சூடான இடுகைகள் செம்மையாக்கம்

December 24, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழில் வலைப்பதிவுகள் பெருக வேண்டுமென்றும், அனைத்துத் தரப்பு வாதங்களும் ஆரோக்கியமாக இடம் பெறும் ஊடகமாக வலைப் பதிவுகள் இயங்க வேண்டுமென்றும் தமிழ்மணம் விரும்புகிறது. அந்த நோக்கத்துடனேயே வலைப்பதிவுகளைத் திரட்டி இற்றைப் படுத்தித் தமிழ்மணத்தின் வெவ்வேறு பகுதிகளில் தருகிறது.

சூடான இடுகைகள், வாசகர்கள் எதனை அதிகம் வாசிக்கிறார்கள் என்பதன் ஒரு குறியீடு மட்டுமே. அதேநேரத்திலே தமிழ்மணம் சூடான இடுகைகளில் தொடர்ந்து இடம் பெற வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே போடப்படும் பதிவுகள் அதிகரித்த நிலையிலே இந்த வசதியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் தற்பொழுது சோதனையில் உள்ளன.

அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து எழுதப்படும் இப்படியான பதிவுகளை வடிகட்டுவது மட்டுமின்றி், வேறு நுட்ப முறைகளிலும் கையாள்வது பற்றித் தமிழ்மணம் விவாதித்து வருகிறது. இதற்கான வடிகட்டுச் சொற்களைத் தொடர்ந்து் தமிழ்மணம் மேம்படுத்தி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி சூடான இடுகைகள் என்பது அதிகம் படிக்கப்படும் இடுகைகள் என்பது மட்டும் அல்ல, இந்த நுட்பங்களின் வழியாகவும் தெரிவு செய்யப்படும் இடுகைகள் ஆகும்.

இவை தவிர தொழில்நுட்ப அளவில் இன்னும் பல மாற்றங்களை படிப்படியாகச் செயல்படுத்த இருக்கிறோம். இதற்கான ஆலோசனைகளைப் பதிவர்களும் எமக்கு அளிக்கலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

50 Responses to “சூடான இடுகைகள் செம்மையாக்கம்”

 1. நாமக்கல் சிபி on December 24th, 2008 1:33 am

  முதலில் சூடான இடுகை என்றால் என்ன? அவற்றைத் தனிமைப் படுத்திக் காட்டுவதன் பயன்தான் என்ன?

  நல்ல பதிவு என்றால் பலரும் தேடிப் பிடித்துப் படிக்கப் போகிறார்கள்! அவற்றை தேர்ந்தெடுக்க தமிழ்மணம் ஏன் இவ்வள்வு சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்?

 2. ila on December 24th, 2008 1:38 am

  1. பரிந்துரையின் படி -ve மதிப்பெண் கொண்ட பதிவுகள் சூடான இடுகையில் தவிர்க்கலாம்
  2. அதிகம் பின்னூட்டம் பெற்ற பதிவுகளை தவிர்க்கலாம்
  3. 12மணி நேரம் மட்டுமே Aging தரலாம்.

 3. ila on December 24th, 2008 1:42 am

  //கடந்த 2 நாட்களில் வாசகர்கள் பரிந்துரைத்தவை//
  பரிந்துரைகளைக்கூட செம்மைப்படுத்தலாம்..

  ஒரு நாளுக்கென மாற்றலாம்.

 4. லக்கிலுக் on December 24th, 2008 1:44 am

  இந்தப் பதிவு சூடான இடுகையில் வரவேண்டுமென்று எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன் 🙂

 5. Surveysan on December 24th, 2008 1:45 am

  //1. பரிந்துரையின் படி -ve மதிப்பெண் கொண்ட பதிவுகள் சூடான இடுகையில் தவிர்க்கலாம்
  //

  good one.

 6. லக்கிலுக் on December 24th, 2008 1:46 am

  http://timeforsomelove.blogspot.com/2008/12/blog-post_23.html – இந்த இடுகை இப்போது சூடான இடுகைகளில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்மண நிர்வாகம் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

  இதுபோன்ற ஆரோக்கியமான இடுகைகளே தொடர்ந்து சூடான இடுகைகளில் இடம்பெற வாழ்த்துக்கள்! 🙂

 7. pvina on December 24th, 2008 2:04 am

  //பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன//

  அது மட்டுமல்ல. பிற் மதத்தினரின் தெய்வப்பெயர்களை கிண்டல் செய்யும் நோக்கத்துடன் எழுதப்படும் எவையும் தள்ளிவைக்கப்ப்டவேண்டும்.

  இதைப் பாருங்கள்;

  //இந்தப் பதிவு சூடான இடுகையில் வரவேண்டுமென்று எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன் //

  எந்தவொரு கரணியம் இல்லாமல் ஒரு தெய்வத்தின் பெயர் கிண்டலிடிக்கப்படுகிறது.

  மதக்கொள்கைகள் விமரிசிக்கப்ப்டலாம் பதிவுகளில். ஆனால் முறையாக. சுவையாக.

  கிண்டல் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்தால் அப்பதிவு வெளியே தள்ளப்படவேண்டும்.

  மதம் பற்றிய பதிவுகளின் மேல், நல்ல கவனம் தேவை.

 8. கோவி.கண்ணன் on December 24th, 2008 2:09 am

  //அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//

  அப்படி எழுதும் பதிவர்களை இனம் கண்டு கொள்ள ஆவல் தான், யார் யார் பதிவுகளை நீக்கப்பட்டுள்ளது என்று தமிழ்மணம் சொல்லலாமே. வாசகர்கள் அந்த இடுகைகளைத் தவிர்க்க தமிழ்மணம் ஊக்கப்படுத்தலாமே.

