தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் பதிவுத்தலைப்புகளை மட்டுறுத்தல்

தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது. அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள். முழு கட்டுரையும் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில், வெறும் தலைப்பு மட்டுமே தமிழ்மணத்தில் வரிசையாக இத்தகைய சொற்கள் கொண்டவைகளாக உள்ள சூழ்நிலையில் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணம் ஏற்படுவது இயல்பானது.

அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.

தமிழ்மணம் தனது வாசகர் தளத்தை விரிவு படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் மூலமாக தமிழ்மணம் தளத்தை விளம்பரம் செய்கிறோம். இது தமிழ்மணம், பதிவர்கள் இருவருக்குமே அதிக வாசகர்களை கொண்டு வரும். நிறைய புதிய பதிவர்களும், வாசகர்களும் தமிழ்மணம் தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம்.

தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.

எந்த தனிப்பட்ட பதிவருக்கும் எதிராக இந்த மட்டுறுத்தும் நுட்பம் செய்யப்படவில்லை. தமிழ்மணம் சமூகத்தின் சுமூகமான வளர்ச்சிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நுட்பமும் தமிழ்மணம் முகப்பில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் பிற பக்கங்களில் எந்த மட்டுறுத்தலும் செய்யப்படவில்லை

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

66 Responses to “தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் பதிவுத்தலைப்புகளை மட்டுறுத்தல்”

 1. SP.VR.Subbiah on July 10th, 2008 2:42 pm

  உங்கள் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்கிறோம்!
  அறிவிப்பிற்கு நன்றி!

 2. surveysan on July 10th, 2008 2:48 pm

  ஹ்ம். good and bad!

  சூடான இடுகைகள், முன்னம் இருந்த மாதிரி (1-click-away) ஒளிச்சு வெக்கரது நல்லது.

  புதுசா தமிழ்மணத்துக்கு வரவங்க, சூடு பகுதியப் பாத்தா, இங்க வெறும் கும்மிதான் நடக்குதுன்னு நெனைப்பாங்க.

  குறிப்பா, தசாவதாரக் காலத்தில், அதைப் பற்றி மட்டுமே காட்டுத்தனமா, பதிவுகள் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.

 3. அய்யனார் on July 10th, 2008 2:48 pm

  /பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக/

  இந்த வரிகளை படிக்கும்போது என் சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை ..மன்னிக்க…சுந்தரின் இடுகைகளை மாற்றம் செய்வது குறித்து அவருக்கு எந்த வித தகவலையும் நிர்வாகம் தந்திருக்கவில்லை அதனோடு இப்படியானதொரு புதிய விதிகளையும் முன்னரே தமிழ்மணம் தந்திருக்கவில்லை.ஒரு செயலை செய்துவிட்டு பின்னர் அதற்கான காரணங்களை சொல்வது சப்பை கட்டாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது…

  ஒரு படைப்பாளியின் அனுமதியில்லாது அவரின் படைப்புகளை உங்களின் வசதி/நியதி களுக்கேற்றார்போல மாற்றங்களை செய்துகொள்ளும் செயலை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்..

  உங்களின் நியதி / வசதிகளை முன்னரே தெரிவித்திருந்தால் அதற்குள இயங்கும் படைப்போ படைப்பாளியோ தனக்கான உண்மத்தத்துடன் இயங்கலாம்..இயங்கியிருக்கலாம் இப்படி தடாலென நீங்கள் ஒரு விதியை புகுத்துவது மாற்று எழுத்துக்களுக்கு எதிரானது..

  சினிமா கிசுகிசுக்களோ அரைகுரை நிர்வாணபுகைப்படங்களோ புனித வார்த்தைகளுடன் வெளியிடப்படுமானால் அதை நிர்வாகம் கொண்டாடுமா?சூடான இடுகை என்பது தமிழ் மனங்களின் சிதைந்தவடிவத்தினுக்கான ஏற்ற இடம் அவ்விடத்தையே நீக்குவது இதுபோன்ற சிக்கலை தீர்க்கலாம்…

 4. Prabhu Rajadurai on July 10th, 2008 3:13 pm

  I understand and appreciate your stand…

 5. இராம்/Raam on July 10th, 2008 3:16 pm

  //தமிழ்மணம் தனது வாசகர் தளத்தை விரிவு படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் மூலமாக தமிழ்மணம் தளத்தை விளம்பரம் செய்கிறோம். இது தமிழ்மணம், பதிவர்கள் இருவருக்குமே அதிக வாசகர்களை கொண்டு வரும். நிறைய புதிய பதிவர்களும், வாசகர்களும் தமிழ்மணம் தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம்.//

  நல்ல செயல்.. பாரட்டுக்கள்…..

  //தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.//

  ஆனா இங்கதான் கொஞ்சம் இடிக்கிது, சுந்தர் எழுதுற “காமக்கதைகள்” வைச்சுதான் இந்த பிரச்சினை எழுந்துச்சுன்னா அவரு அந்த தலைப்பு கொஞ்சம் மாத்தி “***கதைகள்(45) …blow..blow”ன்னு போட்டு எழுதினா பிரச்சினை இல்லைன்னு சொல்லவர்றீங்களா??

  அவருடைய எழுத்துக்களிலே போர்னோ டச் இல்லாமே அவர் எடுத்துக்கிட்ட சிரத்தை அதிகம், படைப்பாளியோட எழுத்து உள்ளடகத்தை விட அதுக்கு வைக்கிற தலைப்புதான் சர்ச்சை அளிக்கக்கூடியதா இருக்குன்னு நீங்க சொல்லவர்றீங்களா??

  /தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது.//

  தவறான அடையாளம் தரும் வார்த்தைகள்’ன்னா காமம்’ன்னு இருக்கிற வார்த்தைகளா??? அப்பிடின்னா திருக்குறள் விளக்கங்கள் எழுத வரப்போற பதிவர் எப்பிடி காமத்து பால்’ன்னு தலைப்பு வைச்சி பதிவு போடுவார்? 🙂

 6. சினிமா நிருபர் on July 10th, 2008 3:36 pm

  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வணக்கம்.

  சினிமா நிருபர் என்ற பெயரில் நான் கடந்த 3 மாதங்களாக சினிமா செய்திகளை கொடுத்து வருகிறேன். நான் புதிதாக பதிவு செய்யும் செய்திகளை தமிழ்மண இடுகையில் இணைத்தால், அது செய்திகள் பிரிவின் கீழ் தெரிகிறது. மற்ற பதிவர்களின் புதிய பதிவுகள் போல எமது பதிவையும் தாங்கள் முகப்பு பகுதியில் தெரிய வைக்க ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி. தங்களது சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

 7. Raveendran Chinnasamy on July 10th, 2008 4:05 pm

  //தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்…//

  Internet is a unbiased medium but why censership ? if the person didnt understand value of freedom it is his mistake not the site . i wont support censorship .

