புதிய தமிழ்மணம் – பீட்டா வடிவம்

புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.

புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

தற்போதைய சில முக்கிய குறிப்புகள்

குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் வகைப்படுத்தும். ஒரு குறிச்சொல் சார்ந்த தொடர்புடைய குறிச்சொல் போன்றவற்றை வழங்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.

மென்நூல், அச்சு வசதி போன்றவற்றை தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறோம்

மேலதிக சேவைகள் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு பதிவரின் கடந்த சில இடுகைகளை வாசிக்கும் வசதியை இந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக மேலும் பல சேவைகளை இந்தப் பகுதியில் வழங்க இருக்கிறோம்.

செய்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும் பதிவுகளுக்கு தனி பக்கத்தை வழங்கியுள்ளோம். சுயமான எழுத்துக்களை முன்வைக்கும் பதிவுகள் மட்டும் முகப்பு பக்கத்தில் வெளியாகும்

தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளை கேளிர் திரட்டி மூலமாக தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியால் திரட்டப்படும் பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தமிழ்மணம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. கூகுள் (Google Blog search) மற்றும் பதிவுகளின் ஓடை (RSS feed) என்ற இரண்டையும் கொண்டு கேளிர் திரட்டி செயல்படுகிறது. இந்த திரட்டியில் இருந்து பதிவுகளை சேர்த்தல்/நீக்குதல் போன்றவற்றை தமிழ்மணம் ஊக்குவிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரட்டி கூகுளை கொண்டே செயல்படுகிறது.

துறை சார்ந்த பதிவுகளை தமிழ்மணம் ஊக்குவிக்கிறது. துறை சார்ந்த பதிவுகளுக்கு தனி பக்கத்தை தமிழ்மணம் வழங்குகிறது

பழைய தமிழ்மணம் சில உலாவிகளில் (browser) சரியாக தெரிவதில்லை என்ற பிரச்சனை இருந்தது. புதிய தமிழ்மணம் அனைத்து உலாவிகளிலும் – Firefox, Internet Explorer 7, Opera, Safari சரியாக தெரியுமாறு வடிவமைத்து உள்ளோம். IE6.0ல் வடிவமைப்பில் மட்டும் சில பிரச்சனைகள் இருக்கலாம். பதிவர்களை IE7.0, FireFox போன்றவற்றை பயன்படுத்த தமிழ்மணம் ஊக்குவிக்கிறது.

அது போலவே புதிய தமிழ்மணம் 1024×768 resolutionல் செயல்படுமாறு வடிவமைத்து இருக்கிறோம். இதை விட மேம்பட்ட resolutionல் தமிழ்மணம் இன்னும் சிறப்பாகவே தெரியும். குறைந்த resolutionல் Scroll செய்து பார்க்க வேண்டிய தேவை இருக்கலாம். என்றாலும் பழைய தமிழ்மணம் போல எழுத்துக்கள் மறைந்து போவது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

தமிழ்மணத்தில் அதிக பயன்பாடு உள்ள பக்கங்கள் மட்டும் தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற பக்கங்களும் படிப்படியாக மாற்றப்படும். புதிய தமிழ்மணம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளதால், இதில் ஏற்படும் பிரச்சனைகளை, வழுக்களை (bugs) எங்களுக்கு அறியத் தாருங்கள். அதனை களைய முயற்சி எடுப்போம்.

புதிய தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.

நன்றி….

தமிழ் சசி,
தமிழ்மணம்

Comments

50 Responses to “புதிய தமிழ்மணம் – பீட்டா வடிவம்”

 1. TBCD on May 4th, 2008 10:59 pm

  எழுத்து அளவு சிறிதாக இருப்பதாக தெரிகிறது. மடிக்கணிணியில் பார்ப்பவர்களுக்கும் இது சிரமமாகவே இருக்கும்.

  முடிந்தால் சீர்படுத்துங்கள்.

 2. Balaji on May 4th, 2008 11:03 pm

  கலக்கல்!

 3. யாத்திரிகன் on May 4th, 2008 11:13 pm

  Cool…. nice look, its really refreshing..