 9. டோண்டு ராகவன் on December 24th, 2008 3:01 am

  //அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//

  அப்படியா, நன்று. அந்த சில பதிவர்கள் யார்?

  எனது சமீபத்திய பதிவுகளின் ஒரு பகுதி லிஸ்ட் கீழே தந்திருக்கிறேன். மேலே நீங்கள் சொன்னது எனது எந்தப் பதிவுக்குப் பொருந்தும் என கூற இயலுமா?

  1. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!
  2. டோண்டு பதில்கள் 19.12.2008
  3. புதுக்கோட்டுக்கு ஜூட் – 3
  4. புதுக்கோட்டுக்கு ஜூட் – 2
  5. புதுக் கோட்டுக்கு ஜூட்!
  6. போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்
  7. சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் – 4
  8. டோண்டு பதில்கள் 12.12.2008
  9. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
  10. நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி
  11. ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல
  12. ஜென் கதை தூண்டிய எண்ணங்கள்
  13. ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது
  14. எனக்கொரு மகன் பிறப்பான்

  இப்பின்னூட்டத்தை நிஜமாகவே டோண்டு ராகவன்தான் இட்டான் என்பதை குறிக்க இதன் நகலை எனது இபதிவிலும் பின்னூட்டமாக வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_22.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 10. babu on December 24th, 2008 3:54 am

  அளித்திருக்கும் மொத்த வாக்குகளில் ,எதிர் வாக்குகள் அதிகமாக இருப்பது கூட சூடான இடுகைகளில் வருகிறது,அதை தவிர்க்கலாம்
  உங்களுடைய இந்த நடவடிக்கை மிக சரியானதே.
  ஒரு சில பதிவர்கள் தங்கள் சுய நலத்திற்காக இதை எதிர்க்கலாம்,அதை புறம் தள்ளி விடுங்கள்

 11. லக்கிலுக் on December 24th, 2008 5:00 am

  //எந்தவொரு கரணியம் இல்லாமல் ஒரு தெய்வத்தின் பெயர் கிண்டலிடிக்கப்படுகிறது.//

  என்ன கொடுமை சார் இது? இந்தப் பதிவர் என் தெய்வநம்பிக்கையை ஏன் இப்படி கேவலப்படுதுகிறார்? 🙁

  முன்பெல்லாம் பார்ப்பனீயத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ப்ரொஃபைல் இல்லாமல் பின்னூட்டம் போடுவார்கள். இப்போதெல்லாம் தமிழ்மணத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ப்ரொஃபைல் இல்லாமல் ஆங்காங்கே பின்னூட்டிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல பரிணாம வளர்ச்சி 🙂

 12. கிரி on December 24th, 2008 5:22 am

  //இனி சூடான இடுகைகள் என்பது அதிகம் படிக்கப்படும் இடுகைகள் என்பது மட்டும் அல்ல, இந்த நுட்பங்களின் வழியாகவும் தெரிவு செய்யப்படும் இடுகைகள் ஆகும்//

  நல்ல காரியம் செய்தீங்க 🙂 விரைவில் இதில் உள்ள குறைகள் நீக்கப்படும் (தற்போது சோதனை முறையில் இருப்பதால்) என்று நம்புகிறேன்.

 13. kaviya on December 24th, 2008 6:29 am

  //அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//

  Good

 14. செந்தழல் ரவி on December 24th, 2008 6:31 am

  இந்த இடுகையை இட்டுவிட்டு தூக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்…பரவாயில்லை, இந்த இடுகையாவது வந்ததே !!!

  நன்றி !!

 15. கண்மணி on December 24th, 2008 7:12 am

  நாமக்கல் சிபி சொன்னது போல சூடான இடுகை எந்த அளவுகோலின் அடிப்படையில் வருகிறது என்பதை தமிழ்மணம் இன்னும் வெளிப்படையாகத் தெரியப் படுத்தலாம்.இதையே ‘மகுடம்’ தேர்வுக்கும் செய்யலாம்.
  பதிவுகள் பெரும்பாலும் நன்கு பரிச்சயப்பட்ட பதிவர் அல்லது தலைப்பின் ஈர்ப்பு[பொருளடக்கம்] கொண்டே வாசிக்கப் படுகிறது.அவ்வாறு வாசிக்கப்படும் எல்லா பதிவுகளும் எல்லா நேரத்திலும் அதிக பின்னூட்டம் பெறும் என்பது இல்லை.
  அதுபோல + அல்லது – குத்து என்பது முற்றிலும் நியாயமாக படிப்பவர்களால்இடப்படுவதில்லை.தனிப்பட்ட காழ்ப்போ அல்லது பதிவின் தன்மையோ அல்லது ஒருவரே வெவ்வேறு IP யிலிருந்தோ அல்லது ஒரே கணிணியில் தினம் ஒருமுறை தாமே கூட குத்த வாய்ப்பிருக்கு.
  எனவே பின்னூட்ட எண்ணிக்கை அதிக ஸ்டார் மதிப்பெண் இரண்டும் வெவ்வேறாக இருக்கலாம்.
  இதை அளவுகோலாக வைத்து சூடான அல்லது மகுடம் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்போதுள்ள சூழலே தொடரலாம்.
  குறிச்சொற்களின் பகுப்பீட்டை இன்னும் அதிகமாக வகைப் படுத்தி முகப்பில் தந்தாலே போதும்.
  எத்தகைய சிறப்பான அல்லது சுமாரான இடுகை எதுவாயினும் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் மட்டுமே முகப்பில் தெரியச் செய்யனும்.
  மொத்தத்தில் தமிழ்மண முகப்பு இப்போது முன்பு போல் மணக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்

 16. கண்மணி on December 24th, 2008 7:18 am

  தமிழ்மணத்தின் இந்த இடுகை 1/5 [4-குத்து] பெற்று மொத்தமே ஒன்பது[9] பின்னூட்டம் மட்டுமே பெற்று சூடான இடுகையில் எப்படி வந்திருக்கிறது?இதைவிட அதிகம் பின்னூட்டம் பெற்ற மைனஸ் வாங்காத இடுகைகள் ஏன் இடம் பிடிக்க வில்லை.
  எனில்,உங்கள் அளவுகோல் என்ன?

