தமிழ்மணத்திலே இடுகைகளைச் சேர்த்தல்

November 17, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் வழங்கியின் பராமரிப்பு தொடர்பான வேலைகள் முடிவடைந்து, தமிழ்மணம் வழக்கமான சேவைக்குத் திரும்பியிருக்கின்றது.

எனினும், பதிவர்கள் புதுஇடுகைகளைத் தமது பதிவுகளிலிருந்தே தமிழ்மணத்துக்குச் சேர்ப்பதிலே தடங்கலிருக்கின்றதாகத் தெரிகின்றது. புதிய இடுகைகளைச் சேர்க்கும்போது, “புதிய இடுகைகள் காணப்படவில்லை” என்ற செய்தி கிட்டுகிறது.

தற்போதைக்கு பதிவர்கள் தமிழ்மணத்தின் முன்பக்கத்திலே “இடுகைகளைப் புதுப்பிக்க” வசதியினூடாக, தம் பதிவு முகவரியினைத் தருவதன்மூலம், வழக்கம்போலவே புதிய இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கலாம்.

தம் பதிவுகளிலிருந்து நேரடியாகப் புதிய இடுகைகளை அறியத்தரும் நுட்பத்திலிருக்கும் குறைபாடு விரைவிலே களையப்பட்டுத் தொழிற்படுவதற்கான முயற்சி செய்கிறோம்.

புரிந்துணர்வோடு தொடரும் ஆதரவுக்கு நன்றி.

பின்னிணைப்பு
நவம்பர் 18, 2008
தற்போது, இடுகைகளைப் பதிவிலிருந்தே இணைக்கும் சேவை தொழிற்படுகிறது

Comments

23 Responses to “தமிழ்மணத்திலே இடுகைகளைச் சேர்த்தல்”

 1. துளசி கோபால் on November 17th, 2008 4:22 pm

  தகவலுக்கு நன்றி

 2. Surveysan on November 17th, 2008 10:26 pm

  thanks for the update.

 3. Surveysan on November 17th, 2008 10:28 pm

  suggestion – in the javascript for the toolbar, can you guys do a timer which will launch and exectute your function after 10 seconds or so, to do its thing, instead of doing it on page load?

  this will help us getting a faster page refresh instead of waiting for TM to finish its ‘processing’.

 4. தமிழ் பிரியன் on November 17th, 2008 11:01 pm

  மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. அதிக நாட்கள் எடுத்துக் கொள்கின்றீர்கள். தமிழ் மண முகப்பில் இருக்கும் புதிய இடுகைக்கான சேர்க்கைக் கட்டத்தில் என் பதிவு இடுகை முகவரியைக் கொடுத்தால் வழக்கம் போல்(??) புதிய பதிவைச் சேர்ப்பதற்கான பகுதிக்கு செல்கின்றது. எங்கள் பதிவில் இருந்தும் தமிழ் மணத்துக்கு இடுகைகளைத் தர இயலவில்லை. மிக மோசமான அனுபவங்களை கடந்த சில நாட்களாக தருகின்றீர்கள். இதில் சரியாகி விட்டது என்று பதிவு வேறா? … நல்ல காமெடி.. :((

 5. அனுஜன்யா on November 18th, 2008 12:00 am

  நல்ல செய்தி. வாழ்த்துக்கள். நன்றியும் கூட உங்கள் சேவைக்கு.

  அனுஜன்யா

 6. அருட்பெருங்கோ on November 18th, 2008 12:01 am

  பதிவு முகவரி அளித்ததும் இவ்வாறு பிழை செய்தி வருகிறது :

  Warning: MagpieRSS: Failed to fetch http://blog.arutperungo.com/atom.xml. (HTTP Response: HTTP/1.1 404 Not Found ) in /var/www/vhosts/tamilmanam.net/httpdocs/magpierss/rss_fetch.inc on line 230

  மன்னிக்கவும்! உங்கள் பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை.

  உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.

  உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்

  பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்

  —-

  ஆனால் செய்தியோடையில் பிழையில்லை!

 7. king... on November 18th, 2008 12:34 am

  நன்றி…

 8. Nithya.T on November 18th, 2008 12:41 am

  ஈழம் பற்றி ஈழத்து பெண் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எழுதும் வலைத்தளம்

 9. லக்கிலுக் on November 18th, 2008 1:12 am

  நன்றி.