 8. சென்ஷி on July 10th, 2008 5:07 pm

  ஒண்ணும் சொல்லிக்க முடியல. நான் கூட ஒரு கா.கதை எழுதி வச்சு பப்ளிஷ் பண்ணி பின்னூட்டம் வாங்கிட்டேன்.. :((

  யாராச்சும் மொக்கைங்கறது கெட்ட வார்த்தை- ******* அகராதியில இருக்குதுன்னு சொல்லி எடுத்துக்காட்டிட்டா என்ன செய்யறதுங்கற பீதியில இருக்கேன்.

  ///தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். //

  🙂 மறுக்காவூம் ஒண்ணியும் ஜொள்ளிக்க முடியல்ல :))

 9. துளசி கோபால் on July 10th, 2008 5:29 pm

  நீங்க சொல்வது புரியுது. நல்லதுதான்.

  அப்படியே பதிவுகளை வகைப்படுத்தும் இடத்தில் சமையல் குறிப்பு, சுற்றுலா, சரித்திரக்குறிப்புகள், நாடுகள் என்று இன்னும் சில இருந்தால் நன்றாக இருக்கும்.

  எல்லாவற்றுக்கும் பொதுவானவை, அனுபவம்/நிகழ்வுகள் என்றே வகைப்படுத்தல் போர் அடிக்கிறது:-)

 10. நக்கீரன் on July 10th, 2008 7:31 pm

  mmmm.. looks reasonable to me…

 11. King... on July 10th, 2008 7:33 pm

  இதற்கு பதிவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்…

 12. King... on July 10th, 2008 7:34 pm

  திரு சுந்தர் அவர்களுடைய சமீபத்திய பதிவுகளைப்பற்றிய உங்கள் தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவாக இருக்கும்…?

 13. புருனோ on July 10th, 2008 8:44 pm

  எனது கீழ்க்கண்ட இடுகைகள் குறித்து தமிழ்மண நிர்வாகத்தின் கருத்து என்ன

  http://payanangal.blogspot.com/2008/06/positive-feedback-negative-feedback.html

  http://payanangal.blogspot.com/2008/06/15-06-2008.html

 14. புருனோ on July 10th, 2008 8:53 pm

  //அப்படியான சொற்களை //

  1. அவை என்ன வென்று தெரிந்து கொள்ளலாமா ??

  2. அப்படியான சொற்கள் தலைப்பில் இருந்தால் பிரச்சனையா, இடுகையில் இருந்தாலுல் பிரச்சனையா அல்லது மறுமொழிகளில் கூட இருக்கக்கூடாதா

 15. TBCD on July 10th, 2008 10:39 pm

  அந்த அப்படியான சொற்கள் எவை எவை என்று விவரம் தெரிந்தால் வசதியாக இருக்கும்.

  அது “அப்படியான” என்று எப்படி முடிவு செய்யப்பட்டது என்றும் பார்க்க வேண்டும்..

  ஃஃஃஃஃ

  நீயு பிரண்டஸ் ஆர் லைக் சில்வர்..
  பட் ஓல்ட் பிரண்டஸ் ஆர் லைக் கோல்ட்…

  ஃஃஃஃஃஃ

  வரப்போகும் வாசகர்களுக்காக, பழைய வாசகர்களின் அதிருப்தியயை நிராகரிக்கலாம் என்பது ………….

  ஃஃஃஃஃஃ

  எழுதுபவர்களின் உட்கருத்து இப்படித் தான் இருக்க வேண்டும், இது மாதிரியல்லாம் இருக்கக்கூடாது என்று கோடு போட்டு, வரையறை செய்வது கட்டற்ற, மட்டற்ற சமூகத்தில்………

 16. பாரி.அரசு on July 10th, 2008 11:00 pm

  //
  அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
  //

  எந்தெந்த சொற்கள் தமிழ்மணத்திற்கு தவறான அடையாளத்தை தரும்! பட்டியல் உண்டா? (அதில் சொற்றொடர்களும் அடங்குமா?)

  நாளை ஒருவர் மலம் பற்றிய ஆராய்ச்சிகளை எழுதுகிறார்… இன்னொருவர் மலக்குழிக்குள் இறங்கும் மனிதர்களை பற்றி எழுதுகிறார்… இன்னொருவர் மலத்தை சுமந்து திரியும் மனிதர்கள் பற்றி எழுதுகிறார்… இதில் எல்லாம் மலம் என்பது தலைப்பாக வரும்…

  இதே காலக்கட்டத்தில் எந்தவிதமாக அடிப்படை இலக்கற்ற சுய விளம்பரம் மட்டுமே நோக்கமாக கொண்ட பதிவர்கள்… மலம், மலம் என்று பதிவு எழுதினால்… !

  உடனே தமிழ்மண முகப்பு நாறுகிறது… அதனால் மலம் என்கிற சொல்லை மட்டுறுத்துவீர்களா?

  நன்றி!

 17. identity crisis on July 10th, 2008 11:08 pm

  தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள். ரகுவரன் முதல் அமைச்சர் பதவியை அர்ஜுனுக்கு ஒரு நாள் கொடுத்தது போல தமிழ்மணம் நிர்வாகத்தை நீங்கள் ஒரு வாரத்துக்கு அதிருப்தி அடைந்த பழைய வாசகரிடம் கொடுக்கலாமே?

 18. சீனிவாசன் on July 10th, 2008 11:24 pm

  //தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள்//
  நியாயமான கருத்து.பல புதியவர்களுக்கு தமிழ்மணத்தை பரிந்துரைக்கும்போது மேற்கூறிய உங்கள் கருத்து வலுப்பெறுகிறது.

 19. கோவி.கண்ணன் on July 10th, 2008 11:25 pm

  சர்வேசன் மற்றும் பிரபு ராஜதுரை சொல்லும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கின்றன.

  இந்த தடைகுறித்து அல்ல, பொதுவாக ‘தமிழ்மண நிர்வாகம் தன்னிச்சையான முடிவு மற்றும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்’ என்ற சர்வேசனின் பின்னூட்டம் குறித்து மாற்று கருத்து உண்டு.

  ‘பிற்காலத்தில் இதையெல்லாம் எழுதுவார்கள் என்று முன்கூட்டிய பட்டியல்கள் எதையும் ஊகமாக நிர்வாகத்தினரால் தயார் செய்ய முடியாது’ வியாதிக்கு மருந்து என்ற அடிப்படையில் தமிழ்மணம் செயல்படுகிறார்கள், அப்படித்தான் செயல்பட முடியும். அதற்கான விளக்கம் கேட்டு பதிவர்கள் கருத்து / எதிர்ப்பு / மாற்றுக்கருத்து சொல்லலாம். ஆனால் தமிழ்மணம் அவ்வாறு செய்வதவறு என்று குற்றமாக சொல்லிவிட முடியாது.

