முதற்கட்ட வாக்குப்பதிவு நீட்டிப்பு

January 18, 2009 – 2:19 pm by தமிழ்மணம்

Tamilmanam Blogger Awards 2008- Extending first phase polls
தமிழ்மணம் விருதுகள் 2008ற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் இதுவரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி. அதிக எண்ணிக்கையிலான இடுகைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், பதிவர்களின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கிறது.

நிற்க. முதற்கட்ட வாக்கெடுப்பில் எமது தரவுத் தளத்தில் ஏற்பட்ட வழுவின் காரணமாக சில வாக்குகளின் பிரிவுகள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புபட்ட பதிவர்களுக்கு மட்டும் சிறப்பு மின்னஞ்சல் மூலம் தங்கள் வாக்கினை மீள அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களது வாக்கினை மீள அளிக்குமாறு இதன்மூலம் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அதிக எண்ணிக்கையினையும், வழுவினையும் கருத்தில் கொண்டு முதற்கட்ட வாக்கெடுப்பு சனவரி 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடரும் உங்களின் ஆர்வத்திற்கும், பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 - ஒருங்கமைப்புக் குழு

  1. 12 Responses to “முதற்கட்ட வாக்குப்பதிவு நீட்டிப்பு”

  2. தமிழ்மணம் விருதுகள் 2008 பெறுபவர்களுக்கு திரட்டி.காம் பரிசு
    http://thiratti1.blogspot.com/2009/01/2008.html

    By வெங்கடேஷ் on Jan 19, 2009

  3. எனக்கு மின்மடல் வரவில்லை என்பதை சொன்னேன். நீங்கள் எந்த பதிலும் கொடுக்காததின் காரணம் தெரியவில்லை. உங்கள் உடனடி நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.

    By விக்னேஷ்வரன் on Jan 21, 2009

  4. வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி !
    உழவன்

    By உழவன் on Jan 23, 2009

  5. 1

    By S.THIYAGARAN on Jan 23, 2009

  6. this is wonderful

    By M BALA MURUGAN on Jan 23, 2009

  7. I LOVE FIRST MY FAMILY. NEXT I LOVE TAMIL, ANOTHER LOVE FOR TAMILMANANAM

    By R RAGHU on Jan 23, 2009

  8. I LOVE TAMILMANANAM. I READ THE TAMILMANANAM.

    By M BALA vellore on Jan 23, 2009

  9. எனக்கு வாக்களிக்க எதுவும் மின்மடல் வரவில்லை.

    கடந்த இரண்டு வருடங்களில்
    49 பதிவுகள்.
    2008ல் மட்டும்
    27 பதிவுகள்.

    கட் அன்ட் பேஸ்ட்
    பதிவர்கள் பலர்.
    நான்
    சுயமாய் சிந்தித்து
    எழுதியவை அனைத்தும்.

    நேரம் இல்லை.
    அதனால் இடுகைகளை
    பரிந்துரைக்கவில்லை.

    பரிந்துரைத்திருந்தால்
    பாதி அவார்டுகளை
    அள்ளிட்டு போயிருப்பேன்.

    இப்படி
    சுயபுராணம் பாடவைத்த
    உங்களை கண்டிக்கிறேன்.

    விருது தான் கிடைக்காது.

    நல்ல பதிவர்களுக்கு,
    பதிவுகளுக்கு
    வாக்களிக்கவாவது
    விடுங்கப்பா!

    By nondhakumar on Jan 23, 2009

  10. http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_23.html

    முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்!

    By கதிர் on Jan 24, 2009

  11. எங்க ஊர்ல தேதி 24 ஆகிடிச்சுங்களே??? :)

    By Dubukku on Jan 24, 2009

  12. What is next buddy?

    By Pazamaipesi on Jan 27, 2009

  13. ?????????

    தேர்தல் நடத்தரது எம்புட்டு கஷ்டம்னு புரிஞ்சிருக்குமே :)

    By Surveysan on Feb 24, 2009

Post a Comment