ப்ளாகர் பதிவுகளில் – பின்னூட்டங்களில் ”’))’))’)) said…”, பதிவுப்பட்டை பல முறை தெரியும் பிரச்சனைகள்

தமிழ்மணம் கருவிப்பட்டை சில பதிவுகளில் பல முறை தெரியும் பிரச்சனை இருந்து வருகிறது. கருவிப்பட்டையை இணைக்க பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை “அளி” என்ற பொத்தனை அழுத்துவது தான் இதற்கு காரணம் (Multiple clicks on the submit button). இவ்வாறு செய்யும் பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை நிரலி பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தமிழ்மணம் பதிவுப்பட்டை பல முறை தெரிகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை கவனிக்கவும். இதில் தமிழ்மணம் பதிவுப்பட்டை இரு முறை தெரிகிறது. சில பதிவுகளில் மூன்று பதிவுப்பட்டைகள் கூட தெரிகின்றன.

இது தவிர ஜெகத்தின் நிரலும் பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக மறுமொழிகளில் மறுமொழியிட்டவரின் பெயர் தெரியாமல் ”’))’))’)) said…” போன்ற பிரச்சனைகளும் இருந்து வருகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை கவனிக்கவும். மறுமொழியிட்டவரின் பெயர் தெரியவில்லை. மாறாக ”’))’))’)) என உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பதிவர் Voice on Wings அவர்களின் பதிவை பார்க்கலாம்

இந்தப் பிரச்சனைகளை தற்பொழுது தமிழ்மணம் அடைப்பலகை மேம்படுத்தும் கருவியில் சரி செய்திருக்கிறோம்.

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

ஒருவர் ஒரு முறை மட்டுமே click செய்யும் வகையில் இந்த அடைப்பலகை மேம்படுத்தும் கருவி சரி செய்யப்பட்டுள்ளது. அது போல ஜெகத்தின் நிரலி ப்ளாகரின் ஆரம்பகால வழுக்களுக்கு (blogger beta bugs) தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிரலி தேவையில்லை என்பதால் அடைப்பலகை கருவியில் தமிழ்மணம் நிரலி மட்டுமே சேர்க்கப்படும்.

பதிவர்கள் தங்கள் அடைப்பலகையை சரி செய்ய இந்த சுட்டியில் உள்ள ஆலோசனைகளை பார்க்கலாம் – http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html

புதியதாக அடைப்பலகையை இணைக்க விரும்பும் பதிவர்கள் தமிழ்மணம் அடைப்பலகை மேம்படுத்தும் கருவியை கொண்டு தமிழ்மணம் பதிவுப்பட்டையை இணைத்து கொள்ளலாம்

இந்தப் பிரச்சனை குறித்து அறியத்தந்த நண்பர் Voice on Wingsக்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

Comments

11 Responses to “ப்ளாகர் பதிவுகளில் – பின்னூட்டங்களில் ”’))’))’)) said…”, பதிவுப்பட்டை பல முறை தெரியும் பிரச்சனைகள்”

 1. புருனோ on August 10th, 2008 2:28 pm

  புது வார்ப்புருவை மட்டும் மேம்படுத்துமா, அல்லது ஏற்கனவே 2 அல்லது 3 கருவிப்பட்டைகள் தெரியும் வார்ப்புருக்கலை கூட (1 கருவிப்பட்டை மட்டும் தெரியும் வண்ணம்) இந்த தமிழ்மணம் அடைப்பலகை மேம்படுத்தும் கருவி மேம்படுத்துமா ??


  கேள்வி சிறிது சிறுபிள்ளைத்தனமாக (முட்டாள்தனமாக) இருந்தாலும் விடை அனைவருக்கும் பலனிப்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

 2. தமிழ் சசி / Tamil SASI on August 10th, 2008 2:40 pm

  புருனோ,

  புது வார்ப்புருவை மட்டும் தான் மேம்படுத்தும்.

