தமிழ்மணம் & பதிவுகள் இயங்குவேகம் தொடர்பான பிரச்சனைகள்

November 19, 2008 · Posted in தமிழ்மணம் 

தமிழ்மணம் தளத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டன. தமிழ்மணத்தில் புதிய இடுகைகளை இணைப்பது, பதிவுகளில் தமிழ்மணம் பதிவுப்பட்டையின் தறவிறக்கம் போன்றவை மிக வேகமாக இயங்குவதை எங்களின் சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தமிழ்மணம் கருவிப்பட்டை மட்டுமே பதிவுகளை தாமதப்படுத்துவதாக பல பதிவர்கள் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சனை முழுவதுமாக தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டாலுங்கூட சில தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

– தமிழ்மணம் நிரலி தவிர பதிவர்கள் பல விதமான நிரலிகளை தங்கள் பதிவுகளில் இணைத்துள்ளனர். இந்த நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதப்படுத்துகிறது. தமிழ்மணம் நிரலி மட்டுமே உள்ள பதிவுகளின் தரவிறக்கம் வேகமாக உள்ளதை எங்கள் சோதனைகளில் உறுதி செய்திருக்கிறோம். உதாரணமாக இந்தப் பதிவில் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை இரு முறை தோன்றியுள்ளது. http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_18.html
ஆனாலும், இது வேகமாக தரவிறக்கமாகிறது. மாறாக, வேறு நிரலிகள் இணைக்கப்பட்ட பதிவுகள், குறிப்பாக Google Analytics சார்ந்த நிரலிகள் கொண்ட பதிவுகள் தரவிறக்கமாக தாமதமாகிறது.

– இது தவிர ஐ.பி.எண்களை காட்டும் நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதம் செய்கிறன.

– தமிழ்மணம் நிரலியிற்கூட பதிவர்களின் புகைப்படங்களை திரட்டும் Gravatar நுட்பமே தமிழ்மணம் பதிவுப்பட்டை பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. தற்காலிகமாக Gravatar மூலமாக புகைப்படம் திரட்டுதலை நிறுத்தியுள்ளேம்.

பதிவர்கள் தற்பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டுமில்லாது, பதிவுகளை திரட்டுவதும் வேகமாக உள்ளதை உணரலாம். வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை பதிவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். விரைவாக சரி செய்ய முயல்வோம்

கடந்த சில நாட்களாகத் தமிழ்மணம் தளத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு வருந்துகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

12 Responses to “தமிழ்மணம் & பதிவுகள் இயங்குவேகம் தொடர்பான பிரச்சனைகள்”

 1. தமிழ் பிரியன் on November 19th, 2008 9:23 am

  தமிழ் மணத்துக்கு நன்றிகள்! இப்போது மிக வேகமாகவே திறக்கின்றது. இடுகை சேர்ப்பு மற்றும் மறுமொழி திரட்டலும் சிறப்பாக உள்ளது. சீரமைப்புகளுக்கு மிக்க நன்றி!

 2. தமிழ்மணம் on November 19th, 2008 10:52 am

  தமிழ் பிரியன்
  நீங்களே உங்கள் பதிவின் அடைச்சொற்களின் வழி பதிவுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம்.

  the idea is to move away from categorization and use tags in their own blogs. Those would be picked up during aggregation

 3. thamizhanambi on November 19th, 2008 2:23 pm

  நன்றி.

 4. லக்கிலுக் on November 20th, 2008 1:01 am

  http://blog.thamizmanam.com/archives/142 – இப்பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுப்பியிருக்கும் மகுடம் குறித்த விஷயங்களுக்கு தமிழ்மணம் நிர்வாகம் பதிலளிக்கும் என்று எண்ணினேன்.

  மகுடத்தால் பாதிக்கப்படுவது மாற்றுப்பார்வை என்பதையாவது தமிழ்மணம் உடனடியாக உணரவேண்டும். உதாரணத்துக்கு சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பான மாற்றுக்கருத்துக்களை வைத்த பல பதிவுகள் வெறும் மைனஸ் குத்துக்களே வாங்கியிருக்கிறது.

  பொதுப்புத்தியோடு யாருக்கும் வலிக்காமல் பதிவிடுபவர்கள் மட்டுமே வாசகர் பரிந்துரையில் இடம்பெறும் நிலை இருக்குமானால் தமிழ்மணத்தின் உண்மையான நோக்கம் திசைமாறிவிடும்.

