தமிழ்மணத்தின் புதிய சேவைகள் : பதிவர் புத்தகம், மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டியான ‘ம’ திரட்டி மூலமாக பல்வேறு வழிகளில் மறுமொழிகளை திரட்டுகிறோம்.

ப்ளாகர் தளங்களில் இயங்கும் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டை மூலமாக மறுமொழிகள் நிலவரம் திரட்டப்படுகிறது. இது தவிர கருவிப்பட்டை இணைக்கப்பட்ட பதிவுகளின் செய்தியோடைகள் மூலமாக அனைத்து மறுமொழிகளையும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. இதன் மூலம் அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ‘ம’ திரட்டி வழங்குகிறது

தமிழ்மணம் பதிவுப்பட்டையை ப்ளாகர் பதிவுகளில் இணைக்கும் செய்முறை இந்தப் பக்கத்தில் உள்ளது

வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இயங்கும் பதிவுகளில் கருவிப்பட்டையை இணைக்க முடியாத நிலை உள்ளதால் இந்தப் பதிவுகளின் மறுமொழி ஓடை மூலமாக மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. வேர்ட்பிரஸ்.காம் பதிவர்கள் மறுமொழிகள் திரட்டுவதற்கு எந்த தனி வசதியும் செய்ய தேவையில்லை. தமிழ்மணத்தில் இணைந்தாலே போதுமானது.

இவ்வாறான வசதிகள் இருந்தும் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளின் மறுமொழிகள் நிலவரம் தமிழ்மணத்தில் தெரியவில்லை என்று தமிழ்மணத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்மணத்திற்கு வரும் பெரும்பான்மையான தொழில்நுட்ப சார்ந்த கேள்வியாக இந்தப் பிரச்சனையே இருந்து வருகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ‘ம’ திரட்டியின் தொழில்நுட்பம் சரியாகவே செயல்படுகிறது.
blogspotல் இயங்கும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் கருவிப்பட்டையை சரியாக இணைத்து விட்டால் மறுமொழிகள் ”தானியங்கியாக” திரட்டப்பட்டு விடும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களின் மறுமொழிகள் நிலவரமும் தானியங்கியாக திரட்டப்படுகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சரியாக செயல்பட்டாலும், தொடர்ந்து பல பதிவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து எங்களுக்கு அறியத்தருவதால் ஒரு மாற்று வழியினை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த மாற்று வழி மூலமாக இடுகைகளை புதுப்பிப்பது போல மறுமொழிகளின் நிலவரத்தை தமிழ்மணத்திற்கு ping செய்யலாம். இதன் மூலம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும். இந்த வசதி ப்ளாகர், வேர்ட்பிரஸ்.காம் என்றில்லாமல் மறுமொழி ஓடை கொண்ட அனைத்து பதிவுகளுக்கும் செயல்படும்.

தற்போதைய நிலையில் இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. திரட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவியுங்கள்

இந்த வசதி மாற்று ஏற்பாடு மட்டுமே. உங்கள் மறுமொழிகளை தானியங்கியாக திரட்ட தமிழ்மணம் பதிவுப்பட்டையை பயன்படுத்துங்கள்

மறுமொழிகளை எப்படி புதுப்பிப்பது ?

1. தமிழ்மணம் “ம” திரட்டிக்கு செல்லுங்கள்
http://www.tamilmanam.net/m/thiratti.html

2. அங்கு ”மறுமொழிகளை புதுப்பிக்க” என்று காணப்படும் பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை அளிக்கவும்
உதாரணமாக http://parthy76.blogspot.com என்ற பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணத்திற்கு அளிக்க, பெட்டியில் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல அந்தப் பதிவின் முகவரியை http://parthy76.blogspot.com அளிக்கவும்

ping feedback

3. அளி என்ற பொத்தானை அழுத்தினால் தமிழ்மணம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை திரட்டிக் கொள்ளும்

பதிவர் புத்தகங்கள்

பதிவர் புத்தகங்கள் என்ற புதிய பக்கத்தை தமிழ்மணத்தில் ஏற்படுத்தி உள்ளோம். வலைப்பதிவர்கள் எழுதும் புத்தகங்கள் குறித்த அறிமுகத்தை பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு செல்ல இந்த பக்கம் உதவும் என நம்புகிறோம்.

blogger_books

பதிவர் புத்தகங்கள் பகுதியில் தங்கள் புத்தகத்தை இணைக்க விரும்பும் பதிவர்கள் புத்தகம் குறித்த விபரங்களுடன் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றி,
தமிழ் சசி
தமிழ்மணம்

Comments

11 Responses to “தமிழ்மணத்தின் புதிய சேவைகள் : பதிவர் புத்தகம், மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி”

 1. ரவிசங்கர் on August 2nd, 2008 6:19 pm

  பதிவர் புத்தகங்கள் அறிமுகம் மிகவும் நல்ல முயற்சி. பாராட்டுகள்.

