கேள்விக்குறியா ?? ஆச்சரியக்குறியா !!

November 22, 2008 · Posted in அறிவிப்புகள் 

1 : இந்தப் படத்தை தமிழ்மணம் முகப்பிலயும் வலைப்பதிவுலயும் இணைச்சிடுறீங்களா?
2 : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் இது எதுக்காக?

1 : அத உங்களோட ஊகத்துக்கே விட்டுடறேன்.
2 : பதிவர்கள் கேட்டா என்னன்னு சொல்றது ?
1 : அவங்களும் ஊகிக்கட்டுமே.
2 : சரியா ஊகிக்கறவங்களுக்கு சிறப்புச் சலுகை/பரிசு எதுவும் உண்டா ?
1 : 🙂

2 : இது கேள்விக்குறியா இல்ல ஆச்சரியக்குறியா?
1 : உங்களுக்கு எது வசதியோ அதையே வைச்சிக்கோங்க.

Comments

32 Responses to “கேள்விக்குறியா ?? ஆச்சரியக்குறியா !!”

 1. துளசி கோபால் on November 22nd, 2008 8:39 pm

  சரியாப்போச்சு….. நாங்ககூட மொக்கை போடுவொம்லெ!!!!!

  அதுகுத்தானே இது!!!

 2. மாதவி on November 22nd, 2008 10:12 pm

  தமிழ்மணமே மொக்கை போட ஆரம்பிச்சாச்சா 🙂

  ஆவலை தூண்டி விட்டுட்டீங்க, என்னான்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு

  ஏதாவது போட்டி வைக்க போறாங்க…நான் சொல்றது கரெக்டா ?

 3. தமிழ் பிரியன் on November 22nd, 2008 10:15 pm

  மொக்கை போட்ட தமிழ் மணம் வாழ்க! வாழ்க!

 4. ஆயில்யன் on November 22nd, 2008 10:20 pm

  //சரியாப்போச்சு….. நாங்ககூட மொக்கை போடுவொம்லெ!!!!!

  அதுகுத்தானே இது!!!
  ///

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

  (ரிப்பிட்டேய்ய்ய்ய் போடலைன்னா அது சாமி குத்தமால்ல போய்டும்!)

  :)))

 5. கோவி.கண்ணன் on November 22nd, 2008 10:41 pm

  ‘?’ – குறிசொற்கள் இல்லாத இடுகை

  – திரட்டியின் மொக்கை பதிவு சூப்பரு

 6. ILA on November 22nd, 2008 11:07 pm

  புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

 7. புருனோ on November 22nd, 2008 11:12 pm

  புள்ளிராஜாவிற்கு ஏய்ட்ஸ் வருமா
  அர்ஜூன் அம்மா யாரு

  பாணியா

  கலக்குங்க சார் கலக்குங்க

 8. ஆதவன் on November 23rd, 2008 12:12 am

  மொக்கை பதிவிற்கான சிம்பளா இருக்குமோ???

 9. முகவை மைந்தன் on November 23rd, 2008 12:23 am

  ? கேட்டா ! சொல்லணும், பரிசு வெல்லணும். சரியா?

  ஆமா, எதுக்கு நாங்க இந்த படத்தைப் படத்தை பதிவுகள்ல இணைக்கணும்? புரியலையே!!!

 10. aruna on November 23rd, 2008 12:43 am

  அட…நீங்களுமா???
  அன்புடன் அருணா

 11. குசும்பன் on November 23rd, 2008 12:58 am

  தமிழ்மணம் தொடங்கும் கட்சியின் கொடி அறிமுகம்:)))

  (சும்மா நாங்களும் பீதிய கிளப்புவோம்ல்ல:)))

 12. king... on November 23rd, 2008 1:12 am

  🙂

 13. தமிழன் கறுப்பி on November 23rd, 2008 1:15 am

  இதுக்கு பின்னால பெரிய மர்மங்கள் இருக்கு…!!!

 14. தமிழன் கறுப்பி on November 23rd, 2008 1:16 am

  \\
  சரியாப்போச்சு….. நாங்ககூட மொக்கை போடுவொம்லெ!!!!!

  அதுகுத்தானே இது!!!
  \\\

  ரிப்பீட்டு…:))

 15. kuppan_yahoo on November 23rd, 2008 1:42 am

  இது கேள்வி குறியாகத்தான் இருக்கும்.

  ஒரு விடயம், நிகழ்வு பற்றி நமக்கு தெரியாத பொழுது அதை பற்றி தெரிந்து கொள்ள / தெரிந்தவரின் கருத்து அறிய, பயன் படுத்துதலே கேள்வி குறி?.

  ஒரு நிகழ்வு நடந்த பிறகு அல்லது ஒரு மனிதன் ஒரு நிகழ்வை செய்த பிறகு, அடடா நான் இப்படி எதிர்பார்க்க வில்லையே, இப்படியா நடந்தது, இப்படியா அவர் செய்தார், இயற்கை இப்படியா செய்தது , என்பது போன்ற இடங்களில் பயன் படுத்துவது ஆச்சர்ய குறி.

  இது எங்கள் தமிழ் மொழி இலக்கண வரை முறை. இதிலும் கலப்படம் வேண்டாம்.

  தமிழை தூய்மையாக வைத்திருப்போம், தமிழை கலப்படம் செய்யாதீர்கள் அன்பர்களே.

