தமிழ்மணத்திலே இணைக்கப்படும் இடுகைகளின் காப்புரிமை

September 17, 2008 · Posted in அறிவிப்புகள் 

சில பதிவுகளில் திரைப்படங்கள், மற்றவர்களின் இடுகைகள் முழுமையாக வெளியிடப்பட்டு, தமிழ்மணத்திலே இணைக்கப்படுகின்றன. அவ்வகையான திரைப்படங்கள், உள்ளடக்கங்கள் கொண்ட இடுகைகள் தகுந்த உரிமை பெற்றிருந்தாலன்றி, தமிழ்மணத்தில் காண்பிக்கப்பட மாட்டா. இப்படியான இடுகைகள் அப்படைப்பினைச் செய்தவர்களின் உழைப்பினைத் திருடுவ‌தாக அமையும் என்பதால் தமிழ்மணம் எவ்வகையிலும் ஊக்குவிக்காது.

பதிவர்களினாலே சேர்க்கப்படும் உரிமை பெறாத உள்ளடக்கங்களைக் கொண்ட இடுகைகள், இயன்றவரை விரைவாக நீக்கப்படும். தொடர்ச்சியாக இவ்வாறான இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கும் பதிவு, தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும். ஏற்கனவே இவ்விதி தமிழ்மணத்திலே சேரும்போது, பயனர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டதே.

ஆனால், படைப்புகளின் கருத்தினை முன்னிறுத்தவோ, நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவோ படைப்பின் சிறுபகுதியைத் தரும் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணம் காண்பிக்கும். Youtube போன்ற தளங்களிலே ஏற்றப்பட்டு இணைக்கப்படும் ஒளிவீச்சுக்களும் ஒலிப்பதிவுகளும், ஏனைய நியாயமான பயன்பாட்டு (fair use) இடுகைகளும் இவற்றில் அடங்கும். முழுத்திரைப்படங்களுக்கும் மற்றவர்களின் ஆக்கங்களுக்கும் இடுகையிலே ஏற்றும் உரிமையினைப் பதிவர் பெற்று வெளியிட்டால் அவை தமிழ்மணத்திலே சேர்க்கப்படும்.

Comments

18 Responses to “தமிழ்மணத்திலே இணைக்கப்படும் இடுகைகளின் காப்புரிமை”

 1. பரிசல்காரன் on September 17th, 2008 10:26 am

  நன்று!

 2. மிக நல்ல விடயம். அடிக்கடி ஞாபகப்படுத்தினால்தான் சிலரது மனத்தில் படியும்.

 3. senshe on September 17th, 2008 11:20 am

  மிகச்சிறப்பான செய்தி.. நன்றி..

  பின்னூட்டங்களுக்கு ரிப்பீட்டே போடுவதற்கு ஏதும் தடை இல்லையே 🙂

 4. வெண்பூ on September 17th, 2008 1:11 pm

  நல்ல செய்தி பாராட்டுகள்… நன்றி.

 5. நிமல் - NiMaL on September 17th, 2008 2:12 pm

  மிக நல்ல விடயம். பாராட்டுகள்.

 6. நல்லதந்தி on September 17th, 2008 3:11 pm

  //ஆனால், படைப்புகளின் கருத்தினை முன்னிறுத்தவோ, நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவோ படைப்பின் சிறுபகுதியைத் தரும் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணம் காண்பிக்கும்.//

  வரவேற்கத் தகுந்த ஒன்று!

 7. புருனோ on September 17th, 2008 3:32 pm

  நல்ல / சரியான கொள்கை. என் கொள்கையும் இது போல் தான்.
  இணையதளங்களிலோ, பிற வலைப்பதிவுகளிலோ மீள்பிரசுரம் செய்வதை (முழுவதும் வெட்டி ஒட்டுவதை) தவிர்க்கவும். அவசியம் என்றால் சுட்டி மட்டும் அளித்தால் போதும். எதேனும் கருத்திற்கு மாற்று கருத்து (உங்கள் பதிவில்) கூறவிரும்பினால் அந்த கருத்தை மட்டும் மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை கூறவும். வரிக்கு வரி மாற்றுகருத்து கூறவேண்டும் என்றால் மட்டுமே முழு இடுகையையும் (உங்கள் பதிவில்) பதியவும்.

 8. selwilki on September 17th, 2008 8:57 pm

  good job !!!!

 9. உலகம்.net on September 18th, 2008 12:23 am

  சரியாக முடிவை எடுத்துள்ளீர்கள். நன்று.

  – பாலச்சந்தர் முருகானந்தம்
  உலகம்.net – இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
  http://ulagam.net

 10. Sharepoint the great on September 18th, 2008 12:47 am

  It is very good to hear.

  Actually I am collecting tamil short film in my blog http://SFinTamil.blogspot.com

  I searched in google,youtube,yahoo,dailymotion about Tamil short film.

  I am embeding the contents in my blog even I am not aware of copy rights.

  If somebody is aware of copyrights – they will not provide public embedding in video hosting services.

  means they have option to disable embedding in youtube like video hosting services.

  Even though I am not embedding any commercial cinemas.

  If you are having any ideas about it, please share with me.

  Thanks
  VBTC

 11. லக்கிலுக் on September 18th, 2008 1:14 am

  தமிழ்மணம்னா தமிழ்மணம் தான்!

  புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்மணம் ஸ்டால் போடுவது குறித்து யோசிக்கவும். உடல் உழைப்புக்கு சென்னைப் பதிவர்கள் தயாராக இருக்கிறோம் 🙂

 12. தமிழநம்பி on September 18th, 2008 1:42 am

  தேவையான முறையான நினைவுறுத்தம்.

 13. ஸ்ரீ on September 18th, 2008 2:29 am

  மிக நல்ல விடயம். பாராட்டுகள்.

 14. தாமிரா on September 18th, 2008 10:27 am

  எம் கே முருகானந்தம் :பின்னூட்டங்களுக்கு ரிப்பீட்டே போடுவதற்கு ஏதும் தடை இல்லையே// ஹிஹி.. ரிப்பீட்டே.!

 15. தாமிரா on September 18th, 2008 10:29 am

  இந்த செயலை தமிழ்மணத்தின் கடமையாக நான் கருதுகிறேன். நன்றி.!

 16. பிறைந்திபுரத்தான் on September 18th, 2008 11:05 pm

  நினைவுறுத்தலுக்கு நன்றி

 17. சுபாஷ் on September 19th, 2008 2:41 am

  நன்றிகள்

 18. kadugu on September 27th, 2008 12:31 pm

  நன்றி.

Leave a Reply