புத்தாண்டு வாழ்த்து

January 1, 2009 · Posted in தமிழ்மணம் 

தமிழ்ப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டில் தமிழ்ப்பதிவுகள் மேலும் சிறக்கட்டுமென்று தமிழ்மணத்தின் உளங் கனிந்த நல்வாழ்த்து!

Wishing all Tamil Bloggers and Readers, a Very Happy, Healthy, Peaceful and Prosperous Blogging in 2009!

Comments

18 Responses to “புத்தாண்டு வாழ்த்து”

 1. namnaadhu on January 1st, 2009 2:49 pm

  தமிழ்மணம் சிறந்து வாழ்க!

  தமிழ்மணம் கமழ வேண்டும்
  தாரணி புகழ வேண்டும்
  கமழுல கெல்லாம் நின்ற
  கற்றவர் குழும வேண்டும்
  அமி;ழ்தினும் இனிய நீதி
  அகிலெனப் பரவ வேண்டும்
  சுமையெலாம் இறக்கி வைக்கும்
  தேன்தமிழ்த் தளமே வாழ்க!

  உன்றனைக் கண்டேன் உள்ளம்
  ஒளிபெற நின்றேன் வையப்
  பொன்தடம் பதிந்த தாலே
  பூமியை வென்றேன் என்பேன்
  மன்பதை மனித மாண்பு
  மகத்துவத் துள்ளோர் எல்லாம்
  இன்பொடு ஒன்றாய் நின்றார்
  இதுதானே உலகம் என்பேன்!

  காலத்தை வென்ற நீதி
  களிநடம் புரியும் வீரர்
  பாலத்தை யார்க்கும் பூமி
  பட்டொளி வீசும் செய்ய
  ஞாலத்தைப் புதிதாய் ஆக்கும்
  நம்புவோம் தமிழ்ம ணத்தின்
  சீலத்தை உலகம் ஈர்த்துச்
  சிறந்திடும் தனமே வாழ்க!

  -நம்நாடு புதியபாரதி

 2. துளசி கோபால் on January 1st, 2009 6:00 pm

  எங்கள் பிடுங்கல்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு நல்ல மேடை அமைத்துக் கொடுத்திருக்கும் தமிழ்மணத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் இனிய புத்தாண்டுகளுக்கான வாழ்த்து(க்)கள்.

 3. தேவன் மாயம் on January 1st, 2009 6:10 pm

  தமிழ் மணமே!!

  தமிழ் நண்பர்களைத்தேடி
  அலையும் போது
  உன்னைக்கண்டோம்!!

  இத்தனை பதிவர்கள் தமிழிலா
  என்று வியப்புக் கொண்டோம்!!

  எவரும் பதியும் உரிமை
  கண்டு உவகை கொண்டோம்!!

  கருத்து சுதந்திரம்
  கொடி கட்டிப்
  பறக்கக் கண்டோம்!!

  கவிதைகள்
  இங்கு களிநடம் புரியும்
  கோலம் கண்டோம்!!

  உலகமே திரண்டு
  உள்ளங்கையில்
  உருளக்கண்டோம்!!!

  தரணித்தமிழர்
  ஒன்றாய்க்கூடி
  உவக்கக் கண்டோம்!!!

  தமிழர் அனைவரும்
  தமிழில் எழுதும்
  கனவைக்கண்டோம்!!

  எழுத்தில் வாராக் கருத்தை

  எல்லாம்
  உன் அகத்தில் கண்டோம்!!!

  புத்தாண்டு சிறக்க
  வாழ்த்துக்கள்
  பலர்
  வழங்கககண்டோம்!!

  உன்னை மறவாமல்
  உன்னையும்
  வாழ்த்த
  உள்ளம் கொண்டோம்!!!!

  இந்த புத்தாண்டில்
  தமிழ் மண நிர்வாகிகளுக்கும்
  தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
  தமிழ் மணத்தை
  மேலும் சிறப்பாக
  வழிநடத்திச்செல்ல
  வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  தேவா…..

 4. sathanga on January 1st, 2009 8:22 pm

  தமிழ்மணத்திற்கும் மற்றும் சக பதிவுலக நண்பர்களுக்கும் ‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!’

