தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி – ”ம” திரட்டி
மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம்.
ம திரட்டி – http://www.tamilmanam.net/m/thiratti.html
வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மறுமொழிகள் திரட்டி வெளியாகிறது. இது ஏற்கனவே PoC வடிவத்தில் இருந்த ம திரட்டியின் பீட்டா வடிவம்.
தமிழ் வலைப்பதிவுகளில் மறுமொழிகளுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு. ஒரு இடுகையை விட அதன் மறுமொழிகளுக்கே அதிக கவனம் பல நேரங்களில் ஏற்படுகிறது. ஆனாலும் இந்த மறுமொழிகளை சரியாக தொகுக்க முடியாத ஒரு நிலையே இருந்து வந்திருக்கிறது. வேர்ட்பிரஸ், cocomment போன்ற தளங்களில் சில சேவைகள் வழங்கப்பட்டாலும் மறுமொழிகளை முழுமையாக தொகுக்கக்கூடிய ஒரு வடிவம் இல்லை.
தமிழ்மணத்தின் மறுமொழிகள் திரட்டி வலைப்பதிவர்களுக்கு தேவையான பல வசதிகளுடன் வெளியாகிறது. இந்த வசதிகளை தொடர்ந்து கூகுள் ரீடர் போன்றவற்றில் மிகவும் இலகுவாக மறுமொழிகளை வாசிக்கும் வகையில் ‘ம’ திரட்டி செய்தியோடையையும் வழங்க இருக்கிறது.
ம திரட்டி பதிவுகளின் மறுமொழிகள் ஓடையை கொண்டு திரட்டுவதால் ப்ளாகர், வேர்பிரஸ்.காம் தளங்களை திரட்டுகிறது. மறுமொழிகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்பொழுது இந்த வசதி ப்ளாகர், வேர்ட்ஸ்பிரஸ்.காம் போன்ற பதிவுக்கு மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. தனித்தளங்களில் இயங்கும் பதிவுகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை
”ம” திரட்டியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்
- ஒவ்வொரு இடுகை பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே இது வரை தமிழ்மணத்தில் தெரிந்தது. இனி யார் எழுதினார்கள், பின்னூட்டங்களின் சாராம்சம் போன்றவையும் தெரியும்
- ஒருவர் இடும் மறுமொழிகளை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி. உதாரணமாக பதிவர் கானா பிரபா எழுதிய அனைத்து மறுமொழிகளையும் இங்கே வாசிக்க முடியும்
http://www.tamilmanam.net/comments/கானா பிரபா
- அவர் எழுதிய ஒவ்வொரு மறுமொழியையும் தனித்தனியாக மென்நூலாக பெற முடியும்.
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_single_pdf.php?id=7261&a.pdf
- அவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே மென்நூலாகவும் பெற முடியும்
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_author_ebook.php?author=கானா பிரபா&a.pdf
- ஒரு இடுகை, அதன் மறுமொழிகள் என அனைத்தையும் மென்நூலாக பெற முடியும்
http://www.tamilmanam.net/m/thiratti.html
- மென்நூலைப் போலவே அச்சு வசதியும் அனைத்து மறுமொழிகளுக்கும் செய்யப்பட்டுள்ளது
- அதிகளவில் எழுதப்படும் மென்நூல்களை கொண்டு சூடான இடுகைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
இது ”ம” திரட்டிக்கான சூடான இடுகைகள் பகுதி ஆகும்
- அதிகளவில் மறுமொழிகள் எழுதும் பதிவர்களின் நிலவரம்
பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் வெளியாகும் இந்த புதிய ‘ம’ திரட்டி வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்
அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்
Comments
8 Responses to “தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி – ”ம” திரட்டி”
Leave a Reply

து. சாரங்கன் / Saru
நிமல்/NiMaL
இராம்/Raam
கருப்பன்/Karuppan
ஜோ / Joe
நந்து f/o நிலா
குழலி / Kuzhali
நிமல்/NiMaL
தமிழ் சசி / Tamil SASI
ஆகியோருடைய மறுமொழிகள் திரட்டுவதில் நுட்பச் சிக்கல் உள்ளது. இவர்களின் பெயரில் இடையில் உள்ள ” / ” என்பது திரட்டுவதில் தவறிற்கு காரணமாக இருக்கிறது.
முன்னர் விருபா / viruba என்று வைத்திருந்தபோது இதே பிரச்சனை தமிழ்மணம் தெரிவில் ஏற்பட்டது. அப்போதே சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன், மறந்துவிட்டேன்..
கவனத்தில் எடுக்கவும்.
வாழ்த்துக்கள்!
இன்றைய மறுமொழியாளர்கள் பகுதியில் எனது பெயர் வருவதில்லையே ஏன்?
My comments collected.
But not visible in commenter’s list.
please help me !
T.Baskar
வணக்கம்
எனது வலைப்பதிவில் இடும் பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் காட்டப்படாமல் செய்திகள் பகுதியில் காட்டப்படுகிறது. இதை எப்படி சரி செய்வது
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களே,
இப்பவும் எனது ப்ளாக்-ல் பதிவுகளை எப்படி குட்டிகரணம் அடித்தாலும், தமிழ் மணத்தில் மணக்க வைக்க இயலவிலை. நம்ம தொழிலும் பொட்டி தட்ற தொழில் இல்லையா..அதனால கொஞ்சம் “வெளக்கி” சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்…!!!!
என்னுடைய பதிவு மறுமொழி திரட்டப்படுகின்றது என்று தமிழ் மணத்தில் காட்டப்படுகின்ற போதும், அண்மைய மறுமொழிகள் பக்கத்தில் காட்டப்படுவதில்லை. என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முடியுமா??
நன்றி
தீப்பெட்டி (பாரதி) மறுமொழி திரட்டப்படுவதில்லை.