இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலியில் கருத்தரங்கம்
May 22, 2008 – 9:55 pm by தமிழ்மணம்வரும் ஜுன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் ”இணையத்தில் வளர்தமிழ் - வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும்” என்ற கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
மாவட்டக் ஆட்சித்தலைவர் திரு. கோ. பிரகாஷ், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் “இணையத்தில் வளர்தமிழ்” என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். தமிழ்மணம் நிர்வாகத்தைச் சார்ந்த முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும் பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ் மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்து ஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.
வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க் கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம்.
கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி - 5
நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)

8 Responses to “இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலியில் கருத்தரங்கம்”
நல்ல முயற்சி. பங்களிப்பவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். பயனடைபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்….
By தமிழ் பிரியன் on May 22, 2008
வாழ்த்துக்கள்….
By KRP on May 23, 2008
கருத்தரங்கு பயனுற அமைய விழைவும் வாழ்த்தும்!
- தமிழநம்பி
By தமிழநம்பி on May 23, 2008
அடடா, தற்செயலாக இதனை பார்க்க நேரிட்டது. வாழ்த்துகள்!
கண்டிப்பாக நான் கலந்து கொள்ள முயல்வேன்….முக்கிய்மாக சங்கரபாண்டி மற்றும் காசியை சந்திக்கும் வாய்ப்புக்காக!
அவர்களது மின்னஞ்சலை முடிந்தால் தெரிவிக்கவும்
நன்றி
By Prabhu Rajadurai on May 26, 2008
பதிவர் பட்டறை மற்றும் இது போன்ற நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்புகளை வெளியிடலாமே?…. எவ்வளவோ நிகழ்ச்சிகளை பதிவிறக்கி பார்க்கிறோம். இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.
By தமிழ் பிரியன் on May 29, 2008
vazhthukkal
By chandrika subra on May 31, 2008
வணக்கம், முதலில் வாழ்த்துக்கள் பல,
இங்கிலாந்தில் UK-யில் தமிழ் மொழி முன்பள்ளிகளில் Primary Schools கற்பிக்க ஆரரம்பித்திருக்கிறார்கள், தமிழும் ஏனைய ஐரோப்பிய மொழிகளின் தரத்தில் இன்று இங்கு UK-யில் உள்ளது, ஐரோப்யிய மொழிகளுக்கு உள்ள பாடத்திட்ட கட்டமைப்புப் போல் தமிழ் மொழிக்கும் UK-கான பாடத்திடத்தை நான் உருவாக்கி அது UK-மொழிச் சபையினரால் அங்கீகராம் பெற்று மாணவர்கள் அதற்கான பரீட்ஷையை Cambridge ASSET Languages-ஸ்தாபனம் மூலம் அங்கீகாரம் பெற்ற சான்றிதழை ஏனைய ஐரோப்பிய மொழிகளு்கான தரத்தில் பெறுவதற்கு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற தகவலை அரங்கில் தெரிவிக்கவும், அதற்கான தலைமைப் பரீட்ஷாதிகாரியாக தற்போது நான் இருக்கிறேன் என்ற தகவலையும் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அத்தோடு இவ்வழிமுறையில் தமிழ் மொழியை முன்பள்ளிகளில் உட்புகுத்தும் செயல்பாட்டை அறிமுகப்படுத்தியதிற்காக எனக்கு 2007 ஆண்டு ஐரோப்பிய மொழிகளுக்கான விருதையும் -EAL பெற்றுள்ளேன் என்பதையும் அறியத்தருகிறேன்.
சிவா பிள்ளை லண்டன் Educational Studies, Goldsmiths University of Londion SE14 6NW UK
By Siva Pillai on Jun 3, 2008
today i attended the karutharangam. since i do not have tamil fonts i could not write to you in tamil. i enjoyed the evening and wants to attend the workshop on tamil inayathalam. All the best for the team which organised the evening function.
Anbudan
Arumugam
By m arumugam on Jun 7, 2008