தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2008 – விரிவான அறிவிப்பு
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்கவும் தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.
தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தும் திட்டம் சென்ற ஆண்டே அறிவித்திருந்த போதிலும் அதனை செயல்படுத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு தொடக்கம், இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மணத்தில் வெளியாகும் சிறந்த இடுகைகளை தேர்ந்தெடுத்து அவ்வாண்டின் இறுதியில் விருதுகள் வழங்கப்படும்.
இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-சனவரி மாதத்தை தமிழ்மணம் விருதுகள் மாதமாக பதிவர்கள் குறித்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.
இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
11. நகைச்சுவை, கார்ட்டூன்
12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்.
தேர்வு நடைமுறை:
1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு
செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும்.
3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர்
அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு
பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும்
குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2008 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.
6. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில்
இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு
பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
7. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும்
இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்)
வாக்களிக்கலாம்.
8. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை
அந்தந்தப் பிரிவில் 2008-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.
9. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10
இடுகைகளும் (மொத்தம் 120 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக
உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ்
அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும்
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும்.
10. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான
வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.
பரிந்துரைகளுக்கான காலகட்டம் 10 நாட்கள், முதற்கட்ட வாக்கெடுப்புக்கு 5
நாட்கள், இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு 5 நாட்கள் அளிக்கப்பட்டு பொங்கல்
நாளில் விருது அறிவிப்பு வெளியாகும். பரிந்துரைகள் தொடங்கும் நாள் டிசம்பர் 25.
ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும்
பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா
ரூ.250ம் (இருநூற்றி ஐம்பது) வழங்கப்படும். இவை பணமாகவோ, அதன் மதிப்பான
புத்தகங்களாகவோ வழங்கப்படும்.
-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
Comments
56 Responses to “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2008 – விரிவான அறிவிப்பு”
Leave a Reply

சூப்பர். ஸ்டாட் மீஸிக்
//ஆனால் ஒரு
பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும்
குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.//
இடுகையா இடுகைத்தொடரா
//ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10
இடுகைகளும் (மொத்தம் 100 இடுகைகள்), //
கிர்ர்ர்ர்ர்ர்ர்
12 பிரிவுகள்
10 இடுகைகள்
120 இடுகைகள் அல்லவா
கலக்குங்க…போட்டிக்கு ரெடி
கலக்குங்க …போட்டிக்கு நாங்க ரெடி
மிக நல்ல முயற்சி, பதிவர்களை (நல்ல படைப்புகளை உருவாக்க) வெகுவாக ஊக்கமளிக்கும் ஒரு திட்டமாக இதைப் பார்க்கிறேன். நன்றி.
தாங்கள் 1/11/2008 என்று cut-off தேதி வைத்திருப்பதால், 1/11/2007 முதல் 1/11/2008 வரையில் இணைக்கப்பட்டட இடுகைகளை போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
எ.அ.பாலா
ஆஹா கிளம்பிட்டீங்களா?? என்ன பரிசு கொடுப்பதாய் உத்தேசம்???
இடுகையா இடுகைத்தொடரா
*********
புருனோ,
இடுகை, இடுகைத் தொடர் இரண்டுக்கும் தான்.
ஒரு பிரிவுக்கு ஒரு இடுகை/இடுகைத் தொடர்
உதாரணமாக “செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்” பிரிவுக்கு ஒரு பதிவர் ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரைக்க முடியும். அதே இடுகையை வேறு பிரிவுகளுக்கு பரிந்துரை செய்ய முடியாது.
உதாரணமாக “செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்” பிரிவுக்கு செய்யப்படும் பரிந்துரையை, “அரசியல், சமூக விமர்சனங்கள்” பிரிவுக்கு பரிந்துரை செய்ய முடியாது.
