தமிழ்மணம் வழங்கி பிரச்சனைகள் (Server Problems)

தமிழ்மணம் தளம் செயல்படும் வழங்கியிலே இருந்து வரும் தொடர் பிரச்சனைகளால் தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி விடுவதை கடந்த சில வாரங்களாக எதிர்கொண்டு வருகிறோம். அதிகப்படியான வாசகர்/பதிவர் வரவு இதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

இதனை சமாளிக்கவும், எதிர்காலங்களில் தமிழ்மணத்திற்கு வரக்கூடிய புதிய வாசகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தமிழ்மணம் தளத்தை அடுத்த சில நாட்களில் வேறு ஒரு மேம்பட்ட வழங்கிக்கு மாற்ற இருக்கிறோம். இந்த வழங்கி மாற்றம் தமிழ்மணம் தளத்தை மேம்படுத்தவும், தளத்தின் வேகமான தறவிறக்கத்திற்கும் உதவும் என நம்புகிறோம்.

அதுவரையிலும் தமிழ்மணம் தளத்தின் செயல்பாட்டிலே சில பிரச்சனைகள் அவ்வப்பொழுது நேரலாம் என்பதை பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

27 Responses to “தமிழ்மணம் வழங்கி பிரச்சனைகள் (Server Problems)”

 1. துளசி கோபால் on November 12th, 2008 12:23 am

  தகவலுக்கு நன்றி.

  பதிவைச் சேர்க்க முடியாமல் தவிச்சுப்போயிட்டோம்!

 2. டோண்டு ராகவன் on November 12th, 2008 12:33 am

  அவ்வாறு புது வழங்கிக்கு மாற்றும்போது நாங்கள் மறுபடியும் எங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டியிருக்குமா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. aammaappa on November 12th, 2008 12:40 am

  நன்றி தமிழ்மணம் நிர்வாகம்

 4. KarthiK on November 12th, 2008 12:51 am

  ஆமாம் …! பதிவு பட்டை மூலம் சேர்க்க முடியவில்லை. தமிழிஷ் திரட்டியை போல இலகுவாக பதிவுகளை சேர்ப்பது போல செய்தால் நன்றாக இருக்கும்.

 5. நாமக்கல் சிபி on November 12th, 2008 12:54 am

  எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் தொடரும்!

  மேம்பாடு மற்றும் மெயிண்டனன்ஸ் பணிகள் எல்லாத் தளங்களிலும் நடைபெறும்போது சில இடைக்காசலச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான்!

 6. லக்கிலுக் on November 12th, 2008 1:32 am

  மேம்பட்ட வழங்கியை ஆவலோடு எதிர்நோக்குகிறோம். பதிவர்களுடனான புரிதலோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு மீண்டும் மீண்டும் நன்றி!

  அன்புடன்
  லக்கி

 7. தமிழ்மணம் on November 12th, 2008 1:51 am

  அவ்வாறு புது வழங்கிக்கு மாற்றும்போது நாங்கள் மறுபடியும் எங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டியிருக்குமா?

  ****

  There will not be any change in the Technical Features. But the site will have better response time and speed.

 8. ஸ்ரீ on November 12th, 2008 4:23 am

  மேம்பட்ட சேவையை எதிர் நோக்குகிறேன். எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் தொடரும். மேலும் வளர வாழ்த்துக்கள்.

 9. உண்மைத்தமிழன் on November 12th, 2008 4:31 am

  என்னுடைய பதிவுகளை இணைக்க பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது.

  முக்கியமான எனது ஒரு பதிவு இணைக்கப்படாமலேயே போய்விட்டது..

  சீக்கிரமா எதையாவது செஞ்சு வயித்துல பாலை வாருங்க தோழர்களே..

 10. vanjoor on November 12th, 2008 7:35 am

  http://www.thamizmanam.com/index_classic.php
  தமிழ்மணம் “கிலாசிக்” சரியாக செயல்படுகிறது.

  வாசகர்கள் இதன் மூலம் புதிய பதிவுகளை அறிய முடிகிறது.

 11. Nagaraj on November 12th, 2008 11:41 am

  dear sir,
  few bloggers were over whelmly using your portal. as they always wants to bring up their blog rather with older post. best example is luckylook. most of the time he re publishes he old post by doing some minor changes .

  so his post always appears in thamizmanam , his intention is clear. wants to increase the hits for his blog.

  it ends up with irriation for the readers , the public portal like yours should give room for this kind of personal soul end of their favors.

  just image if everyone starts the same thing?

  finally you wont find any room to new peoples to accommodate. its your free service, please ensure its not been hijacked with few peoples

  thanks
  Nagaraj

 12. புருனோ on November 12th, 2008 12:29 pm

  விளக்கத்திற்கு நன்றி

 13. sarangan on November 12th, 2008 12:37 pm

  எவ்வாறு தமிழ்மணத்தின் இணைப்பை எமது புளொக்கில் இடுவது என்பது பற்றி மெயில் பண்ணுங்க.

 14. பரிசல்காரன் on November 12th, 2008 1:07 pm

  எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் தொடரும்!