  இருப்பினும் அவ்வப்போது முகப்பிலும் கூட இடுகைகளை அளிக்க தாவூ தீருகிறது 🙁

 10. தமிழ்மணம் on November 18th, 2008 4:39 am

  தற்போது, இடுகைகளைப் பதிவிலிருந்தே இணைக்கும் சேவை தொழிற்படுகிறது

 11. லக்கிலுக் on November 18th, 2008 5:05 am

  பெருகிவரும் பதிவர்கள், வாசகர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் வீச்சினை தாங்கும் வகையில் தமிழ்மணம் தனது சேவையில் சில மாற்றங்களை செய்துவருகிறது. மெத்த மகிழ்ச்சி. எத்தனையோ தமிழ் திரட்டிகள் வந்திருந்தபோதும் தமிழ்மணம் தமிழ்வலையுலகில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணமாக நான் கருதுவது தமிழ்மணத்தின் வடிவமே தவிர்த்து வேறெதுவுமில்லை.

  ‘சூடான இடுகைகள்’ என்றொரு பகுதியை தமிழ்மணம் அறிமுகப்படுத்தியபோதே பலரும் அது ஒரு அபத்தமான முயற்சி என்று ஆட்சேபம் தெரிவித்திருந்தார்கள். ஆட்சேபணை நியாயம் தான் என்பதுபோல சூடான இடுகைகள் முழுக்க யோனிகளால் நிறைந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நல்ல பதிவுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மொக்கை மற்றும் கும்மிகளாக அறியப்பட்ட பல பதிவுகளே சூடான இடுகைகளில் தொடர்ந்து இடம் பிடித்தது.

  அதுபோல மறுமொழியிடப்பட்ட இடுகைகளிலும் ‘மீ த பர்ஸ்ட்டு’ ரேஞ்சு பின்னூட்டங்கள் வாங்கும் பல இடுகைகள் ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கட்டுப்படுத்த 40 மறுமொழிகள் மட்டுமே காட்டப்படும் என்ற ஒரு விதியை தமிழ்மணம் கொண்டுவந்தது. ஆரம்பத்தில் நான் உள்ளிட்டோர் அதை எதிர்த்தாலும், ஓரளவுக்கு கும்மிப் பின்னூட்டங்களை அச்செயல் தடுத்தது என்பதை பிற்பாடு அறியமுடிந்தது. ஆயினும் மீண்டும் தமிழ்மணம் ஜெயலலிதா மாதிரி அத்திட்டத்தையும் வாபஸ் பெற்றுவிட்டது.

  தற்போதைய மாற்றங்களில் ‘சூடான இடுகைகள்’ நீக்கப்பட்டுவிட்டது என்பது மகிழ்ச்சி அளித்தாலும், அதற்குப் பதிலாக வாசகர் பரிந்துரைக்கு முக்கியத்துவம் தரும் ‘மகுடம்’ அமைக்கப்பட்டிருப்பது சூடான இடுகைகளை விட ஆபத்தானது என்பது என் கருத்து. தமிழ் வலையுலகில் சிறந்த எழுத்துநடை மற்றும் சிறப்பான கருத்துக்களை கொண்ட வலைப்பதிவுகளை பாராட்டுவதை தவிர்த்து, அதை எழுதியவர் எந்த சிந்தனை சார்பு கொண்டவர் என்பதைப் பார்த்து வயிறெரிபவர்களே அதிகம் என்பது நிதர்சனம்.

  ஒரு ஐ.பி. எண்ணுக்கு ஒரு ஓட்டு என்பது வாசகர் பரிந்துரை அளிக்கும் ஜனநாயக சுதந்திரம். ஒரே ஐ.பி. எண்ணில் இயங்கக்கூடிய இணையத்தொடர்பு ஸ்டேட்டிக் ஐ.பி. என்று சொல்லப்படுகிறது. ஸ்டேட்டிக் ஐ.பி.யில் இயங்குபவர்களால் ஒரு பதிவுக்கு ஒரு ஓட்டுதான் அளிக்க முடியும். பொதுவாக நிறுவனங்களில் இருக்கும் இணையத்தொடர்பு ஸ்டேட்டிக் ஐ.பி.யாக இருக்கும்.