  எது ஆபாசம் என்ற எல்லை வகுப்பது கடினமே.

  நண்பர்களுடம் பேசிக் கொள்ளும் ஆபாச சொல்லாடல்களை வீட்டில் உள்ளவர்களுடன் பேசிக் கொள்ள முடியாது. யார் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதைப் பொருத்தே ஒரே செய்தி ஆபாசம் / ஆபாசம் இல்லை என்ற வகைக்குள் வரும். வாசகர்கள் அனைவருமே மெச்சூர் அல்லது அமெச்சூர் ஆடியன்ஸ் என்ற ஒரே வகைக்குள் சொல்லிவிட முடியாது.

 20. aruvaibaskar on July 11th, 2008 12:50 am

  இது நல்ல முடிவு தான் என்பது எனது கருத்து .
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

 21. சேவியர் on July 11th, 2008 1:09 am

  தமிழ்மணத்தின் இந்த முடிவு வரவேற்கத் தகுந்தது, ஆரோக்கியமானது.

 22. லக்கிலுக் on July 11th, 2008 1:42 am

  //அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

  தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.//

  தவறான பொய்யான தகவலை பயனாளிகளுக்கு தமிழ்மண நிர்வாகம் தரவேண்டாமே?

  தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!

  இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?

  இந்த பதிவும் மறுமொழியிடப்பட்ட இடுகைகள், சூடான இடுகைகள் எதிலும் வரவில்லை.

  //அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள்//

  மற்றபடி, புதுவை பதிவர்களுக்கு தமிழ் இணையம் குறித்தும், தமிழ்மணம் குறித்தும் இருக்கும் அக்கறை குறித்து மெய்சிலிர்க்கிறேன் 🙂

 23. லக்கிலுக் on July 11th, 2008 1:46 am

  //ச்சீ….க்கதைகள் அறுபத்தொன்பது //

  சூடான இடுகைகளில் இருக்கும் ஒரு பதிவு இது.

  இப்பதிவின் தலைப்பில் தமிழ்மணத்துக்கு தவறான அடையாளத்தை தரும் சொற்கள் இல்லை என்று நம்புகிறேன் 🙂

 24. ☆ சிந்தாநதி on July 11th, 2008 2:39 am

  சில யோசனைகள்:

  1.
  தமிழ்மணம் தனது கொள்கை முடிவுகளை தெளிவாக பதிவு ஒன்றின் மூலம் பதிவர்களுக்கு தெரியப் படுத்தி சிறிய கலந்துரையாடல் விவாதத்தின் பின்னர் அவற்றை நெறிப்படுத்தி பின்னர் நிரந்தரமாக அதை செயல்படுத்த முயற்சிக்கலாம்.

  2.
  ஆபாசப் பதிவுகள் அல்லாவிடினும் அவ்வாறு மயங்க வைக்கும் தலைப்புகளை பதிவர்களும் தவிர்க்கலாம்.

  3.
  சில விசேசக் காரணங்களுக்காக எழுதப்படும் பதிவுகள் சற்றே வயது வந்தவர்கள் அல்லது தேவைப்படும் வாசகர்கள் மட்டும் படிக்கலாம் என்று கருதும் பட்சத்தில் பதிவர்கள் அதை தனித்து வகைப்படுத்த வசதி செய்து அவற்றை தமிழ்மணத்தில் தனிப்பக்கத்தில் காட்டலாம்.

  4.
  முகப்பில் சூடான இடுகைகள் தொடர்ந்தும் பிரச்சினைகளை சந்திப்பதால் அவற்றை வேறு பக்கத்துக்கு மாற்றலாம்.

 25. வெங்கடேஷ் on July 11th, 2008 2:51 am

  //தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.//

  இது முற்றிலும் என் அனுபவத்தில் கண்ட உண்மை. தமிழ்மண நிர்வாகத்திற்கு என் பாராட்டுகள். இத்தகைய பதிவுகளை சூடான இடுகை பகுதிக்கு அனுப்பும் வாசகர்களின் தரம் தான் கேள்விக்குறியாகியுள்ளது.

  வெங்கடேஷ்
  திரட்டி.காம்

 26. வணக்கம்.
  தங்கள் பக்கத்திற்குப் படிப்பவர்களை ஈர்க்க பலர் திரைச்செய்திகள்,பாலியல் செய்திகளை ஒட்டித் தலைப்பீந்து தமிழ்மணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவது சரியே!
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி,இந்தியா

 27. வீரசுந்தர் on July 11th, 2008 3:48 am

  இது ஒரு சரியான முடிவு. ஆபாச சொற்களைக் கொண்ட இடுகைகளை எழுதும் பதிவர்கள், அவர்களின் வலைப் பதிவுகளில் எழுத எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால், தமிழ்மணம் போன்ற ஒரு பொது வலைதளத்தில் வரும் போது சிறிது கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

 28. oru Elath thamilan on July 11th, 2008 7:04 am

  வரவேற்கப்பட வேண்டிய முடிவு. சுய விளம்பரத்திற்கு எழுதப்படும் எழுத்துக்களை அகற்றுங்கள்.

  ஒரு ஈழத் தமிழர்

 29. தமிழ்சினிமா on July 11th, 2008 8:14 am

  தமிழ்மணம் நிர்வாகத்துக்கு வணக்கம். தங்களின் இந்த முடிவு வரவேற்க வேண்டிய விஷயம். எங்கள் தமிழ்சினிமா பிளாக் வழியாக ஒரு இடுகையில் தவறான தலைப்பு ஒன்று வெளியானபோது அதை தமிழ்மணம் வாசகர்கள் பலர் சுட்டிக்காட்டினர். இந்த இடுகையின் தலைப்பை உடனடியாக மாற்றியதுடன் இதுவரையில் ஆபாசம் கலப்பில்லாத இடுகைகளை பதிவு செய்து வருகிறோம். ஆனால் குறிப்பிட்ட சிலர் இன்னமும் படுக்கையறையில் நடிகை… என்ற ரீதியில் பதிவுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்மணத்தின் நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்கப்பட்டால் நல்லது என்று கருதுகிறோம். நன்றி.

 30. தமிழ்மணம் on July 11th, 2008 8:27 am

  தவறான பொய்யான தகவலை பயனாளிகளுக்கு தமிழ்மண நிர்வாகம் தரவேண்டாமே?

  தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!

  இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?

  *****

  பதிவர் லக்கிலுக்,

  ஒரு இடுகையின் தலைப்பும், ஆரம்ப சில வார்த்தைகளும் தமிழ்மணத்தில் தெரியும். இவற்றில் அப்படியான வார்த்தைகள் இருந்தால் அந்த இடுகைகளை அப்படியான வார்த்தைகள் கொண்ட இடுகைகளாக தமிழ்மணம் நிரலி தானியங்கியாக வகுக்கிறது. இந்த இடுகைகள் மறுமொழி திரட்டி, சூடான இடுகைகள் போன்ற பகுதிகளில் இடம்பெறாது.

