தமிழ்மணம் விருதுகள் 2008
November 25, 2008 – 9:08 pm by தமிழ்மணம்
1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம்.
1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா?
2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும்.
1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால…
2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான சோதனைய நடத்திப் பார்த்திடலாம்.
1. அப்படின்னா முழுமையான அறிவிப்பையே வெளியிட்டுடலாமே?
2. வேண்டாம். முழுமையான அறிவிப்பை நிரல் சோதனைகள் முடிஞ்சபின்னாடி வெளியிடலாம். இப்போதைக்குப் பதிவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருக்குற தகவலை மட்டும் சொல்லிடலாம். சரியா?
42 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2008”
Vow. I was expecting this for a long..
Now You announced..
Thanks dear
By Sharepoint the Great on Nov 25, 2008
//ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால…
//
I didnt conduct my ‘election’ , because you announced it for last year.
hope you really do it this year
good luck!
By Surveysan on Nov 25, 2008
என்ன சொல்றது..
வர வர ரொம்பக் கெட்டுப் போய்ட்டீங்க… எல்லாம் என்னை மாதிரி ஆசாமிக கூட சேர்ந்த சகவாச தோஷம்தான் போல…
By பரிசல்காரன் on Nov 25, 2008
வெறும் விருதுகள் தானா ? பண முடிப்பு எதுவும் உண்டா ?
By கோவி.கண்ணன் on Nov 25, 2008
ஸ்ஸ்ஸ்அப்பா இப்பவே கண்ண கட்டுதே!
By அர டிக்கெட்டு! on Nov 25, 2008
சரிதான்! வாழ்த்துக்கள்!
By SP.VR.Subbiah on Nov 25, 2008
சரி தான் - நிரல்கள் நல்லா வேலை செய்யும் போது அறிவிப்பை வெளியிடலாம் - இப்போதைக்கு இது போதும்
நல்வாழ்த்துகள்
By cheena (சீனா) on Nov 25, 2008
நல்ல திட்டம். போன வருடம் பற்றி எனக்குத் தெரியாது. தங்களது முழுமையான அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்.
By ராமலக்ஷ்மி on Nov 25, 2008
சரி சரி
By தமிழ் பிரியன் on Nov 25, 2008
தமிழ்மண அறிவிப்புகள் எல்லாமே வரவர ஜாலியா இருக்கு. முந்தியெல்லாம் ஒரு இறுக்கம் இருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை ‘நடை’ காரணமாக இருந்திருக்கலாம்.
இப்ப கூடுதலா ஒரு தோழமை உணர்வுடன் இருப்பதாகத் தோணுது.
நல் வாழ்த்து(க்)கள்.
By துளசி கோபால் on Nov 25, 2008
வாழ்த்துக்கள்!
By ILA on Nov 25, 2008
அவ்வ்வ் என்ன இது வர வர பலான பலான வெப்சைட்டில் முன்னோட்டம் காட்டிவிட்டு மீதியை பார்க்க கிரிடிட்கார்ட் கொடுங்க என்று கேட்பது போல் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிட்டு மீதிய தெரிஞ்சுக்க காத்திருக்க சொன்னா எப்படி?:((((
By குசும்பன் on Nov 26, 2008
அன்புள்ள தமிழ்மணம் நிருவனத்திற்கு வணக்கம். தங்கள் இணைய இதழ் பரிசு அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்.
அன்புடன்
துரை.மணிகண்டன்
By dr.durai.manikandan on Nov 26, 2008
தமிழ்மண விருதுகள் 2008 அனைத்தையும் ஜனநாயக முறைப்படி எனக்கே பகிர்ந்தளிக்க வேண்டுமாய் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!
அன்புடன்
லக்கிலுக்
By லக்கிலுக் on Nov 26, 2008
கலக்குங்க…:)
By தமிழன் கறுப்பி on Nov 26, 2008
எனக்கு எந்த விருதும் வேணாம் அனா பணம் ஏதாவது கொடுக்கறதா இருந்தா முழுவதையும் எனக்கே யூரோவில தருமாறு கெட்டுக்கொள்கிறேன்…:)
By தமிழன் கறுப்பி on Nov 26, 2008
1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
மேலதிக விளக்கம் தாருங்கள். இதுவரை எழுதிய பதிவுகளை வைத்தா விருது அல்லது இதற்கென வேறு பதிவு எழுதவேண்டுமா?
