தமிழ்மணத்தில் புகைப்படங்களை Gravatar மூலம் மாற்றும் வசதி

April 10, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக திரட்டும் புதிய வசதியை தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க முடியாத வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களும் தங்கள் புகைப்படத்தை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

இது தவிர தமிழ்மணம் கருவிப்பட்டை வாயிலாகவும் உங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். அது குறித்த செய்முறைக்கு இந்த இடுகையை பார்க்கலாம் – http://blog.thamizmanam.com/archives/120

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் Gravatar – globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நாம் பல வலைத்தளங்களில் மறுமொழிகளை இடும் பொழுது இது மிகுந்த உதவியாக இருக்கும்.

இந்த வசதி வேர்ட்பிரஸ் 2.5ல் உள்ளது. ப்ளாகரில் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தை இப்பொழுது தமிழ்மணத்திலும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

பதிவர்கள் செய்ய வேண்டியது

பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்த புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பயன்படுத்தியும், Gravatar மூலமாகவும் தமிழ்மணத்தில் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம்.

பி.கு.

 • Gravatar நுட்பத்திற்கு மாற்றாக openvatar என்ற புதிய தொழில்நுட்பமும் உள்ளது. ஆனால் இது தற்பொழுது alpha பதிப்பில் உள்ளது.
 • Openid தொழில்நுட்பமும் விரைவில் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கலாம்.

வேர்ட்பிரஸில் Gravatar பயன்படுத்த இந்தச் சுட்டியை பார்க்கலாம் – Gravatars and WordPress 2.5

Gravatar யோசனையை அளித்த நண்பர் ரவிசங்கருக்கு நன்றி…

நன்றி…

தமிழ் சசி
தமிழ்மணம்

Comments

25 Responses to “தமிழ்மணத்தில் புகைப்படங்களை Gravatar மூலம் மாற்றும் வசதி”

 1. SP.VR.Subbiah on April 10th, 2008 8:09 pm

  தகவலுக்கு நன்றி!
  நல்ல பதிவு!

 2. SP.VR.Subbiah on April 10th, 2008 9:05 pm

  புதிய இடுகைகள் முகப்புப் பகுதியில் இருக்கும்போதுதான் பலரது கண்களில் படும் வாய்ப்பைப் பெறுகிறது.
  தற்சமயம் உள்ள பக்க அளவில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் புதிய பதிவுகள் காணாமல்
  போய்விடுகின்றன.

  நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தியா, துபாய், அமெரிக்கா என்று வாசகர்கள் வரும் நேரம் வித்தியாசப்படுவதால்,
  முகப்பில் இருக்கும் இடுகை /பதிவு குறைந்தது 12 மணி நேரம் நிற்கும் வசதியைச் செய்து கொடுத்தால் நல்லது.

  அதற்குப் பக்கத்தின் நீளத்தைப் பெரியதாகச் செய்து – Scroll down செய்து பார்க்கும் அமைப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

  அதேபோல 24 மணி நேரத்தில் பதியப் பெற்ற இடுகைகள் பக்கத்தையும் நீளத்தில் பெரியதாக்கிக் Scroll down செய்து பார்க்கும் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நல்லது!

  உயிர்கள் உங்களை வணங்கும்!

  செய்வீர்களா – மிஸ்டர் தமிழ் சசி அவர்களே?

 3. தமிழ் சசி / Tamil SASI on April 10th, 2008 11:54 pm

  Subbiah அவர்களே!

  நன்றி…

  நீங்கள் கேட்கும் வசதியை வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஏற்படுத்த முயல்வோம்.

 4. Kana Praba on April 11th, 2008 12:10 am

  இப்போது பரீட்சித்துப் பார்த்தேன், அருமையா வருது, நன்றி

 5. TBCD on April 11th, 2008 2:00 am

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  என்னுடைய சின்னம், முகப்பில் தெரிகிறது..

  நன்றிங்கோ….

 6. ravishankar on April 11th, 2008 5:00 am

  இந்த வசதியை உடனடியாக செய்து தந்ததற்கு நன்றி. openid ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிற தமிழ் இணையத்தளங்களும் இந்த எடுத்துக்காட்டைப் பின்பற்றும் என்றும் நம்புகிறேன்.

  Openvatar குறித்த தகவல் புதிது. நன்றி.

 7. தமிழ் சசி / Tamil SASI on April 11th, 2008 7:34 am

  ரவிசங்கர்,

  நன்றி…
  உங்கள் யோசனைக்கும் நன்றி…

  கானா பிரபா, TBCD,

  நன்றி

 8. ravishankar on April 11th, 2008 10:32 am

  தொழில்நுட்பக் குழு முனைப்போடு இருக்கையிலேயே இன்னொரு வேண்டுகோள் 🙂

  **

  தமிழ்மணத்தின் இந்த வலைப்பதிவில் காணப்படும் மறுமொழிகள், தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழுவுக்கு வரும் பெரும்பாலான உதவி வேண்டுகோள்கள் பலவும் தமிழ்மணம் நுட்ப உதவி வேண்டல்கள் / புதிய வசதி வேண்டல்களாவே உள்ளன. இவை பல இடங்களிலும் சிதறிக் கிடப்பதால் ஒரே கேள்விகள் திரும்பத் திரும்ப வருகின்றன. complaints@thamizmanam.com எழுதி மறுமொழி வரக் காத்திருக்க வேண்டும். ஒரே கேள்விகளுக்கு நீங்களும் திரும்பத் திரும்ப பதில் அளிப்பது சாத்தியம் அல்ல.

