தமிழ்மணம் சேவையில் மாற்றங்கள்

தமிழ்மணம் வழங்கியில் (Server) எதிர்கொண்டு வரும் பிரச்சனை காரணமாக தமிழ்மணம் சேவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.

அதிகப்படியான பதிவர் வருகை தவிர, தமிழ்மணம் தளம் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் வலைப்பதிவு உலகின் அனைத்து பதிவுகளையும் வைத்துள்ளதும் தமிழ்மணம் தளத்தின் வழங்கிக்கு பலுவை ஏற்படுத்துகிறது. இவை தவிர மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொல் திரட்டுதல், சூடான இடுகைகள் போன்றவையும் தமிழ்மணம் வழங்கிக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது.

இதுவே தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி விடுவதற்கான காரணம்.

புதிய வழங்கிக்கு விரைவில் மாறும் திட்டம் இருந்தாலும், தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். இந்த மாற்றங்களால் தமிழ்மணம் தளம் பிரச்சனையின்றி இயங்கவும், பதிவுப்பட்டை போன்றவை வேகமாக தறவிறக்கவும் உதவும் என நம்புகிறோம்.

சேவை மாற்றங்கள்
– சூடான இடுகை பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வாசகர் பரிந்துரைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பதிவர்களின் பதிவுப்பட்டையில் இருந்தே வாக்களிக்கும் இந்த முறை மூலம் வாசகர்களால் தேர்வு செய்யப்படும் இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரியும். இதனை பதிவர்களும்/வாசகர்களும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்

– பதிவுகளின் மறுமொழிகளை திரட்டும் வசதியில் கடந்த 20 நாட்களில் எழுதப்பட்ட பதிவுகளின் மறுமொழிகள் மட்டுமே திரட்டப்படும். பழைய பதிவுகளின் மறுமொழிகள் திரட்டப்படாது

இந்த மாற்றங்கள் காரணமாக தமிழ்மணம் தளம், பதிவுப்பட்டை போன்றவை சற்று வேகமாக இயங்கும் என நம்புகிறோம். தமிழ்மணம் தளம் முடங்கிப் போகாது.

இந்த சேவை மாற்றங்கள் பதிவர்கள்/வாசகர்களுக்கான சில வசதிகளை குறைத்தாலும், இந்த மாற்றங்கள் புதிய வழங்கிக்கு மாறும் வரை மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறோம். புதிய வழங்கி மாற்றத்திற்கு பின் மறுபடியும் அனைத்து சேவைகளும் வழக்கம் போல இயங்கும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

25 Responses to “தமிழ்மணம் சேவையில் மாற்றங்கள்”

 1. யோசிப்பவர் on November 15th, 2008 10:51 am

  புதிய வழங்கிக்கு மாறிய பின் பழைய சேவைகள் தொடருமா? சூடான இடுகைகள் ஓகே. பழைய பதிவுகளின் மறுமொழி திரட்டல் நிறுத்தல், நாட் ஓகே. சீக்கிரம் மாறினால் சந்தோஷம்!!

 2. நாமக்கல் சிபி on November 15th, 2008 10:53 am

  //இந்த சேவை மாற்றங்கள் பதிவர்கள்/வாசகர்களுக்கான சில வசதிகளை குறைத்தாலும், இந்த மாற்றங்கள் புதிய வழங்கிக்கு மாறும் வரை மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறோம். புதிய வழங்கி மாற்றத்திற்கு பின் மறுபடியும் அனைத்து சேவைகளும் வழக்கம் போல இயங்கும்//

  தற்காலிக வசதிக் குறைவுகள்தானே! இதனால் ஒன்றும் ஏற்பட்டும்விடப் போவதில்லை!

  நமது வீட்டைப் புதுப்பிக்கும்போது சிற்சில வசதிக் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லையா! அதுபோல்தான் எங்களுக்குத் தமிழ்மணம் தளமும்!

  எங்கள் ஒத்துழைப்பும்/புரிந்துணர்வும் வழக்கம்போல் தொடரும்!

  தமிழ்மண நிர்வாகத்திற்கு நன்றிகளும்!

 3. puduvai siva on November 15th, 2008 11:15 am

  Dear Thamizmanam

  Good Thinking in the Right Time

  and best wishes for your Service..

 4. உண்மைத்தமிழன் on November 15th, 2008 11:28 am

  நல்லது.

  உடனடித் தீர்வுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்..

  இப்போதே நன்றாகத்தான் உள்ளது..