  பழைய வார்ப்புருக்களின் பிரச்சனைகளை சரி செய்ய Voice on Wings அவர்களின் பதிவை பார்க்கவும்

  http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html

 3. புருனோ on August 10th, 2008 2:57 pm

  நன்றி சசி,

  நான் சோதித்து அறிந்து கொண்டேன். இருந்தாலும் கேள்வி கேட்டது எதற்கென்றால், நம் மக்கள் (3 கருவிப்பட்டை உள்ள ஒரு) வார்ப்புருவை இதில் உட்செலுத்தி 4 கருவிப்பட்டைகளுடன் வர கூடாது என்பதற்காகத்தான் 🙂 🙂 🙂

 4. புருனோ on August 10th, 2008 2:59 pm

  மேலும்

  இது வரை கருவிப்பட்டை சேர்க்கப்படாத வார்புருவை உள்ளிட்டாலும், இது வரை பல கருவிப்பட்டைகள் சேர்க்கப்பட்ட வார்ப்புருவை உள்ளிட்டாலும்

  அதை தானாக பகுத்தறிந்து

  ஒரே ஒரு கருவிப்பட்டையுடன் புது வார்ப்புரு வழங்கும் ஒரு கருவிதான் தற்சமயம் தேவை.

  தமிழ்மணம் அல்லது தன்னார்வலர்கள் தயவு செய்து முயற்சிக்கவும் 🙂 🙂 🙂

 5. தமிழ் சசி / Tamil SASI on August 10th, 2008 3:30 pm

  நன்றி புருனோ..

  தன்னார்வலர்களின் ஈடுபாட்டை நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

  இந்த அடைப்பலகை மேம்படுத்தும் கருவியே குழலி மற்றும் பொன்ஸின் முயற்சி தான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்

 6. கூடுதுறை on August 12th, 2008 8:48 am

  அன்புடையீர்,

  இப்பவும் எனது புத்துணர்ச்சி பதிவில் பின்னூட்டத்தில் பெயர் வரும்படி செய்தாகிவிட்டது… ஆனாலும் 2பதிவுப்பட்டைகள் வருகிறது.

  மேலும் எனது பின்னுட்டங்கள் திரட்டப்படுவதில்லை.இதற்கு என்ன செய்ய வேண்டும்

 7. யோசிப்பவர் on August 12th, 2008 9:42 am

  //இது வரை கருவிப்பட்டை சேர்க்கப்படாத வார்புருவை உள்ளிட்டாலும், இது வரை பல கருவிப்பட்டைகள் சேர்க்கப்பட்ட வார்ப்புருவை உள்ளிட்டாலும்

  அதை தானாக பகுத்தறிந்து

  ஒரே ஒரு கருவிப்பட்டையுடன் புது வார்ப்புரு வழங்கும் ஒரு கருவிதான் தற்சமயம் தேவை.

  //

  தமிழ்மணம் அடைப் பலகைக்கான நிரலின் ஆரம்பத்திலும், இறுதியிலும் அவற்றுக்கான விளக்கம்(Comments) இருக்கிறதே. அதை வைத்தே, கொடுக்கப்படும் டெக்ஸ்ட்டில் பகுத்தாய்ந்து, Duplicatesஐ விலக்கி, அடைப்பலகைக்கான நிரல் ஒரு முறை மட்டும் வருவது போல் செய்ய முடியுமே!

 8. யோசிப்பவர் on August 19th, 2008 1:37 pm

  தமிழ்மணம் கருவிப்பட்டை சில பதிவுகளில் பல முறை தெரியும் பிரச்சனைக்கு தீர்வு குறித்து நான் அனுப்பிய மின்மடல் கிடைத்ததா? இல்லையென்றால் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறவும்.

 9. புருனோ on August 23rd, 2008 8:47 am

  உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன

  listadmin@tamilmanam.net, admin@thamizmanam.com எல்லாம் எகிறுகிறது (bounce)

 10. புருனோ on August 24th, 2008 10:32 am

  என் பதிவில் உள்ள இடுகைகளை தமிழ் மணத்தில் இணைப்பதில் பிரச்சனைகள் உள்ளன. உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன

  listadmin@tamilmanam.net, admin@thamizmanam.com எல்லாம் எகிறுகிறது (bounce)

 11. சந்தோஷ் on June 3rd, 2009 1:00 am

  என்னுடைய பதிவில் தமிழ்மண கருவிபட்டை தேன்றவில்லை ஏன் என்று தெரியவில்லை யாரேனும் உதவ முடியுமா?

Leave a Reply