 5. SP.VR.Subbiah on January 1st, 2009 8:39 pm

  பல பாராட்டுக்கள், பல விமர்சனங்கள், பல தொழில் நுட்ப மாறுதல்களுக்குகிடையே, தமிழ் மணத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டில் தமிழ்மணம் மேலும் சிறக்கட்டும்

  Visitors Counter ஒன்றை தமிழ்மனத்தில் ஏற்படுத்த வேண்டுகிறேன். சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வருவோர்களின் எண்ணிக்கை தெரிந்தால் அந்த நாட்களைப் புறக்கணிக்காமல் பதிவிட உதவியாக இருக்கும்!

 6. ராமலக்ஷ்மி on January 1st, 2009 9:30 pm

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழ் தழைக்க தாங்கள் ஆற்றி வரும் சேவை தொடரட்டும்.

 7. T.V.Radhakrishnan on January 1st, 2009 9:52 pm

  தமிழ்மணத்திற்கும் மற்றும் சக பதிவுலக நண்பர்களுக்கும் ‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!’

 8. லக்கிலுக் on January 2nd, 2009 4:50 am

  புரிந்துணர்வோடு தொடரும் தமிழ்மணத்தின் ஒத்துழைப்புக்கு நன்றியும் வாழ்த்துகளும்! 🙂

 9. தாமிரா on January 2nd, 2009 8:06 am

  நன்றி.! வாழ்த்துகள்.!

 10. தமிழன்-கறுப்பி... on January 2nd, 2009 12:52 pm

  நன்றிகள் தமிழ் மணம்

  புத்தாண்டு வாழ்த்துக்கள்..

 11. செந்தழல் ரவி on January 2nd, 2009 5:17 pm

  கொஞ்சம் ப்ளாகர் இலவச டெம்ப்ளேட்டுகளும் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்….

 12. இரவா on January 3rd, 2009 8:28 am

  மணக்கின்ற தமிழே!

  மணக்கின்ற தமிழே! உன்னை
  மறைக்கின்ற நிழல்கள் தன்னைத்
  தணக்கின்ற சொல்லால் சாய்த்துத்
  தடுக்கின்ற ஆற்றல் போலக்
  குணத்திடும் இணையம் தன்னில்
  கோபுரம் போல ஓங்கி
  மணத்திடும் “தமிழ்ம ணத்தை”
  மாண்புறச் செய்தோர் வாழ்க! (1)

  இணையத்தில் எழுது கின்ற
  இன்றமிழ் இலக்கி யத்தை
  இணையற்ற தொகுப்பா யாக்கி
  ஈன்றநம் தமிழ்க்கு நல்கும்
  பணியினைச் செய்ய வேண்டும்!
  பாரெலாம் வியந்து நோக்க
  துணிவுடன் தமிழ்ம ணத்தைத்
  தூயதாய்ச் செய்தல் நன்றாம்! (2)

  புகைந்திடா நெருப்பைப் போல,
  பூத்திடாப் பூவைப் போல,
  அகழ்ந்திடக் கிடைக்கும் நல்லோர்
  அணிந்திடும் அறிவைத் தேடிப்
  பகிர்ந்திடும் பணியைச் செய்யும்
  பண்பினைப் பெறுதல் என்றால்
  உகந்திடும் உவகைக் காக
  ஒன்றியம் ஒன்றைச் செய்வீர்! (3)

  செல்லுகள் அரித்த ரித்துச்
  சிதைந்திடும் தமிழர் தம்மின்
  தொல்லகப் படைப்பை யெல்லாம்
  தூயதாய் மீட்டெ டுக்கும்
  நல்லகர் அணியை ஆங்கு
  நடத்திட வேண்டு கின்றேன்!
  வல்லவர் குறைந்து போனால்
  வதைபடும் தமிழும் என்னும் (4)

