இடுகைகள் பரிந்துரை ?

1. விருதுகள் 2008ன்னு அறிவிச்சிட்டு 2006ல எழுதுன இடுகைகளையும் பரிந்துரைப்பக்கத்தில காண்பிக்கறீங்க?
2. தவறுதலா நடந்தது இப்போ சரிசெய்யப்பட்டிருக்கு. ஏற்கனவே பழைய இடுகைகளை பரிந்துரை செஞ்சவங்க மறுபடியும் சரியான இடுகைகளை தெரிவு செய்ய வேண்டியதிருக்கும்.
1. சரி செய்யப்பட்டதில ஒரு சில இடுகைகள் ரெண்டு மூணு தடவை தெரியுதே?
2. அப்படி ஒரு வழு இருக்கறது தெரியும். அதனால எந்த சிக்கலும் இல்லை. இப்போதைக்கு அது அப்படியே தான் தொடரும்
1. விருதுகள் -2008க்கு பதிவர்களோட பங்களிப்பு எப்படி இருக்கு.
2. நல்லாவே இருக்கு.
1. இதுவரைக்கும் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளைப் பார்க்கலாமா?
2. வாக்களிப்புக்கு முன்னாடியே பொதுப்பார்வைக்கு வைக்கலாமான்னு ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு. அனேகமா முன்னாடியே பொதுப்பார்வைக்குக் வைப்போம்.
1. விருதுகள் நடைமுறையில பதிவர்கள் சிலபேர் சிக்கல்கள் இருக்கறதா சொல்லியிருக்காங்களே?
2. விருதுகள் நடைமுறை பற்றிய தங்களோட கருத்துக்களையும், சிக்கல்களையும் எங்களுக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி. கூடுமானவரைக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முயற்சி செய்துகிட்டு இருக்கோம். இப்போ குழுவில எல்லாரும் விடுமுறையில இருக்கறதால பதிவர்களுக்கு பதில் சொல்றதுலயும், சிக்கல்களை களைவதிலும் அதிகமான காலதாமதம் இருக்கு.
1. பதிவர்கள் விருதுகள் குழுவினரை எப்படி தொடர்பு கொள்றது?
2. பின்னூட்டங்கள் மூலமா தொடர்புகொள்ளலாம்னு ஏற்கனவே அறிவிச்சிருந்தோம். அதுபோக admin@thamizmanam.com ன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம். அதுலயும் இப்போதைக்கு காலதாமதம் உண்டு. விடுமுறை கால தாமதத்தை பதிவர்கள்
புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்
1. வேற எதாவது சிக்கல் இருந்தா தொடர்பு கொள்ளலாமா?
2. நிச்சயமா. அப்புறம் மறந்துடாம உங்களோட இடுகைப் பரிந்துரையையும் செஞ்சிடுங்க.
Comments
13 Responses to “இடுகைகள் பரிந்துரை ?”
Leave a Reply

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!
பரிசு கொஞ்சம் போட்டுக்குடுங்கவே !!! ப்ரவுசிங் செண்டர்ல கடன்….
ஒரு பதிவர் ஒன்றிற்கும் மேற்பட்ட பதிவுகள் வைத்திருந்தால் இரண்டு பதிவுகளுக்கும் இந்தப் பதிவுரை பரிந்துரைக்கும் பக்கத்தை அனுப்பியுள்ளீர்களா?
நான் எப்படி என்னோட பதிவை எப்படி இணைக்கிறதுன்னு தெரியலயே? எனக்கு சுட்டி கிடைக்கல.
//2. தவறுதலா நடந்தது இப்போ சரிசெய்யப்பட்டிருக்கு. ஏற்கனவே பழைய இடுகைகளை பரிந்துரை செஞ்சவங்க மறுபடியும் சரியான இடுகைகளை தெரிவு செய்ய வேண்டியதிருக்கும்.//
ஏற்கனவே பரிந்துரை செய்த்தை எப்படி அறிய முடியும்
SP.VR.Subbiah
தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் பரிந்துரைத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.
புருனோ,
உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்புக்கு மறுபடியும் செல்லும் போது பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை காணமுடியும். தெரிவு செய்யும் புள்ளி நீங்கள் பரிந்துரை செய்த இடுகையில் இருப்பதை காணலாம். பிறிதொரு இடுகையை தெரிவு செய்வதன் மூலம் உங்களது பரிந்துரையை மாற்ற இயலும்.
நன்றி தமிழ்மணம்
ஆனா பரிசு கட்டாயமா எனக்கு தரணும்…:)
//////SP.VR.Subbiah
தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் பரிந்துரைத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது./////
வகுப்பறைப் பதிவு (URL: http://classroom2007.blogspot.com)
மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com
இன்னும் பரிந்துரைத் தொடுப்பு வரவில்லை. அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
அன்புடன்
SP.VR.Subbiah
அவ்வ்வ்வ்வ்
எதை சொன்னாலும் பதில் இல்லை…
சரி விருதை இடது கையால வாங்கலாமா வலது கையால வாங்கலாமா ?
அனபோஸ்ட்லே நானே ஜெயிச்சதா அறிவிச்சிடுங்க!
எதுக்குங்க இந்த தேர்வு எல்லாம்?
//உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்புக்கு மறுபடியும் செல்லும் போது பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை காணமுடியும். தெரிவு செய்யும் புள்ளி நீங்கள் பரிந்துரை செய்த இடுகையில் இருப்பதை காணலாம். பிறிதொரு இடுகையை தெரிவு செய்வதன் மூலம் உங்களது பரிந்துரையை மாற்ற இயலும்.//
நன்றி. இப்பொழுது புரிகிறது.
அப்படியென்றால் சனவரி 7 வரை விருப்பப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்
நல்ல வசதி
‘காதல்/ குடும்ப / அனுபவங்கள்’ என்பது போன்ற ஒரு பிரிவு இல்லாததால் எனது பதிவுகளை எந்த பிரிவில் போட்டியிட வைப்பது என தெரியாமல் மண்டை காய்ந்து கடைசியில் “அரசியல்/ சமூகம், பகுத்தறிவு/ ஆன்மீகம்” போன்ற பகுதிகளில் இணைத்துள்ளேன். ஏதோ நம்மால முடிஞ்சது.. நீங்களும் மண்டை காயுங்கள்..
//அனபோஸ்ட்லே நானே ஜெயிச்சதா அறிவிச்சிடுங்க!
எதுக்குங்க இந்த தேர்வு எல்லாம்?///
அன்னபோஸ்ட்டா ? அடப்பாவிமக்கா ? நல்ல கும்மி !!