  இந்த பகுதி தேவையா என்பதையும் ஆலோசிக்கவும்.இப்படியொரு பகுதி ஆரம்பிக்கப்பட்ட பிறகே ‘தலைப்புகளில்’ சூடு பிடித்து தமிழ் ‘மணம்’ இப்படியாகிவிட்டது.

 17. கொழுவி on December 24th, 2008 8:44 am

  எனது அறிவுக்கு எட்டியவரை சூடான இடுகை – தமிழ்மணத்திலிருந்து கிளிக்கிய எண்ணிக்கை அடிப்படையில் செயற்படுகிறது என நினைக்கிறேன். on clicks..

  ஆக சூடான இடுகையென்பது நல்ல இடுகையாயிருக்கும் என கருத இடமேயில்லை. அது லொஜிக்கும் இல்லை.

  வாசகர் பரிந்துரையென்பது பதிவை படித்த பிறகு இடப்படுவது. (தனிப்பட்ட கோபதாப காழ்ப்பு ஆப்பு செயற்பாடுகளுக்கு அப்பால்.. ஓரளவுக்கு நிறைய பரிந்துரை இருந்தால் நன்றாயிருக்கும் என கருதமுடிகிறது.)

  சூடான இடுகை அப்படியல்ல. பதிவை படிக்க முன்பே.. தலைப்பை பார்த்து அதனைத் தமிழ்மணத்தில் கிளிக்கி பதிவுக்கு சென்றால்.. செல்லும் எண்ணிக்கையில் பதிவு சூடாகிறது.

  ஆக.. சூடான இடுகையில் நல்ல இடுகைகளை எதிர்பார்க்கிறோம் என்பது லாஜிக் இல்லாத விடயம். ஏனெனில் பதிவை படிக்க முன்பே சூடான இடுகைக்கு செல்வதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்து விடுகிறோம்.

  அதிலும் – யாரும் இதுவரை படிக்காத ஆனால் 200 பேர் தமிழ்மணத்திலிருந்து கிளிக்கிய (ஆனால் படிக்காத) இடுகை கூட சூடான இடுகையாக வர சகல சாத்தியமும் உண்டு.

  வாசகர்களின் கிளிக்குகளில் சூடான இடுகை தீர்மானிக்கப்படும் நுட்பம் இதுவரை பயன்படுத்தப்பட்டால் (பொதுவான hot post நுட்பம் அதுதான்) அச் சூடான இடுகை அதே நுட்பத்தில் ஒரு ஓரமாக கிடந்து விட்டுப் போகலாம். ஆனால் சூடான இடுகையென்பது நல்ல இடுகைக்கான பரிந்துரை அல்ல என்ற நிபந்தனையுடன்.

  இப்போது இந்த நுட்பத்தில் சில பில்டரிங் வேலைகளை செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். சில குறிச் சொல்கள்.. (இது சாத்தியமில்லை. வெறி பிடித்த சிங்கள அரசே என்றால் கூட பதிவு வராமல் போயிடும். அதனால் லொஜிக்கை இப்பிடித்தான் போடணும்

  if(வெறிநாய் or சொறிநாய் and (பதிவர் பெயர்1 or பதிவர் பெயர் 2)

  (நிறைய if and or condition தேவைப்படும் :):)

  ——————————

  ஆக.. சூடான பதிவென்பது பரிந்துரைக்கப்படும் பதிவுகள் அல்ல என்பதையும் அவ்வாறு நல்ல பதிவுகளாயிருந்த பிறகு வாசித்த பிறகு சூடான பதிவுகளாகும் வாய்ப்பே இல்லையென்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ளணும். இன்னும் சொல்லப் போனால்.. சூடான பதிவுகள் என்பதே தவறான பெயர். சூடான தலைப்புக்கள் என்பதுதான் சரி.

  ———————–

  ஆனால் தமிழ்மண நடவடிக்கையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்றால் – தமிழ்மணத்தில் பதிவுகள் இணைக்கப்பட்டால் – அவற்றின் தங்கும் நேரம் 2 அல்லது 3 மணிநேரம் மட்டுமே. தவிர மறுமொழிகள் வந்தால் ஒவ்வொரு தடவையும் 2 மணிக்கும் குறைவான தங்குதல் நேரம் கிடைக்கிறது.

  ஆனால் சூடான இடுகையில் இடம் பிடித்தால் 24 மணிநேரத்திலிருந்து ஒரு வாரம் வரையும் குந்தியிருக்க ஒரு நிரந்தர இடம் நிச்சயம் கை வசம். என்னைக் கேட்டால் கிட்ஸ் கவுண்டரை மணிக்கொரு தடவை எண்ணும் பதிவர்களுக்கு இப்படியொரு இடம் கிடைப்பதுவும் அதனூடாக கவுண்டரை எகிற வைப்பதுமே குறி.

  மற்றும்படி சூடான இடுகையென்பது தமது பதிவுகளுக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் என அவர்கள் நினைக்க போவதில்லை. கிளிக்ஸ்களை வைத்து அங்கீகாரத்த கணக்கிடவும் முடியாது.

  இப்போ தமிழ்மணம் சிலபல பில்டரிங் வேலைகளைச் செய்கிறது. அவ்வாறு செய்தால்.. சூடான இடுகைகள் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு தமிழ்மண தெரிவுகள் என்பதுவே சரியாக இருக்கும்.