 4. அறிவன் on May 4th, 2008 11:21 pm

  This is nice,but more space on front page for comments collected posts’ shall be better.probably,75 % percent of the right column can be used for this purpose.

 5. தமிழ் சசி / Tamil SASI on May 4th, 2008 11:37 pm

  This is nice,but more space on front page for comments

  ****

  இந்தப் பக்கத்திற்கு சென்றால் கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட அனைத்து இடுகைகளையும் வாசிக்க முடியும். பல்வேறு வசதிகளுடன் இந்தப் பக்கம் உள்ளது. பயன்படுத்தி பாருங்கள்
  http://www.tamilmanam.net/tamil/blogs/feedback.html

 6. தமிழ் சசி / Tamil SASI on May 4th, 2008 11:40 pm

  எழுத்து அளவு சிறிதாக இருப்பதாக தெரிகிறது. மடிக்கணிணியில் பார்ப்பவர்களுக்கும் இது சிரமமாகவே இருக்கும்.

  முடிந்தால் சீர்படுத்துங்கள்.

  ****

  எழுத்து அளவை Customize செய்யும் வசதியை ஏற்படுத்த முயல்கிறோம். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்…

  என் மடிக்கணினியில் சரியாகவே உள்ளது.

 7. தமிழ் சசி / Tamil SASI on May 4th, 2008 11:40 pm

  அனைவரின் பின்னூட்டங்களுக்கும் நன்றி…

 8. SP.VR.Subbiah on May 4th, 2008 11:51 pm

  புதிய வடிவமைப்பிற்கு பாராட்டுக்கள்!
  தமிழ்மணம் மேலும் பல உன்னத நிலைகளை அடைய
  வாழ்த்துக்கள் மிஸ்டர் தமிழ்சசி!

 9. அருட்பெருங்கோ on May 5th, 2008 12:32 am

  புதிய மாற்றங்களுக்கு வாழ்த்துகள். முன்பிருந்ததை விடச் சிறப்பாக உள்ளது!

  கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள் என தனி பக்கத்திற்கு பதிலாக (அல்லது மேலும் ஒரு வசதியாக) முகப்பு பக்கத்திலேயே இருபது இருபது இடுகைகளாக பார்க்கும்படி page navigation வசதி தரலாம்!

 10. muralikannan on May 5th, 2008 2:46 am

  nice thank you

 11. சாய் ராம் on May 5th, 2008 2:50 am

  புது முயற்சி சிறப்பாக இருக்கிறது. பகுதிவாரியாக பிரிப்பதை இன்னும் குறைத்து உட்பிரிவுகள் வைத்தால் கட்டமைப்பை புரிந்து கொள்ள எளிதாக இருக்குமென நம்புகிறேன். உதவி பக்கம் இன்னும் எளிதாக்கபட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

 12. மலைநாடான் on May 5th, 2008 6:13 am

  முதலில் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
  எனக்குத் தோன்றிய சில விடயங்கள்.
  1. சூடான இடுகைகள் பகுதியென்பது தேவையானதாகப்படவில்லை.

  2. பதிவரின் தளத்துக்கு வராமலே இடுகை வாசிக்க முடியும் வசதி என்பது, ஒரு பதிவரின் பிற ஆர்வங்களை முடக்கும் அல்லது மழுங்கடிக்கும் எனக்கருதுகின்றேன்.

  நன்றி.

 13. senshe on May 5th, 2008 7:00 am

  கலக்கலான வடிவம்.. முதலில் திறந்தபோது வேறு ஏதோ பாப் அப் வின்டோ என நினைத்து விட்டேன் :))

 14. தமிழ் சசி / Tamil SASI on May 5th, 2008 7:06 am

  2. பதிவரின் தளத்துக்கு வராமலே இடுகை வாசிக்க முடியும் வசதி என்பது, ஒரு பதிவரின் பிற ஆர்வங்களை முடக்கும் அல்லது மழுங்கடிக்கும் எனக்கருதுகின்றேன்.

