தமிழ்மணம் பதிவர் அனுராதாவினை நினைவு கூர்கிறது

August 28, 2008 · Posted in அறிவிப்புகள் 

புற்றுநோயுடன் போராடிக் கொண்டே கொடிய அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை தன் பதிவின் மூலம் நமக்கு அளித்து வந்த பதிவர் அனுராதா தன்னுடைய துன்பத்திலிருந்து இன்று விடுதலை அடைந்தார். இன்று காலை 9.52 மணிக்கு அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இருப்பினும் அவருடைய எழுத்து எப்பொழுதும் நம்முடன் இருந்து கொண்டேயிருக்கும்.

அவருடைய மறைவினால் துயருற்றிருக்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்மணம் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த பதிவர் அனுராதா போன்றவர்களின் உயிருள்ள எழுத்துக்கள்தான் வலைப்பதிவுகளின் வெற்றியையும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவையையும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

தமிழ்மணம்

Comments

68 Responses to “தமிழ்மணம் பதிவர் அனுராதாவினை நினைவு கூர்கிறது”

 1. Mohan on August 28th, 2008 1:53 pm

  நோயுடன் போராடும் தருணத்திலும் விழிப்புணர்வுக்காக அவர் எழுதிய பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 2. SP.VR.Subbiah on August 28th, 2008 2:03 pm

  பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபாங்களை இந்தத் தமிழ்மண இடுகையின் மூலம்
  தெரிவித்துக் கொள்கிறேன்

  SP.VR.சுப்பையா

 3. Sridhar Narayanan on August 28th, 2008 2:18 pm

  கண்ணீர் அஞ்சலி! அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக. அனுராதாவை இழந்து நிற்கும் அவர் குடும்பம் இந்த துக்கத்தை கடந்து போகும் சக்தி பெறுவதாக.

 4. முரளிகண்ணன் on August 28th, 2008 2:27 pm

  அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபாங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

 5. பிரேம்ஜி on August 28th, 2008 2:34 pm

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 6. Sri Rangan on August 28th, 2008 2:40 pm

  எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்!

 7. தமிழ் சசி / Tamil SASI on August 28th, 2008 2:44 pm

  அனுராதா அம்மையாரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

  அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்.

 8. வடகரை வேலன் on August 28th, 2008 2:49 pm

  குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 9. Oviya on August 28th, 2008 3:11 pm

  அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்!

 10. DJ on August 28th, 2008 3:23 pm

  ஆழ்ந்த‌ வ‌ருத்த‌ங்க‌ள்.
  ….
  /அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்./

  அவ‌சியமான‌ ஒரு விட‌ய‌ம்.

 11. ஆசிப் மீரான் on August 28th, 2008 3:33 pm

  மரணம் காற்றைப் போல அண்மையில்தான் இருக்கிறதெனறாலும் யாரும் அதை உணர்வது இல்லை. கண்முன்னால் அதனைக் கண்டபின்னரும் சோர்வுற்று விடாமல் தனது பதிவுக்ளால் விழ்ப்புணர்வை ஊட்டி சமூக அக்கறையுடன் செயல்பட்ட அனுராதா அவர்களின் மறைவிற்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது குடும்பத்தினருக்கு குறிப்பாக அவரது கணவருக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நிறைந்த விழிகளோடு

 12. இலவசக்கொத்தனார் on August 28th, 2008 4:01 pm

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 13. இராம்/Raam on August 28th, 2008 4:05 pm

  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்….

 14. சுந்தரவடிவேல் on August 28th, 2008 6:05 pm

  அத்தனை வேதனைக்கிடையேயும், கிடைத்த சொற்ப நேரத்தினையும் பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்ட அவரது உயரிய உள்ளம் வணக்கத்திற்குரியது. வலைப்பதிவுகளினூடாக நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஊடக வாய்ப்பினை நாம் எவ்விதம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வதும், அதற்கமைய செயலாற்றுவதுமே அனுராதா அவர்களுக்கு நாம் செய்யும் போற்றுதலாகும்.