  உங்கள் இடுகையின் ஆரம்ப வார்த்தைகளில் அப்படியான வார்த்தைகள் (ஜட்டிக்கதைகள்) இடம் பெற்று இருப்பதால் உங்கள் இடுகையையும் தமிழ்மணம் நிரலி அவ்வாறு வகுத்துள்ளது.

  தவறான, பொய்யான தகவல்களை தர வேண்டிய அவசியம் தமிழ்மணத்திற்கு இல்லை

  நன்றி…

 31. நந்தா on July 11th, 2008 8:32 am

  வணக்கம் தமிழ்மணம் கலாச்சார போலீசாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் இன்னும் மிகப்பலமாய் இப்போது எழுகிறது. வெகு எளிதான கேள்வி. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு சுந்தரை எத்தனை முறை நீங்கள் இது குறித்து வலியுறுத்தினீர்கள்??? நீங்களாக ஒரு முடிவை எடுத்து விட்டு அதை எல்லா பதிவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வது ஸ்கூல் டீச்சரின் செயலைப் போலத் தெரிய வில்லையா???

  நிற்க. தமிழ்மணம் லாப நோக்கற்ற, சேவை நோக்குடன் செயல்படும் தன்னிச்சையான திரட்டி. அதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லி, நாளை தமிழ்மணம் சுந்தர் என்ற பெயருடைய அல்லது நந்தா என்ற பெயரை உடைய பதிவர்களின் பதிவை திரட்டாது என்று கூட சொல்லலாம். அதற்கு உரிமையும் இருக்கலாம். ஆனால் தமிழ்மணம் பல பதிவர்களின் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றது என்பதை இந்தத் தருணத்தில் உணர்ந்துக் கொள்ளட்டும்.

  //அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.//

  அப்படியான சொற்கள் எவை எவை என்று ஒரு பட்டியலை சற்றே இட முடியுமா?? தமிழ்மண நிர்வாகத்துடன் சமீபத்தில் நடந்த சந்திப்பில் பலத்த உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு பல்வேறு ஆரோக்கியமான விஷயங்களை விவாதித்து, தமிழ்மணமும், பதிவர்களும் மிக இணக்கமான முறையில், புரிதலுடன் சென்று கொண்டிருக்கிறது என்று இருந்த சூழ்நிலையில் இந்த நடவடிக்கை தமிழ்மணத்தின் மீதிருந்த நட்புணர்வை குறைப்பதோடு, பதிவர்களுக்கும் அதற்குமிடையேயான இடைவெளியையும் அதிகரிக்க வைப்பதாய் இருக்கிறது.

  வேறு என்ன சொல்ல? சறுக்கி விட்டீர்கள் அவ்வளவுதான்.

 32. லக்கிலுக் on July 11th, 2008 8:34 am

  //உங்கள் இடுகையின் ஆரம்ப வார்த்தைகளில் அப்படியான வார்த்தைகள் (ஜட்டிக்கதைகள்) இடம் பெற்று இருப்பதால் உங்கள் இடுகையையும் தமிழ்மணம் நிரலி அவ்வாறு வகுத்துள்ளது.//

  இது நிஜமாகவே நகைச்சுவையாக இல்லையா?

  அப்படியிருப்பினும், நான் சுட்டிக்காட்டிய ‘ச்சீக்கதைகள்’ மற்றும் ‘காமம்’ தலைப்பில் அமைந்த வேறு சில இடுகைகள் மட்டும் சூடான இடுகைகளிலும், மறுமொழியிடப்பட்ட இடுகைகளிலும் வந்ததின் மாயமென்ன?

  யார் யாரின் போதைக்கோ நான் தான் எப்போதும் ஊறுகாயாக ஆகிறேன் 🙁

  ///தவறான, பொய்யான தகவல்களை தர வேண்டிய அவசியம் தமிழ்மணத்திற்கு இல்லை
  //

  தவறான, பொய்யான தகவல்களை தரவேண்டிய அவசியம் தமிழ்மணத்திற்கு இல்லை என்று நான் சொல்லவில்லையே? அதுமாதிரி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே சொல்லியிருக்கிறேன்?

  எனிவே, சீரியஸாகவே சொல்கிறேன். தமிழ்மணம் பாசிஸப் போக்கில் சென்றுவருவதாக நான் உணருகிறேன். ஒரு மூத்த வயதானப் பதிவரின் Contentம், பின்னூட்டங்களும் எவ்வளவு ஆபத்தானது? எவ்வளவு அபத்தமானது? அவரெல்லாம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளிலும், மறுமொழியிடப்பட்ட இடுகைகளும் வீற்றிருந்தால் தமிழ்மணத்துக்கு புதியதாக வரும் பார்வையாளர்கள் கோமாளித்தனமாக இருப்பதாக உணரமாட்டார்களா?

  தும்பை விட்டு விட்டு வாலை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் 🙂

 33. Vijayashankar on July 11th, 2008 9:00 am

  இதற்கு எல்லாம் தீர்வு, அடல்ட்ஸ் ஒனிலி ரேட்ங் போடணும்! நன்றி.

  விஜயஷன்கர்

 34. jackiesekar on July 11th, 2008 9:56 am

  உங்கள் சேவையில் எந்த குறைபாடும் இல்லை,இனிமேல் இப்படி தலைப்பு வைக்க வேண்டாம் என்று அறிவிப்பு செய்து இதனை செய்து இருக்கலாம். ஒரே நாளில் ஒரு பதிவரை (திரு ஜ்யரோம் சுந்தர்) ஒரு காமக் கொடுரன் போல் சித்தரித்து இருக்க வேண்டாம்

 35. நிமல் - NiMaL on July 11th, 2008 10:08 am

  தமிழ்மணத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

 36. ananth on July 11th, 2008 10:10 am

  வரவேற்கப்பட வேண்டிய முடிவு.

