புத்தாண்டு பொங்கும் வாழ்த்து

January 14, 2009 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள், பயனாளர்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கும் வாழ்த்து.

தமிழ்மணம்

Comments

7 Responses to “புத்தாண்டு பொங்கும் வாழ்த்து”

 1. Dr. N. Ganesan on January 14th, 2009 12:54 pm

  “தை” முதல் நாளே ஆண்டு தொடக்கம் – சட்டமுன் வடிவு
  http://sify.com/tamil/columns/fullstory.php?id=14835430

 2. ILA on January 14th, 2009 1:39 pm

  வாழ்த்துக்கள்!

 3. புருனோ on January 14th, 2009 2:29 pm

  சுறவம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு !!

  தை– சுறவம்
  மாசி — கும்பம்
  பங்குனி– மீனம்
  சித்திரை –மேழம் (இதை பழந்தமிழ் பாடல்களில் ஆமேடம் / மேடம் என்றும் கூறுவார்கள்)
  வைகாசி –விடை (இதற்கு எருது என்றும் பெயர் உண்டு)
  ஆனி — இரட்டை
  ஆடி — கடகம் (இதற்கு நண்டு என்றும் பெயர் உண்டு)
  ஆவணி –மடங்கல்
  புரட்டாசி –கன்னி
  ஐப்பசி — துலை
  கார்த்திகை– நளி
  மார்கழி — சிலை (சுறா என்ற பெயரும் உண்டு)

  ஆமேடம், எருது, நண்டு, கன்னி, சுறா இவ்வைந்தில் என்று பல பழந்தமிழ் பாடல்கள் இருக்கின்றன

  கிழமைகள் :
  ஞாயிறு– ஞாயிறு
  திங்கள்– திங்கள்
  செவ்வாய் –செவ்வாய்
  புதன்– அறிவன்
  வியாழன்– வியாழன்
  வெள்ளி — வெள்ளி
  சனி– காரி

 4. புருனோ on January 14th, 2009 2:44 pm

  அடுத்து இதில் மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன

  சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

  மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.

  தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது ஏப்ரல் 14 அல்ல (உகாதி ஏப்ரல் 3,4,5,6,7 வரலாம்)

  இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.

  http://www.rediff.com/news/mar/31cong.htm
  Hindu new year’s day which is being observed on April 8 and 9.

  http://www.rediff.com/news/apr/09flip.htm
  The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.

  ஆக பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை

 5. புருனோ on January 14th, 2009 2:48 pm

  இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
  இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
  தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது

  இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????

  சத்தியமாக புரியவில்லை.

 6. Namakkal Shibi on January 14th, 2009 5:30 pm

  பொங்கலோ பொங்கல்

  Monday, January 12, 2009
  தை பிறந்தாயிற்று!
  தமிழ்ப் புத்தாண்டும்
  தொடங்கியாயிற்று!

  தை பிறந்தால்
  வழி பிறக்கும்!
  ஈழத்தமிழருக்கு
  வழி பிறக்காவிட்டாலும்
  போகிறது!
  குறைந்தபட்சம்
  வலியேனும் குறையுமா?

  கொண்டாடுவோம்!
  பொங்கலோ பொங்கல்!

  தமிழர் திருநாளே
  தமிழ்ப்புத்தாண்டாம்!
  அப்படியே கொண்டாடுவோம்!
  ஆனால் தினம் தினம்
  செத்து மடிந்து
  கொண்டிருக்கிறார்களே?
  எங்கள் வீட்டில்
  எப்படிக் கொண்டாடுவோம்?
  பொங்கலோ பொங்கல்!

  கரும்பும் வெல்லமும்
  மன்சளும் வைத்து
  கொண்டாட வேண்டும்!
  ஈழத்துச் சகோதரிகள்
  இழந்து கொண்டிருக்கிறார்களே
  மஞ்சள் கயிறுகளை!
  எப்படி மனசு வரும் எங்களுக்கு!
  பொங்கலோ பொங்கலென்று
  குலவையிட்டுக் கொண்டாட!

  தமிழினமே
  அழிந்துகொண்டிருக்க
  கைகட்டி வேடிக்கை
  பார்த்துவிட்டு
  மகிழ்ச்சியுடன்
  குதூகலிபோம்!
  பொங்கலோ பொங்கல்!

  இழவு விழுந்த
  வீடுகளில்
  ஒருவருடமேனும்
  துக்கம் மேற்கொள்ள
  கொண்டாட்டங்கள் தவிர்த்துடுவர்!

  எத்தனை வருடங்கள்
  நாங்கள்
  தவிர்க்கவேண்டும்
  தமிழர் திருநாளை!
  இழவுகள் நேர்ந்துகொண்டிருப்பது
  எங்கள் விடுகளில் அல்லவா!

  தமிழினத் தலைவரின்
  ஆணைப்படியே
  தமிழர் திருநாளாம்
  பொங்கலோடு சேர்த்து
  தமிழப் புத்தாண்டையும்
  கொண்டாடுவேம்!

  பொங்கலோ பொங்கல்!
  தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 7. மாதங்கி on January 15th, 2009 11:23 am

  வணக்கம்.
  பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  வலைப்பதிவர் புத்தகங்கள்
  என்ற பிரிவிற்கு புத்தகத்தைப்
  பற்றிய விவரங்கள், அட்டைப்படம் முதலியவற்றை
  உங்களுக்கு எந்த மின்னஞ்சல்
  முகவரிக்கு அனுப்ப வேண்டும்
  தயவுசெய்து எழுதவும்

Leave a Reply