By வந்தியத்தேவன் on Nov 26, 2008
நல்ல திட்டம்
வாழ்த்துக்கள்….
By தங்கராசா ஜீவராஜ் on Nov 26, 2008
வாழ்த்துக்கள்!
By arivakam on Nov 26, 2008
எப்படி? போன வருஷம் ஆரம்பிச்ச போட்டி இந்த வருஷம் முடியப் போகுதா..?
சபாஷ்..
By உண்மைத்தமிழன் on Nov 26, 2008
மிக்க மகிழ்ச்சி. ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
By ரேவதிநரசிம்ஹன் on Nov 26, 2008
வாழ்த்துக்கள்!
By PazamaiPesi on Nov 26, 2008
மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு. தமிழ் வலைப்பதிவர்களுக்கு இதுவோர் நல்ல ஊக்குவிப்பு.
By சுப.நற்குணன் on Nov 26, 2008
நல்ல திட்டம். சீக்கிரம் முழு அறிவிப்பை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.
By Sathanga on Nov 26, 2008
நல்ல திட்டம். தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!
By suvanappiriyan on Nov 26, 2008
மகிழ்ச்சியான அறிவிப்பு. தொடருங்கள்.
By தமிழ்விரும்பி on Nov 27, 2008
மகிழ்ச்சியான அறிவிப்பு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
By anbumani on Nov 27, 2008
தண்டோரா…………!
பரிசுத் தொகை எவ்வளவு?
- தருமி!
By நாமக்கல் சிபி on Nov 27, 2008
வணக்கம்.
முழுத் தகவலுக்கும் காத்துள்ளேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
By மு.இளங்கோவன் on Nov 27, 2008
வாழ்த்துகள்.
By நிலாரசிகன் on Nov 28, 2008
வாழ்த்துக்கள்
By குகன் on Nov 28, 2008
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
By தவறு on Nov 28, 2008
வாழ்த்துக்கள்!
By இளைய கரிகாலன் on Nov 28, 2008
நல்ல திட்டம். இதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
புதிதாக பதிவு எழுத வந்துள்ள எங்களை போன்றோர்களையும் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவும்.
ராம் சுரேஷ்
By ராம் சுரேஷ் on Nov 28, 2008
அண்ணே விருதோட பொற்கிழி, பொற்காசு இந்த மாதிரி எதுனாச்சும் உண்டா???
:)))
By அப்துல்லா on Nov 30, 2008
ம்…நடக்கட்டும்..நடக்கட்டும்
வாழ்த்துக்கள்!!
By சுரேகா on Nov 30, 2008
விரைவில் விருதுகள் பற்றி மற்றும் ஒரு அறிவிப்பு விடுங்கள்.
அடிக்கடி அறிவிப்பாவது விடுங்கள்.
இங்கே பாரிஸ் திவான்னு ஒருத்தர் - அறிவிப்பு விட்டுட்டார். (http://www.nathiyosai.com/2008/11/2008.html)
அவரை வம்புக்கு இழுப்பதற்காகவாவது நீங்கள் அடிக்கடி அறிவிப்புகளாவது விட்டுக்கொண்டு இருங்கள் நன்றி.
By Sharepoint The Great on Nov 30, 2008
நல்ல அருமையான திட்டம்….
பரிசுகள் பெற காத்திருக்கும் அனைவருக்கும் எனது முன்கூட்டிய வாழ்த்துகள்!
(ஒருவேளை அந்த பரிசை பெறுபவர் நானாக்கூட இருக்கலாம் இல்ல…..)
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.
By ஆர்.நாகப்பன் on Dec 1, 2008
சீக்கிரம் அறிவிப்பு வரும்கறீங்க. ஜனவரிக்குள்ளயாவது அறிவிச்சுடுங்க
By சின்ன அம்மிணி on Dec 2, 2008
ஆஹா…
By vaanathin keezhe on Dec 4, 2008
தமிழ்மணத்திற்கு ஆதரவாக அடிக்கடி பட்டை போடும் லக்கிலுக் அவர்களை இந்த தெரிவிலிருந்து தள்ளி வைக்குமாறு நடுநிலைமைவாதிகள் சார்பாக மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.
By தீவு on Dec 10, 2008
வேடிக்கை பார்க்கும் விருதை எனக்கு தருமாறு வேண்டுகிறேன்!
By கார்மேகராஜா on Dec 11, 2008