 37. ரவி ஸ்ரீநிவாஸ் on July 11th, 2008 10:26 am

  தமிழ்மண நிர்வாக ஐயன்மீர்
  தமிழ் வலைப்பதிவுகளைத் தேடிப் படியுங்கள்
  என்று தமிழ்மண முகப்பினை காண்பித்தால்
  பல இடுகைகளின் தலைப்புகள், இதையெல்லாமா
  படிக்கச் சொல்கிறாய் என்று நம்மிடம்
  கேட்கவைக்கின்றன.எனவேதான் ஒரு இடைக்கால தீர்வாக இந்த உடனடி முடிவினை எடுதத்தாக புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைப்பாட்டில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. பதிவர்களுக்கு தாங்கள் பயனர்கள் என்பது பல சமயங்களில் மறந்து விடுகிறது. திரட்டிக்கும்
  சில விழுமியங்கள் இருக்கமுடியும் என்பதையும்,
  பொதுவெளியில் சிலவற்றை வெளிப்படுத்தும்
  போது அதால் பிறருக்கு அதாவது இங்கு திரட்டி
  நிர்வாகத்திற்கும் சில சங்கடங்கள் நேரலாம்
  என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை
  என்று நினைக்கிறேன்.திரட்டி என்பது மனிதர்களால்
  நடத்தப்படுகிறது, வெறும் நிரலிகளால் அல்ல
  என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  இணையத்தில் கருத்து சுதந்திரம் மட்டற்றது
  என்பது ஒரு மிகையான கருத்து. அதே போல்
  திரட்டி நிர்வாகம் வலைப்பதிவரின் படைப்புரிமைய அங்கீகரிக்கும் வேளையில் அந்த இடுகை(களை) திரட்ட மறுக்கும் உரிமையும் திரட்டி நிர்வாகத்திற்கு
  இருக்கிறது என்பதை பதிவர்கள் நினைவில்
  கொள்ளலாம். இங்கு சிலர் நினைப்பது
  போல் திரட்டியைப் பயன்படுத்துவது என்பது கட்டற்ற பொதுவெளியில் சுதந்திரமாக
  உலவுவது போல் அல்ல. இப்போது தமிழ்மணம் சந்தித்த கேள்விகள் எதிர்காலத்திலும் வரும். வேறு வார்த்தைகளில், வேறு சூழல்களில் வரும்.
  அப்போது வேறு தீர்வுகள் தேவைப்படும்.

  நிரலிகள் மூலம் செய்யப்படும் வடிகட்டுதல் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்காது என்பது
  உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் ஒரளவிலாவது
  தீர்வு காணவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால், தமிழ்மணம் இவ்வாறு செய்தது என்று உங்கள் முடிவினை புரிந்து
  கொள்கிறேன்.

  இப்படிக்கு
  ரவி ஸ்ரீநிவாஸ்
  [ஒரு moron cum மிடில் கிளாஸ் மாதவன் :)]

 38. ரவி ஸ்ரீநிவாஸ் on July 11th, 2008 10:34 am

  ”சில விசேசக் காரணங்களுக்காக எழுதப்படும் பதிவுகள் சற்றே வயது வந்தவர்கள் அல்லது தேவைப்படும் வாசகர்கள் மட்டும் படிக்கலாம் என்று கருதும் பட்சத்தில் பதிவர்கள் அதை தனித்து வகைப்படுத்த வசதி செய்து அவற்றை தமிழ்மணத்தில் தனிப்பக்கத்தில் காட்டலாம்”

  தமிழ்மணம் எதற்காக அப்படி தனிப்பக்கத்தில்
  காட்ட வேண்டும். அவ்வாறு செய்வது அவறிற்கு தனி விளம்பரம் போலாகிவிடும். ‘வயது வந்தோருக்கான திரட்டி’யை யாராவது உருவாக்கி அதில் அவற்றை திரட்டலாம்.அத்தகைய இடுகைகளை/பதிவுகளை தமிழ்மணம் திரட்ட
  மறுக்கலாம்.தமிழ்மணத் திரட்டி சென்ஸார்
  போர்ட் அல்ல.அது A, R, PG என்று
  வகைப்படுத்திக் காட்ட தேவையில்லை.
  அவ்வாறு செய்யவும் கூடாது.

 39. azagappan on July 11th, 2008 11:40 am

  //
  இணையத்தில் கருத்து சுதந்திரம் மட்டற்றது
  என்பது ஒரு மிகையான கருத்து.
  //

  ரவி ஸ்ரீநிவாசின் கருத்துடன் உடன்படுகிறேன். கட்டற்ற சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ்மணத்தில் பதிவு செய்யும் பொழுது அதன் terms & conditionsஐ ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ளாமல் வெளியே இருக்க வேண்டியது தானே ? அப்பொழுது ஒப்புக் கொண்டு விட்டு இப்பொழுது கட்டற்ற சுதந்திரம் வேண்டும் என்பது நகைச்சுவையாக உள்ளது

  எல்லா இணையத்தளங்களுமே இது போன்ற வார்த்தைகளை filter செய்தே செயல்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது

  தாங்கள் என்னவோ அறிவுஞீவிகள் என்ற நினைப்பில் பிறரை மிடில் க்ளாஸ் மாதவன் என கூறுபவர்கள், ஏன் கவர்ச்சியாக தலைப்பிட்டு வாசகர்களை கவர்ச்சிக்காக இழுக்க வேண்டும் ? அறிவுஞீவித்தனமாக தலைப்பு வைக்க வேண்டியது தானே ?

  தமிழ்மணத்தின் நடவடிக்கையை ஆதரிக்கிறேன்

 40. கயல்விழி on July 11th, 2008 12:10 pm

  தமிழ்மண நிர்வாகிகளுக்கு

  நான் புது பதிவர் இருந்தாலும் இங்கே கவனித்ததை வைத்து சில கருத்துக்கள் சொல்ல நினைக்கிறேன்.

  1. முதலில் உங்கள் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தொடர்ந்து ‘காமம்’ என்ற வார்த்தை மட்டும் தமிழ்மணத்தை நிறைப்பது சரியல்ல.

  2. எழுத்தாளர் ஜ்யோவராம் சுந்தர் என்பவரின் பதிவுகளை நானும் படித்தேன். அதில் ஆபாசம் எல்லாம் இல்லை, அழகாக இந்த சப்ஜெக்டை கையாண்டு இருந்தார். ஆனால் அவரது பதிவுத்தலைப்புள் மட்டும் மட்டறுத்தப்பட்டது என்று சிலர் தெரிவித்திருப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். அவரை பார்த்து அதே மாதிரி நிறைய பேர் “காமம்” என்று தலைப்பில் தொடர்ந்து தமிழ்மணத்தை காமத்தால் நிறைத்தது தான் பிரச்சினை என்பது என்னுடைய புரிதல். எனவே, இது ஒரு குறிப்பிட்ட பதிவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கையல்ல என்று நம்புகிறேன்.

 41. நாமக்கல் சிபி on July 11th, 2008 1:26 pm

  ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கருத்துக்களை முழுமையாக வழிமொழிகிறேன்!

  அவசியத்தின் பேரில் சில வார்த்தைகளை, சில வாக்கியங்களை தங்கள் பதிவின் தலைப்புகளிலோ, பதிவுகளிலோ பயன்படுத்தும்போது தாமே முன்வந்து தலைப்பிலேயே – சுட்டிக்காட்டலாம். இது சுயதணிக்கை மற்றும் சுய ஒழுக்கம் போன்றவற்றை இன்ன பிற பதிவர்களுக்கும் உணர்த்தும்.

