செய்திகளைத் தனியே திரட்டுதல்

September 7, 2008 · Posted in அறிவிப்புகள் 

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தனியே திரட்ட தமிழ்மணம் விரும்புகிறது.

இவை பெரும்பாலும் செய்திகளாக இருப்பதால், செய்திகள் என்ற பட்டியின் கீழே இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும்
விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

அன்புடன்,
தமிழ்மணம்

Comments

3 Responses to “செய்திகளைத் தனியே திரட்டுதல்”

  1. வடகரை வேலன் on September 7th, 2008 2:24 pm

    நல்ல ஏற்பாடு. தொடருங்கள்.

  2. surveysan on September 8th, 2008 12:24 am

    good and bad. good mostly.

  3. ஸ்ரீ on September 8th, 2008 5:04 am

    நல்ல விடயம் தான். வாழ்த்துக்கள். நல்லதொரு பணியை செய்து வருகிறது தமிழ்மணம். இன்னும் நிறைய மாற்றங்களையும் புதுமைகளையும் வரவேற்கிறேன்.

Leave a Reply