 5. kobi on November 15th, 2008 11:36 am

  //இதற்கு பதிலாக வாசகர் பரிந்துரைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது//

  sila per ninaraiya vote poda mudiyum

 6. ILA on November 15th, 2008 11:39 am

  //கடந்த 20 நாட்களில் எழுதப்பட்ட பதிவுகளின் //
  இதெல்லாம் ரொம்ப அதிகம்ங்க.20 நாள் மட்டும்னா எப்படிங்க. தமிழ்மணத்தின் சிறப்பே பின்னூட்டம்தான்,அதையும் இப்படி விலங்குபோட்டுபூட்டினா எப்படிங்க?

 7. தமிழ்மணம் on November 15th, 2008 11:52 am

  பதிவர்களின் கருத்துகளுக்கு நன்றி…

  *****

  இதெல்லாம் ரொம்ப அதிகம்ங்க.20 நாள் மட்டும்னா எப்படிங்க. தமிழ்மணத்தின் சிறப்பே பின்னூட்டம்தான்,அதையும் இப்படி விலங்குபோட்டுபூட்டினா எப்படிங்க?

  *****

  இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே – அதிகபட்சம் ஒரு மாதம். தமிழ்மணத்தின் முக்கிய சேவை மறுமொழிகளை திரட்டுதல். அதனை முடக்கும் நோக்கம் இல்லை. புதிய வழங்கிக்கு மாறிய பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கான மறுமொழிகளை திரட்டுவது எங்களின் நோக்கமாக உள்ளது

  நன்றி…

 8. Osai Chella on November 15th, 2008 12:18 pm

  Though you are loosing your tamil disaggregator market share…. and not aggregating my blogs … i wish tamilmanam all the best… cause you brought many ppl closer, closer than ever!

 9. Osai Chella on November 15th, 2008 12:19 pm

  Though you are loosing your tamil aggregator market share…. and not aggregating my blogs … i wish tamilmanam all the best… cause you brought many ppl closer, closer than ever!

 10. கிரி on November 15th, 2008 12:59 pm

  சூடான இடுகைகள் இல்லாதது பலரின் வருகைகையை குறைக்கும் என்றே கருதுகிறேன். நீங்கள் தளத்தை புதுப்பிக்கும் வரை இதை போல நடவடிக்கைகள் அவசியம் தான்.

  மீண்டும் சிறப்பான சேவை தர வாழ்த்துக்கள்.

 11. kuppan_yahoo on November 15th, 2008 1:17 pm

  மாற்றங்களுக்கு நன்றி. வலைப்பதிவு ஒரு பொழுது போக்கு சாதனம் மட்டுமே. அதற்காக ஏன் இவ்வளவு சிரமப் படுகிறீர்கள், மனம் வலிக்கிறது.

 12. ILA on November 15th, 2008 1:27 pm

  Please align the Script to have the Thumb in center..I am unable to see the thumbs to vote for example look at this post.

 13. புருனோ on November 15th, 2008 1:32 pm

  நிரலை பதிவில் இணைக்காமல் மறுமொழிகளை திரட்ட முடியுமா

 14. தமிழ்மணம் on November 15th, 2008 1:51 pm

  நிரலை பதிவில் இணைக்காமல் மறுமொழிகளை திரட்ட முடியுமா

  ***

  முடியும். “ம” திரட்டி அவ்வாறு தான் திரட்டுகிறது. வேர்ட்பிரஸ் பின்னூட்டங்களும் அவ்வாறு தான் திரட்டப்படுகிறது.

  ஆனால் உடனுக்குடன் மறுமொழிகள் முகப்பில் தெரியாது. கால தாமதம் ஆகும். அதுவும் தமிழ்மணம் போன்று அதிக பதிவுகள் கொண்ட தளத்தில் அது இன்னும் அதிகமான நேரம் எடுக்கும். வழங்கிக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

  நிரலி மூலம் திரட்டும் நுட்பமே தற்போதைய சூழ்நிலையில் ஏற்றது. குறிப்பாக உடனுக்குடன் திரட்டப்படவேண்டுமென்றால் நிரலி மூலமே சாத்தியமாகும்

  நன்றி…

 15. தமிழ்மணம் on November 15th, 2008 1:53 pm

  Please align the Script to have the Thumb in center..I am unable to see the thumbs to vote for example look at this post.

  ***

  இது கணினியின் resolution சம்பந்தப்பட்டது. என்றாலும் சரி செய்கிறோம்

 16. ILA on November 15th, 2008 2:07 pm

  I use 1280*800

 17. suma on November 15th, 2008 5:00 pm

  என் வலைத்தளத்தில் தமிழ்மண கருவிப்பட்டை இணைத்திருந்த போதிலும் சில இடுகைகளுக்கு மட்டுமே இவை காட்ச்சி அளிக்கின்றன.. ஏன்?

