தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி

August 7, 2008 · Posted in அறிவிப்புகள் 

நாளை பீஜிங்கில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த இடுகைகளை ஒரே இடத்தில் தொகுக்க தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டியை தற்பொழுது வெளியிட்டிருக்கிறோம்.

ஒலிம்பிக் திரட்டியின் சுட்டிகள்
http://tamilmanam.net/2008/ஒலிம்பிக்
http://tamilmanam.net/2008/olympic

ஒலிம்பிக் போட்டிகள், அதன் அரசியல் என இந்தப் போட்டிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் இந்த திரட்டியில் வாசிக்க முடியும். தற்பொழுது தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து ஒலிம்பிக் சார்ந்த இடுகைகள் திரட்டப்படுகின்றன.

பதிவர்கள் தங்கள் இடுகைகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி பதிவுகளை வகைப்படுத்துகிறது.

பதிவர்கள் ஒலிம்பிக், ஒலிம்பிக்ஸ் போன்ற குறிச்சொற்களை பயன்படுத்தி ஒலிம்பிக் குறித்த இடுகைகளை எழுத வேண்டுகிறோம்.

நன்றி

தமிழ் சசி,
தமிழ்மணம்

Comments

6 Responses to “தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி”

 1. லக்கிலுக் on August 7th, 2008 7:04 am

  வசதிக்கு நன்றி. முதல் போணி நான் தான்.

 2. நாடோடி on August 8th, 2008 4:36 am

  வழக்கம் போல ,நிறைய பேரு ,நிறைய வெப்சைட், டிவி’ லைவ் telecast பார்த்துட்டு விமர்சனம் எழுதப்போரங்கன்னு நான் நினைக்குறேன்

  யாரவது சீனா -பெய்ஜிங்’ல இருக்குற தமிழர்கள் அங்க இருந்து லைவ்’ஆ விமர்சனம் கொடுத்தா ,அப்போ நிஜமாவே அங்க ஒலிம்பிக்ஸ் எப்படி நடக்குதுன்னு தமிழ்ல தெரிஞ்சுக்கலாம்

  யாராவது இருக்கீங்களாப்பா ?

 3. புருனோ on August 8th, 2008 6:51 am

  மிக்க நன்றி.

  இந்த வசதியைத்தான் நாள் சில நாட்களாக கேட்டு வந்தேன்

  http://payanangal.blogspot.com/2008/06/15-06-2008.html

  # என் வேண்டுகோள் 3: பதிவர்கள் அளிக்கும் குறிச்சொற்களுடன், தமிழ்மணமும் தனியாக குறிச்சொற்களை அளிக்க வேண்டும். அனைத்து இடுகைகளுக்கும் இல்லை என்றாலும், தசாவதாரம், தேர்தல், 20-20, ஒலிம்பிக்ஸ் போன்ற ந்டப்புகள் நடக்கும் பொழுது தமிழ் மணம் அந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகளை ஒன்றாக திரட்டி அது குறித்த அனைத்து இடுகைகளுக்கும் ஒரே பக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக தசாவதாரம் என்ற இணைப்பை தட்டினால் தசாவதாரம் குறித்த அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். இதற்கு எளிய வழி, பதிவர்கள் அனைவரும் “தசாவதாரம்” என்ற குறிச்சொல்லை பயன் படுத்துவது தான். ஆனால் இணையம் என்பது கட்டற்றது. யாரையும் கட்டு படுத்த முடியாது. எனவே பதிவர்களை செய்யச்சொல்வதை தவிர திரட்டி குறிச்சொற்கள், பகுப்புகள், துனை பகுப்புகள் செய்தால் நன்றாக இருக்கும். கீழ் தந்தது போல் ஒரு பக்கம் தமிழ்மணத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்

  * அமெரிக்க அதிபர் தேர்தல்
  o முதல் சுற்று
  + குடியரசு கட்சி
  + ஜனநாயக கட்சி
  o இறுதி சுற்று
  * தசாவதாரம்
  o நிகழ்வுகள்
  o படப்பிடிப்பு
  o இசை விமர்சணம்
  o திரைப்பட விமர்சணம்
  * 20-20
  * +2 முடிவுகள்