  எனது தனிப்பட்ட கருத்து எதுவெனில்
  பதிவு வாசிக்கப்பட முதலே.. அது சூடான இடுகைக்கான நிபந்தனையை பூர்த்தி செய்கிறது எனில்..
  சும்மா சூடான இடுகையென எதற்கு ஒரு பகுதி..?

  தூக்கி விடலாமே!

 18. செந்தழல் ரவி on December 24th, 2008 9:06 am

  இதில் ஒரு தர்மசங்கடம் இருக்கிறது…சில மொக்கையான இடுகைகள் அல்லது தவறான வார்த்தைகள் சூடான இடுகையில் வந்து தொலையும்போது, “என்ன பில்டர் வேலை செய்யலியா” என்பார்கள், நீங்க உங்க நேரத்தை செலவழித்து அந்த மொக்கை வார்த்தையை பில்டர்ல சேர்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்கனும்..

  இப்ப கூட ஒரு “அநாகரீகமான” இடுகை முதல் பதிவாக இருக்கிறது…அது கீ வேர்ட் இல்லையா?

 19. Pot"tea"kadai on December 24th, 2008 10:24 am

  ஹா ஹா ஹா…

 20. புருனோ on December 24th, 2008 11:37 am

  இது குறித்த என் இடுகை இங்கு உள்ளது

  http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html

  நான் அறிந்த வரை

  சூடான இடுகை என்றால் என்ன

  தமிழ்மணம் மூலம் – அதாவது தமிழ்மணத்தில் உள்ள பதிவின் (இன்னமும் சரியாக சொல்லவேண்டுமென்றால் இடுகையின்) சுட்டியை சுட்டி படிப்பது குறித்த ஒரு கணக்கே சூடான இடுகை யாகும்

  ஒரு இடுகையை எத்தனை பேர் / எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது அல்ல சூடான இடுகையின் பின்புலம் – ஒரு இடுகையை எத்தனை முறை தமிழ்மண பக்கங்களில் உள்ள சுட்டிகளின் மூலம் படிக்கப்பட்டது என்பதே சூடான இடுகையின் பின்புலம்

  மாற்றி சொல்ல வேண்டுமென்றால்

  ஒரு இடுகை எப்படி உள்ளது என்பதை சூடான இடுகை கூறுவதில்லை
  ஒரு இடுகை மொத்தமாக எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது சூடான இடுகை கூறுவதில்லை
  ஒரு இடுகை தமிழ்மண பக்கங்களிலிருந்து எத்தனை முறை படிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் சூடான இடுகை தெரிவிக்கிறது

  மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html

 21. நீங்கள் சொல்லியிருப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. நாளையோ மறுநாளோ தனிப் பதிவாக இடுகின்றேன்.

 22. சென்ஷி on December 24th, 2008 12:44 pm

  //இப்ப கூட ஒரு “அநாகரீகமான” இடுகை முதல் பதிவாக இருக்கிறது…அது கீ வேர்ட் இல்லையா?//

  ஹா ஹா ஹா….

 23. தமிழன்... on December 24th, 2008 1:04 pm

  என்னுடைய எந்த இடுகையும் இதுவரை சூடான இடுகையில் வந்ததில்லை என்பதுதான் என்வருத்தம்… 😉

 24. தமிழன்... on December 24th, 2008 1:07 pm

  சூடான இடுகையில் வரலைன்னாதான் நல்ல இடுகையாம்டா இந்தக்கவலையை விடு மச்சி…:)

 25. அது சரி on December 24th, 2008 1:54 pm

  தமிழ்மணத்திற்கு,

  தமிழ்மண சூடான இடுகையில் இடம் பிடிக்குமாறு வேண்டுமென்றே தலைப்பிடுவதை தவிர்க்க வேண்டும்…தனிப்பட்ட முறையில் பதிவர்கள் தங்களுக்குள் சண்டையிடும் பதிவுகளை விலக்க வேண்டும்…

  உங்கள் நோக்கம் இதுவாயிருக்குமானால் நல்ல நோக்கமே…அதில் தவறில்லை..ஆனால் அது எப்படி செயல்படுத்தப்படும் என்பதில் தான் பிரச்சினை இருக்கிறது…

  உ.ம்..ரஜினி, கமல் பெயர்களை தலைப்பில் கொண்டுவந்தால் சூடாக பெரும் வாய்ப்புண்டு…அப்படியானால் இனி ரஜினி, கமல் பெயரை யூஸ் செய்தால் சூடான இடுகையில் வராதா? ஒரு வேளை அது நிஜமாகவே நல்ல பதிவாக இருந்தாலும்??

  இல்லை, நீங்கள் சூடான இடுகையில் வரும் பதிவுகளை குறிப்பிட்ட அநாகரீகமான பதிவுகளை நீக்க போகிறீர்களா??

  எது எப்படி இருந்தாலும் அதை செய்வதை உங்கள் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை…ஆனால், நீங்கள் செய்வதற்கு முன் ஒரு அறிவிப்போ அல்லது எச்சரிக்கையோ செய்து விட்டு இந்த மாற்றங்களை செய்திருந்தால் எந்த குழப்பமும் இன்றி வெளிப்படையாக அமைந்திருக்கும்…

  நன்றி,
  அது சரி
  http://muranthodai.blogspot.com/

 26. வெடிகுண்டு முருகேசன் on December 24th, 2008 2:21 pm

  உங்க தொல்லை தாங்க முடியலை..!!!