  ஆனால் வீடுகளில் ஏர்டெல், பி.எஸ்.என்.எல் போன்றவை மூலமாக கிடைக்கும் தொடர்பு டைனமிக் ஐ.பியாக இருக்கும். டைனமிக் ஐ.பி. என்பது ஒவ்வொரு முறை இணையத்தை தொடர்புகொள்ளும் போதும் எண் மாறிக்கொண்டேயிருக்கும். இணையத்தொடர்புக்கு அவசியமான மோடமை ஒருமுறை அணைத்து, மறுமுறை தொடங்கினால் ஐ.பி.எண் இத்தகைய தொடர்பில் மாறிவிடும். இதன்மூலமாக கள்ளஓட்டு இஷ்டத்துக்கும் குத்தமுடியும். தன் பதிவுக்கே நூறுமுறை கூட ஒருவர் கள்ளஓட்டு குத்தலாம். கி.அ.அ.அனானி போன்றவர்கள் இத்தகைய கள்ளஓட்டு தேர்தலில் கரைகண்டவர்கள் என்பது தமிழ்வலையுலகில் ஊறியிருக்கும் குஞ்சுகுளவான்களுக்கும் கூடத்தெரியும்.

  கள்ள ஓட்டு மிக அதிகமாக குத்தப்பட உள்ள சூழ்நிலையில் இப்போதிருக்கும் மகுடம் வெறும் மண்குடமாக்கப்பட்டு பேமானிகளால் உடைக்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக வாசகர் தேர்வு முறையை நீக்கிவிட வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஓரளவுக்கு இதை மாற்றினால் ஜனநாயகமயம் ஆக்கமுடியும்.

  தமிழ்மணப் பயனர்கள் (வாசகர்கள் உட்பட) ஒவ்வொருவரும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயனர் கணக்கில் உள்நுழைந்தவர்கள் மட்டுமே வாசகர் பரிந்துரைக்கு வாக்களிக்க முடியும் என்ற நிலையிருந்தால் கள்ளஓட்டுக்களை பெருமளவில் குறைக்கலாம். அப்படியும் சிலர் பல பயனர் கணக்குகளை உருவாக்கி கள்ளஓட்டு குத்த முடியும் என்றாலும் இப்போதிருக்கும் மகுடத்தில் குத்துமளவுக்கு குத்தமுடியாது. ஒவ்வொருமுறையும் லாக்-அவுட் செய்து, லாகின் செய்து குத்துவதற்கு கள்ள ஓட்டாளர்களுக்கு நேரம் இருக்காது. அப்படி குத்தினாலும் ஐ.பி. எண்ணை சரிபார்த்து, கண்காணித்து கள்ளஓட்டு குத்தும் பயனர்களை நீக்கும் வாய்ப்பும் தமிழ்மணத்துக்கு இருக்கும்.

  மொத்தத்தில் இப்போதைய மகுடம் வலையுலக ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதை மட்டும் தமிழ்மண நிர்வாகத்துக்கு சுட்டிக் காட்டுகிறேன்.

 12. Expatguru on November 18th, 2008 6:36 am

  It is extremely frustrating. Whenever I try to update my posts, I get a message saying
  “உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது”.

  I have checked and found nothing wrong.

  http://madrasthamizhan.blogspot.com

 13. ஹேமா on November 18th, 2008 9:25 am

  வணக்கம் தமிழ்மணம்.என்னால் என் பதிவுகளை இணைக்க முடியவில்லை.என் முகவரியே பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதோ தெரியவில்லை.என் பெயரையே காணவில்லையே! ஹேமா

 14. தகவலுக்கு நன்றி. நான் எனது இணைப்பின் வேகக் குறைவு காரணம் என எண்ணி, நேரடியாக இணைத்தேன். தமிழ்மணம் நிர்வாகத்தினர் அதனை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு எனது பாரட்டுகள்.