120 இடுகைகள் அல்லவா
*************
120 இடுகைகள் தான், அறிவிப்பில் மாற்றம் செய்திருக்கிறோம்
சுட்டிகாட்டியமைக்கு நன்றி…
தாங்கள் 1/11/2008 என்று cut-off தேதி வைத்திருப்பதால், 1/11/2007 முதல் 1/11/2008 வரையில் இணைக்கப்பட்டட இடுகைகளை போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
********
பாலா,
உங்கள் பரிந்துரையை “தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழுவின்” ஆலோசனைக்கு எடுத்துக் கொள்கிறோம்
நன்றி…
பரிசுத்தொகை ஜுஜூபி -யாக இருக்கிறது! கொஞ்சம் போட்டுக் கொடுக்கலாம்!
நல்ல முயற்சி.
மொக்கைப பதிவுகளை இது பெருமளவு குறைக்க ஊக்கப் படுத்தும் என நினைக்கிறேன்.
கலக்கப் போறீங்க…
அன்புடன் அருணா
//2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும்.//
//தாங்கள் 1/11/2008 என்று cut-off தேதி வைத்திருப்பதால், 1/11/2007 முதல் 1/11/2008 வரையில் இணைக்கப்பட்டட இடுகைகளை போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.//
பாலா சார்,
பதிவர் தனது பதிவை 01-11-2008க்கு முன்னர் இணைத்திருக்க வேண்டும் (இடுகையை அல்ல).
இடுகைகள் (பரிந்துரைக்கப்படும் படைப்புகள்) 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
அதாவது இன்று புதிதாக தமிழ் மணத்தில் தங்களின் படைப்பை இணைப்பவர்கள் விலக்கப்படுகிறார்கள்
//உங்கள் பரிந்துரையை “தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழுவின்” ஆலோசனைக்கு எடுத்துக் கொள்கிறோம்//
தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
//தாங்கள் 1/11/2008 என்று cut-off தேதி வைத்திருப்பதால், 1/11/2007 முதல் 1/11/2008 வரையில் இணைக்கப்பட்டட இடுகைகளை போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.//
01.01.2008 முதல் 31.12.2008 வரை எழுதப்படும் இடுகைகளை கணக்கில் எடுப்பது தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து
பதிவு இணைப்பு தேதி 01.11.2008க்கு முன்னர் (2004 ஆண்டு என்றாலும் கூட) இருக்க வேண்டும் என்பது தனி விதி என்று நினைக்கிறேன்
அருமையான தொடக்கம் …நல்லது நடக்கட்டும் …
வாழ்த்துக்களோடு ….
விஷ்ணு
நல்ல முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்
ஆர்வத்துடன் கலந்து கொள்கிறோம்.
//01.01.2008 முதல் 31.12.2008 வரை எழுதப்படும் இடுகைகளை கணக்கில் எடுப்பது தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து
பதிவு இணைப்பு தேதி 01.11.2008க்கு முன்னர் (2004 ஆண்டு என்றாலும் கூட) இருக்க வேண்டும் என்பது தனி விதி என்று நினைக்கிறேன்
By புருனோ//
வழிமொழிகிறேன்.
//பரிந்துரைகள் தொடங்கும் நாள் டிசம்பர் 25// என அறிவிக்கப் பட்டிருப்பதால் 24.12.2008 வரை எழுதப்படும் இடுகைகளைக் கணக்கில் கொள்ளலாம்.
ஒரே கொண்டாட்டம்தான்.
ஜால்லி…ஜாஆஜாஅஜாஅல்லீ…
வாழ்த்துகள்! எம்மாலான ஆதரவும், நன்றியும்!!
**************
//உங்கள் பரிந்துரையை “தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழுவின்” ஆலோசனைக்கு எடுத்துக் கொள்கிறோம்//
தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
********************
தேவைன்னு நான் நினைக்கிறேன். தாங்கள் நிர்வாகக்குழு உறுப்பினரோ ?
பதிவர்களுக்கு (cut-off தேதிக்கு பின்) வாசித்து யோசித்து வாக்களிப்பதற்கு சற்று சமயம் இருப்பது மிக அவசியம் என்ற வகையில் என் பரிந்துரை தரப்பட்டது. இறுதி முடிவு தமிழ்மணம் நிர்வாகக்குழு கையில் !!