  http://groups.google.com/group/Thamizmanam

  முழுக்க உரையாடல் மன்றமாக மாறிவிட்டிருப்பதால் மேற்கண்ட தேவைகளுக்கு உதவுவதில்லை.

  http://wordpress.org/support/ போல் ஒரு உதவி மன்றம் வைத்து, உதவி வேண்டல்கள், வழு அறிக்கைகள், புதிய வசதிகள் வேண்டல்கள் அனைத்தையும் தெரிவிக்கச் சொல்லலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றை stickyஆக வைக்கலாம். விவரம் தெரிந்த மற்ற தமிழ்மணப் பயனர்களும் சேர்ந்து உதவ வழி வகுக்கும். இணையத்தில் நன்கு இயங்கும் பல தளங்களிலும் இந்த community supportஐக் காண இயலும். தமிழ்மணத்தைச் சுற்றி இயங்கும் சமூகத்தின் பங்களிப்பை ஆவணப்படுத்துவது போலவும் இருக்கும்.

  இந்தப் பணிகளுக்கு http://wordpress.org/support/ ஐ இயக்கும் அவர்களின் கட்டற்ற மென்பொருளான bbPress பயன்படுத்தலாம். நிறுவிக் கொள்ள 5 நிமிடங்களே போதும். பராமரிப்பும் வேர்ட்பிரெஸ் பராமரிப்பு போன்றதே.

 9. தமிழ் சசி / Tamil SASI on April 11th, 2008 7:59 pm

  ரவிசங்கர்,

  தமிழ்மணத்தின் முதல் பதிப்பில் மன்றம் இருந்தது. ஆனால் பெரிய செயல்பாடு இல்லை என்பதால் தான் கூகுள் குழுவிற்கு மாற்றப்பட்டது.

  ஆனால் மறுபடியும் நீங்கள் கூறுவது போன்ற மன்றத்தை செயல்படுத்துவதில் பெரிய பிரச்சனை இல்லை. விரைவில் அதனை நிறுவ முயல்வோம்.

  உங்களுடைய தொடர்ச்சியான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி…

 10. பொன்வண்டு on April 12th, 2008 1:20 am

  அவதாராக GIF பைல் போட்டால் அனிமேட் ஆகுமா? இதற்கு முன்னால் ஆகவில்லை.

 11. கௌபாய்மது on April 15th, 2008 4:26 am

  நானும் உங்களுக்கு மடல் அனுப்ப வேண்டும் என் நினைத்திருந்தேன்.

  தமிழ்மணம் முகப்பில் தேன்றும் சில இடுகைகள் ஒரு மணிநேரத்தில் காணமல் போய்விடுவதும் உண்டு. வாரஇறுதி நாட்களில் இவ்வாறு நடப்பது அதிகம். இடுகைகள் கூடுதலான நேரம் தமிழ்மணத்தில் தோன்றுவதற்கு இயலுமானதைச் செய்யுங்கள்.

  மேலும் “அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்” இன் கீழுள்ள வெற்றுப் பகுதியை பயனுள்ளதாகப் பயன்படுத்தலாமே என்பதும் எனதெண்ணம்.

 12. மயூரேசன் on April 16th, 2008 3:16 am

  இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி! கிரவற்றார் உலகமெல்லாம் பிரபலமாகி வருகையில் அதன் பயன்பாடு தமிழ்மணத்திலும் இருப்பது நன்றே!!!

  பி.கு: வேர்ட்பிரஸ் 2.5 இல் உள்ளமைந்த கிரவற்றார் ஆதரவுண்டு!!!

 13. Giriraj on April 25th, 2008 3:51 pm

  Hi Sasi,

  I have added image in “Gravatar – globally recognized avatar” and confirmed, but in Thamizmanam is not showing my image. I don’t have karuvi pattai in my blog. Can you assist me Pls?

  Thanks in advance
  Giriraj

 14. SP.VR.Subbiah on May 2nd, 2008 12:33 am

  I have added image in “Gravatar – globally recognized avatar” and confirmed, but in Thamizmanam is not showing my image. I have karuvi pattai in my blog. Can you assist me Please?

  SP.VR.Subbiah

 15. லக்கிலுக் on May 5th, 2008 8:07 am

  Gravtar தளத்தில் நான் படமேற்றி கூட தமிழ்மணம் முகப்பில் என் படம் தெரிவதில்லை 🙁

 16. அருட்பெருங்கோ on May 9th, 2008 3:56 am

  எனது இரண்டு வேர்ட்பிரஸ் பதிவுகளிலும் ஒரே நீட்சியைப்பயன்படுத்திதான் தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்தேன்.