  மகுடத்துக்குப் பதிலாக அதிக வாசகர்கள் பார்வை அடிப்படையில் அமைந்த சூடான இடுகைகளே எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது 🙁

 5. பாக்கியம் ராமசாமி on November 20th, 2008 11:38 am

  நண்பர் லக்கிலுக்கின் கருத்துடன் உடன்படுகிறேன்.

  ஆனால் லக்கிலுக் தன்னுடைய பதிவுக்கு சூடான இடுகைகளில் இருந்த பொழுது இருந்த கவனம் தற்பொழுது இல்லை என்று நினைக்கிறார் போலும். சூடான இடுகைகளில் லக்கிலுக், செந்தழல் ரவி, கோவி.கண்ணன் ஆகிய குறிப்பிட்ட சிலர் தவிர வேறு பதிவர்களின் எந்தப் பதிவும் இடம் பெற முடியாத சூழ்நிலை இருந்த பொழுது லக்கிலுக் இவ்வாறு எழுதியிருந்தால் அவரது நேர்மையை பாராட்ட முடியும்

  மகுடத்தில் கடந்த இரு நாட்களாக செந்தழல் ரவியின் லோஷன் கைது குறித்த பதிவு உள்ளது. இதற்கு முன்பு மோகன்தாஸ் எழுதிய வாரணம் ஆயிரம், சட்டக்கல்லூரி விவகாரம் குறித்த பதிவு இருந்தது. இதுவெல்லாம் மணகுடங்களா ?

  வாசகர் பரிந்துரை ஒரு கலவையாக தற்பொழுது உள்ளது. சூடான இடுகைகளின் மொக்கைகளை காட்டிலும் இது பரவாயில்லை. சட்டகல்லூரி விவகாரம் முதல் லக்கிலுக்கின் அபிமானத்திற்குரிய தினமலர் குறித்த பதிவு வரை இந்த கலவை சூடான இடுகைகளைக் காட்டிலும் நன்றாகவே உள்ளது.

  ஜ்யோவ்ராம் சுந்தர், லக்கிலுக் இருவரும் எழுதிய பதிவுகள் பரிந்துரையில் இடம்பிடித்தால் லக்கிலுக்கின் கவலை நின்று விடும்.

  லக்கிலுக் தன்னுடைய பதிவுகளில் வெளியிடும் வெக்கப்படாதீங்க சார் போன்றவை மாற்றுக்கருத்தாக முடியாது என நம்புகிறேன் :-))

  எது எப்படியாயினும் தமிழ்மணம் மகுடம் போகிற போக்கினை நிர்வாகம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தமிழ்மணம் தற்பொழுது வேகமாக உள்ளது. உங்களது உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்

  – பாக்கியம் ராமசாமி

 6. thamizhanambi on November 21st, 2008 7:34 am

  வணக்கம்.
  இன்று .இந்திய நேரம் மாலை 04-50க்கு புதிதாக எழுதிய இடுகையைத் தமிழ்மணத்தில் இணைக்க அளித்தேன்.

  வியப்பளிக்கும் வகையில், இரண்டு இடுகைகளுக்கு முன் உள்ள பழைய இடுகையே – (முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகை) – இப்போது தமிழ்மணத்துடன் இணைக்கப்பட்டதைக் கண்டேன்.

  நான் இதுவரை இணைக்காத கடைசியாக எழுதிய இடுகையை இணைக்க இயலவில்லை.

  இணைக்க முயன்றால், புதிதாக இடுகை இல்லை ( ! ) என்னும் அறிவிப்பே வருகிறது.

  எங்கே தவறு நேர்கிறதென்று தெரியவில்லை.

 7. ஊர் சுற்றி on November 21st, 2008 2:08 pm

  //வியப்பளிக்கும் வகையில், இரண்டு இடுகைகளுக்கு முன் உள்ள பழைய இடுகையே – (முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகை) – இப்போது தமிழ்மணத்துடன் இணைக்கப்பட்டதைக் கண்டேன்.//

  நானும் இதை அனுபவித்தேன்.
  திரும்ப திரும்ப முயற்சித்த போது, கடைசியான இடுகை இணைக்கப்பட்டது. அதற்கு முந்தைய இன்னும் இணைக்கப்படாத இடுகை சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

 8. தமிழ்மணம் on November 21st, 2008 10:20 pm

  //வியப்பளிக்கும் வகையில், இரண்டு இடுகைகளுக்கு முன் உள்ள பழைய இடுகையே – (முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகை) – இப்போது தமிழ்மணத்துடன் இணைக்கப்பட்டதைக் கண்டேன்.//

  ****

  இந்த bug தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது

  நன்றி…

 9. thamizhanambi on November 22nd, 2008 7:22 am

  நான் இதுவரை இணைக்காத கடைசியாக எழுதிய இடுகையை இணைக்க இயலவில்லை.