  ******

  இதனை நிச்சயம் கருத்தில் கொள்கிறோம்.

  இந்த வசதி கூகுள் ரீடர் போன்றவற்றை சார்ந்த ஒரு முயற்சி தான்.

  என்றாலும் இதனை பதிவர்களே கட்டுப்படுத்த முடியும். ப்ளாகரில் உங்கள் செய்தியோடையை மாற்றினால் தமிழ்மணத்திற்கு முழு பதிவும் கிடைக்காது.

  Settings -> Site feed -> Blog Posts Feed -> Short

  என்று வைத்து விட்டால் முழு பதிவும் தமிழ்மணம் என்றில்லாமல் செய்தியோடை கொண்டு வாசிக்கும் யாருக்கும் கிடைக்காது.

 15. கோவி.கண்ணன் on May 5th, 2008 9:35 am

  முன்பு எடுக்கும் நேரத்தைவிட தற்பொழுது தமிழ்மணம் பக்கத்தை திறக்க மிகுந்த நேரம் ஆகிறது (30 வினாடிகள் வரை). மேலும் பழைய திரட்டியில் பின்னூட்டத் திரட்டியை தனியாக ரெபரஸ் செய்ய முடியும். புதியதில் செய்ய முடியவில்லை. இதனால் அடிக்கடி முழுப்பக்கத்தையும் ரெபரஸ் செய்ய வேண்டி இருக்கிறது. முடிந்தால் பழையபடி ஒவ்வொரு பகுதியையும் தனியாக ரெபரஸ் செய்யும் வசதியை (முன்பு போல்) ஆக்குங்கள். அது நல்ல பயனாக இருந்தது.

 16. தமிழ் சசி / Tamil SASI on May 5th, 2008 10:40 am

  மேலும் பழைய திரட்டியில் பின்னூட்டத் திரட்டியை தனியாக ரெபரஸ் செய்ய முடியும். புதியதில் செய்ய முடியவில்லை

  ********

  http://www.tamilmanam.net/tamil/blogs/feedback.html

  அனைத்து பின்னூட்டங்களையும் இந்தப் பக்கத்தில் வாசிக்க முடியும்.

  We will soon release a light version for slow internet connection. Also, pagination/single page option will be given to users, so that they can choose the way the page loads…

 17. பிரேம்ஜி on May 5th, 2008 10:40 am

  மறுமொழிகள் பகுதி மிக சிறியதாக ஆகிவிட்டது. தயவு செய்து அதை வழக்கம் போல் மாற்றவும்.

 18. மு.மயூரன் on May 5th, 2008 11:11 am

  //கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள் என தனி பக்கத்திற்கு பதிலாக (அல்லது மேலும் ஒரு வசதியாக) முகப்பு பக்கத்திலேயே இருபது இருபது இடுகைகளாக பார்க்கும்படி page navigation வசதி தரலாம்!//

  //1. சூடான இடுகைகள் பகுதியென்பது தேவையானதாகப்படவில்லை.

  2. பதிவரின் தளத்துக்கு வராமலே இடுகை வாசிக்க முடியும் வசதி என்பது, ஒரு பதிவரின் பிற ஆர்வங்களை முடக்கும் அல்லது மழுங்கடிக்கும் எனக்கருதுகின்றேன்.//

  இக்கருத்துக்களை வழிமொழிகிறேன்.

  கூடவே,

  பார்வையாளர்கள் தமிழில் தேடுவது முதலில் இன்றைய இடுகைகளையும் அடுத்து பின்னூட்டங்களையும்தான்.
  எனவே இவ்விரு பகுதிகளும் தனித்து உடனே தெரியும்படியாக தனியான பின்னணி வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்.
  தற்போது எல்லாம் ஒரே மாதிரியான எழுத்து, வடிவமைப்புடன் காணப்படுவது குழப்பமாகவுள்ளது.

  முழுமையான செய்தியோடை வசதி வேறு பல காரணங்களால் பதிவர்களுக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.