வாழ்த்துகள்! கலந்து கொள்கிறோம்.
வாழ்த்துகள்!
உங்கள் திட்டம் வரவேற்கத்தக்கது. பரிசு பெரும் இடுகைகளின் தரத்தை ஒட்டி, இந்தப் பரிசுகளின் தரம் பிற்காலத்தில் நிர்ணயிக்கப்படும். வாழ்த்துக்கள் உங்களுக்கும், பரிசு பெரும் கனவில் உள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் (என்னையும் சேர்த்து தான்
)) )
அனுஜன்யா
வாழ்த்துக்கள்;பதிவர்கள் ஆதரவுடன் வெற்றி பெற.
கலக்கிருவோம்.
கள்ள ஓட்டெல்லாம் கண்டுபிடிச்சிருவீங்களா?
பல சமயங்களில் பதிவைவிட பின்னூட்டங்களே நன்றாக இருக்கின்றன. பின்னூட்டங்களுக்கென்று ஏதாவது தனிப் பரிசு உண்டா
புரிந்துணர்வோடு பரிசுகளை தொடர்ந்து தரப்போகும் தமிழ்மணத்துக்கு நன்றி
புது பதிவு போட்ட பின், பெரும்பாலான நேரங்களில், அதை தமிழ்மணத்தில் இணைக்க முடிவதில்லை. தமிழ்மண முகப்பின் மூலம் முயற்சித்திருக்கிறேன், கருவிப்பட்டையின் மூலமும் முயற்சித்திருக்கிறேன். எதுவும் workout ஆவதில்லை. எப்படி இணைப்பது என்று தமிழ்மண நிர்வாகிகளோ அல்லது பதிவர்களோ விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
நன்றாக அலசி உள்ளீர்கள்….
பரிசளிக்க முன் வந்தமைக்கு நன்றிகள்..
ஆனால் பரிசுத் தொகை மிக, மிக குறைவு என்பது எனது கருத்து
தமிழ்மணம் குறைந்தபட்சம் அதன் பதிவர்களுக்காக சில லட்சங்களை வாரி வழங்கலாம். நீங்களே இல்லைன்னு சொன்னீங்கன்னா நாங்க எங்க போறது..?))))))))))))
500 ரூபாயை 5 லட்சமாக ஆக்கி புதிய அறிவிப்பை எதிர்பார்க்கிறேன்..
என்னையும் இந்த விளையாட்டுல சேத்துக்கோங்க ப்ளீஸ்!!!
(என் வலையை 25/11/2008 அன்று தான் சேர்த்தேன்.)
துட்ட பாத்து போட்டு குடு நைநா…!!!
ரொம்ம்ம்ம்ம்ப கம்மியா கீது…!!!
ஐ……….. !
what if a blogger has his own personal blog and also participates in a group blog?
can he/she submit two?
//பரிந்துரைகள் தொடங்கும் நாள் டிசம்பர் 25.
ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
//
ஐயா, வணக்கம்! அறிவிப்போ, மின்மடலோ ஒன்னுமே வரலைங்க எனக்கு… இன்னைக்கி டிச-25, அதான் ஒரு எட்டு கேட்டுட்டுப் போலாம்னு உங்க திண்ணைக்கு வந்தேன். இஃகிஃகி!
[...] விருதுத் தெரிவு முறைகள் பற்றிய விரிவான அறிவிப்பு ஏற்கனவே [...]
[...] பற்றிய முழுமையான விபரங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் [...]
ஆஹா அருமை அருமை…
தமிழ்மணந்தால் தமிழ்மணக்கும்!
தமிழ்மணக்க தமிழ்மணக்கும்!
தமிழ்மணத்தால் தமிழ்மணந்தால்
தமிழ்மணத்தைத் தான்மணப்பேன்!