  அல்லது முகப்புப் பக்கத்தில் என்றேனும், எங்கேனும் இது போன்ற சொற்கள் காணப்பட்டால் கூட பரவாயில்லை! (கவனிக்க என்றேனும், எங்கேனும் மட்டுமே)

  சமீப வாரங்களில் முகப்புப் பக்கத்தை கூர்ந்து கவனிது வந்தவர்கள் தமிழ் மணத்தின் இந்த நடவடிக்கையை நிச்சயம் வரவேற்பார்கள் என்றே கருதுகிறேன்!

  (மன்னிக்க ஜ்வயராம் சுந்தர் அவர்களே, உங்கள் கதைகளை நான் படித்ததில்லைதான். ஆனால் முகப்புப் பக்கத்தில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று தலைப்புகள் – காமக் கதைகள் – ஜ்வயராம் சுந்தர் என்று தொடர்ச்சியாக பார்க்க முடிந்ததன் விளைவுதான் அதே தலைப்பில் என்னுடைய கலாய்த்தல் திணைப் பதிவும், நீங்களே கொஞ்சம் யோசித்து ஜஸ்டிஃபை செய்யுங்கள்)

 42. இராம்/Raam on July 11th, 2008 3:29 pm

  இதுவரைக்கும் வந்த பின்னூட்டங்களிலே இதுதான் நல்ல பின்னூட்டம்………. 🙂

  கொஞ்சமா இல்லை நிறையவே சிரிக்க வைத்தது….. அதுக்கு பேருதானே நல்ல பின்னூட்டம்………. 🙂

 43. மதுவதனன் மௌ. on July 11th, 2008 4:32 pm

  அதிகாரத்தை வச்சிருந்தா அநியாயங்கள் செய்யுறதுக்கான இயல்பு கொஞ்சம் கொஞ்சமா எப்படியும் வந்து சேர்ந்துடும் போல.

  ஹீம்..என்ன பண்றது…

 44. மின்னல் on July 11th, 2008 4:57 pm

  மனைவிக்கு நேரா தமிழ்மணத்தை ஒப்பன் பண்ணி காம கதையை பார்த்ததும் பொண்டாட்டி பார்த்த பார்வையிருக்கே….

  புரிய வைக்கிறத்துக்குள்ள……போதும்ப்பா இந்த விளையாட்டு..:(

 45. anon on July 12th, 2008 2:39 am

  கலகம் செய்பவர்கள் ஒப்பாரி எல்லாம் வைப்பதில்லை.

  காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான். என்னதான் ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக நான் இருந்தாலும், காமக்கதை என்று தலைப்பிட்டிருக்கும் பதிவுக்குள் நுழையத் தயக்கமாகத்தான் இருக்கிறது. கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?

  கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

  கடந்த ஒரு வருடத்தில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பெண்கள் கலந்து கொண்டார்கள்? இவர்கள் செய்வதாகச் சொல்லும் கலகம், பாலியல் வார்த்தைகளை உபயோகித்து, நடுத்தர வர்க்கத்துப் பின்னணி கொண்ட எம் போன்ற பெண்களை, embarass செய்து activities இல் இருந்து ஒதுக்கி வைப்பதிலேயே குறியாகச் செயல்படுகிறது என்று நான் சொன்னால் ஜ்யோவராம் சுந்தர், பைத்தியக்காரன், சுகுணா திவாகர், வளர்மதி உள்ளிட்டவர்களின் பதில் என்ன?

  பாலியல் விடுதலை வேட்கை என்பது தேவைதான். ஆனால், கிளர்ச்சிக்காக மார்புகளையும், தொடைகளையும் வார்த்தைகளில் தேடித் திரியும் கொழுப்பெடுத்த விடலைகள் இருக்கலாம் என்று நினைக்கிற இடத்தில், காமத்த்தை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய நிலைமை இன்னும் வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  வயதும் சூழ்நிலையும் கற்றுக் கொடுத்த கூச்ச நாச்சத்தை எல்லாம் களைந்து விட்டுச் செய்வதுதான் கலகம் என்றால், அதிலே பெண்களின் பங்கு என்ன

 46. லக்கிலுக் on July 12th, 2008 2:58 am

  மேலே பின்னூட்டம் போட்ட பெண் அனானி யாருன்னு எனக்கு தெரியும். யாருன்னு தெரிஞ்சுக்க விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்புங்க 🙂

 47. வேழ. பறையன் on July 12th, 2008 6:19 am

  காலம் எங்கேயோ போய்விட்டது. ஆனால், நீங்கள் முப்பாட்டி காலத்தில் இருக்கிறீர்கள்.

  காமம் என்ற வார்த்தை விழுந்தால் உஙகளை எல்லாரும் தவறாகப் பார்ப்பார்கள் என்றால், தயவுசெய்து, இந்த வலைசந்திப்புகளை நிறுத்திவிட்டு பாப்பாகதைகள் எழுதப் போங்கள்.

  இப்படிக்கு

  வேழ. பறையன்

 48. வேழ. பறையன் on July 12th, 2008 6:21 am

  If my wife gets shocked on seeing the word kaamakkathaikaL, it definitely shows her in a poor light. Her upbringing is defective.

 49. வேழ. பறையன் on July 12th, 2008 6:28 am

  Mr Azagappan!

  The first response from sarvesan deals with the theme of terms and conditions. He said such terms and conditions did not include that the title of bloggers should have some restrictions on which word is politically correct and which is not. The adminiistrator of this thamizmanam now put a new condition.

  Remember Mr Azappan. You join a school in Tenth with 50 per cent marks in your Nineth. Because, the rule has already allowed you to join with such minimum marks. All of a sudden, when you are about to finish the course and sit for Board exam, the school authorities debar you stating you should have got the minimum of 60; and then, throw you out of the school.

  The Thamizmanam authorities are behaving like the school. First dismiss those who joined in good faith according to your own terms and conditionas, and then, draw up new terms. Correct?

  Act-first-think-later seems to be the policy of these people!

 50. மு.இளங்கோவன் on July 12th, 2008 6:46 am

  இணையத்தில் எழுதும் நண்பர்களுக்கு…

  தமிழ்மணத்ததின் வழியாகப் பாலியல்,தரம் தாழ்ந்த படைப்புகள் அறிமுகம் ஆவதை நாங்கள் விரும்ப வில்லையே தவிர காமம் என்ற சொல்லை
  நாங்கள் வெறுக்கவில்லை.

  காமம் என்றால் விரும்புதல் என்று பொருள்.சங்க இலக்கியங்களிலும் இலக்கண நூல்களிலும் இச்சொல் விருப்பம் என்ற பொருளில் மிகச் சிறப்பாக ஆளப்பட்டுள்ளளது.

  “காமஞ் சான்ற கடைக்கோட் காலை”)(தொல்காப்பியம்.கற்.192)
  “காமக் கூட்டம்”(தொல்.கள.119)
  “காமநிலை”(தொல்.கற்.177)
  “காமம் சொல்லா”(தொல்.கள.109)
  “காமம் செப்பாது கண்டது மொழிமோ”(குறுந்.2)
  “காமுறுவர் கற்றறிந் தார்”(திருக்குறள்.399)

  காமத்துப்பால் என்பதே திருக்குறளில் சரி.