  இணைக்க முயன்றால், புதிதாக இடுகை இல்லை ( ! ) என்னும் அறிவிப்பே வருகிறது.

 10. லக்கிலுக் on November 25th, 2008 5:56 am

  //ஆனால் லக்கிலுக் தன்னுடைய பதிவுக்கு சூடான இடுகைகளில் இருந்த பொழுது இருந்த கவனம் தற்பொழுது இல்லை என்று நினைக்கிறார் போலும். சூடான இடுகைகளில் லக்கிலுக், செந்தழல் ரவி, கோவி.கண்ணன் ஆகிய குறிப்பிட்ட சிலர் தவிர வேறு பதிவர்களின் எந்தப் பதிவும் இடம் பெற முடியாத சூழ்நிலை இருந்த பொழுது லக்கிலுக் இவ்வாறு எழுதியிருந்தால் அவரது நேர்மையை பாராட்ட முடியும்//

  பாக்கியம் ராமசாமி அவர்களே!

  நீங்கள் என்னுடைய நேர்மையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. ‘சூடான இடுகைகள்’ என்ற பகுதியை ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக எதிர்த்து வருகிறேன். இது சம்பந்தமான பழைய பதிவுகள், பின்னூட்டங்களின் போது நீங்கள் ஏரிக்கரையோரமாக சொம்போடு போயிருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே அவற்றை நீங்கள் கவனிக்காமல் போயிருக்கலாம் 🙂

  //வாசகர் பரிந்துரை ஒரு கலவையாக தற்பொழுது உள்ளது. சூடான இடுகைகளின் மொக்கைகளை காட்டிலும் இது பரவாயில்லை. சட்டகல்லூரி விவகாரம் முதல் லக்கிலுக்கின் அபிமானத்திற்குரிய தினமலர் குறித்த பதிவு வரை இந்த கலவை சூடான இடுகைகளைக் காட்டிலும் நன்றாகவே உள்ளது.//

  வாசகர் பரிந்துரை எப்படி செயல்படுகிறது என்று நெஜமாலுமே உங்களுக்கு தெரியுமா? இல்லை வாயிருக்கிறதே என்று தூக்கிக்கொண்டு கருத்து சொல்ல வந்துவிட்டீர்களா?

  புரிந்துணர்தலோடு தொடரும் ராமசாமியின் ஒத்துழைப்புக்கு நன்றி 🙂

  அன்புடன்
  லக்கிலுக்

 11. லக்கிலுக் on November 25th, 2008 5:59 am

  அப்புறம் ‘தினமலர்’ என்று சொன்னதிலேயே பாக்கியம் ராமசாமி தன் கொண்டையை காட்டியிருக்கிறார். நான் போறேன், போறேன்னு போங்கு காட்டிட்டு பாக்கியம் ராமசாமி இன்னுமா ஆட்டையில் இருக்கிறாரு 🙂

 12. Sharepoint The Great on November 30th, 2008 11:23 pm

  நீங்கள் கூறியிருக்கும் விசயங்கள் மிக மிகச் சரி.

  தேவையில்லாத பல விட்ஜெட்ஸ்களை வலைப்பூவில் இணைப்பதால் பேஜ் லோடிங்க் வேகம் கணிசமாகக் குறைகிறது.

  கூகிள் அனலிடிக்ஸ், கவுண்டர், ஃபீட்ஜிட், எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர்? போன்றவற்றிர்காக உள்ள கருவிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

  நான் என்னுடைய தமிழ்2000ல் இந்தக் கவுண்டர், ஃபீட்ஜிட், no of users online எல்லாத்தையும் எடுத்துட்டேன்.

  மேலும் வீட்டுப்பக்கம் – home page – லோட் ஆகும்போது, ஒரே ஒரு பதிவை மாத்திரம் காண்பிப்பதால் லோடிங்க் வேகம் சற்று அதிகரித்திருக்கிறது.

  நன்றிகளுடன்,
  ஷேர்பாய்ண்ட் தி கிரேட்

Leave a Reply