 15. இரா.சுகுமாரன் on November 18th, 2008 2:13 pm

  //ஆனால் வீடுகளில் ஏர்டெல், பி.எஸ்.என்.எல் போன்றவை மூலமாக கிடைக்கும் தொடர்பு டைனமிக் ஐ.பியாக இருக்கும். டைனமிக் ஐ.பி. என்பது ஒவ்வொரு முறை இணையத்தை தொடர்புகொள்ளும் போதும் எண் மாறிக்கொண்டேயிருக்கும். இணையத்தொடர்புக்கு அவசியமான மோடமை ஒருமுறை அணைத்து, மறுமுறை தொடங்கினால் ஐ.பி.எண் இத்தகைய தொடர்பில் மாறிவிடும்.//

  வணக்கம்,
  நண்பர் லக்கிலுக் எதிர்பார்க்கிற மாதிரி ஒரே நபர் தவராக வாக்களித்துக் கொள்ள கூடாது என்பது சரிதான். ஆனால், நண்பர் சொல்கிற மாதிரி ஒவ்வொரு முறை இணைய இணைப்புக் கொடுக்கும் போது ஒரு அய்.பி எண் கொடுக்கப்படுகிறது என்பது முழு அளவில் சரியான தகவல் அல்ல.

  பி.எஸ். என். எல், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பயன்பாட்டு அளவை கணக்கிட அந்தந்த அய்.பி எண்களை வைத்தே கணக்கிடுகின்றன, அதனால் அடிக்கடி இவ்வாறு மாற்றம் செய்ய இயலாது.
  மேலும் சைபர் கிரைம் போன்றவை கண்டு பிடிக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். அதில் அடிக்கடி அய்.பி எண் மாற்றிக் கொள்ளப்பட்டால் யார் வேண்டுமானாலும் யாருக்கும் தவரான செய்தி அனுப்பி தப்பித்துவிடலாம். எனவே ஒருவருக்கு ஒரு அய் .பி எண் என்பதே சரி, அது செல் போன் போல +91 99958 58522 என்ற சொல்போன் எண் உலகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொடுக்க முடியும் என்பது போலாகும்.

  அய். பி எண் என்பது இருவகையானது,
  ஒன்று இணைய இணைப்பிற்கானது அந்த அய். பி எண் 118.201.2.257 இவ்வாறு இருக்கும் ஆனால், கணினி மற்றொன்று 192.168.1.1 முதல் 192.168.1.999 என தானாக கணினி அய். பி எண் அமைத்துக்கொள்ளும். இது லோக்கல் நெட் ஒர்க் எனப்படும் அதாவது ஒரு அலுவலகத்தில் 10 கணினி இருந்தால் ஓவ்வொரு கணினியும் தன்னிச்சையாக அய். பி எண் அமைத்துக் கொள்ளும் என்பது உண்மை,

  மேலே கூறியது உண்மையா என சோதிக்க நான் மூன்று முறை எனது கணினியை நிறுத்தி மீண்டும் இயக்கினேன், ஆனால் அய். பி எண் மாறவில்லை. நான் சொல்வது இரண்டுவகையான அய்.பியும் தான் எனது தளத்தில் அய்.பி எண் பார்க்கிற வசதி இருக்கிறது அதில் பார்த்த சரிபார்த்த பின்பே இந்த செய்தியை நான் எழுதுகிறேன்.

 16. உண்மைத்தமிழன் on November 18th, 2008 2:30 pm

  நன்றி நிர்வாகிகளே..

  இன்றைக்கு எனது பதிவை கஷ்டமில்லாமல் இணைத்தேன்..

  மாற்றங்கள் கண்டிப்பாக தேவைதான்.. அது நீண்ட காலத் தேவையையொட்டி இருத்தல் நலம்.

  தங்களுடைய உழைப்பிற்கு எனது சல்யூட்..

 17. Surveysan on November 18th, 2008 11:45 pm

  லக்கி சொல்வதைப் போல், வாசகர் பரிந்துரையும், பூத் கேப்சரிங் செய்யப்படக் கூடியது.

  openID login வைத்து அதை control செய்தல் நலம். மாசத்துக்கு ஒரு தடவை, கணக்குகளைஇ சரிபார்த்து, black listல் ப்ரச்சனை செய்யும் ஐ.டி.க்களை சேர்க்கலாம்.

  in the long run, this will be a successful solution.

 18. லக்கிலுக் on November 19th, 2008 1:15 am

  //அய். பி எண் என்பது இருவகையானது,
  ஒன்று இணைய இணைப்பிற்கானது அந்த அய். பி எண் 118.201.2.257 இவ்வாறு இருக்கும் ஆனால், கணினி மற்றொன்று 192.168.1.1 முதல் 192.168.1.999 என தானாக கணினி அய். பி எண் அமைத்துக்கொள்ளும். இது லோக்கல் நெட் ஒர்க் எனப்படும் அதாவது ஒரு அலுவலகத்தில் 10 கணினி இருந்தால் ஓவ்வொரு கணினியும் தன்னிச்சையாக அய். பி எண் அமைத்துக் கொள்ளும் என்பது உண்மை,//

  இரா. சுகுமாரன்!