  # சுட்டியை சுட்டியவுடன் அது குறித்த அனைத்து இடுகைகளும் வந்தால் நல்லது தானே 🙂 🙂 🙂
  # திரட்டி என்பதை “வாசிப்பது” (Reading) என்ற நிலையிலிருந்து “சேகரிப்பது” (Aggregation) என்ற தற்பொதைய நிலையையும் தாண்டி “மேற்கோள் காட்டுவது” (Reference) “வரலாற்றை பதிவு செய்வது” (History Time Line) என்ற நிலைக்கு எடுத்த செல்ல வேண்டும் என்பது என் ஆவல். இதற்கு தனியாக (துறைக்கு சிலர் என்ற வகையில்) தன்னார்வலர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

 4. புருனோ on August 8th, 2008 6:53 am

  எனது பிற வேண்டுகோள்கள்

  # என் வேண்டுகோள் 1 : தலைப்பை மாற்றும் வசதி, குறிச்சொற்களை மாற்றும் வசதி ஆகியவை தேவை என்பது என் வேண்டுகோள். எழுத்து பிழைகளுடன் பல குறிப்புகள், தலைப்புகளை தவிர்க்க இது உதவும். அது போல் வேண்டுமென்றே தவறான தலைப்பை அளித்து விட்டு, தட்டச்சு தவறு என்று தப்பிக்க முடியாது 🙂 🙂 🙂

  # என் வேண்டுகோள் 2 : அதே போல், தமிழ் மணத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்த ஒரு பக்கம் இருந்தால், அவரவருக்கு தேவை என்று தோன்றும் பொழுது அப்பக்கத்தில் ஒரிரு வரிகளை சேர்த்தால் பிறகு அதை தமிழ் மண நிர்வாகிகள் கொண்டு வர முயற்சிக்கலாம். அல்லது நான் கேட்கும் ஒரு வசதிக்கான நிரலை வேறு யாராவது பதிவர் ஏற்கனவே (வேறு எதாவது) தளத்தில் உபயோகித்திருந்தால் அதை கூட அளிக்க உதவும். மேலும் அது குறித்த தமிழ் மண நிர்வாகிகளின் பதில் அல்லது குறிப்பு அருகில் இருந்தால் நலம். உதாரணம்

  * பூங்கா – சனவரி 2009 முதல் வரும்.
  * தமிழ் மணம் வழங்கியின் கடவு சொல் என்ன – நிர்வாக காரணங்களுக்காக தர இயலாது. (உதாரணம் மட்டும் தான் 🙂 🙂 🙂 )
  * பதிவர்கள் தங்களின் தலைப்பை மாற்ற வசதி – தொழில் நுட்ப காரணங்களுக்காக தற்சமயம் தர இயலாது. விரைவில் அளிக்க முயல்கிறோம்
  * முகப்பு பக்கம் மெதுவாக ஏற்றப்படுகிறது – வழு சரிசெய்யப்படுகிறது. விரைவில் வழு நீக்கப்படும்.
  * முகப்பு பக்கம் தானாக புதுபிப்பது இல்லை – 20-06-2008 அன்று சரி செய்யப்பட்டது.

 5. புருனோ on August 8th, 2008 6:53 am

  என் வேண்டுகோள் 6 : தமிழ்மணத்தின் குறும்பதிப்பு (தமிழ் சொல் சரிதானா) செல்வதற்கான சுட்டி வலது புரம். உள்ளது. இது இடது ஓரம் மேல் இருந்தால் தான், பக்கம் ஏற்றம் செய்ய தாமதமானாலும் சுட்ட முடியும். அல்லது (சுட்டி எங்கிருந்தாலும்) சுட்டி (முழு பக்கமும் உலாவியில் ஏற்றப்படுவதற்கு முன்னதாகவே) முதலில் தெரியும் படி அதை நிரலில் கொண்டு வர வேண்டும். பக்கம் ஏற்றம் ஆக அதிக நேரம் எடுத்தால் முழு பக்கமும் ஏற்றப்படுவதற்கு முன்னதாகவே ஒருவர் குறும்பதிப்பு செல்ல வாய்ப்பு வேண்டும் தானே.

  முழு இடுகையும் http://payanangal.blogspot.com/2008/06/15-06-2008.html

 6. தமிழ் சசி / Tamil SASI on August 8th, 2008 12:19 pm

  நன்றி புருனோ

  உங்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொண்டுள்ளோம். நீங்கள் சென்னை வலைப்பதிவர் சந்திப்பிலும் இதனை தெரிவித்து இருந்தீர்கள். நிச்சயம் செய்வோம்.

  சிறிது தாமதம் ஆகலாம்

Leave a Reply