  இருந்தும், தமிழ்மணத்தில் blog.arutperungo.com பதிவின் இடுகைகளுக்கு gravator மூலம் இணைத்த படமும், songs.arutperungo.com இடுகைகளுக்கு வேர்ட்பிரஸ் நீட்சியில் இருக்கும் default படமும் தெரிகிறதே…

 17. தமிழ் சசி / Tamil SASI on May 9th, 2008 10:03 am

  புகைப்படங்களை திரட்ட தமிழ்மணத்திற்கு நீங்கள் அளித்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துகிறோம்.

  நீங்கள் Gravatar தளத்திலும் தமிழ்மணத்திற்கு அளித்த அதே மின்னஞ்சல் முகவரியை அளித்தால் தான் புகைப்படங்களை தமிழ்மணம் திரட்ட முடியும்.

  உங்கள் Gravatar புகைப்பட சுட்டியை (URL) கொடுத்தால் என்ன பிரச்சனை என பார்க்க முடியும்

 18. சயந்தன் on May 10th, 2008 12:36 pm

  நானும் வேர்ட் பிரசில் தனித்தளம் அமைத்து பயன்படுத்துகிறேன். தமிழ்மண நீட்சியில் ஏற்கனவே இயல்பிருப்பாக இருந்த படத்தை பின்னர் மாற்றினேன். தவிரவும் Gravatar இலும் தமிழ்மணத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் அதே படத்தை சேர்த்திருந்தேன். பின்னூட்டத்தில் காணக்கிடைக்கும் மின்னஞ்சல் முகவரியே நான் தமிழ்மணத்திற்கும் Gravatar க்கும் பயன்படுத்துகிறேன்.

  ஆனாலும் இப்போதும் தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது கார்ட்டுன் கரெக்டர் பிரேமதாசா தான் வருகிறார். ஏதாவது செய்ய கூடியதாக உண்டோ ?

 19. கிரிராஜ் on May 10th, 2008 2:32 pm

  வணக்கம் சசி,

  நான் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியை தான் Gravatar தளத்திலும் கொடுத்துள்ளேன் ஆனாலும் வரவில்லை. இதற்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து சரி செய்து கொடுக்கவும்.

  கிரிராஜ்

  http://en.gravatar.com/avatar/2776c4261dd570af6e2a2a59f1859104?s=80&r=any

 20. தமிழ் சசி / Tamil SASI on May 10th, 2008 5:57 pm

  மின்னஞ்சல் சரியாக இருந்தால் திரட்டுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

  கிரிராஜ்,

  தமிழ்மணத்தில் நீங்கள் கொடுத்த முகவரி girirajnet@yahoo.om

  com என முழுமையாக இல்லாமல் .om என்று உள்ளது. இது தான் பிரச்சனை.

  girirajnet@yahoo.com என முகவரியை மாற்றிய பிறகு உங்கள் புகைப்படம் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 21. கிரிராஜ் on May 10th, 2008 10:35 pm

  ரொம்ப நன்றிங்க சசி.

  ஒரு ஆர்வத்துல வேகமாக கொடுத்ததால் தவறாக கொடுத்து விட்டேன் போல இருக்கு :))) என்னால் என்னுடைய முகவரியை சரி செய்ய முடியவில்லை, தமிழ்மணத்தில் Control Panel போன்ற நம்மை பற்றிய பகுதி எதாவது உள்ளதா? நானும் தேடி பார்த்து விட்டேன். எங்கேயும் இல்லை, அதை போல் வசதி இருந்தால் கூறவும். இல்லை என்றால் என் முகவரியை சரி செய்து இருப்பேன்.

  உங்களுடைய உதவிக்கு கோடி நன்றிகள்.

  கிரி

 22. கூடுதுறை on July 12th, 2008 12:17 pm

  அன்புடையீர்

  எனது இந்த புகைப்படம் திரட்டியில் வரச்செய்ய வேண்டுகிறேன்

  http://www.gravatar.com/avatar/0072e4113307d13b3f05e51869c2d238?s=80&r=any

 23. மங்களூர் சிவா on August 23rd, 2008 10:29 am

  http://selvaspeaking.blogspot.com/ இவருடைய பதிவு திரட்டப்படும்போது என்னுடைய படம் வருகிறது.

  என்ன செய்வது??

 24. ஆர. செல்வக்குமார் on September 24th, 2008 3:41 am

  http://selvaspeaking.blogspot.com
  இன்னமும் என்னுடைய பதிவுகளில் மங்களூர் சிவாவின் போட்டோதான் வந்து கொண்டிருக்கிறது. மாற்றுவதற்கு விரைவில் ஒரு தீர்வு தரவும்.
  Gravatar வழியாக ல் என்போட்டோ வருகிறது. ஆனால் தமிழ்மணத்தில் இன்னமும் மங்களூர் சிவாதான் காட்சியளிக்கிறார்.

 25. ஆர. செல்வக்குமார் on September 24th, 2008 3:42 am

  Gravatar வழியாக bloggerல் என்போட்டோ வருகிறது. ஆனால் தமிழ்மணத்தில் இன்னமும் மங்களூர் சிவாதான் காட்சியளிக்கிறார்.

Leave a Reply