புதிய தமிழ்மணம் – Problems in Slow Internet Connection

May 10, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழகம், இலங்கை போன்ற இடங்களிலும் மற்றும் Slow Internet Connection கொண்டவர்களுக்கும் புதிய தமிழ்மணம் லோட் (Load) ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன. முகப்பு பக்கம் லோட் ஆவதற்கு 1:30 நிமிடத்திற்கும் மேல் எடுப்பதாக தமிழ்மணம் பயனர்களும், நண்பர்களும் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

அஜாக்ஸ் (Ajax) நிரலில் இருந்த ஒரு bug காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கே அமெரிக்காவில் இணையம் மிக அதிக Bandwidthன் இருப்பதால் இந்தப் பிரச்சனை எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் குறைந்த Bandwidth கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்துள்ளது. அஜாக்ஸ் நிரலில் இருந்த சில பிரச்சனைகளால் உலாவி (browser) சில நொடிகள் உறைந்து போவது (freeze/stuck) போன்ற பிரச்சனைகளும் இருந்தன.

இந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் புதிய தமிழ்மணம் பழைய தமிழ்மணம் போலவே மிக வேகமாக லோட் ஆகும். அது போலவே தமிழ்மணத்தின் முழு வடிவமும் (Full Version) வேகமாக லோட் ஆகும் என நிம்புகிறோம். என்றாலும் இன்னும் மேலதிக சோதனைகள் செய்யும் வரை தற்போதைய வடிவமே (Short Version) தொடரும். தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தால், பதிவர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலம் எங்களுக்கு தெரிவிக்கலாம். பிரச்சனைகளை நிச்சயம் சரி செய்வோம்.

தமிழ்மணம் தற்பொழுது பீட்டா பதிப்பில் இருப்பதால் சில பக்கங்களில் பிரச்சனைகள் உள்ளன (இன்றைய அனைத்து பதிவுகளும், மறுமொழிகள் போன்ற பக்கங்களில்). விரைவில் இதனை சரி செய்து முழுமையான பதிப்பினை வெளியிடுவோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

Comments

7 Responses to “புதிய தமிழ்மணம் – Problems in Slow Internet Connection”

 1. உமையணன் on May 10th, 2008 11:42 am

  புதிய தமிழ்மணம் தானாக அப்டேட் ஆவது மாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ரெஃப்ரெஸ் செய்ய வேண்டியிருக்கிறது.

 2. SP.VR.Subbiah on May 10th, 2008 11:46 am

  நல்லது மிஸ்டர் சசி!
  தகவலுக்கு நன்றி!

 3. சென்ஷி on May 10th, 2008 12:16 pm

  //புதிய தமிழ்மணம் தானாக அப்டேட் ஆவது மாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ரெஃப்ரெஸ் செய்ய வேண்டியிருக்கிறது.//

  ரிப்பீட்டே :((

  எனக்கும் அப்படித்தாங்க இருக்குது. ஒவ்வொரு தடவையும் ரிஃப்ரெஷ் கொடுக்க வேண்டியிருக்குது 🙁

  சரியா ஒன்றரை நிமிடத்தில் ஓப்பன் ஆகுதா என்று இன்னும் சரியா செக் செய்யவில்லை. ஏன்னா என்னோடது ரொம்ம்ம்ம்ப்ப ஸ்லோ நெட்வொர்க் 🙁

 4. Mahir on May 10th, 2008 12:38 pm

  அஜாக்ஸ் (Ajax) நிரலில் இருந்த ஒரு bug காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது//

  I am interested to know this bug. can you pls share?

 5. தமிழ் சசி / Tamil SASI on May 10th, 2008 1:23 pm

  சென்ஷி,

  தற்பொழுது 1:30நிமிடம் ஆகக்கூடாது. அப்படியாக இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் இணையத்தின் வேகம் குறைவாக இருக்கலாம்.

  தளம் 128kbps connectionல் 20-30secondsல் லோட் ஆகிறது என சில நண்பர்கள் கூறினார்கள். முதல் முறையாக லோட் ஆகும் பொழுது சற்று தாமதம் இருக்கலாம்.

  இதை விட அதிகமான அகலப்பட்டையில் தளம் 15secondsல் லோட் ஆகிறது

  content சில நொடிகளில் விரைவாக லோட் ஆகி விடுகிறது. கூகுள் விளம்பரம், படங்கள் போன்றவற்றை கொண்டு வர சில நேரம் ஆகிறது.

 6. தமிழ் சசி / Tamil SASI on May 10th, 2008 1:26 pm

  மாஹிர்,

  இது தமிழ்மணம் தளத்தில் அஜாக்ஸ் நிரலை பயன்படுத்தியதில் இருந்த பிரச்சனை.

  அஜாக்ஸ் சார்ந்த பொதுவான பிரச்சனை அல்ல…

 7. மதுவதனன் மௌ on May 11th, 2008 12:55 am

  தமிழ்மணத்தில் இப்போது இடுகையில் ஏதாவது படங்கள் இருந்தால் அதனையும் முகப்புப் பக்கத்தில் காட்டுகிறீர்கள். இது கவர்ச்சியான ஒன்றுதான்.

  ஆனால் முகப்புப் பக்கத்திலுள்ள புதிய இடுகைகள் இதன் காரணமாக பெரிதும் சிறிதுமாய் தமிழ்மணத்தின் அமைப்பின் வடிவினைக் குறைப்பதாகத் தெரிகிறது.

  மேலும் படத்தின் வலது பக்கத்திலுள்ல வெளியானது எழுத்துக்களற்று இருப்பது நன்றாகத் தெரியவில்லை.

  ———–
  | |
  | |
  | |
  | |
  ———– இங்கே இடுகையின் ஆரம்ப எழுத்துக்கள் உள்ளன. இது இடுகை பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறது

  என இருப்பதை விட

  ———– இங்கே இடுகை பற்றிய ஆரம்ப எழுத்து
  | |க்கள் உள்ளன. இது இடுகை பற்றிய
  | |ஒரு அறிமுகத்தைத் தருகிறது.
  | |
  | |
  ———–

  என இருப்பது சிறப்பாக இருக்கும் எனக் கருதுகறேன்.

Leave a Reply