  குப்பன்_யாஹூ

 16. உண்மைத்தமிழன் on November 23rd, 2008 2:42 am

  யூ டியூப் மாதிரி படம் காட்டப் போறீங்களா.?

 17. சுல்தான் on November 23rd, 2008 2:54 am

  ஏதும் ஈழம் தொடர்பாக?

 18. கௌபாய்மது on November 23rd, 2008 3:48 am

  மீ த 17th…மீ த பஷ்டு போடாத குத்தத்துக்காக…

 19. அர டிக்கெட்டு! on November 23rd, 2008 5:28 am

  1)ரைட்ல லோசனுக்கு போட்ட மாதிரி லெப்ட்டுல கரண்ட் அபேர்ஸ் வரலாம்.

  2)’இன்று’ மேட்டர பிளிங்கருக்கு பதிலா ஸ்கராலர்ல உடலாம்

  3) சம்மந்தமே இல்லாம செக்கோஸ்லோவாகியா கோழி சூப்புக்கு கூகிள் ஆட் சென்ஸ்ஸலாம்

  4)இங்கிலிஸ் மணம் ஆரம்பிச்சு அதுக்கு க்ராஸ்லிங்க கொடுக்கலாம்

  5)நட்சத்திர பதிவு மாதிரி கேள்விக்குறி பதிவு, ஆச்சரியக்குறி பதிவு நடத்தலாம்

  6)புதிய வலைப்பதிவாளர்களின் அறிமுக இடமா இருக்கலாம்

  7) சூடான அல்லது ஆரிப்போன இடுகைய போடலாம்

  8)கிரிக்கெட்டு ஸ்கோரு, எலக்ஸன் ரிசல்டு இன்ன பிற

  9) காணாமல் போன பதிவர்கள் பற்றிய அறிவிப்பு

  10)அதிகமான இடுகை எழுதியவர், இடுகையே எழுதாதவர்….வால் ஆஃப் பேம்

  come on guys get creative

 20. வடகரை வேலன் on November 23rd, 2008 6:12 am

  அட சீக்கிரம் சொல்லுங்கப்பா. ஆவலா இருக்கு.

 21. SP.VR.Subbiah on November 23rd, 2008 6:55 am

  அது என்ன குறியாக இருந்தாலும் சரி. படத்தைப் பதிவுகளில் ஏற்றிவிட்டேன்.

  ஆட்டம் போடுவதற்கு அரங்கைக் கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்.
  நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டாமா?
  அதனால் எதற்கு என்கின்ற கேள்வி இல்லை!

  SP.VR.சுப்பையா
  பல்சுவைப் பதிவு
  http://devakottai.blogspot.com
  வகுப்பறைப் பதிவு
  http://classroom2007.blogspot.com

 22. பரிசல்காரன் on November 23rd, 2008 6:59 am

  எதுவாயிருந்தாலும்…

  களத்துல எறங்குவோம்.. அப்புறம் பார்த்துக்கலாம்..

 23. sinnakuddy on November 23rd, 2008 7:13 am

  ‘ம்’ என்றதுக்கு பதிலாக இதைத்தான் தமிழ்மணம் குறீயிடாக வைச்சுக்க போறாங்களோ?

 24. ரேவதிநரசிம்ஹன் on November 23rd, 2008 8:32 am

  கேள்விகள் கேட்டு, பதிலும் போடப்போறீங்களா:)

 25. abu on November 23rd, 2008 11:34 am

  இந்தப் படத்தை உங்களுக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொன்னவர் யார்? என்பதை அறியத்தந்தால் இது கேள்விக்குறியா ஆச்சரியக் குறியா என்பதைக் கூறலாம்.

 26. nilaamathy on November 23rd, 2008 4:55 pm

  this symbol means a pottu in ladies forhead .

 27. கேள்விக்குறியாகும் ? ஆச்சரியக்குறிகள்! ..
  நாங்களும் ஆட்டையில இருக்கோம்ல

 28. இப்போவாச்சும் மொக்கை தான் நம்ப சொத்துன்னு புரிஞ்சிக்கிட்டீங்களே..
  அது போதும் ..

 29. முடியல….ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ணா கட்டுதே….

  இது ரொம்ப பெரிய அழுகுணி ஆட்டம்

 30. நிலா on November 24th, 2008 11:22 am

  பதிவர் தெரிவுகளுக்கான பட்டையா? அதைத்தான் ரொம்ப நாள் பெண்டிங்ல விட்டிருக்கீங்க.

  இது அதுவா இல்லைன்னாலும் பதிவர் தெரிவுகளை சீக்கிரம் கொண்டு வாங்க.

 31. முத்துவாப்பா on November 25th, 2008 6:39 am

  மகளிர் பகுதி (கூந்தல் மாதிரி தெரியுது)

 32. ஆ! இதழ்கள் on November 25th, 2008 10:23 am

  ஒளிஞ்சு போ கண்மறைவா.. இனி சாதாரண பதிவுப்பட்டை எதுக்கு, இதோ வந்துவிட்டது புதிய தமிழ்மணப்பதிவுக்குப்பி.

  இனிமேல் இந்த தொல்லை குடுக்குற பதிவுப்பட்டை தேவையில்லை. தாமாகவே நம்ம பதிவு தமிழ்மணத்துல இணைஞ்சுரும்.

  அப்பீடித்தானே?

Leave a Reply