 15. துளசி கோபால் on August 28th, 2008 6:21 pm

  வருந்துகின்றோம்.

  அனுவின் ஆத்மா அமைதி பெற வேண்டுகின்றோம்.

 16. கோவை விஜய் on August 28th, 2008 8:00 pm

  கண்ணீர் அஞ்சலி.

 17. sathanga on August 28th, 2008 9:13 pm

  அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கின்றோம்.

 18. ராமலக்ஷ்மி on August 28th, 2008 9:26 pm

  ஆழ்ந்த அனுதாபங்கள்.

 19. காசி on August 28th, 2008 9:46 pm

  அனுராதா அவர்களின் மனஉறுதியும் சிந்தனைகளும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கன. அவர் பிரிவால் வாடும் கணவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

 20. நல்லதந்தி on August 28th, 2008 9:58 pm

  பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 21. விருபா on August 28th, 2008 10:07 pm

  குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்

 22. Geetha Sambasivam on August 28th, 2008 10:55 pm

  சகோதரி அனுராதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது என்றாலும் நோயுற்றுத் துன்புற்ற நிலையிலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பாராட்டிய அவரின் துணிவு வியக்க வைக்கும் ஒன்று. ஆனாலும், அவரின் நோய் பற்றி அறிந்த நட்பு வட்டமும், உறவு வட்டமும் அவரை ஒதுக்கியது என்பதை எத்தனை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாது. இனி வரும் நாட்களிலாவது இம்மாதிரியான ஒதுக்கலை மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்கப் பழகுவோம். இது அனுராதாவின் நினைவுகளைப் போற்றும் விதமாக அமையட்டும். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

 23. ஜோதிபாரதி on August 28th, 2008 11:06 pm

  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 24. நிர்ஷன் on August 28th, 2008 11:36 pm

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 25. கணேஷ் on August 29th, 2008 12:58 am

  எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்!

 26. Ramachandran usha on August 29th, 2008 1:14 am

  எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்

 27. சுந்தரராஜன் on August 29th, 2008 1:20 am

  ஆழ்ந்த அனுதாபங்கள்.

 28. லக்கிலுக் on August 29th, 2008 1:26 am

  மறைந்த அனுராதா அம்மையாரின் எழுத்துக்களை தொகுத்து, சுவாரஸ்யமாக எடிட் செய்து புத்தகவடிவில் கொண்டுவருவதே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

  இதற்காக சிந்தனைரீதியாகவும், உடலுழைப்பு ரீதியாகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு ஒத்த சிந்தனை கொண்டவர்கள் கரம் கோர்க்கலாம்.

 29. லக்கிலுக் on August 29th, 2008 1:37 am

  அதுமட்டுமல்ல, அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவரும் முயற்சிக்கு தமிழ்மணம் கண்டிப்பாக துணை நிற்க வேண்டும். அனுராதாவே அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவர விரும்பினார் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பணியை ஒருங்கிணைத்து செய்ய வலைப்பதிவர்களும் முன்வர வேண்டும்!!

 30. Aruvai baskar on August 29th, 2008 1:58 am

  எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.

  அருவை பாஸ்கர்

 31. ஆசிப் மீரான் on August 29th, 2008 2:01 am

  ///இதற்காக சிந்தனைரீதியாகவும், உடலுழைப்பு ரீதியாகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு ஒத்த சிந்தனை கொண்டவர்கள் கரம் கோர்க்கலாம்.////

  நான் தயார் லக்கிலுக்
  உடல் உழைப்பு மட்டுமின்றி என்னால் முடிந்த நிதியுதவி செய்யவும் நான் தயார்