  எனவே முழுமையான செய்தியோடை வசதி தரப்பட்ட பதிவுகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையான எழுத்துக்களை மட்டுமே பெறும்படி உங்கள் நிரலை மாற்றிக்கொள்ளலாம்.

  அப்படி செய்யும்பட்சத்தில் முகப்பில் தலைப்புக்களைமட்டுமே இயல்பிருப்பாக காட்டமுடியும், பின்னர் விரிவுபடுத்துவதற்கான கூட்டல் குறியை அழுத்தி சுருக்கமாக பதிவின் உள்ளடக்கத்தைப்படிக்க முடியும். தலைப்பை மட்டும் காண்பிப்பதன் மூலம் அதிகமான இடுகைகளை முகப்புப்பக்கத்துக்கு கொண்டுவர முடியும்.

 19. ravishankar on May 5th, 2008 11:12 am

  தமிழ்மணத்தில் முழு ஓடையைக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டுகோள் – http://kanimai.blogspot.com/2008/05/blog-post.html

 20. ravishankar on May 5th, 2008 11:20 am
 21. சுந்தரா on May 5th, 2008 12:07 pm

  அட்டகாசமாக இருக்கிறது…புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்!

 22. வீரசுந்தர் on May 5th, 2008 12:53 pm

  தமிழ்மணத்தின் புதிய இடைமுகப்பு மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ஒரு சிறிய உதவி. என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்படும் பொழுது, என்னுடைய பெயரைக் காட்டுவதில்லை. மாறாக பதிவரின் பெயர் தெரியும் இடம் வெறுமையாக உள்ளது. ஆனால் மற்றப் பதிவர்களுக்கு இம்மாதிரி இல்லை. 🙁

  மேலும் என்னுடைய பின்னூட்டங்களும் திரட்டப்பட எதேனும் நிரலை என்னுடையப் பதிவில் இணைக்க வேண்டுமா?

  நன்றி!

 23. மதுவதனன் மௌ on May 5th, 2008 12:54 pm

  தமிழ்மணம் போன்ற ஒரு சிறந்த இணையப் பக்கத்துக்கு இவ்வாறான பகட்டுத்தன்மையான வடிவத்தைவிட முன்னைய வடிவமே தரத்தைக் காட்டிநிற்கும் என்பது எனதெண்ணம். புதிய வார்ப்புருவில் Professional look இல்லை.

  சரி வார்ப்புருவை இவ்வாறே வைத்திருந்தாலும் + குறியீட்டின்மூலம் முழு இடுகையையும் வாசிக்கக்கூடியதாக இருப்பதற்கு எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் ஒரு இடுகை என்பது அதன் வடிவமைப்பிலும் அதன் கருத்தைக் கொண்டுள்ளது. உங்களது இந்தச் சேவையால் படங்களோ வீடியோக்களோ காட்டப் படுவதில்லை.

  தொடர்ச்சியாக எழுத்தப்பட்ட மூனறு கவிதைகளை இந்த + குறியீட்டினூடு வாசித்ததால் அதை விட வேறு கேவலம் இல்லையென்பேன். ஏதோ ஒரு பத்திபோல, கட்டுரைபோல…மூன்று கவிதைகளும் ஒன்றுடன்ஒன்று இணைந்து அது கவிதையா என சந்தேகப்படும் ஒரு வடிவத்தில் உள்ளது.

  மேலும் பின்னூட்டங்களுக்குள்ளான இடுகைகள் பகுதி மிக முக்கியமானதொன்று. அதன் நீளத்தையும் குறைத்து அகலத்தையும் குறைத்தது தமிழ்மணத்தின் சிறப்பையே குறைத்துவிட்டீர்கள்.

  எதுவுமே 100 சதவீதம் முழுமையாக இருக்கமுடியாதுதான். ஆனாலும் சிலதுகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

  மற்றும் பின்னூட்டம் இடுபவர்களே..அட்டகாசமாக இருக்கிறது..தூக்கல்…கலக்குறீங்க..என்று சொல்வதுடன் மட்டுமல்லாது ஏதாவது பிழைகளை சுட்டிக்காட்டினால்தான் தமிழ்மணம் இன்னும் சிறக்கும் என நினைக்கிறேன்.