  மேம்பாடு மற்றும் மெயிண்டனன்ஸ் பணிகள் எல்லாத் தளங்களிலும் நடைபெறும்போது சில இடைக்காசலச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான்!//

  ரிப்பீட்டிக்கறேன்!

 15. சின்ன அம்மிணி on November 12th, 2008 5:56 pm

  தகவலுக்கு நன்றி. குறை எங்களது செர்வரிலா அல்லது தமிழ்மணத்திலா என்று தெரியாமல் திண்டாடீனோம்.

 16. www.peacetrain1.blogspot.com on November 12th, 2008 6:16 pm

  I got ur email,and I understand that you have added my blog into ur site.thanks.And I would like to add your site into my blog.I don’t know,how?pls explain.(send email to me)
  thanks

 17. VANJOOR on November 12th, 2008 9:09 pm

  TO THE WEBTEAM OF TAMIL MANAM.

  YOU HAVE BEEN DOING A GREAT SERVICE WITHOUT ANY RETURNS FROM US.

  I SALUTE ALL OF YOU FROM THE BOTTOM OF MY HEART TO ALL OF YOUR TEAM.

  THANK YOU AGAIN.

  REGARDS.
  VANJOOR

 18. ராமலக்ஷ்மி on November 12th, 2008 9:53 pm

  // இந்த வழங்கி மாற்றம் தமிழ்மணம் தளத்தை மேம்படுத்தவும், தளத்தின் வேகமான தறவிறக்கத்திற்கும் உதவும் என நம்புகிறோம்.//

  இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

 19. T.V.Radhakrishnan on November 12th, 2008 9:57 pm

  நன்றி தமிழ்மணம்

 20. நிர்ஷன் on November 12th, 2008 11:52 pm

  தகவலுக்கு நன்றி தமிழ்மணம்.

 21. தமிழ் மணத்தின் தன்னலமற்ற சேவையை பாராட்டுகிறோம்.

  நடப்பிலுள்ள தரத்தை மேலும் மேன்மை படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்ச்சி முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  தமிழ்மணத்துக்கு நன்றி

 22. லக்கிலுக் on November 13th, 2008 2:53 am

  //என்னுடைய பதிவுகளை இணைக்க பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது.

  முக்கியமான எனது ஒரு பதிவு இணைக்கப்படாமலேயே போய்விட்டது..

  சீக்கிரமா எதையாவது செஞ்சு வயித்துல பாலை வாருங்க தோழர்களே..

  By உண்மைத்தமிழன் on Nov 12, 2008 //

  அண்ணே!

  உங்களது இராமாயண சைஸ் பதிவுகளால் தான் தமிழ்மணமே மேம்பட்ட சேவை வழங்கிக்கு மாறப்போகிறது என்று சொல்கிறார்கள். சீக்கிரம் பால்வார்க்கப்படும் என்று நம்புவோம்.

  //dear sir,
  few bloggers were over whelmly using your portal. as they always wants to bring up their blog rather with older post. best example is luckylook. most of the time he re publishes he old post by doing some minor changes .

  so his post always appears in thamizmanam , his intention is clear. wants to increase the hits for his blog.

  it ends up with irriation for the readers , the public portal like yours should give room for this kind of personal soul end of their favors.

  just image if everyone starts the same thing?

  finally you wont find any room to new peoples to accommodate. its your free service, please ensure its not been hijacked with few peoples

  thanks
  Nagaraj//

  நாகராஜ் சார்!

  என்னா அக்கறை? என்னா அக்கறை? கலக்குறேள் போங்கோ 🙂

 23. ஆர்.நாகப்பன் on November 13th, 2008 6:26 am

  தமிழ்மணத்தின் சேவை
  வலைஞர்களான எங்களுல்லு தேவை…
  தொடரட்டும் புதிய முயற்சி..
  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…..

  அன்புடன்,
  ஆர்.நாகப்பன்.

 24. king... on November 14th, 2008 11:11 am

  thanks thamizmanam…

 25. arun on November 14th, 2008 11:32 am

  நேற்று வந்த திரட்டி சைட்டுகளில் கூட எளிதாக எந்த ஒரு பிளாக்ககையும் இனைக்க முடிகிறது. இங்கு என்னடான்னா செய்தி ஓடை சரியில்ல, குட்ட அது சரியில்ல இது சரியில்லன்னு எக்கசக்க பிராப்ளம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…… (நான் ஒரு பிளாக் ஆரம்பிச்சி ஆறு மாசம் ஆகுது இன்னும் தமிழ்மணத்துல இணைக்க முடியல) பார்த்து சீக்கரம் சரி பண்ணுங்க பாஸீ………… 🙂

 26. t.thamizhchelvan on November 14th, 2008 12:46 pm

  I, T.Thamizhchelvan, really love this website “THAMIZHMANAM”. Hats off to you all.

 27. Aah Idhalgal on November 16th, 2008 1:09 am

  உண்மைதானுங்கண்ணா. தமிழ்மணம் வேலை செய்யாத போது எங்களுக்கு கையே ஒடஞ்சு போன மாதிரி ஆயிருச்சுன்னா. இனிமே வேகமா இருந்தா சரிதான். 🙂 நன்றிங்கண்ணா..

Leave a Reply