  என்னைப் போன்றே தமிழ்மணத்தோடு இணைந்து இதனைப் புத்தக வ்டிவில் கொண்டுவரத் தேவையான முயற்சிகளுக்கு துணைபுரிய முன்வரும் வலைப்பதிவர்களுக்கு இப்போதே என் வாழ்த்துகள்,

  தமிழ்மணம் பதிவர்களின் இங்த வேண்டுதலைப் புரிதலோடு அங்கீகரிக்கும் என நம்புகிறேன். இல்லையென்றாலும் இதைச் செய்து முடிக்கலாமென்றே எண்ணுகிறேன்

 32. வெயிலான் on August 29th, 2008 2:06 am

  அனுராதா அம்மையாரின் கணவர் திரு. திண்டுக்கல் சர்தார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 33. பாலாஜி-பாரி on August 29th, 2008 2:08 am

  அனுராதா அவர்களின் இழப்பில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலி.

  அவரது எழுத்துக்கள் அவரை நம்மிடையே எப்போதும் உலாவச் செய்யும்.

 34. உண்மைத்தமிழன் on August 29th, 2008 2:56 am

  //அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்.
  By தமிழ் சசி / Tamil SASI on Aug 28, 2008//

  நிச்சயம் தமிழ்மணம் இதனைச் செய்ய வேண்டும். அனுராதா அம்மாவின் எழுத்துக்கள் வலைப்பதிவுலகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடியது.. இதனைத் தனிப் பக்கத்தில் தமிழ்மணம் செய்து வைத்தால் நாளைய வலைப்பதிவர்களுக்குப் பெரும் உதவி செய்தது போல் இருக்கும்..

  அவருடைய பதிவுகள் அனைத்துமே நல்லதொரு பாடங்கள்.. என்றென்றும் நாம் அவரை நினைவில் வைத்திருப்போம்..

  அவரது ஆத்மா சாந்தியடைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

 35. வெற்றி on August 29th, 2008 2:59 am

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கிநிற்கிறேன். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 36. http://tamilarangam.blogspot.com/ on August 29th, 2008 3:51 am

  புற்று நோய்யின் கோரத்தை,
  அதையே தன் வாழ்வாக எதிர்கொண்டு,
  அதை வாழ்வின் பக்குவத்துடன்,
  ஒரு தீவிர முயற்சியுள்ள பெண்ணாக,
  தான் எதிர்கொண்டு போராடிய வாழ்வியலை,
  அதன் அனுபவத்தை,
  மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,
  சீரிய சமூக நோகத்துடன்,
  எம்முன் அதை துணிவுடன் எடுத்து வந்த,
  ஒரு சமூக ஜீவியின் மரணம்,
  தன் மரணத்தின் ஊடாக,
  பலவற்றை கற்கத் துண்டியுள்ளார்,
  கற்றுக்கொடுக்கத் துண்டியுள்ளார்,
  இதை புரிந்து கொண்டு,
  செயல்படுவது தான்,
  அவர்களுக்கான எமது அஞ்சலிகளாகும்.

 37. Sivabalan V on August 29th, 2008 4:09 am

  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்

 38. பாரதி on August 29th, 2008 7:06 am

  எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.

 39. King... on August 29th, 2008 9:00 am

  வருத்தங்களையும் அனுதாபங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்…

 40. கபீரன்பன் on August 29th, 2008 9:49 am

  வாழ்க்கையின் கடைசி கட்டம் என்பதை அறிந்த பின் ஒரு சிலர் காட்டும் மன உறுதி பல சமயங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவர்களில் பதிவர் அனுராதா அவர்களும் ஒருவர்.

  அன்னாரின் மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

 41. சுமதி on August 29th, 2008 10:17 am

  என்னுடைய ஆழந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்துக்கும், அவரது கணவருக்கும். என் குடும்பத்திலயும் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தது போன வருடம்.அந்த நினைவுகளே இன்னும் என்னுள் ஆழமாக இருக்கும் போது இன்று மற்றுமொரு துயரம். நானும் தவறாமல் அவரது எழுத்த்க்களை படித்து வந்தேன். எல்லாம் இறைவன் செயல்.அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

 42. தமிழநம்பி on August 29th, 2008 10:21 am

  துன்பத்திலும் அவருடைய துணிவும்
  விடாமுயற்சியும் பலரும் பாராடட்டிப் பினபற்றத் தக்கன.