 27. ILA on December 24th, 2008 2:30 pm

  Have a Bury/Remove button on the links. இதனால மக்களே அந்த இடுகையை தூக்கிருவாங்க.
  மக்களே சூடாக்கி, மக்களே தூக்கிரலாம். சனநாயகமுமாச்சு, வெங்காயமுமாச்சு.

 28. நிமல் - NiMaL on December 24th, 2008 3:42 pm

  சூடான இடுக்கை என்றால் என்ன என்பதில் எனக்கு இது வரை தெளிவு இல்லை…

  1. இது Popular Post போன்ற ஒன்றா, அல்லது Mostly Viewed Posts என்பதா, அல்லது வேறு ஏதேனும் ஒரு வஸ்த்துவா…?

  2. இதில் வர நான் என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்ன கிடைக்கும்?

  3. இதற்கும் நட்சத்திர பதிவருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? என்ன?

 29. செந்தழல் ரவி on December 24th, 2008 6:48 pm

  ஹே எதாவது பதில் சொல்லுங்கப்பா…இடுகையை போட்டுட்டா ஜனநாயகமாயிருமா ?

  //Have a Bury/Remove button on the links. இதனால மக்களே அந்த இடுகையை தூக்கிருவாங்க.
  மக்களே சூடாக்கி, மக்களே தூக்கிரலாம். சனநாயகமுமாச்சு, வெங்காயமுமாச்சு.///

  நல்ல ஐடியா ? வாட் ஊ சே

 30. சுதந்திரா on December 24th, 2008 7:48 pm

  தமிழ்மணம் நிர்வாகத்திலே இருப்பவர்களே உங்களுக்கு விளக்கம் கொடுக்க கைநிறைய நேரம் இருக்கிறதாக்கும். என்னைக் கேட்டால் இந்த விளக்கபோஸ்டே வெத்து வேஸ்ட்டுன்னுவேன். விளக்கம் எவருக்கு கொடுப்பதென்றும் விவஸ்தை வேணாமா? கேக்கறவுங்க யோக்கியதைதா தமிழ்மணம் எல்லாம் நாறிக் கெடக்கே. நூத்துக்கு தொண்ணூத்தொம்பது பதிவருங்க சைலண்டா நீங்க செஞ்சது சரின்னு கெடக்காங்க. இன்னிக்காச்சும் காலிங்க ஆக்கிரமிப்பு ஒளிஞ்சுச்சேன்னு நிம்மதி மூச்சு வெடறாங்க. அவனுங்க கேட்டானுவளாம் இவுங்க வெளக்கம் கொடுக்காங்களாம். அவனுங்களுக்கு இதுலகூட வெளம்பரம்யா. வெளக்கம் கேக்குரானுவளேன்னு வெளக்கத்துக்கு வெளக்கம் சொல்ல போகாதீங்க. பேசாம கடையை மூடிக் கட்டிட்டு சொந்த ஜோலியை பாருங்கையா. உங்க புள்ளைகுட்டிங்ககூட பேசுங்க. குடும்பத்தோட சினிமா பீச்சுன்னு காத்தாட கூட்டிட்டுபோங்க. ரெண்டு காசு சம்பாதிக்கிற காரியத்தை பாருங்க.

 31. Sharepoint the Great on December 25th, 2008 1:35 am

  செந்தழல் ரவியின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்.

  தமிழ்மணம் என்பது ஒரு லாப நோக்கமில்லாத ஒரு தளம்.

  தினமும் இங்கே பல பேர் வருகிறார்கள். அவர்கள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட வலைப்பூக்களைப் பார்வையிடுகிறார்கள்.

  இவர்களால் தமிழ்மணத்துக்கு என்ன லாபம்?
  லாபநோக்கமில்லாமல் தமிழ்மணம் செயல்படுகிறது.

  தமிழ்மணத்தால் இவர்களுக்கு என்ன லாபம்?
  தமிழ் வளர்கிறது – இப்படிச் சொல்லலாம்.

  ஆனால் சூடான இடுகைகளின் மூலம் தமிழ் வளர்த்தவர் எத்தனை பேர்.
  அடிச்சுக்கிட்டு நாறினால் தமிழ் வளருமா?
  நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? – என்று போட்டி பொட்டுத் தமிழை வளர்ப்பவர்கள் எத்தனை பேர்.

  நேற்று ஒரு வலைப்பூவில் தமிழைக் கண்ணாபின்னாவென்று டைப்பி இருந்தார்கள்.
  அதைப் படித்தால் இருக்கும் தமிழும் மறந்துவிடும் போல.

  முதலில் தமிழைத் தவறின்றி எழுதப் பழகுங்கள் : வலைப்பூ உரிமையாளர்களே.

  பிறகு உங்கள் எழுத்துக்களை உலகத்துக்கு வெளியிடுங்கள்.

  நான் எழுதும் எழுத்துக்களின் பிழைகளை எனக்குத் தெரிவியுங்கள். எனக்கு எனது தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களை மிகவும் பிடிக்கும்.

  தப்புத்தப்பா எழுதி, ஈகோத்தனத்துக்காக எழுதி – சூடான இடுகையில் வருவதால் : தமிழ் வளர்கிறதா என்றால் – கண்டிப்பாக இல்லை.

  இப்போது முனைவர் பட்டம் பெற்ற சான்றோர்கள், பெரிய அறிஞர்களாக அறியப்படும் பெருமக்களும் வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கின்றனர். இது வலைப்பூ எழுதுவோரின் பொற்காலம்.

  டாக்டர். ஷாலினி, டாக்டர். ருத்ரன், முனைவர். மு. இளங்கோவன் – இவர்கள் எழுதும் எழுத்துக்கள் : சூடான இடுகைக்காக எழுதப்படவில்லை.

  இவர்கள் அனைவருமே தமிழ்மணத்தில் உறுப்பினராக இருக்கிறார்களா? என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் சூடான இடுகை குறித்துக் கவலையின்றி இருப்பவர்களே அதிகம்.