  முற்காலத்தில் “நாற்றம்” என்பது மணம் என்ற உயரிய பொருள் தந்தது.இன்று தீய நாற்றம் என்றானது.காமம் என்ற சொல்லும் உயரிய பொருளில் பண்டைக்காலத்தில் ஆளப்பட்டது.இன்று மட்டமான சொல்லாக நாம் நினைக்கிறோம். பயன்பாட்டிற்கு வரவேண்டிய சொல் அது.

  நெல்லைக் கண்ணன் அவர்கள் வேலூர் திருக்குறள் பேரவை விழாவில் காமம் பற்றி மூன்று மணி நேரம் மிகச் சிறப்பான இலக்கிய விளக்கம் தந்ததைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

  எனவே காமம் என்ற தமிழ்ச் சொல்லை நாங்கள் வெறுக்கவில்லை. இச் சொல்லை வைத்ததுக் கொண்டு தரமற்ற படைப்புகள் வெளிவருவதைத் தான் நாங்கள் விரும்பவில்லை.

 51. reader on July 12th, 2008 10:55 am

  Mr.Paraiyan you dont understand the issue.
  Tamilmanam has not removed the blogger,
  nor has barred all his posts.It has brought
  in new rules for some aspects of blogs
  getting displayed.
  “If my wife gets shocked on seeing the word kaamakkathaikaL, it definitely shows her in a poor light. Her upbringing is defective.”
  Perhaps your upbringing is defective, you
  normally dont associate with a reputed aggregator with so many entries on such stuff.

 52. வணக்கம் தமிழ்மண நிர்வாகத்தினரே,

  உங்களது இந்த முடிவு மிக வியப்பாக இருக்கிறது. காமக் கதைகள் என்று மட்டுமே வரக்கூடாதா? இல்லை வேறு சொற்களும் உள்ளனவா? கட்டில், படுக்கை, இரவு, ஆழம், தீண்டல் இதெல்லாம் வரலாமா? அப்படியென்றால் அவரை காமக் கதைகள் என்று எழுதுவதற்குப் பதிலாக கட்டில் கதைகள் என்று எழுதச் சொல்லலாம். இல்லையென்றால் படுக்கையறைக் கதைகள்.

  அப்படி உண்மையிலேயே தவறான பதிவுகளை நிறுத்த வேண்டும் என்றால்… பண்பட்டவர்கள் என்றொரு பிரிவு தொடங்குங்கள். இல்லையென்றால் ஜட்டிக்குப் பதில் சட்டி என்றுதான் எழுதுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்?

  என் கொங்கை நின் அன்பர் என்று முன்பு ஒரு கதை எழுதினேன். ஆகா கொங்கை என்று வந்து விட்டதே என்று அந்தக் கதையை தடுத்து விடலாமா?

  உங்களுடைய அளவுகோல் புரியவில்லை.

  ஒன்று செய்யுங்கள். பேசாமல் எந்தெந்தச் சொற்கள் எல்லாம் தலைப்பில் வரக்கூடாது என்று சொல்லுங்கள். பதிவு எழுதுகின்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

 53. vezha.paraiyan on July 13th, 2008 9:05 am

  Dear Reader!

  Mu.Ilangaovan has clearly debunked the notoriety associated with the word, kaamam, by citing reputed authorities of Sangam poetry etc. Now, after reading all this, if you feel that the word kamaaththukkathaikal should be disallowed in the title, then, I am very sorry for you because you have not respected Tamil langauge and literature itself.

  If there is no such respect and no such proper understanding of Tamil words, your upbringing is seriously flawed!

  Vezha.paraiyan

 54. vezha.paraiyan on July 13th, 2008 9:05 am

  When kaamathtuppaal is ok, kaamakkathaikal is not ok. What a joke!

 55. vezha.paraiyan on July 13th, 2008 9:10 am

  Mu Ilangovan says, the word Kamam in title is ok because it is such a respectable word. He is against the prurient and lurid (or, in simple English, porn) contents in the stories.

  So also all of us. We are against such contents.

  But here, the admiistrator wants us to believe that the title itself should be disallowed, because kamamam is a disresputatble word. And, the thamizmanam visiters will all think, because the word, kamanthatukkathaikal is there, the contents of the stories will always be porn.

  What a skewed logic!

  Are Thamizmanam visitors are so naive to judge anything without reading?

 56. வெங்கடேஷ் on July 13th, 2008 10:00 am

  // When kaamathtuppaal is ok, kaamakkathaikal is not ok. What a joke! //

  இதிலிருந்து உங்களுக்கு பகுத்தறியும் எந்த அடிப்படை அறிவும் இல்லை என்பது புலனாகிறது.

  அதிக மக்கள் கூடும் மெரினா கடற்கரையில் ”காமத்துப்பால்” என்ற தலைப்பிட்டு கூட்டம் கூட நடத்த முடியும். அது ”காமக்கதைகள்” என்ற தலைப்பிற்கு பொருந்துமா?

  மேலும் தமிழ்மணம் வெறும் காமக்கதைகள் அல்லது காமம் என்ற வார்த்தையை மட்டும் தனிக்கை செய்யவில்லை.

  பெதுவாக பலரும் பயன்படுத்தும் திரட்டியில் ஒரு சிலர் கூட முகம் சுலிக்ககூடாது என்ற என்னமே. இந்த பதிவுகளை பார்த்துவிட்டு ஒரு பிரபல பத்திரிகையாளர் ”என்னப்பா ஒரு மாதிரி தலைப்பா இருக்கே என்றார்” அவருக்கு நான் என்ன சொல்ல.. இன்று வரை அவர் தமிழ்மணத்தை படிப்பதில்லை இதில் நட்டம் நிச்சயம் தமிழ்மணத்திற்கு அல்ல..

  சரி ”ஜட்டிக்கதைகள்” அல்லது ”காமக்கதைகள்” என்ற தலைப்பை உங்களுடைய சகோதரி மற்றும் குழந்தையுடன் படிக்கமுடியுமா. இன்று இப்படி என்றால் இன்னும் சில மாதங்கள் கழித்து என்ன என்ன வார்த்தைகளில் வரும் என்பதை என்னிப்பார்க்கவும்.

  இன்று வலைப்பதிவு செய்யும் அனைவருக்குமே ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது ஏன் என்றால் இவர்கள் தான் முதல் தலைமுறை வலைப்பதிவர். இவர்களை பார்த்து தான் அடுத்த தலைமுறை வளர வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்.

