
பக்தவச்சலத்துக்கு நேர்ந்த அவமானத்தை நினைவில் கொள்வது நல்லது.
அனைத்து உயிரும் காப்பாற்றப் படவேண்டியவை.
உணர்ச்சியின் உச்சியிலேகொள்கைக்காகத் தன்னால் முடிந்தது என்று செய்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது.ஆனால் இதை யாரும் தொடரக் கூடாது.
நண்பர்களே.. ஏற்கனவே முத்துக்குமாரின் அறிக்கையை நகலெடுத்து விநியோகிக்கும் வேலையை நண்பர்கள் பலரும் தொடங்கி விட்டார்கள். யாரவது அவரின் படத்துடன் பிடிஎப் ஆக மாற்றி மெயிலில் கூட உலாவ விடலாம். கூடவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும்!
தயவுசெய்து முத்துக்குமார் அவர்களுடைய குடும்பத்தவர்களது முகவரியை வெளியிடுங்கள்!!!!!
விரும்பியவர்கள் ஆறுதல் கடிதமோ அல்லது பண உதவியோ செய்யலாம்.
ஒரு ஈழத் தமிழன்
English translation of Muthukumar’s message is here
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28208
ஈழ மக்களின் துயர்துடைக்க இயலாத/விரும்பாத மத்திய அரசு; கையாலாகாத மாநில அரசு. இவற்றின் போக்கு மிகுந்த மனவருத்தத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது என்றால் உணர்வுள்ள பத்திரிக்கையாளர் முத்துக்குமாரின் மரணம் இன்னும் அதிர்ச்சியைத் தருகிறது.
(
எந்த ஒன்றுக்கும் தற்கொலைகள் தீர்வல்ல.
என் ஆழ்ந்த இரங்கல்கள்.
இத்தகைய அவலங்கள் இனியும் வேண்டாம், மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வழிகளை – இந்த அறிக்கை போன்று; – ஆராயலாம்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் சக்தியைத் திரட்டும் பணியை முத்துக்குமார் செய்திருக்கலாம். விலை மதிக்க முடியாத தன் உயிரை மாய்த்து பலருக்கும் தவறான முன்னுதாரணமாக ஆனது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இவரைப் பார்த்து மேலும் பலரும் தற்கொலைக்கு முயற்ச்சிப்பதாக செய்திகள் வருவது வேதனையிலும் வேதனை.
முத்துக்குமாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் பொதுமக்களின் நிலை மிகவும் அதிர்ச்சிக்குரியது. இந்திய அரசு இனியும் தாமதிக்காது இலங்கைத் தமிழர்களை காக்க முடிந்ததை செய்ய வேண்டும்.