  சோதிக்கவும் http://www.suma-amsam.blogspot.com

  நன்றி.. தமிழ்மணம்

 18. Surveysan on November 15th, 2008 6:16 pm

  uh oh.
  will miss the ‘hot’ section 🙂

 19. லக்கிலுக் on November 17th, 2008 12:59 am

  சூடான இடுகைகளை தூக்கியதற்கு நன்றி சொல்லும் அதே வேளையில் வாசகர் பரிந்துரைக்கு முக்கியத்துவம் தந்திருப்பது வாலு போயி கத்தி வந்தது கதையாக ஆகிவிடும்.

  என்னைப்போன்ற இணைய அரசியல்வாதிகளுக்கு கள்ளஓட்டு குத்தவேண்டும் என்று கை அரிக்கிறது 🙂

  தமிழ்மணத்தில் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆனவர்கள் மட்டுமே வாசகர் பரிந்துரை ஓட்டு குத்துவது போல ஏற்பாடு செய்யலாம்! – இது நானும், டோண்டு சாரும் கலந்து ஆலோசித்தபோது யோசித்த யோசனை!

 20. அர டிக்கெட்டு! on November 17th, 2008 1:38 am

  நீங்கள் அமைத்துள்ள மகுடமும், வாசகர் பரிந்துரையும் பிளாகர் தளத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடிய உங்கள் பதிவுப்பட்டையினால் தேற்தெடுக்கப்படக்கூடியவை வோர்டுபிரெஸ்.காமில் இயங்கும் பதிவுகள் இதில் இடம்பெறாமல் பாதிக்கப்படும்..இதை பாரபட்சம் என கருதுவதை தவிர வேறு வழியில்லை 🙁

 21. ஸ்ரீ on November 17th, 2008 2:30 am

  சூடான இடுகைகள் ஓகே. பழைய பதிவுகளின் மறுமொழி திரட்டல் நிறுத்தல், நாட் ஓகே. சீக்கிரம் மாறினால் சந்தோஷம்!!

  சீக்கிரம் புதிய வழங்கி உதவியோடு நல்ல சேவையை வழக்கம் போல தொடர வாழ்த்துக்கள்.

 22. மதி on November 17th, 2008 5:43 am

  தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு வணக்கம்.

  இது வரை பிரச்சனையில்லாமல் எனது பதிவை திரட்டி வந்த தமிழ் மணம் தற்போது செய்தியோடையில் பிழை இருப்பதாக தெரிவிக்கிறது.

  சோதித்துப் பார்க்கவும்: http://www.perunthottam.blogspot.com

  நன்றி
  மதி(எண்ணச்சுவடி}

 23. SHANMUGAM on November 17th, 2008 10:06 am

  சண்முகம்
  shanmugam_salem@yuurok.com
  வாழ்க TAMILMANAM
  http://www.efm.co.in

 24. வினவு on November 18th, 2008 1:18 am

  மதி, உங்கள் தளத்தின் முகவரியை
  http://feedvalidator.org/ ல்
  சமர்பித்து பாருங்கள், செய்தியோடை பிழைகளை அது சுட்டிக் காட்டும், பிடிபடவில்லையென்றால் கடைசியாக இட்ட பதிவை நீக்கிப்பாருங்கள் அல்லது உங்கள் தளம் எப்பொழுது சரியாக இயங்கியதோ அதுவரையிலும் பின்சென்று மீண்டும் பிரசுரிக்க முயலுங்கள். தமிழ்மணத்தில் எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்ட பொழுது நான் செய்த்து இதுதான்

  நன்றி

 25. Expatguru on November 18th, 2008 6:26 am

  இத்தனை நாட்களாக பிரச்னை ஏதும் இல்லாமல் எனது பதிவுகளை தமிழ்மணம் திரட்டி கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென்று செய்தியோடையில் பிழை என்று தெரிவிக்கின்றது. http://feedvalidator.orgல் சென்று பார்த்தால் பிழை என்று வருகிறது. ஆனால் இத்தனை நாட்களாக பிழைகள் இல்லாமல் இருந்தது. தவறு எங்கு என்றே தெரியவில்லை. எனக்கு HTML தெரியாததால் கடினமாக இருக்கிறது.இத்தனை நாட்களாக பிழை இல்லாமல் இருந்தது இப்பொழுது திடீரென்று எப்படி பிழை இருக்கும் என்பது தெரியவில்லை. பார்க்க http://madrasthamizhan.blogspot.com

Leave a Reply