 57. இரா.சுகுமாரன் on July 14th, 2008 3:40 pm

  வணக்கம்,

  புதுச்சேரியில் ஒருபதிவர் தனது பெண் தோழி ஒருவருக்கு புதிய வலைப்பூ ஒன்று தொடங்கினார், அதனை பின்னர் தமிழ்மணத்தில் இணையுங்கள் எல்லோரும் படிப்பார்கள் என்று அந்த நண்பர் ஆலோசனை சொன்னார், அந்த பெண்தோழிக்கு தமிழ்மணம் புதிது தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் “காமக்கதைகள்” என்று சூடான இடுகையிலும் மறுமொழியிலும் மூன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இருந்ததால், வேண்டாம் வேண்டாம் போயும் போயும் இந்த தளத்தில் இணைக்கப்போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

  இந்த தளத்தில் நீங்கள் இணைக்கவே வேண்டாம், என்று மறுத்துவிட்டார். புதுச்சேரியில் ஒரு நண்பர் இந்த நிகழ்வை புதுவையில் நடந்த “இணையத்தில் தமிழ் பயன்பாடும் அதன் வளர்ச்சியும்” கருத்தரங்கில் குறிப்பிட்டு பேசினார்.

  பதிவர்கள் தங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், நடைமுறையில் ஒரு சிறுவரோ, சிறுமியோ வீட்டில் இருப்பவர்கள் கட்டற்ற சுதந்திரத்தோடு தமிழ்மணத்தை படிக்க முடியவில்லை, என்பது தான் உண்மை.

  சமீபத்தில் ஒரு வீட்டிற்கு நான் சென்ற போது ஒரு செய்தியை நண்பர் குறிப்பிட்டார். தமிழ்மணத்தில் இப்போதெல்லாம் “காமக்கதைகள்” அப்படி இப்படி என்று எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார். அதனால என் பசங்கள தமிழ் பதிவுகள் அப்படி இப்படின்னு நான் படிக்க விடறதில்ல, என்றார்.

  அதுல அப்படி எழுதிரது இல்லையாமே! என்ற போது!! எல்லாப் பதிவையும் நான் படிச்சப்பரம் அவங்கள படிக்க சொல்ல முடியாது.
  அதனால அவங்கள அதிலே படிக்கவே வேண்டாம், என்று என் பிள்ளைகளுக்கு மனைவியின் உத்தரவு என்தையும் தெரிவித்தார்.

  நம் வழக்கத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அடையாளம் உண்டு அதை அப்படித்தான் புரிஞ்சிக்க முடியும்.

  பாகற்காய் உள்ள சர்க்கரை வச்சிறுக்கேன், அதனால இதை நீங்க சர்க்கரைன்னு தான் சொல்லனும், அப்படின்னா எப்படி ஏத்துக்க முடியும் என்றார் நண்பர். என் மனைவிக்கு படிப்பதில் விருப்பம் இல்லை தொலைக்காட்சி பார்ப்பதில் தான் ஆர்வம்.

  இதில் ஆபாசம் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வதைவிட அதை தவிர்த்துவிடுவது தான் எனது மனைவிக்கு எளிது, அதுதான் எங்கள் வீட்டில் நடந்தது.

  ………….. நண்பர் தனது ஆதங்கமாக மேலும் சில செய்திகளையும் சொல்லி முடித்த போது நெடுநேரமாகியிருந்தது.

 58. கோவை ரவி on July 15th, 2008 4:10 am

  இந்த தளம் ஆரம்பிக்கும் காலத்திலேயே தனியாக கோடிட்டு காட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.

 59. vezha.paraiyan on July 16th, 2008 6:50 am

  All can say like this: my cousin did not like it; or, my two-year old baby did not like it; my wife did not like it; my domestic maid did not like it.

  So, lets leave every thing to these people to decide.

  There is no limit to these arguments. All words that are written in Tamil literature, are dignified. For e.g mulai.

  Thaimulaippaal.

  Now, try and ask anyone whether mulai is a good or bad word in Thamizaman. And, then delight us with your reports. buddies. Start!

 60. vezha.paraiyan on July 17th, 2008 6:35 am

  There are hundred of examples from Tamil lit to show that how the word kaamam and the word mulai are purely good. An example is given below:

  தகவிலை தகவிலையே நிலை கண்ணா!
  தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராக
  சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
  சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
  அக உயிர் அகம் அகம்தொரும் உன் புக்கு
  ஆவியின் பரம் அல்லவேட்கை, அந்தோ!
  மிகமிக இனி உன்னைப் பிரிவை ஆமால்;
  வீவ, நின் பக நிறை மேய்க்கப் போக்கே.

  This is from Nammaazvaar’s thirvaaimozhi.

  முலைப்பால் என்ற தலைப்பிட்டு நான் தமிழ்மணத்தில் பதிவு போட்டால், அது நிறுத்தப்படவேண்டும் என்று கூக்குரலிட்டால் தவறு உம்மேல். என்மேல் அல்ல. ஏனெனின், முலைப்பால் என்ற தலைப்பின், அதன் பயன்களை நான் எழுதுவேன்; ஆனால், நீர் அதைப் படிக்கமாட்டீர். ஏனெனின், உம்மனம்தான் முலை என்ற சொல்லின்மேல் விழுந்து மதிமயங்கி போயிற்றே!

 61. vezha.paraiyan on July 17th, 2008 6:37 am

  வீவ, நின் பக நிறை மேய்க்கப் போக்கே.

  பக அல்ல பசு என்று வாசிக்கவும்.

 62. தமிழநம்பி on July 17th, 2008 10:03 pm

  புதுவையில் கலந்துரையாடலில் தெரிவித்தவற்றைக்
  கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட உங்கள் முடிவு வரவேற்கத் தக்கதே!

  அக்கலந்துரையாடலில் பேசிய தமிழ்ப் பேராசிரியர் இப்போது தம் கருத்தை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கிறேன்!

 63. vezha.paraiyan on July 18th, 2008 4:22 am

  ஆம், நம்பி. பொருத்தமாகச சொன்னிர்கள்!
  நாற்றம் என்ற சொல்லின் பதத்தை தலைகீழாக மாற்றிய thamizaa சொல்! எது துர்நாற்றமுள்ள தமிழ்?. எம்தமிழா! இல்லை, நும் தமிழா?
  ஒரு தமிழ்ப் பேராசிரியர்தான் சொல்லவேண்டும்.

  வருகையை எதிர்நோக்கும்
  வேழா பறையன்.

 64. லக்கிலுக் on July 21st, 2008 8:27 am

  //………….. நண்பர் தனது ஆதங்கமாக மேலும் சில செய்திகளையும் சொல்லி முடித்த போது நெடுநேரமாகியிருந்தது.//

  நக்கீரன், ஜூவி ரிப்போர்ட் மாதிரி இருக்கே? 🙂

 65. senthilkumaran on October 12th, 2008 2:53 pm

  i will joint this site.

 66. கரிகாலன் on October 15th, 2008 1:45 am

  நல்ல முடிவு,
  செயல்படுத்துங்கள்.

Leave a Reply