இறுதிப் பரிந்துரைகளும், தவறான பரிந்துரைகளைச் சரி செய்தலும்

January 7, 2009 · Posted in அறிவிப்புகள் 

Tamilamanam Blog Awards 2008 Nomination Last Date

தமிழ்மணம் விருதுகள் 2008க்கான பரிந்துரைகள் நாளை(சனவரி 8 ) இரவோடு நிறைவு பெறுகின்றன. இதுவரை பரிந்துரை செய்யாதவர்களும், தங்களது முன்னைய பரிந்துரைகளை மாற்ற விரும்புபவர்களும் இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனைய பதிவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகள் பரிந்துரைகள் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன.

விருதுப் பரிந்துரையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு வழுவினால் 2008க்கு முன்னர் எழுதப்பட்ட இடுகைகளும் பரிந்துரைப் பக்கத்தில் தெரிந்தது. அஃது விரைந்து சரி செய்யப்பட்டு விட்டாலும் சில பதிவர்கள் தங்களது பழைய இடுகைகளையும் இவ்வாண்டு விருதுக்குப் பரிந்துரைக்க அவ்வழு ஏதுவாக அமைந்துவிட்டது. எனினும் விருதுகள் 2008ன் நெறிமுறைகளின் படி அவ்விடுகைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. மாற்றப்படாத இடுகைகள் விருதுப் பரிந்துரையின் முடிவில் தானியங்கியாக நீக்கப்பட்டுவிடும். எனவே பழைய இடுகைகளைப் பரிந்துரைத்த பதிவர்கள், இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்தி அவ்விடுகைகளுக்குப் பதிலாக இவ்வாண்டு (2008) இடுகைகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

தமிழ்மணம் விருதுகள் 2008ல் பங்குபற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விருதுத் தெரிவுகள் பற்றிய தகவல்கள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்மணம் விருதுகள் 2009 – ஒருங்கமைப்புக் குழு

Comments

6 Responses to “இறுதிப் பரிந்துரைகளும், தவறான பரிந்துரைகளைச் சரி செய்தலும்”

 1. இராம் on January 7th, 2009 2:13 pm

  பரிந்துரை பக்கங்களில் நிறைய பதிவுகள்,நல்லதொரு தொகுப்பு’காக வந்திருக்கு..

  நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம்.. 🙂

  நன்றி…

 2. V.J.Chandran on January 7th, 2009 2:32 pm

  எனது மின் மடலுக்கு பரிந்துரைக்கான எந்த மின்மடலும் கிடைக்கப்பெறவில்லை. அல்லது கிடைத்ததை தவறுதலாக அழித்துவிட்டேனோ தெரியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் மிகவும் வருந்துகிறேன். 2008 இல் அதிகம் பதிவுகள் எழுதவில்லை. எழுதிய ஒரே ஒரு பதிவை பரிந்துரை செய்ய விரும்புகிறேன். உதவ முடியுமா?

 3. தமிழ்மணம் on January 7th, 2009 4:41 pm

  சந்திரன்,
  உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

 4. V.J.Chandran on January 7th, 2009 5:04 pm

  Thank you

 5. கோவி.கண்ணன் on January 7th, 2009 10:50 pm

  //விருதுப் பரிந்துரையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு வழுவினால் 2008க்கு முன்னர் எழுதப்பட்ட இடுகைகளும் பரிந்துரைப் பக்கத்தில் தெரிந்தது. அஃது விரைந்து சரி செய்யப்பட்டு விட்டாலும் சில பதிவர்கள் தங்களது பழைய இடுகைகளையும் இவ்வாண்டு விருதுக்குப் பரிந்துரைக்க அவ்வழு ஏதுவாக அமைந்துவிட்டது. //

  அப்பாடா தப்பிக்க காரணம் கிடைச்சிட்டு, எனக்கு விருது கிடைக்கலை என்றால் தமிழ்மணம் குளறுபடிதான் என்று இனி தைரியமாக சொல்லுவேன்
  :)))))))

 6. Uzhavan on January 11th, 2009 12:02 am

  Jan 7 ku appuram entha thagavalum illai..

  eppa than vaakeduppu???

Leave a Reply