அன்புடன்
இருக்கும் வரை தமிழ் அணையில்
இரவா
நானும் பரிந்துரைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ்மணத்திற்கு வாழ்த்துகள்
வணக்கம்… எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் தரப்பட்டுள்ள இணைப்பில் எனது பிரதான வலைப்பூவான princenrsama.blogspot.com இணைக்கப்படவில்லை…
அது குறித்து கவனித்தருளுமாறு வேண்டுகிறேன்.
இது போல் ஊக்கம் அளிக்க படைப்புக்களும்
அதிகம் படைக்க மனம் விழைகிறது வாழ்த்துக்கள்
என் பிளாக்கிலிருந்து தேர்வு செய்ததில் முதல் நம்பர் காலியாக இருப்பதேன் ? அதில் என்ன படைப்பு இருக்கிறது என்று தெரிவித்தால் மிக நன்றியாக இருக்கும் என் பிளாக் மீராம்பிகா
பதிவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் புது முயற்சி.
கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
ஐயா, அல்லாம் வந்து சேந்துச்சுங்கோ… நானும் களத்துல எறங்கிட்டனுங்க…இஃகிஃகி!
All my Tamil science articles were published simultaneously in my website & http://www.thinnai.com same day.
Are they eligible for the competition ? How many title articles can I enter for competition under one Branch ?
[...] http://blog.thamizmanam.com/archives/157 [...]
வணக்கம்…
மீண்டும் தங்கள் கவனத்துக்கு!
//எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் தரப்பட்டுள்ள இணைப்பில் எனது பிரதான வலைப்பூவான princenrsama.blogspot.com இணைக்கப்படவில்லை…
அது குறித்து கவனித்தருளுமாறு வேண்டுகிறேன்.
///
வருக! பரிந்துரைக்கத் தகுதியான உங்கள் வலைப்பதிவுகளின் பட்டியல் இதோ:
1. விஞ்ஞானக் குருவி – செய்திகள் – News by kuruvikal
2. தேடற்சரம் by kuruvikal
3. Kuruvikal by kuruvikal
பிழை: NOVALID_POSTS
பின் செல்க
—————–
எனக்கு இவ்வளவும் தான் வருகுது. பிரத்தியேக இணைப்பை அழுத்த. இதை வைச்சு எப்படி பரிந்துரைக்கிறது.
—————–
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
My tamil webpage http://tamilparks.50webs.com
மதிப்பிற்குரிய தமிழ்மணம் பொறுப்பாளர்களுக்கு,
இனிய வணக்கங்கள்.
நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். அதில் இருந்த இணைப்பில் போய்ப்பார்த்த பொழுது அதிலிருந்த வலைப்பதிவுகளின் பட்டியலில் ‘எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்’ http://mrishanshareef.blogspot.com/ எனும் எனது வலைப்பூ இணைக்கப்பட்டிருக்கவில்லை. நான் அதிலுள்ள கவிதையினை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இணைப்பினைச் சரிப்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
தமிழ்மணம் பொறுப்பாளர்களுக்கு,
உங்கள் போட்டிக்கான பதிவு வகைகளில் ‘சமையல் குறிப்புகள்’ இடம் பெறவில்லையே? கொஞ்சம் வயிற்றுக்கும் ஈயலாமே!!!
In the Awards Nomination page, I am not seeing all my postings I wrote in 2008. Some are missing in the list. Can you please check and let me know ????
thanks.
anbudan
BALA
அருமையான (முறையான) முறையில் ஊக்குவித்தல் பாராட்டுதலுக்குரியது…
இந்த ஆண்டுதான் தமிழ்மணத்தில் இணைந்துள்ளேன்!
வரும் வருடம் விருது ஒன்று வாங்கிட வேண்டும் என்பதை இந்த வருடத்தின் குறிக்கோளில் ஒன்றாக இணைத்து கொள்ள வைத்து விட்டது. இதுவே தமிழ்மணத்தின் வெற்றி என்றே கருதுகிறேன்.
நன்றிகளுடனும் வாழ்த்துக்களுடனும்,
“கருவெளி” ராச. மகேந்திரன்