  ஐ.பி. பற்றிய உங்கள் புரிதல் தவறானது. லோக்கல் நெட் ஒர்க் ஐ.பி.யும், நான் குறிப்பிடும் ஐ.பி.யும் வேறு வேறு. குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

  வீடுகளுக்கு தரப்படும் இணையத் தொடர்பு பெரும்பாலும் டைனமிக் ஐ.பி. என்றழைக்கப்படும். ஒவ்வொரு தொடர்பின் போதும் வேறு வேறு ஐ.பி. எண்கள் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையின் எல்லைக்குள் இருக்கும் எண்களாக அவை இருக்கும்.

  மாறாக நிறுவனங்களில் தரப்படும் இணையத் தொடர்பு பொதுவாக ஸ்டேட்டிக் ஐ.பி. என்று அழைக்கப்படும். ஒரு நிறுவனத்தில் 500 கணினியில் இவ்வாறான தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், 500 கணினிகளிலும் ஒரே எண்ணே எப்போதும் ஐ.பி. எண்ணாக இருக்கும். ஆனால் 500 கணினிகளுக்கும் லோக்கல் நெட் ஒர்க் ஐ.பி. வேறு வேறாக இருக்கும்.

 19. அறிவன் on November 19th, 2008 1:23 am

  எனக்கும் பதிவுகளைச் சேர்ப்பதில் பிரச்னை இருக்கிறது.
  ஒரு புதிய வலைப்பதிவைச் சேர்க்க முயன்ற போது நிர்வாகிக்கு மடலிட வேண்டியது தமிழ்மணம்.
  ஆனால் அந்த இணைப்பில் ஏதும் செய்ய இயலவில்லை.
  புதிய பதிவின் முகவரி:http://sangappalagai3.blogspot.com/

 20. வால்பையன் on November 19th, 2008 9:01 am

  வகைப்படுத்த முடியவில்லை!

 21. வெங்கடேஷ் on November 19th, 2008 12:30 pm

  லாகின் செய்த பிறகே ஓட்டளிக்க முடியும் என்கிற முறையே சரியானது என படுகிறது. digg.com தளத்தில் இந்த முறை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது அதையே பின்பற்றலாம். மேலும் openID login புதிய கணக்கு உருவாக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

 22. தமிழ்மணம் on November 20th, 2008 11:43 pm

  தமிழ்மணம் சேவையில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்கள் குறித்த இடுகையில் இவ்வாறு கூறியிருந்தோம்

  ***

  இந்த சேவை மாற்றங்கள் பதிவர்கள்/வாசகர்களுக்கான சில வசதிகளை குறைத்தாலும், இந்த மாற்றங்கள் புதிய வழங்கிக்கு மாறும் வரை மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறோம். புதிய வழங்கி மாற்றத்திற்கு பின் மறுபடியும் அனைத்து சேவைகளும் வழக்கம் போல இயங்கும்.

  ****

  வழங்கி மாற்றத்திற்கு பிறகு தமிழ்மணத்தின் வழக்கமான சேவைகள் (சூடான இடுகைகள் போன்றவை) தொடரும்.

  OpenID நுட்பத்தைக் கொண்டு பரிந்துரைக்கும் முறையை கொண்டு வரும் திட்டமும் உள்ளது

  நன்றி…

 23. arutperungo on December 5th, 2008 9:45 am

  /தற்போதைக்கு பதிவர்கள் தமிழ்மணத்தின் முன்பக்கத்திலே “இடுகைகளைப் புதுப்பிக்க” வசதியினூடாக, தம் பதிவு முகவரியினைத் தருவதன்மூலம், வழக்கம்போலவே புதிய இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கலாம்./

  I am not able to do so and getting the message -‘புதிய இடுகைகள் காணப்படவில்லை’ repeatedly.

  /தற்போது, இடுகைகளைப் பதிவிலிருந்தே இணைக்கும் சேவை தொழிற்படுகிறது/

  Even this is also not working for my blog and getting the same message!

  Do I need to make any changes in the script?

Leave a Reply