 24. மு.மயூரன் on May 5th, 2008 1:41 pm

  இடுகைத்தலைப்புக்களுக்குப்பக்கத்தில் யார் எழுதினார்கள் என்று வருகிறது. ஆனால் எந்த வலப்பதிவில் என்று வருவதில்லை. ஒரே வலைப்பதிவர் பல்வேறு வலைப்பதிவுகளை வைத்திருக்கலாம். எந்த வலைப்பதிவிலிருந்து இடுகை வருகிறது என்று காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

  தளம் உலாவிக்கு மிகுந்த பாரமாக இருக்கிறதே? அதுவும் Load ஆகும்போது.. எனது ஃபயர் ஃபாக்ஸ் சில வினாடிகள் உறைந்து போய்விடுகிறது.

 25. தமிழ் சசி / Tamil SASI on May 5th, 2008 1:58 pm

  தளம் உலாவிக்கு மிகுந்த பாரமாக இருக்கிறதே? அதுவும் Load ஆகும்போது.. எனது ஃபயர் ஃபாக்ஸ் சில வினாடிகள் உறைந்து போய்விடுகிறது.

  ***

  Mayooran,

  Can you please let me know your Internet connection speed and how long (in seconds) it takes to load in that connection ?

 26. மு.மயூரன் on May 5th, 2008 2:06 pm

  //Can you please let me know your Internet connection speed//

  41.87 kilobytes per second

  // and how long (in seconds) it takes to load in that connection ?//

  45 seconds.

  Firefox 2.0
  ubuntu 7.10

  RAM 256 MB
  Pentium IV 2.4 GHz

 27. ILA on May 5th, 2008 2:24 pm

  Sasi,
  1. Found RSS for thamizmanam is disabled, is it by design? If so NO COMMENTS

  2. Ticker in the top should have been forward to a URL link, which is missing.

  3.Loading, yes there is delay.(not much difference, though)

 28. தமிழ் சசி / Tamil SASI on May 5th, 2008 2:52 pm

  Mayooran,

  Thanks for the information.

  The slowness is mainly due to tags section. We will fix this issue.

  ****

  ILA,

  Thanks for your comments.

  It is not by design. Work is in progress. Feed link is http://tamilmanam.net/feed

  Ticker will be fixed

 29. நெல்லை சிவா on May 5th, 2008 3:16 pm

  புதிய வடிவம், அசத்துகிறது. தலைப்பின் சிவப்பு-கறுப்புதான் மற்ற நிறங்களுடன் ஒட்ட மறுக்கிறது. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

 30. உமையணன் on May 5th, 2008 3:34 pm

  //Settings -> Site feed -> Blog Posts Feed -> Short

  என்று வைத்து விட்டால் முழு பதிவும் தமிழ்மணம் என்றில்லாமல் செய்தியோடை கொண்டு வாசிக்கும் யாருக்கும் கிடைக்காது.//

  சசி,
  நீங்கள் சொன்னாலும் சொன்னீர்கள். எல்லோரும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இனி நான் யாரையும் கூக்ள் ரீடரிலும் படிக்க முடியாது.

  மாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
  அலுவலகத்தில் மட்டும் அதுவும் கூக்ள் ரீடரில் மட்டும் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் என்னைப் போல் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் கூக்ள் ரீடரில் படிக்காவிட்டால் வேறு எப்போதும் உங்கள் பதிவுகளை படிக்க மாட்டார்கள். ஆகவே தயவுசெய்து இந்த மாற்றத்தை செய்ய வேண்டாம் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.

 31. உமையணன் on May 5th, 2008 3:56 pm

  தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்.
  ஒன்றுக்கு மேற்பட்ட இடுகைகளை கிளிக்கும் போது தனித்தனியாக திறந்தால் தேவலை. ஒன்றிற்கு மேல் ஒன்று திறப்பது சற்று இடைஞ்சலாக இருக்கிறது.