  உண்மையைத் தமிழர் தாமும்
  உணர்ந்திடச் செய்தல் வேண்டும்!
  புண்ணிய தீர்த்தந் தேடிப்
  போவது போலச் சென்று
  மண்ணிலே மறைந்து போகும்
  மணித்தமிழ்க் கலைகள் தம்மை
  வண்மையாய் வாங்கி வந்து
  வாழ்ந்திடச் செய்வோம் வாரீர்! (5)

  ஒன்றியம் தன்னைப் போல
  உருபெறும் தமிழ்ம ணத்தை
  வென்றிடச் செய்ய வாரீர்!
  விருதுகள் பலவும் பெற்றுச்
  சென்றிடும் மகிழ்வு கொண்டு
  செந்தமிழ்ப் பணிக்கு வாரீர்!
  முன்றிலின் இணையந் தன்னில்
  மொய்த்திடச் செய்வோம் வாரீர்! (6)

  இருக்கும் வரை தமிழ் அணையில்
  அன்புடன்
  இரவா

  வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
  இணையம்: http://www.thamizhkkuil.net
  ஆயம்: http://groups.google.com/group/thamizayam/topics?gvc=1

 13. தினமும் காலையில் குட் மார்னிங்க்கூடச் சொல்லலாமே 🙂

 14. இணையம்

  உலகை இணையம் இணைக்கும்; உலவு பவரைப் பிணைக்கும்;இலகு வாக எதுவும் எவரும் சொல்ல உதவும்;பலரும் பகலும் இரவும் படித்து மகிழ்ந்து பரவும்வலையின் துணையைக் கொண்டே வளர்வோம்; வரையும் உண்டோ? ~ வி. சுப்பிரமணியன்

  தமிழ்த்தாயின் இணையக்கோயில்!

  இணை அறியா எழில் உறு நல் நூல்கள் திருமேனி தனில் இழையாய்ப் பூண்டுதுணை அதுவே என்று அறிஞர் துருவும் நிகண்டு அகராதி தொடையாச் சூடிக்கணை அன கூர் மதி பெருகக் கணினி வழி வலை உலவிக் கற்போர்க்கு ஏற்பஇணையம் இது ஓர் இல்லமெனத் தேர்ந்து தமிழ்த் தாயே ஈண்டு இலங்குவாயே.
  ~ வெண்பாவிரும்பி

 15. ஐயோபாவம் சுந்தர் on January 4th, 2009 2:41 am

  //தினமும் காலையில் குட் மார்னிங்க்கூடச் சொல்லலாமே//

  எப்படி, உதவாக்கரை குப்பையெல்லாம் கவிதைன்னு தினமும் நீங்க அள்ளித்தெளிக்கிற மாதிரியா?

  🙂

 16. /எப்படி, உதவாக்கரை குப்பையெல்லாம் கவிதைன்னு தினமும் நீங்க அள்ளித்தெளிக்கிற மாதிரியா?
  /

  அப்படியும் சொல்லலாம், இல்லாவிட்டால் மேலே இருக்கும் கவிதைகள் மாதிரின்னும் சொல்லலாம்.

  வாங்கின காசுக்குமேலயே கூவுறானுங்களே 🙂

 17. சென்னை சம்பந்தம் on January 4th, 2009 11:20 pm

  //வாங்கின காசுக்குமேலயே கூவுறானுங்களே //
  பதிவர்களை இது போல கேவலப்படுத்தாதீர்கள் சுந்தர்.

  நீங்கள் கூட ஒரு புக்மார்க் சேவைக்கு கொடி தூக்குகிறீர்கள். இப்படி தான் காசு வாங்கிக்கொண்டு தூக்குகிறீர்களா ?

  இதை போன்ற விவாதங்களை தவிர்ப்பது தான் உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு அழகு

 18. சென்னை சம்பந்தம், பதிவர்களைக் கேவலப்படுத்துவது ஐயோபாவம் சுந்தர் போன்றவர்கள்தான். அவர்களுக்குச் சொல்லவேண்டியதை எனக்குச் சொல்கிறீர்களே…

  அது என்ன புக்மார்க் சேவை? அதற்கு நான் எப்போது கொடி தூக்கினேன்? இதுமாதிரியான அவதூறுகளை நிறுத்துங்கள்.

Leave a Reply