 43. யட்சன் on August 29th, 2008 10:38 am

  எனது அஞ்சலிகளை உரித்தாக்குகிறேன்.

  அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்த ஈடுசெய்ய முடியா இழப்பினை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வழங்கிடுமாறு எல்லோருக்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.

  எனக்கொரு யோசனை…

  பதிவர் அனுராதாவின் பதிவினை ஒரு புத்தகமாய் தொகுத்து அவரின் நோக்கமான பெண்களிடையே விழிப்புணர்வினை பரப்பும் விதத்தில் அந்த புத்தகத்தினை அனைவருக்கும் இலவசமாய் தரலாம். இதற்காகும் செலவினை பதிவர்களான நாமே ஏற்றுக் கொள்ளலாம். இதுவே அந்த புண்ணியாத்மாவிற்கு நாம் செய்யும் நல்லஞ்சலியாக இருக்கும்.

 44. arivakam on August 29th, 2008 10:53 am

  பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 45. tamilnathy on August 29th, 2008 1:31 pm

  சிறிய துன்பங்களுக்கே நாம் துவண்டு சோர்ந்துவிடும்போது புற்றுநோயோடு போராடியதோடல்லாமல் அதைப் பற்றி மற்றவர்களுக்கு எழுதியும் அறிவுறுத்திய அவர் போற்றத்தக்கவர். இத்தனை காலமும் பொறுமையோடும் நம்பிக்கையோடும் அவர் குணம்பெறப் பாடுபட்ட குடும்பத்தினருக்கு இந்த இழப்பினை ஏற்றுக்கொள்ளும் மனவுறுதி உண்டாகட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

 46. சுரேகா on August 29th, 2008 2:19 pm

  மனம் கனக்கிறது…!

  என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான
  அழிப்பான் கண்டுபிடித்துவிட்டு
  காத்திருக்கிறோம்.
  அப்போது பிறந்துவாருங்கள்
  அனுராதா அம்மா!

  கண்ணீருடன்…

 47. ரேவதிநரசிம்ஹன் on August 29th, 2008 6:01 pm

  பதிவர் அனுராதாவின் தைரியத்தை வியந்து உணர்கிறேன்.குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 48. பொன்வண்டு on August 30th, 2008 2:59 am

  🙁 . பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 49. Syam on August 30th, 2008 5:08 am

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

 50. VINAIOOKI on August 30th, 2008 8:21 am

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

 51. கல்யாண்குமார் on August 30th, 2008 8:37 am

  இதுவரை யாரென்று அறியாத சகோதரி அனுராதாவின் மறைவு மனதை உலுக்கியது. இறந்தும் நம்மோடு இருக்கிற அவரது எண்ணங்களை எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள். உதவிட தயாராக இருக்கிறேன்.

 52. பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 53. abbas on August 30th, 2008 10:24 am

  பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
  குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  அப்பாஸ்

 54. தாமோதர் சந்துரு on August 30th, 2008 10:34 am

  அனுராதா அம்மாவின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  நண்பர்கள் லக்கிலுக்,ஆசிப்மீரான் போன்றோர்கள் ஆலோசனைப்படி அவரின் அனுபவங்களை புத்தகமாக வெளியிட நானும் உதவ தயாராக இருக்கிறேன்
  அன்புடன்
  சந்துரு

 55. ஆதிபகவன் on August 30th, 2008 10:26 pm

  நம்பிக்கைதான் வாழ்க்கை. என்ன ஒரு தைரியம் மரணத்தை எதிர்கொள்ளும் வேளையிலும்!! எனது அப்பாவையும் இதே புற்றுநோய்தான் பலி எடுத்தது.

