முதற் கட்ட வாக்கெடுப்பு – தமிழ்மணம் விருதுகள் 2008

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தமிழ்மணம் விருதுகள் 2008ன் முதற்கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (சனவரி 12) தொடங்குகிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும். தற்சமயம் பதிவர்கள் வாக்கிடுவதற்கான சிறப்புத் தொடுப்பினை உள்ளடக்கிய மின்னஞ்சல் பதிவர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு இன்றிலிருந்து சனவரி 18ம் தேதி வரை நடைபெறும்.
வாக்களிப்பது பற்றிய சில குறிப்புகள்:
1. பிரிவுக்கு ஒன்றாக 12 பிரிவுகளிலும் பதிவர்கள் வாக்களிக்க இயலும். குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே கூட வாக்களிக்க முடியுமென்றாலும், அனைத்துப் பிரிவுகளிலும் வாக்களிப்பது சிறந்ததாக இருக்கும்.
2. முதன்மை வாக்களிப்புப் பக்கத்தில், ஒவ்வொரு பிரிவின் கீழேயும் அப்பிரிவிற்கான தொடுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடுப்பின் மூலம் அப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம்.
3. புதிதாக மேலெழும்பும் சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் முதன்மை வாக்களிப்புப் பக்கத்திற்கு வந்து அடுத்தடுத்த பிரிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும்
4. அனைத்துப் பிரிவுகளுக்கும் வாக்களித்த பின்னர் முதன்மைப்பக்கதின் கடைசியில் உள்ள “வாக்கை உறுதி செய்கிறேன்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்திற்கு வந்து சேரும். இவ்வாறு உறுதி செய்யப்படாத வாக்குகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது.
5. அளித்த வாக்கினை வாக்கெடுப்பு நடக்கும் காலக்கெடுவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற இயலும். ஒவ்வொரு முறையும் தவறாமல் அளிக்கப்படும் வாக்கினை உறுதி செய்தல் வேண்டும்.
6. இவ்வாக்கெடுப்பு ரகசியமான ஒன்று. எனவே பதிவர்களின் தனிப்பட்ட வாக்கு விவரங்கள் வெளியிடப்படாது.
ஆர்வத்துடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி.
தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு
Comments
17 Responses to “முதற் கட்ட வாக்கெடுப்பு – தமிழ்மணம் விருதுகள் 2008”
Leave a Reply

//5. அளித்த வாக்கினை வாக்கெடுப்பு நடக்கும் காலக்கெடுவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற இயலும். ஒவ்வொரு முறையும் தவறாமல் அளிக்கப்படும் வாக்கினை உறுதி செய்தல் வேண்டும்.//
தமிழ் சமுதாயம் பற்றி இப்படி தரக்குறைவாக, தாறுமாறாக எழுதுவதா ? நாமெல்லாம் கொடுத்த வாக்கை தவற(விட)மாட்டோமே !
ஒரு சொல்லு, ஒரு வாக்குதான் !
)
எல்லாமே குழப்பமா இருக்கு ஐயா. அதுக்கு முன்னால எமக்கு ஒரு உதவி செய்ய முடியமா? தயவு செய்து எமது இணைத்துக்கு எப்படி ஒரு கருவிப்பட்டை(feed) தயாரிப்பது. என்று சொல்ல முடியுமா. யாராவது சொல்லவும்.
இணைய முகவரி :http://www.ithayanila.com
மின்னஞ்சல் முகவரி : rathees@ithayanila.com
நன்றியுடன் இதயநிலா யாழ் மண்ணிலிருந்து
எனக்கு நானே ஓட்டு போடமுடியுமா??
அப்படி போட்டால்தான் நம்ம பதிவுக்கெல்லாம் அட்லீஸ்ட் ஒரு ஓட்டாவது கிடைக்கும்.