  சூடான இடுகை குறித்துப் பதிவு போட்டால் – அதுவே இப்போது சூடான இடுகையில் இடம் பெறுகிறது.

  அதனால்தான் எனக்கு அதில் விருப்பமின்றி இங்கே பெரிய பின்னூட்டமாக இருப்பினும், இங்கே மறுமொழியிலேயே எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.

  மீண்டும் செந்தழல் ரவியின் கருத்தை அப்படியே மறுமொழிகிறேன்.

 32. Sharepoint the Great on December 25th, 2008 1:40 am

  இது வரையில் சூடான இடுகையின் மூலம் தமிழ் வளர்த்த சான்றோர்களே!

  இனி இந்தச் சூடான இடுகைகளைத் தமிழ்மணத்திலிருந்து அகற்றுவதன் மூலம் தமிழ் வளர்க்கத் தயாரா?

  சூடான இடுகையே வேண்டாம் என எண்ணுபவர்கள் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுத் தங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.

  வேண்டாம் வேண்டாம். சூடான இடுகை வேண்டாம்.

  மீண்டும் சொல்லுங்கள்.

  வேண்டாம் வேண்டாம் சூடான இடுகை வேண்டாம்.

  தமிழ்வாழ்க. தமிழ் வளர்க.

 33. Sharepoint the Great on December 25th, 2008 1:42 am

  கொழுவியின் கருத்துடன் நானும் இணைந்துகொள்கிறேன்.

 34. அதிஷா on December 25th, 2008 4:29 am

  ;-)))

 35. anbumani on December 25th, 2008 5:20 am

  தமிழ்மணம் மூலம் ஒரு பரவலான அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதே புதிய பதிவர்களின் ஆசை. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்தால் போதும். மற்றவர்களின் பதிவுகளில் புதிய பதிவுகள் போடும் போது, அதனை தலைபிட்டு மட்டும் காட்டலாம் என்பது என் கருத்து… (நான் புதிய பதிவராக்கும்.)

 36. லக்கிலுக் on December 26th, 2008 3:48 am

  சூடான இடுகை என்பதை பெயர் மாற்றி (தமிழ்மணத்துக்கு) ‘தோதான இடுகை’ என்று பெயர் வைக்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

  இந்தவார சூடான இடுகைகளில் தோழர் தமிழ்சசியின் மூன்று பதிவுகள் இடம்பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙂

 37. தமிழ் சசி / Tamil SASI on December 26th, 2008 12:32 pm

  தோழர் லக்கிலுக்,

  நான் உங்க அளவுக்கு பெரிய பதிவர் எல்லாம் இல்லை. ஆனால் எனக்கென்று சில வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் :))

  நான் தமிழ்மணம் நிர்வாகத்திலும் இருப்பதால் என் ஹிட்ஸ் கவுண்டர் இங்கே தருகிறேன்.
  http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/SVUEMzTunzI/AAAAAAAACI/zsMdSPCHtoQ/s1600-h/graph_summary_barchart.php.png

  நான் தினமும் எழுதுவதில்லை. நான் எழுதும் பொழுது வாசிக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  நன்றி…

 38. செந்தழல் ரவி on December 26th, 2008 5:48 pm

  தமிழ் சரி, F5 பட்டன் மீது கல்லை வைத்துவிட்டு நீங்கள் சென்றுவிட்டதாக ஒருவர் குற்றம் சாட்டுகிறார்…

  உங்கள் கீ போர்டின் F5 பொத்தானை படம் பிடித்து போடவும்…

  ச்ச்சும்மா லூலுவாயி…!!!

 39. செந்தழல் ரவி on December 26th, 2008 5:53 pm

  நான் சொன்னதை கன்னாபின்னாவென்று வழிமொழிந்திருக்கும் தமிழ் நெஞ்சத்துக்கு நன்றி

 40. சுதந்திரா on December 26th, 2008 6:31 pm

  நண்பர் தமிழ் சசி கருத்துச்சுதந்தரம் என்ற பெயரிலே தமிழ்மணத்தின் பதிவிலே நீங்கள் எல்லாப்பின்னூட்டங்களையும் அனுமதிக்கத்தேவையில்லை என நம்புகிறேன். இவர்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொழுதுபோக்கோ என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? விடுமுறைநாட்கள் அமெரிக்காவிலே கிடைப்பது அரிது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு கிடைப்பதை உங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாகச் செலவு செய்யுங்கள். தமிழ்மணத்துக்கு நீங்களும் சகதமிழ்மணநிர்வாகிகளும் செலவு செய்யும் நேரமும் உழைப்பும் எந்த வகையிலேனும் பயனானவைதானா என்று யோசித்துப் பாருங்கள். தமிழ்மணத்தினை இழுத்து மூடிவிட்டு உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தவரையும் கவனியுங்கள். மற்றவர்கள் வண்டியோட்டுவதற்கு நீங்கள் எதற்காக எருதுகளாக வேண்டும்? தமிழ்மணம் எவ்வகையிலும் உங்களுக்கு வருமானத்தைத் தருவதில்லை. கையை விட்டு நீங்கள் செலவழிப்பதுங்கூட இவர்களைப் போன்றவர்களாலே எள்ளல் செய்யப்படுகின்றது. தமிழ்மணத்தினை பயன்படுத்தும் மற்றைய அங்கத்தவர்கள் வாயை மூடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப் பயன் வரவேண்டுமே என்று இவர்களோடு நீங்கள் பேசி வியாபாரம் செய்யவேண்டும். இது உங்களுக்கு என்ன முற்பிறவிப்பாவத்துக்கான தண்டனையா? தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் பிடிக்காதவர்கள் விலகிப்போகிறார்கள். எதற்காக நீங்கள் இந்தளவு இறங்கிப் போய் இவர்களின் ஒவ்வொரு கருத்துக்கும் கூச்சலுக்கும் பதில் சொல்லவேண்டும்? தங்களின் பதிவுகள் சூடான இடுகைகளிலே வராமல் மொக்கை, கும்மிப்பதிவுகள் ஆக்கிரமிக்கின்றன என்று சொல்லும் பதிவர்கள் ஓரிருவரே உங்களுக்காகப் பேசுகின்றனர். மற்றவர்கள் எமக்கேன் வம்பு என்ற வகையிலே சத்தமில்லாமலே வேடிக்கை பார்க்கிறனர். இவர்களைப் போன்ற சண்டைப்பதிவர்களுக்கும் ஊமைப்பதிவர்களுக்குமாகவே தமிழ்மணம் என்று நடத்துகிறீர்களென்றால் இது ஒரு பயனில்லாமலே தொலைந்த நோக்கம் என்றே சொல்லவேண்டும். தேவைக்கு அதிகமாகப் பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