 32. இராம் on May 5th, 2008 4:00 pm

  மயூரன்’க்கு ஏற்பட்ட பிரசினைதான் எனக்கும்……. பேஜ் லோடு ஆக கிட்டத்தட்ட நிமிடத்துக்கு மேல் ஆனது, நிறைய அஜாக்ஸ் நிரல் இருப்பதுதான் பிரச்சினையா? I am not sure 🙂

  load 60 seconds.(approx)….. 112 kbps…

  Firefox 2.0,ubuntu 7.10,RAM 512 MB…….

  //இதனை நிச்சயம் கருத்தில் கொள்கிறோம்.

  இந்த வசதி கூகுள் ரீடர் போன்றவற்றை சார்ந்த ஒரு முயற்சி தான்.

  என்றாலும் இதனை பதிவர்களே கட்டுப்படுத்த முடியும். ப்ளாகரில் உங்கள் செய்தியோடையை மாற்றினால் தமிழ்மணத்திற்கு முழு பதிவும் கிடைக்காது.

  Settings -> Site feed -> Blog Posts Feed -> Short

  என்று வைத்து விட்டால் முழு பதிவும் தமிழ்மணம் என்றில்லாமல் செய்தியோடை கொண்டு வாசிக்கும் யாருக்கும் கிடைக்காது.//

  இதையெல்லாம் நம்ம பதிவர்கள் பொறுமையாக செய்வார்கலன்னு சந்தேகம்தான். அதைவிட இந்த பதிவையும் பின்னூட்டங்களும் படிப்பர்களன்னே சந்தேகம் தான். … 🙂

 33. ravishankar on May 5th, 2008 4:32 pm

  மேலே உமையணன், மயூரன், மலைநாடான், தன் வலைப்பதிவில் லக்கிலுக் போன்றோர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். தயவுசெய்து, முழு ஓடைகளைக் காட்சிப்படுத்துவதைத் தவிருங்கள். (இது குறித்து என் கணிமை வலைப்பதிவில் இரண்டு இடுகைகள் எழுதி விளக்கி உள்ளேன். தொடர்புடைய தொடுப்புகளை இங்கு தர முயன்றால் மறுமொழிப் பெட்டி விழுங்கி விடுகிறது)

  உங்கள் செயற்பாட்டால் நிறைய பேர் குறை ஓடைகளுக்கு மாறினால் அது வலையுலக இயங்கியலைக் குலைக்கும். உமையணன் சுட்டிய படி, அலுவலகத்தில் இருந்து தமிழ்மணம், பிளாகர் தளங்களை அணுக வழியின்றி கூகுள் ரீடர் மூலம் படிப்பவர்களுக்குத் தடையாக இருக்கும்.

  இந்தப் புதிய வசதியால் பதிவருக்கு வருகை இழப்புகள், கூகுள் ரீடரில் படிப்பவர்களுக்குத் தடைகள் என்று குழப்பங்கள் தாம் இருக்கின்றவே தவிர, இதை நீக்குவதால் தமிழ்மணத்துக்கு ஒரு இழப்பும் இருக்காது என்று கருதுகிறேன்.

  இதில் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

 34. நாகு on May 5th, 2008 5:04 pm

  நன்றாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து என் உலாவியில் தமிழ்மணம் நன்றாகக் கமழ்கிறது 🙂

 35. ILA on May 5th, 2008 5:40 pm

  தமிழ்மணம் என்று தமிழிலேயே படிக்கும்படியாக இருந்த url, டமில் மணம் என்று மாற்றி இருப்பது நெருடலாக உள்ளது. thamizmanam.com is now being to redirected to tamilmanam.net

  Confusion
  1. As I already posted there is website called tamilmanam.com.

  2. What is the necessary to have tamilmanam.net, probably for testing?

 36. சிறில் அலெக்ஸ் on May 5th, 2008 6:14 pm

  மிகச் சிறப்பாயுள்ளது. வாழ்த்துகள்.