  அனுராதாவின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 56. தங்ஸ் on August 31st, 2008 12:46 am

  ஆழ்ந்த வருத்தங்கள்! அவர்களது ஆத்மா சாந்தி அடைவதாக!

 57. ஆ.ஞானசெகரன் on August 31st, 2008 1:32 am

  அனுராதா அம்மையாரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

 58. சுந்தரா on August 31st, 2008 2:25 am

  அனுராதா அவர்களுக்கு என் அஞ்சலிகள்!

  அன்னாருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 59. Sathya on August 31st, 2008 8:09 am

  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்…

 60. நிலலின் குரல் on August 31st, 2008 2:46 pm

  ஆழ்ந்த அனுதாபங்கள்

 61. Joseph Paulraj on September 1st, 2008 12:00 am

  லக்கி சொன்னதுபோல் அம்மையாரின் எழுத்துக்கள் அனைத்தையும் திரட்டி, அதோடு மேலும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களின் கருத்துகளையும் பெற்று, ஒரு முழுமையான வடிவம் கொடுத்து புத்தகமாக வெளியிடலாம். அதுதான் நாம் அனுராதா அம்மையாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

  ஆசீப் அண்ணண் போல இதற்கு ஆதரவளிப்பவர்களோடு நானும் இணைய என் சம்மதிக்கிறேன். என்னால் இயன்ற உதவியை கட்டாயம் செய்ய ஆர்வமாய் உள்ளேன்.

 62. srimariselvam on September 1st, 2008 3:37 am

  சகோதரி அனுராதா சொர்க்கமடைந்த செய்தி நெஞ்சை உலுக்கிற்று.

  அவரது பதிவுகளை தொகுத்து
  புத்தகமாக்கி விற்பனை செய்யவேண்டும்.
  கிடைக்கும் பணம் புற்றுநோயாளிகள் நலன்பெற செலவிடப்பட வேண்டுமென்ற ஆவல்.
  தமிழ்மண நெட்டிசன்கள் கைகோர்த்து முயலவேண்டும்.

 63. சுபாஷ் on September 2nd, 2008 2:00 pm

  குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  புதியவனான நான் இப்போது தான் இவர்களது பதிவுகளை படித்தேன். நிஜமா நெஞ்சு பட பட னு அடிக்குது. வேதனையாகவும் இருக்கு.
  அன்னாரின் ஆத்மொ சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
  சுபாஷ்

 64. தஞ்சாவூரான் on September 2nd, 2008 2:41 pm

  சகோதரி அனுராதா மறைவுக்கு என் அஞ்சலிகள். அவரின் எழுத்துக்களை புத்தகமாக்கும் முயற்சிக்கு என்னாலான உதவியை செய்யத் தயார்.

 65. இராம.கி on September 2nd, 2008 11:28 pm

  பதிவர் அனுராதாவின் மறைவு அறிந்து வருந்துகிறேன். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  அன்புடன்,
  இராம.கி.

 66. nalayiny on September 3rd, 2008 4:03 pm

  அனுராதா அவர்களின் இழப்பில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலி.

 67. ராஜ நடராஜன் on September 3rd, 2008 4:10 pm

  எனது அனுதாபங்களுடன் அஞ்சலிகள்.

 68. அருள் on September 5th, 2008 2:14 pm

  அனுராதா அம்மையார் இழப்பில் வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
  கொடிய நோயின் கோரப்பிடியில் சிக்கி இருந்த போதும்…….தன்னுடைய நிலை கண்டு கல்ங்காமல்…….இந்நோயால் பாதிக்கப்பட்ட சக மனிதர்க்காக வருந்திய இந்த உயர்ந்த உள்ளத்தை காலன் நம்மிடம் இருந்து பிரித்தாலும் நம் தமிழ்மணத்திலும் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருக்கும்……………

Leave a Reply