 2. பாரதி on August 2nd, 2008 7:55 pm

  தகவலுக்கு நன்றி .அதே போல் முழுப்பட்டியல் பகுதில் என்னுடைய மறுமொழி நிலவரத்தில் மறுமொழி திரட்டப்படுவதில்லை என்று வருகிறது .அதை எப்படி மாற்றுவது ?
  கிழே உள்ள தொடுப்பில் சென்று பார்க்க
  (http://www.tamilmanam.net/bloglist.php?char=20&start=140&field_name=&order_by=)

 3. SP.VR.Subbiah on August 2nd, 2008 7:57 pm

  பதிவர் புத்தகங்கள் பகுதியில் தங்கள் புத்தகத்தை இணைக்க விரும்பும் பதிவர்கள் புத்தகம் குறித்த விபரங்களுடன் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.////

  நல்ல முயற்சி! பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 4. தமிழ் சசி / Tamil SASI on August 2nd, 2008 8:14 pm

  அதே போல் முழுப்பட்டியல் பகுதில் என்னுடைய மறுமொழி நிலவரத்தில் மறுமொழி திரட்டப்படுவதில்லை என்று வருகிறது .அதை எப்படி மாற்றுவது ?

  ***

  அனைத்து பதிவுகளின் மறுமொழிகளும் திரட்டப்படுகிறது.

  இந்த பக்கம் பழைய தமிழ்மணத்தைச் (Old version) சார்ந்தது. இந்தப் பக்கத்தை புதிய தமிழ்மணத்திற்கு மாற்றும் பொழுது இதனை சரி செய்து விடுகிறோம்.

 5. பாரதி on August 2nd, 2008 8:56 pm

  தங்கள் பதிலுக்கு நன்றி

  அன்புடன்

  பாரதி

 6. வடகரை வேலன் on August 3rd, 2008 12:05 am

  வணக்கம்.

  vadakaraivelan.blogspot.com என்ற என்னுடைய வலைப்பதிவில் இடப்படும் பின்னுட்டங்கள் திரட்டப்படுவதில்லை என்று இந்தச் சுட்டி http://tamilmanam.net/bloglist.php?char=25&start=60&field_name=&order_by= மூலம் அறிகிறேன்.

  தயவு செய்து இதைச் சரி செய்ய இயலுமா?

  நன்றி.

  வடகரை வேலன்.

 7. Aruvai baskar on August 3rd, 2008 2:16 am

  //பதிவர் புத்தகங்கள் என்ற புதிய பக்கத்தை தமிழ்மணத்தில் ஏற்படுத்தி உள்ளோம். வலைப்பதிவர்கள் எழுதும் புத்தகங்கள் குறித்த அறிமுகத்தை பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு செல்ல இந்த பக்கம் உதவும் என நம்புகிறோம்.//

  மிகவும் நல்ல முயற்சி !
  பாராட்டுக்கள்

 8. Sridhar Narayanan on August 3rd, 2008 12:40 pm

  //பதிவர் புத்தகங்கள் பகுதியில் தங்கள் புத்தகத்தை //

  அப்படியே அந்த புத்தகங்கள் இணையத்தில் வாங்க வசதியிருப்பின் அதனையும் அப்படியே ‘தொடுக்க’ வசதி உண்டா?

 9. thamizhparavai on August 3rd, 2008 11:52 pm

  last two or three days, i moderated comments on my posts.. but i cant see my post in ‘marumozhi’ part.. and also in ‘muzupattiayal’ my site shows ‘marumozhi thirattap paduvathillai’ inthe link “http://www.tamilmanam.net/bloglist.php?char=18&start=180&field_name=&order_by=”

 10. வடகரை வேலன் on August 4th, 2008 12:53 am

  வணக்கம்,

  அறிவிப்பில் கண்டுள்ளபடி இந்தச் சுட்டியில்
  (http://www.tamilmanam.net/m/thiratti.html) மறு மொழிகளை திரட்டச் சொன்னால் ”உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது’ என்று வருகிறது.

  உதவுங்கள்.

  நன்றி.

  வடகரை வேலன்.

 11. லக்கிலுக் on August 4th, 2008 1:53 am

  பதிவர் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது சிறப்பான செயல். வாழ்த்துக்கள்!

Leave a Reply