 41. செந்தழல் ரவி on December 26th, 2008 6:38 pm

  சுதந்திரா ரொம்ப தேவைக்கு அதிகமாகவே பேசியிருக்கிறீர்கள்…

  வயிறு சரியில்லை என்றால் ஊமத்தம் சாப்பிடுங்கள்…இல்லை ப்ளைன் சோடா…

 42. லக்கிலுக் on December 27th, 2008 1:21 am

  //தோழர் லக்கிலுக்,

  நான் உங்க அளவுக்கு பெரிய பதிவர் எல்லாம் இல்லை. ஆனால் எனக்கென்று சில வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் :))

  நான் தமிழ்மணம் நிர்வாகத்திலும் இருப்பதால் என் ஹிட்ஸ் கவுண்டர் இங்கே தருகிறேன்.
  http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/SVUEMzTunzI/AAAAAAAACI/zsMdSPCHtoQ/s1600-h/graph_summary_barchart.php.png

  நான் தினமும் எழுதுவதில்லை. நான் எழுதும் பொழுது வாசிக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  நன்றி…
  //

  தோழர் தமிழ்சசிக்கு!

  நான் உங்கள் அளவுக்கெல்லாம் தரமான பதிவர் இல்லை. ஆனாலும் நீங்கள் தந்திருக்கும் உங்கள் ஹிட்ஸ் விவரங்களை விட என்னுடைய ஹிட்ஸ் ஆரோக்கியமாகவே இருக்கிறது. தேவைப்பட்டால் சொல்லுங்கள் ஸ்டேட்கவுண்டரின் பாஸ்வேர்டையே தருகிறேன்.

  எந்த அடிப்படையில் சூடான இடுகைகள் பகுதியிலிருந்து என் வலைப்பூ தூக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான விளக்கத்தை இதுவரை தமிழ்மணம் எனக்கு தனிமடலில் கூட தரவில்லை. இது பாசிஸ்ட்டுத்தனமான நடவடிக்கையா இல்லையா என்று இவ்வளவு நாட்களாக தத்துவங்கள் சொல்லிவந்த உங்களது நண்பர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

  சுதந்திரா என்ற உத்தமத்தமிழ் பின்னூட்டவாதிக்கு!

  நாட்டு மருந்துக்கடையில் வயிற்றை சுத்தம் செய்ய ஏதோ மருந்து தருவார்கள். வாங்கி உபயோகிக்கவும். இல்லாவிட்டால் வயிறு உங்களுக்கு இப்படித்தான் கடமுடாவென்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் 🙂

  பி.கு : உங்கள் எஸ்.எம்.எஸ். கிடைத்தது. நான் திராவிடனாகவே இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் 🙂

 43. azagappan on December 27th, 2008 4:22 am

  I second Sudandira. Tamilmanam should ignore these people instead of giving countless explanation for their worthless accusations

  Even lucklook has acknowledged that he has only quantity and not quality. people need quality more than quantity. if people need articles like lucklook they can go to yellow magazines. they don’t need tamilmanam

  please ignore these people

 44. லக்கிலுக் on December 27th, 2008 7:02 am

  //I second Sudandira. Tamilmanam should ignore these people instead of giving countless explanation for their worthless accusations

  Even lucklook has acknowledged that he has only quantity and not quality. people need quality more than quantity. if people need articles like lucklook they can go to yellow magazines. they don’t need tamilmanam

  please ignore these people

  By azagappan on Dec 27, 2008
  //

  எங்கிருந்துய்யா வரிசையா வர்றீங்க ஊரு, பேரு கூட இல்லாம? 🙂

 45. லக்கிலுக் on December 27th, 2008 7:03 am

  அடுத்ததா ஒரு மாடசாமியோ, கன்னியப்பனோ வந்து அழக்கப்பன் சாரை நான் வழிமொழிகிறேன்னு சொல்லுவதையும் எதிர்பார்க்கிறேன் 🙂

 46. அர டிக்கெட்டு ! on December 27th, 2008 4:17 pm

  சூடான இடுகைகளை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட தலைப்பு, தமிழ்மணம் முகப்பிலிருந்து ( பரிந்துரை,
  மறுமொழி, மைய ஓடை) பதிவு எழுதி சில மணிநேரங்களுக்குல் குறைந்த்து 100 முறை
  சொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஒரு வாரத்திற்கே 100 பேர்தான் வந்து போகும் பதிவுகள் இதில்
  நிச்சயம் இடம்பெறாது. இதைபற்றி தமிழ்மணம் ஒரு வெள்ளையறிக்கை தந்தால் நல்லது.