 37. வெற்றி on May 5th, 2008 10:45 pm

  சசி,
  புது வடிவம் நல்ல வடிவாக இருக்கிறது.
  தமிழ்மணத்தை மேலும் மெருகூட்டி தமிழ் பேசும் மக்களுக்கு சேவை செய்யும் உங்களுக்கும் மற்றும் அனைத்துத் தமிழ்மண நிர்வாக/தொழில்நுட்பவியலாலர்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

  நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

 38. TBCD on May 6th, 2008 2:32 am

  நன்றி..

  அகலமான திரையில் பார்க்கும் போது தமிழ்மணம் பக்கம் நடுவில் மட்டுமே தெரிகிறது.

  திரையளவிற்கு ஏற்றார்போல், விரிந்து, சுருங்கும் வண்ணம், ஒரு சில பதிவுகளில் வரும். அதுப் போல் மாற்றினால், நன்றாக இருக்கும்…

  பதிலுக்கு நன்றி..

  ///By தமிழ் சசி / Tamil SASI on May 4, 2008

  எழுத்து அளவை Customize செய்யும் வசதியை ஏற்படுத்த முயல்கிறோம். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்…

  என் மடிக்கணினியில் சரியாகவே உள்ளது.

  By தமிழ் சசி / Tamil SASI on May ////

 39. ravishankar on May 7th, 2008 12:21 am

  முழு இடுகைகளைக் காட்டாமல் விட்டதற்கு நன்றி.
  **
  ஒரு வேண்டுகோள் / யோசனை:

  /blogger/ என்ற பதிவர் பக்கங்களின் பக்கப்பட்டையில் இரண்டு widgetகள் காட்டலாம்.

  1. அப்பதிவரின் பதிவில் உள்ள அண்மைய மறுமொழிகள். நட்சத்திரப் பதிவருக்கான மறுமொழிகளை மட்டும் முன்பு பிரித்துக் காட்டினீர்கள் தானே? அது போல் இதற்கான தரவுகளைப் பிரித்துக் காட்ட இயலும் என்று நினைக்கிறேன்.

  2. அப்பதிவர் பிற பதிவுகளில் இட்ட மறுமொழிள். “மா” திரட்டிக்காக நீங்கள் கொண்டிருக்கும் தரவுகளில் இதைப் பெற்றுக் கொள்ளலாம்.

  இந்த வகையில் பதிவர் பக்கங்கள் இன்னும் முழுமையாக, அப்பதிவரின் இணையச் செயல்பாடுகளை ஒரே பக்கத்தில் அறிய உதவும்.

 40. சீனு on May 7th, 2008 1:13 am

  என் அலுவலகத்தில் blogspot.com தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழ்மணத்தின் புதிய தளத்தில் உள்ள சில வசதிகள் என்னால் இங்கேயே படிக்கும் படி இருந்தது. ஆனால் இப்பொழுது “+” குறியை அழுத்தினால் படிக்க முடிவதில்லை. அதனை நீக்கி விட்டீர்களா என்ன? 🙁

 41. நட்டு on May 7th, 2008 5:07 am

  பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் கூறு என்றாலும் கூட தமிழ்மணம் பழைய பதிவு முறைகள் சிறப்பாகவே இருந்தது.அதிலும் தலைப்புக் கண்ணோட்டம் மிக அழகு.சில நாட்கள் பார்வையில் புதிய மாறுபாடுகளின் மாறுபாடுகளுக்கு கண்கள் ஒத்துழைப்பதில்லை.பார்க்கலாம் பழகப் பழக இதுவும் பழகும்.

  வழுக்கள் வார்த்தைப் பதம் புதிதாக இருக்கிறது.

 42. சந்தோஷ், on May 7th, 2008 8:21 am

  சசி,
  தமிழ்மணத்தின் புதிய முயற்சி நன்றாக உள்ளது. சூடான இடுக்கைகள் வந்த முதல்நாளே அதில் மக்கள் சூடான தலைப்பு வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள் (திருடனாய் பார்த்து திருந்தாவிட்டா பழமொழி தான் நியாபகத்திற்கு வருகிறது).
  என்னுடைய வீடு மற்றும் அலுவலக கணினியில் firefox உலாவியை பயன்படுத்தி தமிழ்மணத்தை திறக்க முடியவில்லை. time out error வருகிறது. வீட்டில் உள்ள internet connect 512 kbps, மடிக்கணினி 1gb ram. அலுவலகத்தில் T1 lan. internet explorerஇல் இரண்டு இடங்களிலும் பார்க்க முடிகிறது. என்னுடைய கணினியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

