உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா?
உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா? இல்லையெனில் சனவரி 7 வரை உங்களுடைய இடுகைகளை நீங்கள் பரிந்துரை செய்ய இயலும். இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை இன்று முதல் பரிந்துரைகள் பக்கத்தில் காணலாம்.
மேலும் இப் போட்டி சார்ந்த சில விதிகளையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்மணம்
விருதுகளுக்கான தேர்வுகளில் தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்களின்
இடுகைகளும் இடம்பெறுகின்றன. தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்கள் ஏனைய
பதிவர்கள் போலவே போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் விருதுக்கான
இறுதித் தேர்வுகளில் இந்தப் பதிவர்களின் இடுகைகள் இடம்பெறாது. தேர்வு
செய்யப்படும் இடுகைகள் புகழ் அரங்கு பக்கத்தில் மட்டும் இடம்
பிடிக்கும்.
பதிவர்களுக்கு தமிழ்மணத்தின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Comments
19 Responses to “உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா?”
Leave a Reply
தமிழ்மணம் நிர்வாக்குழுவினர்க்கு,
தமிழ்மணம் திரட்டிக்கான கருவிப்பட்டையை என்னால் எனது வலைபூவில் இணைக்க முடியவில்லை. பலதரம் முயற்சித்தும் பயனில்லை. தயவு செய்து உதவுங்கள்.
ஏற்கனவே தங்கள் அட்மின் மின்னஞ்சல் முகவரிக்கு மடலொன்று எழுதியிருந்தேன். ஆயினும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
தாங்கள் இவ்விணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி செய்துபார்த்துள்ளேன். http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
ஆனால் எனது வலைப்பூவில் இடப்படும் மறுமொழிகள் மறுமொழிகளில் திரட்டப்படுவதில்லை.
தங்கள் கருவிப்பட்டையில் ஏதாவது தவறுள்ளதா ? அல்லது நான் ஏதாவுது தவறாக மாற்றம் செய்கிறேனா என்பதை அறியத்தாருங்கள்.
rameshsanthi@gmail.com அல்லது
parthipan.ramesh@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பதிலை தந்துதவுங்கள்.
சாந்தி
என்னுடைய வகுப்பறை பதிவிற்கான பரிந்துரை சுட்டி இதுவரை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரவில்லை.
ஆவன செய்ய வேண்டுகிறேன்
SP.VR.சுப்பையா
என்னுடைய இளையபல்லவன் பதிவிற்கு இன்னும் சுட்டி கிடைக்க வில்லை.
இடுகைத் தொடர்களுக்குத், தொடரின் முதல் இடுகையை மட்டும் பரிந்துரைத்தால் போதுமா??
ஆம் எனது வலைப்பதிவுக்கும் கருவிப் பட்டையை இணைக்க இயலவில்லை. இதனால் என்னாலும் தமிழ்மணத்தின் பயனைப் பெற இயலவில்லை.
SP.VR.Subbiah, இளைய பல்லவன்
உங்களுடைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கையேடு,
ஆம், முதல் இடுகையை மட்டும் பரிந்துரைத்தால் போதுமானது
இன்னும் இல்லை
எனது தளங்கள் மூன்றுக்கும் சுட்டி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தங்களின் உழைப்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல …
//ஆம், முதல் இடுகையை மட்டும் பரிந்துரைத்தால் போதுமானது//
இதை வாக்களிக்கும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் தனி இடுகையாக எழுதலாமே
why some of my posts are not showing up?
is there any filtering to what you pick?
for eg., this doesnt show up
http://surveysan.blogspot.com/2008/12/2009-success-formula.html
kil
Why mine not coming?
how to do?
please guide …
????
சர்வேசன்,
விருதுப் பரிந்துரைகள் ஆரம்பித்தபின் இடப்பட்ட இடுகைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
ஜமால்,
உங்கள் சிக்கலை தெளிவாகக் கூறுங்கள்.
எப்பொழுது ‘அனுப்பு’ கிளிக்கினாலும்
’புது இடுகைகள் இல்லை என்று வருகிறது’
இதுவரை எனக்கு ஓட்டிட யாராலும் இயலவில்லை.
தயவுசெய்து மின் மடல் இட்டு உதவுங்குள்
இன்றோடு பரிந்துரை வேறு முடிகிறது என்ன செய்ய …
எனது இடுகைகள் எப்பொழுது கிளிக்கினாலும் புது இடுகைகள் எதுவும் இல்லை என வருகிறது.
நேற்று டெம்ப்ளேட் மாற்றம் செய்து தமிழ்மணப்பட்டையை மீண்டும் இனைத்து, புது பதிவிட்டு ‘அனுப்பு’னேன். ஆனால் அதில் இருக்கும் ‘ஓட்டு’ போடும் விசையை என் நன்பர்களால் அழுத்த முடியவில்லை.
My friends are not able to click the ‘thumbs up’. And I never get any votes.
Please help to rectify.
வினவு வலைப்பூவில் http://vinavu.wordpress.com/ தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
வினவு வலைப்பூவில் (http://vinavu.wordpress.com) தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க லிங்க் வைத்துள்ளனர். அதுபோல வைக்க என்ன செய்ய வேண்டும்.