இந்த உழவனோட “கரிசக்காட்டுப் பொண்ணு” கவிதையைக் கொஞ்சம் படிச்சாவது பாருங்க தமிழ் மக்களே..
Dear Sir,
Your rule says the qualification for a blogger to participate is the participant”s article should have been uploaded to T.Manam before 1.11.2008
//2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும்//.
but I am seeing there are lots of articles, appearing are after that qualified date.
Please clarify.
கருத்து கணிப்பு எங்கு நடக்கிறது
???? நாங்க அங்கவும் ஓட்டு போடுவோம்ல
ஒவ்வொருவரும் அவரவர்க்கே ஓட்டு போட்டுக்கொள்ளும் நிலை உள்ளது போல் தெரிகின்றதே
அவரவர்க்கு ஓட்டு போட்டுக்கொள்ளும் உரிமையை எடுத்து விட்டால் முடிவு இன்னும் நன்றாகவருமோ என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் வெறும் பதிவர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் என்பதால், வாசகர் ஓட்டு வர வாய்ப்பில்லை.
//ஒவ்வொருவரும் அவரவர்க்கே ஓட்டு போட்டுக்கொள்ளும் நிலை உள்ளது போல் தெரிகின்றதே
அவரவர்க்கு ஓட்டு போட்டுக்கொள்ளும் உரிமையை எடுத்து விட்டால் முடிவு இன்னும் நன்றாகவருமோ என்று எண்ணுகிறேன்.//
இதற்கு பதில்
//எனக்கு நானே ஓட்டு போடமுடியுமா??
அப்படி போட்டால்தான் நம்ம பதிவுக்கெல்லாம் அட்லீஸ்ட் ஒரு ஓட்டாவது கிடைக்கும். //
நாங்களெல்லாம் ஒரே ஒரு ஓட்டு வாங்குவதில் உங்களுக்கு ஏன் சார் இந்த கொலை வெறி
தேர்தல் பணி குழு தலைவர் யாருங்க நம்ம அஞ்சா நெஞ்சன் அழஅகிரி அண்ணனா?
அடுத்த திருமங்கலம் ரெடி போல.
ஒரு வோட்டுக்கு எவ்வளவு ரேட்
குப்பன்_யாஹூ
.
இந்தப் பெரிய பாரத பூமியிலேயே கள்ள ஓட்டுக்கு இடம் உண்டு. அநானிகளுக்கு வாக்குரிமை அளிக்குமாறு
அநானிகள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
அநானி
K.Ravishankar:
//2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும்//.
இக்காலக்கெடு பதிவுகளுக்கு(blogs) மட்டுமே. இடுகைகளைப் பொருத்தவரை பரிந்துரைகள் ஆரம்பிக்கும் தேதியே கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ithayanila:
உங்களின் வேண்டுகோளை admin AT thamizmanam.com க்கு அனுப்புங்கள்.
காசு வாங்காம ஓட்டு போடுற பழக்கம் எங்க பரம்பரைலேயே கிடையாது. எல்லோரும் காசோட என்னை அணுகவும் …
ஒட்டு வேட்டையாட யாராவது எதாவது ஐடியா குடுங்களேன் ..
குறிப்பா திருமங்கலம் ஊருக்காரங்களா இருந்தா நல்லா இருக்கும். ஏன்னா அவங்கதான அனுபவசாலிங்க..
என் சின்னம் : ” கரிசக்காட்டு பொண்ணு ” & ” விஜயின் “குருவி” படக் கதை – சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க ”
உழவன்
புரூனோ,
நீங்க 4 பதிவுகளை இணைத்திருக்கிறீர்களா?
3 தான் இணைக்க முடியுமின்னு சொன்னாங்க?!!!
-கரு
My vote to uzhavan. Thank You.
எனக்கு இன்னும் மடல்கள் வரவில்லையே
(… எப்போது அனுப்புவீர்கள்…
My vote to uzhavan as well his nice native poem “Karisal Kaatu Ponnu”….