தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்
தமிழ்மணம் பதிவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய விருதுகள் 2008 க்கான இடுகைப் பரிந்துரைகள் இன்றுமுதல் துவங்குகின்றன. உங்களது இடுகைப் பரிந்துரைக்கான சிறப்புத் தொடுப்பு, தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு இன்று அனுப்பப்படுகிறது. இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால் அம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.
மின்னஞ்சல் பெறுவதற்கு உங்களது பதிவு 01-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டிருக்கும் மின்னஞ்சலை மாற்றுவதற்கான கோரிக்கைகள் தற்சமயம் ஏற்றுக்கொள்ளப் பட இயலாது. எனினும் மின்னஞ்சல் கிடைக்கப்பெறாதவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது admin@thamizmanam.com எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம். இஃது விடுமுறைக்காலமாதலால் பதிலிறுப்பதில் அதிகமான காலதாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இடுகைப் பரிந்துரைகள் இன்று தொடக்கம் 07-01-2009 வரையான கால இடைவெளியில் ஏற்றுக்கொள்ளப்படும். இடுகைப் பரிந்துரைகள் மற்றும் விருதுத் தெரிவு முறைகள் பற்றிய விரிவான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது போல் கீழ்க்காணும் 12 பிரிவுகளுக்கு நடைபெறுகிறது. இதில் ஏதாவது 3 பிரிவுகளுக்கு மட்டுமே உங்களது இடுகைகளைப் பரிந்துரைக்க இயலும்.
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
11. நகைச்சுவை, கார்ட்டூன்
12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெரும் இடுகைகள் வெற்றி பெற்றவையாக கருதப்படும். வெற்றி பெரும் பதிவர்கள் உபயோகித்துக் கொள்ளும் வகையிலான மாதிரிப் பதக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

விருதுகள் நிகழ்வுகள், வலைப்பதிவுகள் எனும் ஊடகத்தை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பொதுவெளியில் வலைப்பதிவுகளின் தாக்கத்தினை அதிகரிக்கவுமான ஒரு ஆக்கப்பூர்வமான நிகழ்வு மட்டுமே. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்மணம் விருதுகள் 2008ல் ஒவ்வொரு பதிவரினதும் சிறந்த இடுகைப் பரிந்துரைகளை ஏனைய பதிவர்கள் போல் தமிழ்மணம் குழுவினரும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு
Comments
21 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்”
Leave a Reply

நன்றி! நன்றி!! நன்றி!!!
தகவலுக்கு நன்றி!
பரிந்துரை – ஏற்கனவே வந்த பதிவுகளின் மூலம் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா – அல்லது நாங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா.
(நாம புதுசுங்கோ – சொல்லி கொடுங்க)
எனக்கு மெயில் வரலையே??? April 2006′லே தமிழ்மணத்திலே என்னோட பிளாக் இணைச்சதா ஞாபகம்..
//தகவலுக்கு நன்றி!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
விருதுகள் நல்ல முயற்சி!
வரவேற்கிறேன்!!!
தேவா…
விவசாயத்திற்கு(கிராம வளர்ச்சி) ஒரு பிரிவு சேர்த்து இருந்திருக்கலாம்
வணக்கம்
மூன்று பிரிவுகளிலும் தேர்ந்தெடுப்பது எப்படி என்று சொன்னால் நன்றாய் இருக்கும்.
இரண்டு பிரிவுகள் சிக்கலின்றி சென்றது.மூன்றாம் பிரிவில் தேர்ந்தெடுத்து மற்றைய பிரிவுகளில் விருப்பமில்லை என்று சொடுக்கினால் சரியாக வரவில்லை.
அறிவிப்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
மதுரை பாபாராஜ்
நல்ல அறிவிப்பு…
ஒவ்வொரு துறையிலும் பரிசுபெற விழையும் வலைஞர்களை அன்புடன் இப்போதே வாழ்த்துகிறேன்….
(அய்யா நாமளும் கவிதைகளை அவ்வப்போது நம்ம பூவில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்…..
இணைச்சுக்குவீங்கலா??????????????)
ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.
http://rnagappan.blogspot.com
எனக்கில்ல…. எனக்கில்ல…. சொக்கா! நான் லேட்டா பதிவு பண்ணிட்டேன். விருது பெறப்போகும் பதிவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
anbuvanam.blogspot.com
தகவலுக்கு நன்றி!
அறிவிப்பு கிடைக்கப் பெற்றேன். ஊக்கம் கொடுக்கும் நல்ல முயற்சி. நன்றி.
நல்லது.. இவ்ளோ சீக்கிரமாக அறிவிப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. ஆச்சரியப்பட்டேன்.
ஆனால் பரிசுத் தொகைதான் கொஞ்சம் கம்மி.. முந்தின பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்..
இருந்தாலும் பரவாயில்லை.. மூடு இருந்தால் போட்டிக்கு வருகிறேன்..
வாழ்க வளமுடன்
எமக்கெல்லாம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. யாருக்கு கிடைக்கும் என அறிய மட்டும் ஆவலாக காத்து இருக்கிறோம்.
எமக்கெல்லாம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. யாருக்கு கிடைக்கும் என அறிய மட்டும் ஆவலாக காத்திருக்கிறோம்.
மிக எளிமையாக பதிவுகளை தரும் முறையை வைத்தது மிகவும் சிறப்பு
didnt properly ALIGN for IE
தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் பற்றிய அறிவிப்பை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
I have not received the link. Pls. do the needful.
Thanks
எனது இந்தப் பதிவிற்கு உரிய இணைப்பு மின்னஞ்சல் கிடைக்க வில்லை!அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
என்னுடைய பதிவையும் இடுகைகளையும் இணைக்க ஆவலாய் உள்ளேன். ஆனால் எனக்கு சுட்டி கிடைக்கவில்லை.
உடனடியாக சுட்டி அனுப்பிவைக்கவும். நன்றி.