 43. தமிழ் சசி / Tamil SASI on May 7th, 2008 8:37 am

  பின்னூட்டங்கள் மூலம் ஆலோசனைகள்/கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி…

 44. கோவி.கண்ணன் on May 7th, 2008 9:47 pm

  முன்பு புதிய பதிவர்கள் இணைந்தவுடன் அவர்களின் பதிவின் பெயரும் பதிவர் பெயரும் தமிழ்மண முகப்பில் தெரியும், அதை வைத்து அவர்களை ஊக்கப்படுத்த ஏதுவாக இருந்தது, தற்பொழுது புதிய பதிவர்களின் சேர்க்கைப்பற்றி அறிய முடியவில்லை.
  🙁

 45. இன்றைய பதிவர் என்ற பகுதியில் போய் என் பெயரை க்ளிக் செய்தால்.. நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது… என் சிறுமுயற்சி தளம் திரட்டப்படவில்லை.. 🙁 இன்னும் மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதால் இதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்.

  \\முன்பு புதிய பதிவர்கள் இணைந்தவுடன் அவர்களின் பதிவின் பெயரும் பதிவர் பெயரும் தமிழ்மண முகப்பில் தெரியும், அதை வைத்து அவர்களை ஊக்கப்படுத்த ஏதுவாக இருந்தது, தற்பொழுது புதிய பதிவர்களின் சேர்க்கைப்பற்றி அறிய முடியவில்லை.//
  வழிமொழிகிறேன்..

 46. TBCD on May 9th, 2008 2:53 am

  எவ்வளவோ மாற்றுகிற தமிழ்மணம், நட்சத்திரம் என்பதை விண்மீன் (நல்ல தமிழ் சொல்லில்) மாற்றலாமே.. :)))

 47. தமிழ் சசி / Tamil SASI on May 9th, 2008 10:25 am

  முன்பு புதிய பதிவர்கள் இணைந்தவுடன் அவர்களின் பதிவின் பெயரும் பதிவர் பெயரும் தமிழ்மண முகப்பில் தெரியும்

  ———–

  இன்றைய பதிவர் என்ற பகுதியில் போய் என் பெயரை க்ளிக் செய்தால்.. நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது… என் சிறுமுயற்சி தளம் திரட்டப்படவில்லை..

  ———–

  ஆலோசனைகளுக்கு நன்றி. இவற்றை சரி செய்வோம்

  உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து எங்களுக்கு தெரிவியுங்கள்.


  தமிழ்மணத்தின் தளம் லோட் ஆவதற்கு இப்பொழுது குறைவான நேரம் தான் ஆகும் என நினக்கிறேன். இந்தியாவிலும், இலங்கையிலும் தளம் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என தெரிவித்தால் நன்றாக இருக்கும்

 48. ஆயில்யன் on May 9th, 2008 12:41 pm

  பதிவுகள் வகைப்படுத்தலில் முடிந்தால்,
  இயற்கை அல்லது சுற்றுச்சூழல் என்ற வகைப்படுத்தல் சொல்லையும் இணைக்க முயற்சிக்கவேண்டுகிறோம்!

  இது சம்பந்தமான எனது பதிவு http://kadagam.blogspot.com/2008/05/blog-post_101.html

 49. jeevaa on May 10th, 2008 12:41 pm

  தமிழில் புகைப்படக் கலைப் பதிவு துறைசார்ந்த பதிவில் சேருமா ?

  பதிலுக்கு முன்கூட்டிய நன்றியுடன்

  ஜீவ்ஸ்

 50. John26 on October 22nd, 2009 5:26 pm

  Further, Hardin’s Malthusian views had a fundamental flaw based on a kind of linear logic view of humanity- that we are all the same. ,

Leave a Reply