  சுதந்திரா அழகப்பன் மற்றும் ராமகோபாலன் அன்டு கம்பெனி புரிந்து கொள்ளவேண்டிய் ஒன்று சூடான
  இடுகையிலிருந்து ஒழித்துவிட்டால் திராவிட, பொதுவுடமை சித்தான்தங்களை ஒழிக்க முடியாது… தமிழ்மணம் உங்களை போன்ற ஐட்டங்களின் தளமாக மாற வாய்ப்பே இல்லை. அதனால்
  தொன்டைக்குள் விரலைவிட்டு வாந்தியெடுப்பதை நிறுத்தவும்…குடல் வந்துவிடப்போகிறாது…நேரம்
  கிடைப்பதே கடினம், போய் பிள்ளைகுட்டிகளுடன் விளையாடவும்.

  தமிழ் ச்சி தமிழ்மணத்தின் அட்மின் என்பது இப்பொழுதுதான் அறிகிறேன்…நல்லது..நான் அவரின் எழுத்துக்களை ரசிக்கிறேன்..குறிப்பாக காஷ்மீரத்தை பற்றிய அவரது பதிவுகளை பலரிடம் படிக்கச் சொல்லியிருக்கிறேன்.

  தமிழ்மணம் பதிவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பதிவர்களும் திரட்டிக்கு முக்கியம்.
  புதியதாக பதிய வரும் அனாமதேயங்களை ஆளாக்கி பெயர் சொல்லும் பதிவர்களாக்குவதில்
  தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல அனுபவம் வாய்ந்த பழைய பதிவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய சூழலில் தமிழ் மொழியின் வளர்ச்சி, கருத்து சுதந்திரம், படைப்பாற்றல் வளர்ச்சி போன்றவைகளுக்கு வலைப்பதிவு உலகம் மிக முக்கியமான தொடாற்றுகிறது இதில் திரட்டி-பதிவர் ஒற்றுமை இன்றியமையாத்து. அப்படியே முரண்பாடு எழுந்தாலும் அதை தீர்த்துக்கொள்வதில் சரியான முறையை கையாள வேண்டும்

  ஆனால் இந்தப் பிரச்சனையை பொருத்தவரை
  இரண்டு தரப்பிலுமே கையாளப்பட்ட முறை சரியல்ல. அதனால்தான் பிரச்சனையை ஊதிப்பெறுக்கி அதில் குளிர்காயும் நோக்கத்துடன் ஒரு கும்பல் பின்னூட்டமும் பதிவும் இடுகின்றது. இவர்களுக்கு பதில் சொல்வது ஏதாவது ஒரு நிலைக்கு தள்ளுகிறது..அது சிறு விரிசலை ஆழமாக்குகிறது.. யார் பெரியவர் என்கின்ற அனுகுமுறையை விடுவேண்டும், வெளிப்படையான விமர்சனங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
  தேவைப்பட்டால் தொலைபேசியிலோ தனி அஞ்சலிலோ பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்போதைய தேவை திரட்டிக்கும் பதிவர்களுக்கும் இனக்கமான ஒரு தீர்வு..அதை சாதிக்கும் ராஜதந்திம்.

 47. கன்னியப்பன் மாடசாமி on December 27th, 2008 5:02 pm

  அழகப்பன் சார் சொல்வதை வழிமொழிகிறேன் 🙂

  லக்கிலுக் அவரது வெக்கப்படாதீங்க சார் போஸ்டரை நீக்கினாலே அவரது ஹிட்ஸ் பாதியாக குறைந்துவிடும்.

  இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தமிழ்மணத்தை ஓப்பன் சோர்சாக மாற்றுவதே. தமிழ்மணத்தை ஓப்பன் சோர்சாக மாற்றி தமிழ்மணத்தை பதிவர்களே ஏற்று நடத்துமாறு செய்ய வேண்டும்.

 48. பாக்கியம் ராமசாமி on December 27th, 2008 6:28 pm

  கன்னியப்பன் மாடசாமி கூறுவதை வழிமொழிகிறேன் 🙂

  ஓப்பன் சோர்ஸ் தான் ஒரே வழி

  – பாக்கியம் ராமசாமி

 49. வருண் on December 27th, 2008 7:52 pm

  ***அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன. ***

  நல்ல முடிவு! 🙂

  ****இதில் ஒரு தர்மசங்கடம் இருக்கிறது…சில மொக்கையான இடுகைகள் அல்லது தவறான வார்த்தைகள் சூடான இடுகையில் வந்து தொலையும்போது, “என்ன பில்டர் வேலை செய்யலியா” என்பார்கள், நீங்க உங்க நேரத்தை செலவழித்து அந்த மொக்கை வார்த்தையை பில்டர்ல சேர்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்கனும்..***

  tamizmaNam can only make some improvements to make the “hot topics” more sensible, however there is going to be need for some improvement always, and there is going to be loop-holes and flaws in any version.

  There NO FLAWLESS law in the world.

  Some will keep complainng any filter or any improvement has been made by TM, no matter what what improvement has been made by tamizmaNam. TamizmaNam needs to ignore such ever-complaining bloggers! Bcos they are going to complain unless tamilmaNam worships them as “GODS”!

 50. கிரி on December 28th, 2008 1:41 am

  //தங்களின் பதிவுகள் சூடான இடுகைகளிலே வராமல் மொக்கை, கும்மிப்பதிவுகள் ஆக்கிரமிக்கின்றன என்று சொல்லும் பதிவர்கள் ஓரிருவரே உங்களுக்காகப் பேசுகின்றனர். மற்றவர்கள் எமக்கேன் வம்பு என்ற வகையிலே சத்தமில்லாமலே வேடிக்கை பார்க்கிறனர். //

  வழிமொழிகிறேன்

Leave a Reply